Thursday, July 21, 2011

ஈழப்பெண் பதிவர் ஹேமாவுடன் ஒரு நேர் காணல்

aஇவர் சக தோழி செலின் ( ரிசப்ஷனிஸ்ட்)


 பெண் எழுத்து - ஒரு பாஸிட்டிவ் பார்வை பாகம் 3-


பதிவுலகில் எப்படி வெட்டிப்பேச்சு சித்ரா காமெடிக்கும் ,பின்னூட்டத்துக்கும் புகழ் பெற்றவரோ அதே போல கவிதைக்கும் ,சீரியஸ் கட்டுரைகளுக்கும் பெயர் பெற்றவர் இலங்கை வலைப்பதிவர் ஹேமா.இவர் வானம் வெளி வந்த பின்னும் எனும் வலைப்பூவையும்   http://kuzhanthainila.blogspot.com/ உப்புமடச்சந்தி எனும் வலைப்பூவையும் நிர்வகித்து வருகிறார் http://santhyilnaam.blogspot.com/


 தற்போது ஸ்விச்சர்லாந்தில் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்ட்டாக  பணிபுரியும் இவர் அடிப்படையில்
 ஈழத்தமிழருக்கான விடுதலையில் மாறாத ஈடுபாடு கொண்டவர். பதிவுலகின் டாப் 10 பெண் பதிவர்கள் லிஸ்ட்டில் இவர் 2ஆம் இடத்தில் இருக்கிறார். வெளிநாட்டில் வசதியான வாழ்க்கை வாழ்ந்தாலும் தன் தாய்நாட்டைப்பற்றியும், தாய்நாட்டு மக்கள் பற்றியும் கண் விழித்திருக்கும் நேரம் எல்லாம் சிந்திப்பதால் ,படைப்புகளில் ஈழ விடுதலை பற்றி சிந்திப்பதால் அவர் அந்த இடத்தை பெறுகிறார்,

தன் தாய் தந்தையை இலங்கையில் விட்டு விட்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக அயல் தேசத்தில் பணியாற்றுபவர். அவருடன் ஒரு நேர்காணல்..

பெண் எழுத்து பாகம் 1 படிக்காதவர்கள் இந்த லிங்க் செல்க.

  http://adrasaka.blogspot.com/2011/05/blog-post_11.html

பதிவுலகின் டாப் 10 பெண் பதிவர்கள் யார்? ஒரு அலசல் (பெண் எழுத்து பாகம் 2 )  படிக்க http://adrasaka.blogspot.com/2011/05/10.html


. 1.  நீங்க பிளாக் உலகுக்கு வர்றப்ப என்ன நினைச்சு வந்தீங்க? யார் உங்களுக்கு வழி காட்டுனது?

எதுவுமே நினைக்கேல்ல சி.பி திடீரென்று நடந்த சந்தோஷமான நிகழ்வென்றுதான் சொல்லுவன்.நான் இலண்டன் போயிருந்த நேரம் என் வானொலி நணபர் தீபசுதனும், என் தமிழ்நாட்டு நண்பர் அரவிந்தும்தான் வலைத்தளம் தொடங்கக் காரணம்.நான் சிறுவயதிலிருந்தே ஏதாவது கிறுக்கியபடியே இருப்பேன்.

இங்கு வந்தபிறகும் அது தொடர்ந்தது.வானொலிக்கும்,சில இணையத் தளங்களுக்குக் கவிதைப் பகுதிக்கென்று அனுப்பிக்கொண்டிருந்தேன்.அப்போது கிடைத்த அன்பு நண்பர்தான் தீபசுதன்.அரட்டையில் கிடைத்த நண்பர் அரவிந்.இவர்கள் இருவரும்தான் எனக்கு ஊக்கம் தந்து வலைத்தளம் என்று ஒரு ஊடகம் இருப்பதாகச் சொல்லி ஆரம்பித்து வைத்தார்கள்.என்னவென்றே தெரியாது எனக்கு.பின்னூட்டம் போடக்கூட மெல்ல மெல்ல கற்றுக்கொண்டேன்.இன்று என் எழுத்துக்கள் பதிவில் அழியாமல் இருக்கிறதென்றால் அவர்களுக்குத்தான் நன்றி சொல்வேன்.


2. உங்க 2 பிளாக்ல கவிதைக்கு 1, கட்டுரைகளுக்கு 1 என வகைப்படுத்திட்டீங்க.. அது ஏன்?


ஆரம்பத்தில் கவிதை மட்டுமே எழுதுவது என்று நினைப்போடுதான் தொடங்கியிருந்தேன்.பிறகு பிறகு வேறு தளங்களுக்குப் போகும்போது எனக்கும் கொஞ்சம் எழுத வருமே என்கிற நினைப்பு வந்தத்து.அதோடு கவிதைகளில் சிரிக்க முடியவில்லை என்னால்.சிரிக்கலாம் கதைக்கலாம் என்றுதான் உப்புமடச்சந்தியில்  "கதை பேச வாங்கோ" என்று ஆரம்பித்தேன்.


இவர் ஹேமாவின் தோழி,ஈழத்தவரைத் திருமணம் செய்த துருக்கியப் பெண் ஸ்வேதா(பெயரை மாற்றிக்கொண்டவர்)


3. உங்க படைப்புகள் பெரும்பாலும் சோக உணர்வுகள் கொண்டதாகவே இருக்கு.. அது ஏன்?

ம்...இது ஈழத்தவர் எல்லோருக்குமுள்ள விதி.நாடு ,மண் ,அகதி வாழ்வு ,உறவுகள் ,தனிமை.மற்றும் ஊருக்குள் இருந்தாலும் நம் அரசியல், போர், வறுமை, இடப்பெயர்வு, எதற்கும் சுதந்திரமில்லாமை.....இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் எம் சோகக்கதையை.இதை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டுத்தான் நம் சில இளஞர்கள் இன்று சிரிக்கச் சிரிக்க எழுத்திக்கொண்டிருக்கிறார்கள்.ஆனாலும் நடுவில் ஒற்றைவரியிலாவது ஒரு சொட்டுச் சோகம் தடவாமல் இருக்காது.


4. நீங்க இலங்கைத்தமிழர்கள் நிலை பற்றி நினைக்கறப்ப எங்களைப்பொன்ற தமிழ்நாட்டு வாழ் தமிழர்களை வெறுப்பீர்களா? அதாவது இலங்கைத்தமிழர்களை காப்பாற்ற எதுவும் செய்யாத, செய்ய இயலாத நிலையில் இருப்பவர்களை வெறுப்பீர்களா?

நிச்சயமாக இல்லை சி.பி.தனிமனிதனின் நிலை வேறு அரசியல் வேறு.தனிப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிலரோடு எனக்குப் பழக்கம் இருக்கிறது.ஒருசிலருக்கு ஈழத்தில் என்ன நடக்கிறது இலங்கை அரசு என்ன செய்கிறது என்று எதுவுமே தெரியவில்லை.தெரிந்திருக்கும் சிலருக்கோ ஈழத்தவர்களைவிட ஆவேசம் மனதில்.இதெல்லாம் அரசியல் சூழ்ச்சி.அரசியல் தன் தேவைக்கேற்ப தேவையான பக்கமெல்லாம் சாயும்.மனிதனைச் சாயவைத்து அழகு பார்க்கும் ஈழத்து அரசியலும் அதேதான்.

இதில் பொதுமக்கள் பங்கு என்ன இருக்கு.பாவம் அவர்கள்.ஆனாலும் பொதுமக்களும் தங்களால் முடிந்த பங்கைச் செய்துகொண்டுதானே இருக்கிறார்கள்.சொல்லப்போனால் கருணாநிதி அவர்களைத் திட்டுகிறோம்.அரசியலுக்கு வெளியில் அவரும் மனிதமுள்ள மனிதராக நிச்சயம் எங்களுக்காக இரங்குவார்.அரசியலுக்குள் இருப்பதால் சொந்தநலன்தான் அவருக்குப் பெரிது ஈழத்தைவிட.


5. வானம் வெளி வந்த பின்னும் என்றால் நீங்க இலங்கையை விட்டு வந்த பின்னும் என அர்த்தம் பண்ணிக்கலாமா? உப்பு மட சந்தி என்றால்
 தமிழர்கள் இன்னும் கசப்பான உணர்வுகளுடனே வசிக்க வேண்டி இருக்கே ... அதை குறிப்பால் உணர்த்துவதா எடுத்துக்கலாமா?


வானம் வெளித்த பின்னும் என்றால்....வானம் தினமும்தான் வெளிக்கிறது.வெளிச்சம் ஈழத்தவர் வாழ்வின் இன்னும் இல்லையே அதைத்தான் சொல்லியிருக்கிறேன்.

ஐயோ...உப்புமடச் சந்தி கசப்பா !பலதரப்பட்ட விஷயங்களையும் சொல்லியிருக்கிறேனே.நகைச்சுவைகூட இருக்கு செந்தில்.எப்பிடி கசப்புன்னு சொல்லுவீங்க.அது நான் வாழ்ந்த கோண்டாவில் என்கிற ஊரின் சந்தியின் பெயர். என் புழுதி மண் எனக்காகக் காத்திருக்கும்


ஊரின் நினைவாக வைத்த பெயர்.இனிப்பான நினைவுகள் இல்லாவிட்டாலும் என் நினைவுகளைத் தாங்கும் உப்புமடச் சந்தி.


6. நீங்க ஸ்விஸ்ல  ஒர்க் பண்றது உங்க முழு மன திருப்தியுடனா? அதாவது மனசுக்கு பிடிச்ச வேலைதானா? அல்லது வேற வழி இல்லை என்ற எண்ணத்திலா?


ஆரம்ப காலத்தில் மொழிப்பிரச்சனை இருந்ததால் நிச்சயமாக மனசுக்குப் பிடிக்காத வேலைகளைதான் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் வேலை செய்தேன்.ஆனால் இப்போது ஓரளவு மனசுக்குப் பிடித்த வேலைதான் செய்கிறேன்.ஆனாலும் அவர்கள் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே எங்கும் முன்னுரிமை கிடைக்கும்.என்னைப்பொறுத்தமட்டில் சொந்த நாட்டைவிட சுதந்திரமும் உரிமையும் மதிப்பும் மரியாதையும் எங்களுக்கு இங்கு கிடைக்கிறது.அதுவே பெரிய சந்தோஷம்.


7.  நீங்க புரொஃபைல்ல உங்க முகத்தை வெளிப்படுத்திக்கலை.. விளம்பரம் பிடிக்காது என்பதாலா? அல்லது நீங்க ஒர்க் பண்ற நிர்வாகத்துக்கு தெரிய விருப்பம் இல்லாததாலா>?

என் பதிவுலகத்திறகும் வேலைத்தளத்திற்கும் சம்பந்தமே இல்லை.சிலசமயம் சிலர் பார்ப்பார்கள்.ஆனாலும் நான்தான் மொழிபெயர்த்துச் சொல்லவேணும்.என்னை எனக்கே பிடிக்கவில்லை.அதுதான் நீங்கள் எல்லோரும் என்னைப் பார்க்கவேண்டாம் என்று முகம் காட்டாமல் மனதை மட்டும் காட்டிக்கொண்டிருக்கிறேன்.

8. நீங்க பதிவுகள் படிப்பதை இலங்கைதமிழர்கள் பதிவு, தமிழ் நாட்டு பதிவர்கள் பதிவு என பிரிச்சு பார்ப்பீங்களா? அதாவது இலங்கைதமிழர்கள் பதிவுக்கு உங்க மனசுல சாஃப்ட் கார்னர் உண்டா?

சி.பி...இது நீங்க கேக்கிறதே பிழை.இப்பவரைக்கும் என் மனசில இப்பிடி ஒரு நினைவு வந்ததே இல்லை.

9. இலங்கையில் ஒரு வேளை சுமூக நிலை தோன்றினால் மீண்டும் இலங்கயே செல்ல விருப்பமா? ஸ்விஸ்லயே தான் இருப்பீங்களா?

நிச்சயமாக சாகிற நேரத்திலயாவது ஊர்ல போய்த்தான் சாகவேணும் என்று இதுவரை சுவிஸ் கடவுச்சீட்டு எடுக்காமல் இருக்கிறேன்.


10..உங்க அம்மா அப்பா அல்லது உறவினர்கள் ,நண்பர்கள் உங்க எழுத்தை பாராட்டுவாங்களா? அல்லது அவங்க பாராட்டனும்னு உங்க மனம் நினைக்குமா?

ம்...நினைக்கும்.என்னோட நெருங்கினவங்க சரி பிழை சொன்னாத்தானே நான் திருந்த வழி.சந்தோஷமும்கூட.என்னோட இணைய நண்பர்களுக்குக்கூட நிறையத்தரம் சொல்லியிருக்கிறேன்.என்னைத் திருத்த உங்களுக்கு உரிமை இருக்குன்னு.சொல்லணும்.ஏன் நீங்ககூட ஒன்றிரண்டு தரம் சொல்லியிருக்கிறீங்க.என் வீட்டில் அப்பா மட்டும்தான் ஏதாவது சொல்வார்.மற்றும்படி இணைய நெருங்கின நண்பர்கள்தான்.அப்பிடி உரிமையோட சொல்லிக்கொண்டிருந்த நட்பொன்றை இழந்துவிட்டேன்.அது மனசில் பெருங்கவலை.


11. பதிவுலகில் உங்களுக்கு பிடித்த ஒரு இலங்கை பதிவர், ஒரு தமிழ் பதிவர் பிளாக் சொல்லுங்க..


இது என்னை வம்பில மாட்டிவிடுற கேள்வி. சி.பி ஏன் இப்பிடிக் கொலை வெறி உங்களுக்கு.எல்லாருக்குமே ஒவ்வொரு திறமை.இத்தனை காலமும் போர்ச்சூழலுக்குள் உழன்றவர்கள் கொஞ்சம் காற்றாட ,எதையாவது அதுவும் மனம் விட்டுச் சொல்லக்கூட முடியாமல் மனம்புளுங்கி அதற்குள் கொஞ்சம் நகைச்சுவை ,ஆன்மீகம் ,யதார்த்தம், இலக்கியம், வைத்தியம், பொது ஏன் சமையல் என்றுகூட எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.சந்தோஷமாக இருக்கிறதே தவிர வேறேதும் இல்லை அப்பனே.எல்லாரும் என் சகோதரர்கள்.
Photo


12. வேலை நேரத்தில் பதிவு பற்றியோ படைப்பு பற்றியோ சிந்திப்பீங்களா? அல்லது வீட்டுக்கு வந்த பிறகா?


அப்பாடா....கடைசிக் கேள்வியா.முடிஞ்சுபோச்சு சி.பி கேட்டு மாசக்கணக்காப்போச்சு.நடுவில கேள்வியெல்லாம் தொலைஞ்சும்போச்சு.இதில இருந்து எல்லாருக்கும் என்ன தெரியுது எண்டா சி.பி க்கு நிறையப் பொறுமை இருக்கு.ரொம்ப நல்லவர்.

ம்...வேலை நேரத்தில் தனிமை கிடைத்தால் ஏதாவது சிந்திப்பேன்.மனதின் எண்ணங்கள் உணர்வுகள் வெளிப்பட வீடு ,வேலை ,பேரூந்து நிலையம் என்று இல்லைத்தானே சி.பி .தெருவில் நடக்கும்போது  சமிக்ஞை விளக்குகள் விட்டு விட்டு அணையும்போதுகூட அதன் வெளிப்பாட்டில் ஒரு வரி வரையலாம் மனதிற்குள் !

எல்லாம் சரியாச் சொல்லிட்டேசி.பி  !ஆனால் சொன்னதெல்லாம் உண்மையான என் உணர்வின் வெளிப்பாடு !

அன்போடும் நட்போடும் உங்கள் அன்பு ஹேமா.


டிஸ்கி -1 இங்கே தரப்பட்ட படங்கள் ஹேமாவின் ஹோட்டல் மற்றும் அவரது தோழிகள் ஃபோட்டோ.. அவர் படம் இல்லை..  அவர் தன் படம் பகிரப்படுவதை விட தன் படைப்புகள் பகிரப்படுவதில் தான் ஆர்வமாம்..

டிஸ்கி 2 -  கேள்வி எண் 6 , கேள்வி எண் 8 இரண்டும் எதேச்சையாக கேட்கப்பட்ட கேள்விகள்.. இப்போது பார்க்கும்போது அவை சிலருக்கு ஏன் இது போல் கேட்க வேண்டும் என்ற மன வருத்தம் அளிக்கக்கூடும் என உணர்கிறேன். அப்படி யாருக்காவது ஒரு ஃபீல் இருந்தால் என்னை மன்னிக்கவும்.

61 comments:

Unknown said...

Me the first?

Unknown said...

பார்ரா!! அண்ணன் மன்னிப்பு கூட கேட்டுட்டார்! இருங்க படிச்சிட்டு வரேன்!

Unknown said...

பார்ரா!! அண்ணன் மன்னிப்பு கூட கேட்டுட்டார்! இருங்க படிச்சிட்டு வரேன்!

Unknown said...

உப்பு மடச்சந்தி! - கேள்வியப்பாரு? :-) (இதுக்குத்தான் பாஸ் நீங்க மன்னிப்பு கேட்கணும்!)
எப்பிடியோ மிஸ் பண்ணிட்டேன் இப்போதான் இணைந்தேன் உப்பு மடச்சந்தியில்...நன்றி பாஸ்!

Ram said...

அருமையான பேட்டி..!! எனக்கு பிடித்த பதிவரின் உள்ஆழத்து குரல்.. சிறப்பு..

சக்தி கல்வி மையம் said...

கலக்கலான பேட்டி..
அவர்களின் கவிதைகளின் விசிறி நான்..

rajamelaiyur said...

நல்ல பேட்டி நன்றி

rajamelaiyur said...

உங்க பேட்டி அடுத்தவங்க ப்ளாக்ல ... அடுத்தவங்க பேட்டி உங்க ப்ளாக் லயா?

'பரிவை' சே.குமார் said...

அருமையான பேட்டி...
ஹேமாவின் கலக்கல் பதில்கள் அருமை.

கூடல் பாலா said...

ஹேமாவின் கவிதையைப் போலவே பேட்டியும் அருமை .....

Napoo Sounthar said...

சூப்பர்..

மாய உலகம் said...

//நீங்கள் எல்லோரும் என்னைப் பார்க்கவேண்டாம் என்று முகம் காட்டாமல் மனதை மட்டும் காட்டிக்கொண்டிருக்கிறேன்//

உங்கள் பதிவில் உங்கள் நல் உள்ளம் தெரிகிறது அது போதும் மேடம்... நண்பர் சிபியின் கேள்விக்கு அழகாக எளிமையாக பதிலளித்து அசத்தியுள்ளீர்கள்....

கோவை நேரம் said...

இப்போ என்ன பேட்டி வாரமா ? ஆள் ஆளுக்கு பதிவர் கேள்வி பதில் போடறாங்களே..? கேள்விகள் அருமை ..பதில்களும் அதைவிட அருமை

M.R said...

அருமையான பகிர்வு நண்பரே ,

நிதர்சனமான உண்மைகள் பல ,

படங்கள் அருமை , அதிலும் மரத்தில் வீடு அழகு , அருமை .

ஆமினா said...

இப்படி ஒரு தொடர எழுதிறீங்கன்னு இப்ப தான் தெரியுது. முந்தைய பதிவுகளை படித்தேன். சித்ரா பதில்கள் ஒவ்வொன்றும் நச். சிபி செந்தில்குமாரின் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஹேமாவின் பதில்கள் அனைத்தும் ரொம்ப சூப்பர். அவங்க கவிஞர் என்பது எழுத்திலேயே தெரியுது :)

RAMA RAVI (RAMVI) said...

தோழி ஹேமாவின் பதில்கள் மிகவும் அருமை.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சுவாரஸ்யம்....

Riyas said...

பதில்கள் எல்லாம் அருமை..

பதிவுலகில் ஹேமா அக்காவின் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை..

நான் அவரின் வலைத்தளம் செல்லமறந்தாலும் என் வலைத்தளம் வந்து தவறாமல் கருத்து சொல்வார்,,

நன்றி ஹேமா அக்கா

நன்றி சிபி.

Unknown said...

பேட்டி நல்ல இருக்கு பாஸு

வித்தியாசமான கேள்விகள்

அதை விட பதில்கள் அமர்க்களம்..

உணவு உலகம் said...

பேட்டியுடன் பதில்களும் சூப்பர்.

அன்புடன் அருணா said...

ஹேமா கலக்குறீங்க!

Angel said...

கவியரசியுடன் அருமையான பேட்டி.
பகிர்வுக்கு நன்றி .படங்களும் அழகு .
வாழ்த்துக்கள் ஹேமா (அற்புதமான பதில்கள் )
வாழ்த்துக்கள் செந்தில் (அருமையான கேள்விகள் )

Thabo Sivagurunathan said...

ஓகே அவங்க வலைப்பூவையும் Follow பண்ணிடிறேன்

ராஜ நடராஜன் said...

சிபி!ஈழப்பெண் பதிவர் ஹேமா என்பதே அவரது உணர்வுக்கு மதிப்பை தரும்.

அப்புறம்,கோவை எக்ஸ்பிரஸ்ல போய் சென்னைல இருக்குற தொலைக்காட்சி பொட்டிக்கடைக்காரங்களுக்கெல்லாம் நேர்காணல் கேள்வி பதில் எப்படியிருக்க வேண்டுமென்று ஒரு நகலை கொடுத்திட்டு வாங்க.

கேள்வியும் பதிலும் சிறப்பாக இருந்தது.வாழ்த்துக்கள்.

தமிழ் உதயம் said...

ஹேமாவின் பேட்டியை வாசித்ததில் மகிழ்ச்சி.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

டேய் சிபி அண்ணா, உருப்படியான பதிவு மக்கா அதனால கலாயிக்க மாட்டேன்.....!!!

MANO நாஞ்சில் மனோ said...

மென்மையான உள்ளுணர்வை வெளி படுத்தி இருக்கிறார் ஹேமா.....

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே என் பேட்டியும் இனி வரும்...

ஆகுலன் said...

இவங்கட பதிவுக்கு நேற்றுதான் சென்றேன்.. ஒரு நல்ல அறிமுகம்....
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிறப்பான பேட்டி சிபி, ஹேமாவை பற்றி தெரிந்து கொண்டேன். அவருக்கு வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
அண்ணே என் பேட்டியும் இனி வரும்...
///////

இதைக்கண்டித்து நாளை மெரீனா பீச்சில் 50 பேர் உண்ணும் விரதம் இருப்பார்கள்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே நல்ல கேள்வி பதில்கள்

தமிழ்வாசியில் இன்று:
அட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - இரண்டாம் பாகம்!

நசரேயன் said...

நல்லா இருக்கு ஹேமா ..

தனிமரம் said...

ஹேமாவின் கவிதைகள் வித்தியாசமான சிந்தனைகள் அது போல் அவரின்  பதில் கூட வித்தியாசமானது நன்றி சி.பி.  உங்கள் மூலம் தோழியின் தகவல்கள் அறிந்து கொண்டோம்!

செங்கோவி said...

இப்போதான்யா பார்த்தேன்..அதெப்படி கரெக்டா நல்ல பதிவு மிஸ் ஆகுதுன்னு தெரியலை!

சரியில்ல....... said...

ஹேமா பதில்கள் கலக்கல்... சிபியின் கேள்விகள் அதைவிட கலக்கல்....

ஹேமா said...

நன்றி சிபி உங்கள் தளத்தில் என்னை பெருமைப்படுத்தியதுக்கு.சந்தோஷமாயிருக்கு.மிக்க மிக்க நன்றியோடு என் அத்தனை நண்பர்களோடும் கை கோர்த்துக்கொள்கிறேன்.

சிபி....நடா சொன்னது விளங்கினதா?
எனக்கும்கூட....அதே விருப்பம்தான்!

Mahan.Thamesh said...

நல்ல பேட்டிசார் . ஹேமா அக்காவின் பதிகள் சிறப்பு வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்

ம.தி.சுதா said...

மிக்க நன்றி சீபி... யாதார்த்தமான கேள்விகளை கேட்டதற்கு..

ம.தி.சுதா said...

ஹேமாக்கா தங்கள் பதில்களை ரசித்தேன் காரணம் சக பதிவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள ஆழமான புரிந்தணர்வு தான் அருமையான பதில்கள் அக்கா..

Unknown said...

கேள்வி கேட்டு வேள்வி செய்த அண்ணனுக்கு நன்றி.......இந்த பதில்கள் மூலம் பெண் பதிவரின் மனநிலையை வெளிப்படுத்திய ஹேமா அவர்களுக்கும் நன்றி....இவை எல்லாம் template கமெண்ட்ஸ்!...எதுக்கும் இருக்கட்டும்!

ஸ்ரீராம். said...

ஹேமாவின் பதில்கள் என்றதும் வந்தேன்.

சாதாரணமாக பேட்டிகளில் பாடகள் என்றால் எங்களுக்காக ரெண்டு வரி பாடுங்க என்றோ நடிகர்கள் என்றால் ரெண்டு வரி வசனம் பேசுங்க என்றோ கேட்பார்களே, அது போல ஹேமாவிடம் ரெண்டு வரி ஹைக்கூ ஒன்று வாங்கிப் போட்டிருக்கக் கூடாதோ...

ஆறாவது கேள்வியோ எட்டாவது கேள்வியோ வித்தியாசமாக இல்லையே...அப்புறம்.... ஹேமாவின் தளத்திலேயே அவர் புகைப் படம் பார்த்ததாக நினைவு!

Unknown said...

இலங்கை தமிழ் பதிவர்,தமிழ் நாட்டு பதிவர் என பிரித்து பார்க்க வேண்டாமே,எல்லாருமே தமிழ்ப்பதிவர்கள்தான்.இதிலாவது ஒற்றுமையை காண்போம். கேள்விகள் அருமை.பதில்களும் அருமை.

ஹேமா said...

சிபி...உங்க கருத்துக்களையும் சொல்லி வையுங்க.தெரிஞ்சுக்கணும் !

சி.பி.செந்தில்குமார் said...

@R.Elan.

ச்சே ச்சே.. நான் பிரிக்கலை.. நாம் அனைவரும் இந்தியர்கள் என்னும் ஒரே குடையின் கீழ்தான் வருவோம்..

சி.பி.செந்தில்குமார் said...

@ராஜ நடராஜன்

அண்ணே தங்கள் விருப்பப்படியும் , ஹேமாவின் விருப்பபடியும் டைட்டிலை மாற்றி விட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

@ஜீ...

அவ்வளவு தானே? கேட்டுட்டா போச்சு நமக்கு மன்னிப்பு கேட்கறது புதுசா என்ன? ஹி ஹி

சேக்காளி said...

அருமையான புகைப் படங்கள்

Lali said...

வலி தோய்ந்த வார்த்தைகள், படித்து முடித்தபின்னும் தேயாமல் தொடருது நினைவுகள்...
http://karadipommai.blogspot.com/

ஹேமா said...

நன்றி சிபி ஈழம் என்று மாற்றியதுக்கு.என் தேசம் ஈழம் என்பதில்தான் எனக்குப் பெருமை.நான் சொல்ல நினைத்துத் தவறியதைச் சொன்ன நடாவுக்கும் என் நன்றி !

நிரூபன் said...

ஈழப்பெண் பதிவர் ஹேமாவுடன் ஒரு நேர் காணல்//

வணக்கம் பாஸ்,
பல்வேறு வெட்டுக் கொத்துக்களைப் பதிவிட்ட பின்னர் சந்தித்து, தற்போது நிலையான ஒரு தலைப்போடு நிற்கும் பதிவினுள் காலடி எடுத்து வைக்கிறேன். உள்ளே போய்ப் பார்ப்போம்.

நிரூபன் said...

aஇவர் சக தோழி செலின் ( ரிசப்ஷனிஸ்ட்)//

இவங்களுக்குப் பின்னாடி, ஹேமா மறைஞ்சு நிற்கிறாங்களா;-)))

நிரூபன் said...

தற்போது ஸ்விச்சர்லாந்தில் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்ட்டாக பணிபுரியும் இவர் அடிப்படையில்//

நாம நோட் பண்ணி வைக்கிறோம், பத்துப் பின்னூட்டம் போட்டால், பிரீ அக்காமடேசன் ஹோட்டலில் புக் பண்ணித் தருவாங்க தானே.

நிரூபன் said...

எனக்கு.பின்னூட்டம் போடக்கூட மெல்ல மெல்ல கற்றுக்கொண்டேன்.இன்று என் எழுத்துக்கள் பதிவில் அழியாமல் இருக்கிறதென்றால் அவர்களுக்குத்தான் நன்றி சொல்வேன்//

அடடா..என்ன ஒரு பக்குவம், எவ்வளவு அருமையான தன்னடக்கம்.
பந்தாவே இல்லாது மென்மையாகப் பதில்களை அள்ளி விடுகின்றார். இது தான் அவரது எழுத்தின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

நிரூபன் said...

இவர் ஹேமாவின் தோழி,ஈழத்தவரைத் திருமணம் செய்த துருக்கியப் பெண் ஸ்வேதா(பெயரை மாற்றிக்கொண்டவர்)//

அக்காச்சி, நம்மளை மாதிரி நல்ல பசங்க இலங்கையில் இருக்கோம்,
ஸ்வேதா மாதிரி நல்ல மனம் கொண்டவங்க யாராச்சும் இருந்தால் கேட்டுச் சொல்லுங்க. ப்ளீஸ்.

நிரூபன் said...

8. நீங்க பதிவுகள் படிப்பதை இலங்கைதமிழர்கள் பதிவு, தமிழ் நாட்டு பதிவர்கள் பதிவு என பிரிச்சு பார்ப்பீங்களா? அதாவது இலங்கைதமிழர்கள் பதிவுக்கு உங்க மனசுல சாஃப்ட் கார்னர் உண்டா?//

இப்படி ஒரு கேள்வி, சும்மா காமெடிக்குத் தானே கேட்டீங்க பாஸ்.

இல்லேன்னா அருவா மனோ அண்ணன் கிட்டச் சொல்லிப் போட்டுத் தள்ள வைச்சிடுவோம்.

நிரூபன் said...

தமிழ்மண நட்சத்திர வாரம் எமக்குத் தந்த மிகப் பெரிய நன் கொடை.
சிபி செந்தில்குமார் எனும் ஓர் எழுத்தாளனது வித்தியாசமான, இதுவரை காலமும் வலை உலகில் பலருக்குத் தெரியாத செந்திலின் தனித் திறமைகளை அறிந்து கொள்வதற்கான வாய்பாகும் என்று நான் வெளிப்படையாச் சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

பத்திரிகையாளன், ஆக்க இலக்கிய கர்த்தா , கிரைம் ஸ்டோரி எழுதும் விறு விறு கதைகளின் அரசன் எனப் பன்முகப்பட்ட திறமைகள் தமிழ் மணத்தின் இந்த வார நட்சத்திரத்தினூடாக வெளிப்படுத்தப்பட்டு நிற்கின்றன.

இதே போன்று தொடச்சியாகவும் சிபி தனது தனித் திறமைகளைப் பதிவுகள் மூலம் காட்டுவார் என நம்பும் அவரது வாசககர்கள் லிஸ்ட்டில் நானும் சேர்ந்து கொள்கிறேன்.
(தொடர்ந்தும் வித்தியாசமா எழுதுவீங்க தானே. ஏமாற்றக் கூடாது.)

சிபியினைப் பல்வேறுபட்ட விமர்சனங்களை முன் வைத்தோருக்கு தக்கதோர் பதிலடியாக இந்தப் பதிவுகள் அமைந்திருகின்றன.

கேள்வி பதிலில் ஒவ்வோர் கேள்விகளையும் முன் வைத்தை விதம் அழகு. ஒரு பெண் பதிவரிடம் எவ்வாறான கேள்விகளைக் கேட்க வேண்டும், ஒரு பேட்டியில் எவ்வாறு கேள்விகளை உணர்வூட்டி, உணர்ச்சிகளின் வெளிப்பாடாக ஜனரஞ்சகப்படுத்த வேண்டும் என்பதை இந்தப் பேட்டியில் செந்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

எடுத்த எடுப்பிலேயே கடுப்பேற்றும் கேள்விகளைக் ஹேமாவிடம் கேட்காமல், மென்மையான பேட்டியாக கொண்டு சென்று விட்டு, ஹேமாவிடன் முன் வைத்த இறுதிக் கேள்விகளான 8ம் வினா, 11ம் வினா என்பவை தேர்ந்த ஒரு பத்திரையாளனின் சம்யோசிதமான சிந்தனையினை வெளிப்படுத்தி நிற்கிறது.
வாழ்த்துக்கள் பாஸ்.

நிரூபன் said...

ஹேமாவும் சிபியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லுவதில் தானும் சளைத்தவர் இல்லை என்பதையும், பெண் எழுத்தாளர்களில் வித்தியாசமான கலை உணர்வும், தற் துணிவும் கொண்ட எழுத்தாளர் என்பதனை வெளிப்படுத்தும் வண்ணம் தன்னுடைய பதில்களைக் கூறியிருக்கிறார்.

பல பெண்கள் முகம் காட்டிப் பின்னூட்டமிட அஞ்சும் பதிவுகளிலும், விவாதங்களிலும் துணிச்சலுடன் பங்கு பற்றும் ஹேமாவின் பதில்கள் அவரது பதிவுலகப் பின்னூட்டங்களைப் போலவே காத்திரமான கருத்துக்களையும்,
8,11ம் வினாக்கள் சந்தர்ப்பத்திற்கேற்றாற் போல வளைந்து கொடுக்கும் பண்பினையும் வெளிப்படுத்தி நிற்கிறது.
கவிதைகளில் பல்வேறு படிமங்களையும், குறியீட்டு வடிவிலான பின்னூட்டங்களையும் கருத்துக்களாக, காத்திரமான பதிவுகளாக வெளிப்படுத்தும் ஹேமாவின் பதில்கள் தாய் மண் மீதான காதலினை அப்ப்ழுக்கற்ற உண்மையான உள்ளத்து உணர்வாகச் சொல்லி நிற்கிறது.
உங்கள் தாய் மண் மீதான தீராக் காதல் வெகு விரைவில் நிறைவேற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கள் ஹேமா.

G VARADHARAJAN said...

அவரது நேர் காணலில் மிகுந்த தன்னம்பிக்கையை காண முடிகின்றது. முடியும் என நினைத்தால் முடியாது என நினைக்காமல் முடியும் என உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி நம் பக்கம் என்பதனை உணர்த்துகின்றது அவரது கருத்துக்கள் பாராட்டுக்க்கள்.

ஜி வரதராஜன்

Rathnavel Natarajan said...

இப்போது தான் படிக்கிறேன்.
அருமையான நேர்காணல்.
வாழ்த்துகள் சிபி.