Tuesday, July 05, 2011

மாடர்ன் டிரஸ் மாடப்புறாக்களுக்கு ஏற்படும் பிரச்சனை இன்னான்னா...!!!!!1. நான் வாழ்நாளில் யாரையும் காட்டிக்கொடுத்ததே இல்லை,ஆனாலும் என்னிடம் இருக்கும் 2 விரல்கள் ஆள்காட்டி விரல்கள் என்றே அழைக்கப்படுகின்றன.#அவதானிப்பு

---------------------

2. பலமுறை முயன்றும் மனிதர்கள் தோல்வி அடையும் விஷயம் ஒன்று உண்டெனில் அது - தான் நேசித்த இதயத்தை மறக்க நினைப்பது

--------------

3. ” மிஸ் ,ஐ லவ் யூ”

“உன் காலேஜ் லைஃப்ல ஒரு அரியர் கூட இல்லாம டிகிரி முடிச்சுட்டு வா , நான் உனக்குத்தான்.””

அய்யோ,தங்கச்சி!!!!!!!!!!”

-------------------------

4. கல்யாணமான ஆணைக்கூட ஒரு பெண்ணால் நேசிக்க முடிகிறது ,ஆனால் ஒரு குழந்தைக்கு அப்பா ஆகப்போகிறார் என்றதும் நேசிக்க யோசிக்கிறார்கள் பெண்கள்#ட்வீட் உலக கிசு கிசு, நோ லீக்ஸ் ப்ளீஸ் ஹி ஹி

-----------------------

5. இலக்கிய உலகிலும்,திரை உலகிலும் மிகப்பிரமாதமான படைப்பாளிகள் கூட மார்க்கெட்டிங்க் டெக்னிக் தெரியாமல், தனித்துத்தெரியாமல் கிணற்றுத்தவளையாய்

------------------6. அரசு கேபிள் டீவி, ஜெயலலிதாவின் நேரடி கண்காணிப்பிற்காக கீழ் உள்துறைக்கு மாற்றம்!:#சன் டி விக்கு ஆப்பு,முழிச்சுக்கோடா மாப்பு

--------------------

7. இனி மைக் பிடித்து பேச மாட்டேன்! தோல்வி விரக்தியில் பாக்யராஜ்!:#அய்யய்யோ,அப்போ மோகன் மாதிரி பாடுவீங்களா?அது இதை விட கேவலமா இருக்குமே?

-------------------

8. கண்ணீர் வடித்த பிரபுதேவா! தங்கர்பச்சான் தகவல்!: #நயன் தாரா சீதையா நடிக்கிறார்னு கேள்விப்பட்டப்ப நாங்க கூட ரத்தக்கண்ணீர் வடிச்சோம்

------------.....

9. ஆண்களைப்பார்த்து பெண்களால் காப்பி அடிக்கமுடியாத விஷயம் அவன் கம்பீரம்,பெண்களைப்பார்த்து ஆண்களால் காப்பி அடிக்க முடியாத
விஷயம் அவள் வெட்கம்

-----------------------

10. ஒரு பெண்ணுக்கு தொப்பை போட்டிருந்தால் கர்ப்பம் என்று பொய் சொல்லி ஏமாற்றி விடலாம்,ஆனால் ஆணால் அது முடியாது#மொக்கை

-------------------


11. உடல் சுகத்துக்காக அறிமுகம் இல்லாத பெண்களை நாடும் ஆண்கள் கூட தன் மனசுகத்துக்காக மனைவியைத்தவிர யாரையும் நாடமுடியாமல் தடுமாறுகிறார்கள்

-----------------------

Three award winning photos- Day of life in INDIA

6. 6. 12மத்தவங்களை விட அதிகமா தெரிஞ்சுக்கோ,மத்தவங்களை விட அதிகமா வேலை செய்,மத்தவங்களை விட கம்மியா எதிர்பார்#வெற்றிக்கு வித்திடும் வழிமுறைகள்

---------------------------

13. வளர விடுங்கள் எங்களை,வாழ வைப்போம் உங்களை - மரங்கள்#ஈரோடு வனத்துறை வாசகம்

-------------
14. உறவு சுமூகமாக இருக்கும்போது உயிரைக்கூட கேட்கமுடியும்,ஆனால் சின்ன விரிசல் விழுந்து விட்டால் குண்டூசி கூட கேட்க முடியாது#ஊடலாடும் உறவுகள்

-------------------

15. . ”உங்க ஹாபி என்ன?”

“கவிதை எழுதுதல்” 

உங்களால எப்படி கவிதை எழுத முடியுது?”

“அதான் காதலிக்கிறேனே?போதாதா?”
-------------------------
16. ஏழையின் வீட்டில் ரோஜாச்செடி,பணக்காரனின் வீட்டில் பிளாஸ்டிக் ரோஜா #வசதிக்கும் ரசனைக்கும் சம்பந்தம் இல்லை

--------------------


11. 17அப்பா,அழகான ராட்சசின்னா யாருப்பா?

“தெரியல. வெறும் ராட்சசி வேணா தெரியும், கிச்சன்ல போய் பாரு.”#மனைவி அமைவதெல்லாம் சாத்தான் கொடுத்த சாபம்,அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

-----------------------

18. உன் உண்மையான அன்பு உணராதவர்களிடம் உன் கோபத்தைக்காட்டாதே,அவர்கள்க்கு உன் கோபமும் அன்பின் வெளிப்பாடே என்பது தெரியாது

----------------

19. காதல் தோல்விக்கு நல்ல மருந்து இன்னொரு புதிய காதலே#மறுபடியும் முதல்ல இருந்தேவா?

-----------------------

20. ரேஷன் அரிசி கடத்தினால் குண்டர் சட்டம் பாயும் :-ஜெ# மேடம்,அப்போ பொன்னி,அரிசி,ஐ ஆர் 8 அரிசியை எல்லாம் கடத்திக்கலாமா?ரொம்ப தேங்க்ஸ் மேடம்

--------------------

21. உள்ளாட்சி தேர்தலுக்கு முன் கூட்டணி குறித்து முடிவு: ராமதாஸ் #நீங்க எப்பவும் ஆளுங்கட்சிக்கு ஜால்ரான்னு எங்களுக்கு தெரியும்ணே@பச்சோந்தியர்

----------------------
22. கட்சிப் பணியில் இருந்து வயதானவர்கள் ஒதுங்கிக் கொண்டு, இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் -துரைமுருகன்# அழகிரி சொல்லிக்குடுத்தாராண்ணே?

------------------

23. திமுக.கூட்டணியில் தொடர்வதா? முடிவு செய்யும் அதிகாரம், கட்சியின் செயற்குழு, பொதுக் குழுவிற்கே உள்ளது - ராமதாஸ்#சிரிக்காம ஜோக் சொல்றாரே!

--------------------

24.நீ என்னை காயப்படுத்தும்போது கூட அழ மனம் இல்லை, என்னை விட்டு கண்ணீராக நீ பிரிந்து சென்று விட்டால்?

-----------------

25.  நீ வெற்றி பெற்றால் எல்லாருக்கும் உன்னைப்பற்றித்தெரியும், தோல்வி அடைந்தால் எல்லோரைப்பற்றியும் நீ அறிவாய்

-----------------------

26.  காலையில் கொக்கரக்கோ என்றேன்,மதியம் குக்கருக்குள் வெந்தேன்,இதான்பா லைஃப்- சேவல் தத்துவம்#SMS

------------------------------

27.. ரெகுலராக முந்தானையை,துப்பட்டாவை அட்ஜஸ் செய்து பழக்கப்பட்ட பெண்கள் ஜீன்ஸ் ,டி சர்ட் போன்ற மாடர்ன் உடைகளில் வலம்வரும்போது தடுமாறுகிறார்கள்#டைட்டில் ட்வீட்

நன்றி - படங்கள் Three award winning photos- Day of life in INDIA

37 comments:

'பரிவை' சே.குமார் said...

ellam nalla irukku.
14,15 rendum onnaa irukku.

காந்திமதி said...

வளர விடுங்கள் எங்களை,வாழ வைப்போம் உங்களை - மரங்கள்#ஈரோடு வனத்துறை வாசகம்
>>>
விகடன் குழுமம்தான் விட்டுவைக்கலைனு பார்த்தால்,ஒரு சுவர் விளம்பரத்தையும் பதிவா தேத்திடுறீங்களே எப்படி சிபி சார்.

Jana said...

தொப்பை மாட்டர் நெசந்தானே! கடவுள் ஆண்கள் விடையத்தில் கனக்க வஞ்சனை செய்கின்றார்...

ராஜி said...

அப்பா,அழகான ராட்சசின்னா யாருப்பா? “தெரியல. வெறும் ராட்சசி வேணா தெரியும், கிச்சன்ல போய் பாரு.”#மனைவி அமைவதெல்லாம் சாத்தான் கொடுத்த சாபம்
>>>
நீங்க பாப்பாக்கிட்ட சொன்னது கிச்சனில் இருந்தவங்களுக்கு தெரியுமா?ரியாக்க்ஷன் என்னனு அடுத்த பதிவுல சொல்லுங்க.

ராஜி said...

மாடர்ன் டிரஸ் மாடப்புறாக்களுக்கு ஏற்படும் பிரச்சனை இன்னான்னா...!!!!!
>>>
டைட்டிலுக்கு சொந்தமான ட்வீட்டு எங்கே சார்.

Anonymous said...

படங்கள் பட்டைய கிளப்புது.டைட்டிலை சமாளிக்கும் வரிகளை காணோம்

Anonymous said...

கல்யாணமான ஆண் -பல இடங்களில் வருத்தம் தெரிகிறது ஹிஹி

Anonymous said...

கல்யாணமான ஆண் -பல இடங்களில் வருத்தம் தெரிகிறது ஹிஹி

Anonymous said...

டிவிட் பண்ணிட்டு ப்ளாக்ல போட்டுக்கலாம்..ப்ளாக்ல போட்டுட்டும் டிவிட் பண்ணிக்கலாம்..குறிப்பெடுத்துக்க சதீஷ்

Anonymous said...

என்னடா...பஞ்ச் டயலாக்கா டிவிட் பண்றாரேன்னு பல சம்யம் நினைப்பேன்.அதை கோத்து ஒரு மாலையாக்கலாம்னு இப்பதானே தெரியுது...இருடி வரேன்

Anonymous said...

மாடர்ன் டிரஸ் மாடப்புறா...டைட்டிலுக்கு ஒரு பேங்கே வெச்சிருப்பாரு போல

Anonymous said...

தொப்பை மாட்டர் நெசந்தானே! கடவுள் ஆண்கள் விடையத்தில் கனக்க வஞ்சனை செய்கின்றார்//
ஜனா பெண்களுக்கு கருப்பை இருப்பதால் அவர்களுக்கு பெரும்பாலும் தொப்பை இருப்பதில்லை.அதற்கு பதிலாக பின்னழகையும்,தொடை சதையையும் இன்சூரன்ஸ் செய்யும் அளவுக்கு பெருக்க வைக்கிறார்.தொடையழகி ரம்பாவிற்கு தொப்பை இருந்தா நல்லாவா இருக்கும்..?

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு..

சக்தி கல்வி மையம் said...

தலைப்பின் அகராதியா நீ மாப்ள..

சசிகுமார் said...

//சன்டிவிக்கு ஆப்பு முழிச்சிக்கோடா மாப்பு //

டைட்டில் நல்லா இருக்கே

Mohamed Faaique said...

LAST 2 MATTERS ROCK...

காங்கேயம் P.நந்தகுமார் said...

அரசு கம்பிவட தொலைக்காட்சியை என்ன இலவசமாவா ஜெயலலிதா தருகிறார். சன் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட? ிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட?

தனி காட்டு ராஜா said...

All are good :)

கூடல் பாலா said...

"அந்த" முட்டை கோஸ் எந்த ஊர் சந்தைல கிடைக்குது ?

Unknown said...

எல்லாமே,நன்று.27,வது,ட்வீட்டை பற்றி,இப்போதெல்லாம் அவர்கள்,கையை தலைக்கு கொண்டு சென்று ஸ்டைலாக முடியை அடிக்கடி,கோதிக்”கொல்”கிறார்கள்.!!!!!!!

கோவை நேரம் said...

முட்டை கோஸ் அருமை ....எங்க வாங்கினீங்க ...?

rajamelaiyur said...

As usual super . . .

rajamelaiyur said...

Visit VALAISARAM

பன்னிக்குட்டி ராம்சாமி said...

14, 18, 19, 25 நெஜமாவே சூப்பர்....!

செங்கோவி said...

முட்டைக்கோஸுமா.....

கோகுல் said...

படங்கள் சூப்பர்.விஷயங்கள் சூப்பரோ சூப்பர்.

அம்பாளடியாள் said...

ஆகா அழகான படங்களுடன்கூடிய உச்சக்கட்ட நகைச்சுவை
அருமையிலும் அருமை!........வாழ்த்துக்கள்.

சத்யா said...

அட போட வைத்த வாக்கியங்கள் 9, 15, 16, 25. வாழ்த்துக்கள்

ஹேமா said...

முட்டைகோஸ் படம் எடுத்திட்டேன்.சேவல் தத்துவம்...!

உணவு உலகம் said...

அருமையான டுவிட்ஸ்.

Unknown said...

நண்பா பல விஷயங்கள் நிதர்சனத்தின் உண்மைகள் நன்றி!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
valaipathivu said...

உங்கள் பதிவினை அனைத்து திரட்டியிலும் பதிய எளிய வழி
இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்வெளி, உலவு, தமிழ்10, திரட்டி, வலைப்பூக்கள் என மொத்தம் 16 திரட்டிகளும் இந்த தளத்தில் உள்ளது.
http://www.valaipathivagam.com

ராஜ நடராஜன் said...

நீங்க பதிவுக்கு பேர் வைக்கத் தெரியலையேன்னு யாரோ கூவின மாதிரி கேள்விப்பட்டேன்:)

மாதேவி said...

"அழகான ராச்சசி" இதையெல்லாம் படிக்கவில்லையா :)

மாய உலகம் said...

வளர விடுங்கள் எங்களை,வாழ வைப்போம் உங்களை- (மரங்கள்) .... வளர விடுங்கள் என்னை, நன்றியுடன் வாழ்த்துவேன் உங்களை...M.ராஜேஸ் www.maayaulagam-4u.blogspot.com