Friday, July 22, 2011

உன் கூந்தல் ஒரு கறுப்பு அருவி..உன் மணம் ரதியின் கருவி

Fun from Facebook
1.வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்னும் அரசாங்கம்
ஹார்ட்டுக்கு  ஒரு காதல் வளர்ப்போம் ,மின்னும் சரசாங்கம்#லவ் தத்ஸ்

-----------------------

2.  ஸ்கூலில் -

4 * 3 = ? 

டீச்சர் 12.

ஓக்கே 3* 4 = ?

கேள்வியை திருப்பிக்கேட்டா பதிலை திருப்பி சொல்லனும்னு தெரியாதாக்கும்? 21#லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட்

--------------------

3. கல் மனசுள்ள லேடி ஜட்ஜ்..அவரோட காதலன் எப்படி கூப்பிடுவார்?


கனம் ஹார்ட்டார் அவர்களே!?

--------------------

4. உங்க மாமா கட் &  ரைட் டைப்பாமே?

ஆமா ,பழைய காதலியை கட் பண்ணிடுவாரு,புது காதலிக்கு ரைட் குடுப்பார்


---------------------

5. உங்க ஃபேமிலில இருக்கற எல்லாரும் ஒரே வட்டத்துல சுத்தி சுத்தி விளையாடறீங்களே? ஏன்?

நாங்க வீல் ஜாயிண்ட் ஃபேமிலி..

------------------


6. அன்பு கொண்ட உள்ளங்களுக்கு விட்டுக்கொடுப்பது சுலபம்,அன்பில்லாத இதயங்களுக்கு விட்டுக்கொடுப்பது துர்லபம்

--------------

7. தினமும் சரிவுடன் துவங்குகிறது பங்குச்சந்தை,

    தினமும் பரிவுடன் தொடர்கிறது உன் அன்புச்சண்டை

------------------

8.தன்னம்பிக்கையின்தற்போதையஉதாரணம்அன்னாஹசாரே,
   தலைக்கனத்தின் நிரந்தர உதா”ரணம்” ராஜபக்‌ஷே

----------------------------

9. லட்சங்களுக்கும் ,லட்சியங்களுக்கும் என்ன முன் ஜென்ம விரோதமோ லட்சியவாதிகள் பெரும்பாலும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்

--------------------

10. நீ வரும் வரை பொழுது போக ஏதாவது கவிதை வாசித்துக்கொண்டிருப்பேன், நீ வந்த பின் உன் பெற்றோர் எழுதிய கவிதையை நேசித்துக்கொண்டிருப்பேன்

------------------


11. பாப்பா. சாப்பிடாம அடம் பிடிச்சா சாமி உன் கண்ணை குத்திடும்.


அப்படி ஒரு சின்னக்குழந்தையோட கண்ணை குத்துனா அது எப்படிப்பா சாமியா இருக்க முடியும்?

------------------

12. வெள்ளை நிற அருவியில் நீ குளிக்க செல்கிறாய்!உன் கூந்தல் நனைக்கையில் கறுப்பு நிற அருவி கொட்டுகிறது#பிளாக் &;ஒயிட் ஃபால்ஸ்

--------------

13.தமிழ்சினிமாவும் ,லவ் மேரேஜும் ஒண்ணு தான், செகண்ட் ஆஃப் போர் அடிக்கும்#லவ்னா ஜாலி,மேரேஜ்னா காலி

-------------------

14. காதலிக்கப்படும் பெண்கள் தேவதைகள் ஆகிறார்கள்,காதலிக்கபடாத ஆண்கள் தேவதாஸ் ஆகிறார்கள்#தாடி விடு, திண்டாடு

-----------------

15. எல்லாம் தெரிந்த ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை,எதுவுமே தெரியாத பெண்களை ஆண்கள் விரும்பாமல் இருப்பதில்லை#சைக்காலஜி

------------------


16. நீ குடிவந்த ஏரியாபோஸ்ட்மேன்களும், கூரியர்பாய்ஸூம் நொந்துநூடுல்ஸ் ஆறாங்களே அது ஏன்?

ஏன்னா எனக்கு மெயில்ல சேட் பழக்கம் இல்லை#பழமை விரும்பி

-----------------17. பெண்களின் கண்ணீர் அதிகமாக சேர்ந்ததாலோ என்னவோ அவர்கள் படுத்திருக்கும் தலையணைகள் மட்டும் என்றும் கனமாகவே இருக்கின்றன.

--------------------

18.மீனவர்கள் கடல் தண்ணீர்  குடிப்பதில்லை,ஆனால் கடல் தண்ணீர் மீனவர் உயிரை அடிக்கடி குடித்து விடுகிறது

----------------

19. என்னை மறந்து நான் தூங்கிய தூக்கம் அம்மாவின் கருவறையில்,

     உன்னை மறந்து நான் தூங்கப்போவது என் கல்லறையில்

----------------

20. எங்க ஸ்கூல்ல மேத்ஸ் மாஸ்டர்க்கும், பிசிக்ஸ் டீச்சருகும் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகிடுச்சு,#1992 எ லவ் ஹிஸ்டரி

--------------

join-funship-group


டிஸ்கி  - முதல் ஃபோட்டோவைப்பார்த்து யாரும் அபவுட் டர்ன் என்றெல்லாம் சொல்லிப்பார்க்கக்கூடாது. ஹி ஹி

38 comments:

sasibanuu said...
This comment has been removed by the author.
sasibanuu said...

First

sasibanuu said...

முதன் முதலாக.... "முதல்"

செல்ல நாய்க்குட்டி மனசு said...

முதல் படத்தில் இருப்பவர்கள் தெருவை சுத்தம் செய்கிறார்களா?#முடி குறைவாக இருப்பவர்கள் காதில் புகை வர கேட்கும் கேள்வி
18 -அழகான சிந்தனை !!

Unknown said...

அழகான குறுக்கு சிந்தனைகள் பட்டம் கொடுக்கப்படுகிறது சிபிக்கு!....நன்றி அண்ணே நீங்க தானே வித்தியாசமா உங்கள வாழ்த்த சொன்னீங்க ஹிஹி!

குரங்குபெடல் said...

ரயில் போட்டோ அருமை தம்பி

(கரகாட்டக்காரன் சண்முகசுந்தரம் குரலில் வாசிக்கவும் )

நன்றி

rajamelaiyur said...

து உண்மையான முடியா ?

rajamelaiyur said...

ரயில் நம்ம ஊரு பஸ் போல போகுது

rajamelaiyur said...

இன்று என் வலையில்

உங்கள் கடவு சொல்லை (PASSWORD) பாதுகாப்பது எப்படி ?

ஆமினா said...

train ticket கொடுக்கும் போதே இலவச இணைப்பா சொர்க்கலோகத்துக்கு போக டிக்கெட் கொடுத்துடுவாங்களோ??? என்னே ஒரு அருமையான திட்டம்!!!!

நிரூபன் said...

உன் கூந்தல் ஒரு கறுப்பு அருவி..உன் மணம் ரதியின் கருவி//

ஹாஹா...ரதியின் கருவி என்றால், என்ன துடப்பங் கட்டையா((((:

நிரூபன் said...

இனிய காலை வணக்கம்,

பதிவுலகில் தனக்குள் இருக்கும் தனித் திறமைகளை புடம் போட்டுக் காட்டும் வண்ணம், வித்தியாசமான பதிவுகளை தன்னுடைய முதலாமாண்டு நிறைவின் பின்னர் எழுதி வரும் சகோ சிபி அவர்களுக்கு பிந்திய, என் உளம் நிறைந்த தமிழ் மண நட்சத்திர வார வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நிரூபன் said...

அன்பு கொண்ட உள்ளங்களுக்கு விட்டுக்கொடுப்பது சுலபம்,அன்பில்லாத இதயங்களுக்கு விட்டுக்கொடுப்பது துர்லபம்//

அவ்...அவ்...என்ன ஒரு அருமையான கவிதை நறுக்கு.

நிரூபன் said...

நீ வரும் வரை பொழுது போக ஏதாவது கவிதை வாசித்துக்கொண்டிருப்பேன், நீ வந்த பின் உன் பெற்றோர் எழுதிய கவிதையை நேசித்துக்கொண்டிருப்பேன்//

அருமையாக இருக்கே, கவிதை கலந்து...பெற்றோர் எழுதிய கவிதையாக காதலியை உருவகித்துச் சிறப்பித்து எழுதியுள்ளீர்கள்.
கலக்கல் பாஸ்.

நிரூபன் said...

எல்லாம் தெரிந்த ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை,எதுவுமே தெரியாத பெண்களை ஆண்கள் விரும்பாமல் இருப்பதில்லை#சைக்காலஜி//

பாஸ், எல்லாம் என்றால் என்ன பாஸ், புரியாமல் இருக்கிறதே.

நிரூபன் said...

என்னை மறந்து நான் தூங்கிய தூக்கம் அம்மாவின் கருவறையில்,

உன்னை மறந்து நான் தூங்கப்போவது என் கல்லறையில்//

கல்லூரிப் பசங்கள் எல்லோரும் நோட் பண்ணிக் கொள்ளுங்க. சூப்பர் பஞ்ச்.
இனிமே காலேஜ் மதில், காதலியோடை பை...இவை எல்லாவற்றிலும் இந்த வசனத்தை எழுதிக்கலாம்.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அன்புடன் வணக்கம்.

பின்னால் உள்ள பச்சை செடிகளில்
4 முகம்..

வலது பாறையில் 3 முகமும்
இடது பாறையில் 2 முகமும்

நீரோடையை ஒட்டிய கீழ் பாறையில்
1 முகமும்

வலது புறமும் செடியோடு கூடிய பகுதியில் 1 முகமும்


சரியோ ? தவறோ ?

எதோ நம்பால முடிஞ்சதுப்பா.

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

நிரூபன் said...

அருமையான, நறுக்குகள் + ஜோக்ஸ்.

கூடல் பாலா said...

இப்பத்தான் புரியுது 1992 ல வாத்தியார்கிட்ட இருந்துதான் கில்மாவ கத்திண்டு வந்திருக்கேள் ....

காட்டான் said...

ரயில் பயண படம் நல்லா இருக்கு இப்படிபயணம் செய்தால்.. டிக்கற் எடுக்கத் தேவையில்லை ..!?

டிக்கற் பரிசோதகர் எந்த வழியால் வருவார்.??
காட்டான் குழ போட்டுட்டான்..

ஆகுலன் said...

நல்லா இருக்குது.........
எனக்கு கூந்தல பார்க்க தான் கடுப்பா இருக்குது.. கொஞ்சம் கூடிடுதோ....

மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............

சாந்தி மாரியப்பன் said...

அருமையாயிருக்கு தொகுப்பு..

முதல் படத்தை பாக்கறச்சே 'ஜகன்மோகினி' படம் ஞாபகத்துக்கு வர்றதை தவிர்க்கமுடியலை :-))

சாந்தி மாரியப்பன் said...

அருமையாயிருக்கு தொகுப்பு..

முதல் படத்தை பாக்கறச்சே 'ஜகன்மோகினி' படம் ஞாபகத்துக்கு வர்றதை தவிர்க்கமுடியலை :-))

Unknown said...

நான் என்ன புதுசா சொல்லப்போறேன்

என்ன சொல்றதுன்னே தெரியலே

என்னமா கேள்வி கேக்குது உங்க வீட்டு பாப்பா

உங்க விட்டுகாரம்மா பிசிக்ஸ் டீச்சர் தானே?? // எப்பிடி எங்க உலக அறிவு

எல்லாமே சூப்பர் இன்னும் சொல்லணும்ன்னா புதுசா ஒரு பதிவு தான் போடணும் திருக்குறளுக்கு கலைஞர் விளக்கம் போட்ட மாதிரி

சசிகுமார் said...

அட!!!!!!!!!!அசத்தல்!!!!!!!!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அம்மாடி....

Yoga.s.FR said...

/முதல் ஃபோட்டோவைப் பார்த்து யாரும் அபவுட் டர்ன் என்றெல்லாம் சொல்லிப் பார்க்கக் கூடாது!//அப்புடியே சொல்லி திரும்பிட்டாலும்???????????

M.R said...

கூந்தலின் மனம் பற்றி சந்தேகப் பட்ட மன்னன் இதைப் பார்த்தால் இது உண்மையா இல்லை பொய்யா என்று பிடுங்கி பார்க்க சொல்வான்.


ஹா ஹா ஹா

என்ன இது ? ம்..ம்

சிபி எனக்கு மட்டும் சொல்லுங்க அது ஒரிஜினலா ?

மாய உலகம் said...

கனம் ஹார்ட்டார் அவர்களே! இப்படி எக்ஸ்பிரஸ் வேகத்துல கலக்கிட்டுப்போறீகளே....படங்கள் பட்டைய கிளப்புகின்றன..

சக்தி கல்வி மையம் said...

மாப்ள அந்த முதல் போட்டோ எங்கிருந்து எடுத்த?

Unknown said...

ட்வீட் ந்ம்பர்15; ஆண்கள் ஏமாளிகள்? ட்வீட் ந்ம்பர் 17;பெண்கள் அப்பாவிகள்? நன்கு ரசித்தேன்!!!

ஹேமா said...

எனக்கென்னமோ முடி வளர்ந்த படமும் ட்ரெயின் படமும் உண்மையான்னு சந்தேகம் !

ராஜி said...

ஸ்கூலில் -

4 * 3 = ?

டீச்சர் 12.

ஓக்கே 3* 4 = ?

கேள்வியை திருப்பிக்கேட்டா பதிலை திருப்பி சொல்லனும்னு தெரியாதாக்கும்? 21#லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட்
>>
அந்த ஸ்டூடண்ட் நீங்க்தானே?

ராஜி said...

நீ வரும் வரை பொழுது போக ஏதாவது கவிதை வாசித்துக்கொண்டிருப்பேன், நீ வந்த பின் உன் பெற்றோர் எழுதிய கவிதையை நேசித்துக்கொண்டிருப்பேன்
>>>
அப்போ வேலை வெட்டிக்கு போறதா உத்தேசமில்லைப் போல‌

கவி அழகன் said...

அருமை

Napoo Sounthar said...

அந்த ரயில் 'சிபி எக்ஸ்பிரஸ்'னு நினைக்கிறேன்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

அந்த ரயில் சி பி எக்ஸ்பிரஸ் தான்.. அதான் அவ்வளவு கூட்டம்.

செங்கோவி said...

இந்தப் படங்களும் நல்லாத் தான் இருக்கு.