Thursday, July 28, 2011

சிவப்பான பொண்ணு தான் வேணும்னு சொல்ற கறுப்பான பசங்களே!பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?

1.அன்பு கொண்டவரைப்பார்க்கும்போது கண்களில் தோன்றும் சந்தோஷத்தை விட அவரைப்பிரியும்போது  வெளிவரும் கண்ணீர் அதிகமாக இருக்கும்

-------------------

2. வெற்றியும் ,தோல்வியும் நிரந்தரம் அல்ல,ஜெயிச்ச பின்னும் உழைப்பை விடாதே!தோற்ற பிறகு முயற்சியை விடாதே!

-------------------

3. என் காதலுக்காக நான் எல்லாவற்றையும் இழந்தேன்,அவள் உண்மையான காதலை மட்டும் இழந்தாள்#ஒரு தலைக்காதலின் வலி

------------

4. வாட்டர் மேலே போட் போனா உல்லாசம், போட் மேலே வாட்டர் போனா கைலாசம்#டைட்டானிக் எஃபக்ட்

-------------------

5. அழகுதான் ஒரு பெண்ணின் மூலதனம் (ASSET),ஆனால் மூலதனம் (ASSET) தான் ஒரு ஆணின் அழகு#சொத்துக்கு சொத்தாக

-----------------6. ஹென்றி ஃபிஷ் (U.S.A) என்பவர்தான் எக்ஸாம் என்னும் சிஸ்டத்தை கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தியவர். வாடி வாடி, நீர் தான் அந்த சதிகாரரா?

-------------------

7. என்ன சார்? ஸ்விட்ச்போர்டுல தண்ணி ஊற்றி கழுவறீங்க?ஷாக் அடிச்சிடாது?

தம்பி! நீங்க தமிழ் நாட்டுக்கு புதுசா? #மின் வெட்டு விட்டு(WIT)

-------------------

8. காதலுக்குத்தெரிந்தது இரண்டே இரண்டு தான்

1. அழ வைப்பது 2 .அலைய வைப்பது,

காதலிக்குத்தெரிந்ததும் 2 தான்

1.விழ வைப்பது 2 நிலைகுலைய வைப்பது

------------------------

9. சூரியன் வரைந்த அழகிய ஓவியம் அவள் நிழல்

---------

10. நாம் வாழும்வரை நம்மை யாரும் வெறுக்கக்கூடாது,நாம் இறந்த பின் நம்மை யாரும் மறக்கக்கூடாது

-----------------


 
 

11. தூங்கிக்கொண்டிருக்கும் காதலியை அமைதியாக ரசிக்கும் தருணமே வாழ்வின் அழகிய காதல் நிகழ்வு

-----------------------

12. என் இதயக்கதவில் எழுதி வைத்தேன் யாருக்கும் அனுமதி இல்லை என ,ஆனால் உன் நினைவுகள் உள்ளே வந்து சொன்னது எனக்குப்படிக்கத்தெரியாது என

-------------------

13. நமக்காக காத்திருக்கும் அன்பும்,நம்மை காக்க வைக்கும் அன்பும் என்றுமே அழகு தான்

------------------

14. உன்மேல் உண்மையான அன்பு வைத்திருப்பவர்கள் நீ மழையில் அழுது கொண்டிருந்தால் கூட கண்டுபிடித்து விடுவார்கள்#சார்லிசாப்ளின் எஃபக்ட்.


------------------------

15. ஷேக்ஸ்பியர் எம் ஏ இங்கிலீஷ் பாஸ் பண்ணலை,ஆனா ஷேக்ஸ்பியர் பற்றி படிக்காம எம் ஏ இங்கிலீஷ் யாரும் படிக்க முடியாது

---------------


16. நேசித்த பின் மறந்தால் அது வெறும் நினைவுகள்,மறந்த பின்னும் நேசித்தால் அதுதான் உண்மையான உறவுகள்

-----------------

17. சிவப்பான பொண்ணு தான் வேணும்னு சொல்ற கறுப்பான பசங்களே!பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?#கவுண்டமணி எஃபக்ட்

--------------------

18. ஏம்மா,அந்த பேஷண்ட் ஏன் மிட் நைட்ல க்ளினிக்கை விட்டு ஓடிப்போய்ட்டாரு?

எந்த நர்ஸையும் பிடிக்கலையாம் டாக்டர்

---------------

19. மும்பையின் புறநகர் பகுதியான தானேயில் அன்வர் அன்சாரி  80,000 சிம் கார்டுகள் வைத்து மோசடி#ஆண் அவிசாரி போல

--------------------

20. தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி #ஏன் தலைவரே? கட்சில இருக்கற எல்லோருக்கும் கல் மனசுன்னு சூசகமா சொல்றீங்களா?

----------------------

28 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

First rain

"என் ராஜபாட்டை"- ராஜா said...

First Vadai

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Always super

கவி அழகன் said...

100/100

கோவை நேரம் said...

வந்துட்டோம்ல

FOOD said...

ஐயய்யோ, பெட்ரோமாக்ஸ் லைட்டுன்னு சொல்லி பெண்களைத் தப்பா பேசிட்டாரு சிபி. மாட்னாரு சிபி.

ஆகுலன் said...

சூப்பர்...ஓ சூப்பர்..
இலக்கம் மூன்று....என்னை கவர்ந்தது..

எனது கனா.................

gokul said...

இஸ்டலக்கடி லாலாசுந்தரி கோலா கொப்புற கொய்யா .
நாங்க பந்தம் கூட கொளுத்திக்குறோம்னு சொன்னேன்

தமிழ்வாசி - Prakash said...

தமிழ்மணம் இனச்சுட்டேன்.

தமிழ்வாசி - Prakash said...

பட்டைய கிளப்புறார் சி பி.

Shiva sky said...

என்ன பாஸ் பண்றது...நாமதான் கருப்ப பிறந்து இந்த பொண்னுங்ககிட்ட.........நம்ம பசங்கலாவது..வெள்ளையா பிறக்கட்டும்னு தான்./......

மைந்தன் சிவா said...

பதிவு கொஞ்சம் நகைச்சுவை கம்மி தான் ஹிஹி ஆனா கொஞ்சம் அறிவை வளக்கிறீங்க !

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

அட்ரா அட்ரா அட்ரா அட்ரா சக்க
(கவுண்டர் ஸ்டைலில் படிக்கவும்)

விக்கியுலகம் said...

hehe!

இந்திரா said...

சூரியன் வரைந்த ஓவியம்..

அழகான கவிதை.

சே.குமார் said...

சூரியன் வரைந்த ஓவியம் - என்னை கவர்ந்தது.

மூ.ராஜா said...

அருமை

ரியாஸ் அஹமது said...
This comment has been removed by the author.
ரியாஸ் அஹமது said...

விகடனில் உங்க ட்வீட் படித்தேன் வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

பட்டைய கிளப்புங்க

கடம்பவன குயில் said...

//அழகு தான் பெண்களின் ASSET //

பெண்களுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லைன்னு நீங்களா நினைச்சுக்கிறதா?? தங்களின் கருத்துக்களில் முரண்படுகிறேன்.

மற்ற அனைத்து டுவிஸ்ட்டும் வழக்கம் போல உங்கள் பாணியில் இனிமையாய் இருந்தது.

R.Elan. said...

13ஆவது ட்வீட், //அன்புதான் அழகு// என்பது நிதர்சனம்.

காட்டான் said...

திமுக வில் இருப்பவர்கள் கல்நெஞ்சம் படைத்தவர்கள்தான்.. 
உங்களுக்கு அனுபவமிருக்கு....!?

காட்டான் குழ போட்டான்.....

ஹேமா said...

சிவப்புன்னு சொல்லி அழகான பச்சைப் பசேல்லு இயற்கையின் படங்கள் அழகாயிருக்கு சிபி !

Enayam Thahir said...
This comment has been removed by the author.
Enayam Thahir said...

மனசுல தோணுது. ஆனா ....
என்னத்த சொல்ல....

Nesan said...

காதல் கடிகள் தூக்கல் சி.பி!

koodal bala said...

\\\ஷேக்ஸ்பியர் எம் ஏ பாஸ் .......\\\ ஆமா உண்மையிலே ரொம்ப கொடுமைதான் ...