Monday, July 04, 2011

ஆண் பெண் நட்பில் அதிகம் பாதிக்கப்படுவது யார்?1. படைப்பாளிகள் அனைவரும் வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள் அல்ல, ஆனால் நல்ல வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே நல்ல படைப்பாளிகள் ஆக முடியும்

-----------------------

2.பேண்ட் கிழிந்து விட்டால் ஆண்கள் அதை தூக்கிப்போட்டு விடுகிறார்கள்,பெண்கள் அதை ஃபேஷன்ஷோவுக்கு அணிந்து செல்கிறார்கள்#நல்ல பேண்ட்டை கிழி,அணி

---------------------

3. மாமன் மகள்,அத்தை மகள் என முறைப்பெண்களை சொந்தமாகப்பெற்றவர்கள் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள்#எனக்கு 5 முறைப்பெண்கள்

----------------

4. ஈகோ பார்ப்பவர்கள் வெற்றி பெற ரொம்ப கஷ்டப்படவேண்டி இருக்கும்,காதலியிடம் கூட  ஈகோ பார்ப்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் கூட ஜெயிக்க மாட்டார்கள்

----------------------

5. ஆண்கள் அனைவரும் ஒரே விதமாகத்தான் சிந்திக்கிறார்கள்,பெண்கள்தான் விதம்விதமாக சிந்திக்கிறார்கள்,அதனால்தான்  பெண் மீது ஆர்வம்


---------------------------
6. மெலோடிசாங்க் கேட்டுரசிக்கும் பெண்கள் எல்லாம் மென்மையானமனம்கொண்டவர்கள்எனஆண்கள் தப்புக்கணக்கு போட்டுவிடுகிறார்கள்#மிஸ்கால்குலேஷன் ஆஃப் மிஸ்

-------------------------

7. வேறு ஒருவருடன் திருமணம் ஆன பின்பு கூட முறைப்பெண்களைப்பார்க்கும்போது ஒரு கிளு கிளுப்பு வரத்தான் செய்கிறது#சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்

---------------------------

8. திருமணமண்டபங்களில் பெண்களின் அழகு கூடுதலாக ஜொலிக்கிறது,அங்கே ஆண்கள் எடுபடாமல் போவது மனதில் வலிக்கிறது

-----------------------

9. ஆண்களின் சந்தேகம் அர்த்தம் உள்ளது,பெண்கள் சந்தேகம் அனர்த்தம் விளைவிப்பது#மிஸஸ் டவுட் ஃபயர்

----------------------------

10. ஆண்களை விட பெண்கள் தான் குழந்தை மீது அதிக பாசம் கொண்டவர்கள் என்ற தவறான தகவல் காலம் காலமாக பரப்பப்பட்டு வருகிறது

--------------------------11. தோல்வி அடைந்த காதலில் பிரிந்து போன காதலி என்றாலும் உயிரைக்கொடுக்கவும் ஆண் தயாராக இருப்பான்,ஆனால் பெண் அப்படி அல்ல#லவ்வாலஜி

-----------------------------

12. ரூ.5 லட்சத்துக்கு நகை வாங்கினால் "பான்' எண் கட்டாயம்#ரெண்டரை ரெண்டரை லட்சமா 2 வெவ்வேற கடைல வாங்குனா என்ன பண்ணுவீங்க?

------------------------

13. தியேட்டர்களில் கவர்ச்சி படங்கள்; சுவர்களில் ஆபாச போஸ்டர்கள்: நடவடிக்கை பாயுமா?#படத்துலதான் சீன் இருக்கறது இல்ல,போஸ்டர்லயாவதுஇருக்கட்டுமே

---------------------

14.  உரத்த சிந்தனை கறுப்பு வெளுக்கும் காலம் -பாண்டியன் #கறுப்பு ,சிவப்பு வெளுத்துடுச்சுன்னு பூடகமா சொல்றீங்களா?முரசொலில கும்மி உறுதி உஷார்

---------------------

15.பெரும்பான்மையான பெண்களின் பெஸ்ட் சாய்ஸ் உயரமான மாநிற ஆண்கள்,பெரும்பான்மையான ஆண்களின் பெஸ்ட் சாய்ஸ் சிவப்பு நிற தேக பெண்கள்#சைட்டாலஜி

----------------------16. கல்யாணமண்டப களேபரத்தில் மாப்பிள்ளை பெண்ணைத்தவிர யாரையும் பார்ப்பதில்லை,பெண் மாப்பிள்ளையைத்தவிர அனைவரையும் பார்க்கிறாள்#நோட்ஸ் எடுக்குதோ?

----------------

17. மலையாளப்பட போஸ்டர்களில் மட்டும் ஏன் பெண்கள் ஒரு கையை தூக்கிக்கொண்டு ,உதட்டை கடித்துக்கொண்டு சிரமப்படுகிறார்களோ பாவம்

----------------------

18. காதலியிடம் அதிக முறை சாரி சொன்ன காதலன்கள் தான் இங்கே அதிகம்,தப்பே செய்திருந்தாலும் தெனாவெட்டாக இருக்கும் காதலிகள் தான் இங்கே அதிகம்

----------------------

19.  ஆண் பெண் நட்பில் அதிகம் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுவது பெண்கள் தரப்பு,ஆனால் உண்மையில் பாதிக்கப்படுவது ஆண்கள் தரப்பே#இதை முடிஞ்சவரை பரப்பு

--------------------

20. ஹோட்டல்களிலும்,வீடுகளிலும் ,விருந்துகளிலும் சாப்பிட்ட பிறகு கை கழுவ ஆண்கள் முந்திக்கொள்கிறார்கள்,காதலில் மட்டும் பெண் முந்திக்கொள்கிறாள்

---------------------------

32 comments:

rajamelaiyur said...

முன்றாவது மேட்டர் சூப்பர்வலைசரத்தில் நான் ..
வாங்க வசமா மாட்டிகிட்டிங்களா ?

rajamelaiyur said...

கலக்குங்க பாஸ்வலைசரத்தில் நான் ..
வாங்க வசமா மாட்டிகிட்டிங்களா ?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

படங்கள் அத்தனையும் அருமை. இந்த ஓவியரின் ஓவியங்கள் அனைத்திலும் 'காத்திருத்தல் ' முக்கிய பங்கு வகிக்கும்.
15 . பயங்கர சர்வேயா இருக்குது.
ஆண் பாச நெடி கொஞ்சம் தூக்கலா தெரியுது. பார்த்து பெண்ணியவாதிகள் போர்க்கொடி தூக்கிடப் போறாங்க.

Unknown said...

அண்ணே..என்னாது இது எப்போ இப்படி ஆணிங்கன்னு நான் கண்டிப்பா கேக்க மாட்டேன் ஹிஹி!

தமிழ்வாசி பிரகாஷ் said...

வரிகள் ஒன்னோன்னும் சூப்பர், அதை விட ஓவியங்கள் மிக மிக சூப்பர். ரொம்பவே மாறிடிங்க நீங்க...

THOPPITHOPPI said...

அருமை அருமை அருமை

நான் போட்டோவ சொன்னேன்........ என்னாமா வரைரானுங்க

ஷர்புதீன் said...

செம அழகான ஓவியங்கள்.... யாருங்க அந்த ஓவியர்கள்...( கவனிக்க...உங்க இடுக்கை குறித்து வரும் கமெண்டுகளை விட ஓவியத்தை குறித்தே அதிகம் வருகிறது)

Anonymous said...

வணக்கம் ., உங்கள் கருத்துகள் முன்னை விட மெருகேறி இருப்பது உண்மை., பல கருத்துகள் ஓகே ஆனால் பல கருத்துகளுக்கு தடா இந்த பதிவில் ., நானும் எதிர் பார்க்கிறேன் உங்களுக்கு எதிரான பெண்ணின போர்கொடியை !!!! :)))) நன்றி

--
கல்பனா இராஜேந்திரன்

சக்தி கல்வி மையம் said...

Nice post..

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்குங்க

கூடல் பாலா said...

முதல் பாய்ண்டில் உள் குத்து .....

Unknown said...

அருமை
நச்
சூப்பர்

//12. ரூ.5 லட்சத்துக்கு நகை வாங்கினால் "பான்' எண் கட்டாயம்#ரெண்டரை ரெண்டரை லட்சமா 2 வெவ்வேற கடைல வாங்குனா என்ன பண்ணுவீங்க?

நீங்கள் 50000 ரூபாய்க்கு மேல் செலவு செய்யும் போதும் வருமானவரி துறைக்கு உங்கள் விவரங்கள் அனுப்பப்படுகிறது. அதனால வாங்கும் போது வேற வேற பேருலயும் பில் போடணும் புரிஞ்சதா?

அதுக்கு மேலயும் உங்க கிட்ட காசு புடுங்கணும்ன்னு அவங்களுக்கு தோணுச்சுன்னா உடனே ரைடு தான்.


//16. கல்யாணமண்டப களேபரத்தில் மாப்பிள்ளை பெண்ணைத்தவிர யாரையும் பார்ப்பதில்லை,பெண் மாப்பிள்ளையைத்தவிர அனைவரையும் பார்க்கிறாள்#நோட்ஸ் எடுக்குதோ?

நோட்ஸ் இல்லை எவனாவது கல்யாணத்த நிப்பாட்டிட்டா பழி வாங்கணும் இல்லை// 20. ஹோட்டல்களிலும்,வீடுகளிலும் ,விருந்துகளிலும் சாப்பிட்ட பிறகு கை கழுவ ஆண்கள் முந்திக்கொள்கிறார்கள்,காதலில் மட்டும் பெண் முந்திக்கொள்கிறாள்

எல்லாம் சூழ்நிலை. தக்கன தப்பி பிழைக்கும் கேள்விபட்டது இல்லையா?

உணவு உலகம் said...

1,4.அனுபவம்
2,6,9,10.வாங்கி கட்ட போறீங்க!
3,7.பப்ளிக்
5,8.சமாளிபிக்கேஷன்.
இவை போதும் இப்போதைக்கு!

Yaathoramani.blogspot.com said...

ஒவ்வொரு சொற்றொடரும் அருமை
அதிலும் இரண்டாவதாகச் சொல்லுகின்ற கமெண்ட் சூப்பர்
படங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் கொள்ளை அழகு
வலைத்தள ஆசிரியராவதற்கு வாழ்த்துக்கள்
அதிக எதிர்பார்ப்புடன் உள்ளோம்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
'பரிவை' சே.குமார் said...

அருமையா இருக்கு... படங்கள் அருமை... ஆனா ஆண்-பெண் நட்பில் அதிகம் பாதிக்கப்படுவோர் யாருன்னு கேட்டுட்டு ஒரு ஆம்பளை போட்டோகூட கெடக்கலையா சிபி அண்ணா....

'பரிவை' சே.குமார் said...

அருமையா இருக்கு... படங்கள் அருமை... ஆனா ஆண்-பெண் நட்பில் அதிகம் பாதிக்கப்படுவோர் யாருன்னு கேட்டுட்டு ஒரு ஆம்பளை போட்டோகூட கெடக்கலையா சிபி அண்ணா....

காங்கேயம் P.நந்தகுமார் said...

இடுக்கை இடுவதை விட்டு விட்டு வர வர நம்ம சிபி அண்ணன் சொந்த அனுபவத்தை எழுத ஆரம்பிச்சுட்டாருத்தை எழுத ஆரம்பிச்சுட்டாரு

கவிதை வீதி... // சௌந்தர் // said...

.////
. ஆண்கள் அனைவரும் ஒரே விதமாகத்தான் சிந்திக்கிறார்கள்,பெண்கள்தான் விதம்விதமாக சிந்திக்கிறார்கள்,அதனால்தான் பெண் மீது ஆர்வம்
//////////


எந்த தகவலுக்கு ஆதாரம் இருக்கிறதா...

அப்படின்னா நீங்களும் நானும் ஒரே மாதிரியா யோசிக்கிறோம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இளையராஜா ஓவியங்கள் அசத்தல்....

கவி அழகன் said...

எங்க ஐயா உந்த படங்களை தேடிப்பிடிச்சீர் பள பளக்குது
நல்ல கருத்துக்கள் கவனத்தில் எடுத்துகொள்ளப்பட்டன

J.P Josephine Baba said...

உங்க ஆராய்ச்சிக்கு ஓய்வே இல்லையா அதும் பெண்களை பற்றி!

நெல்லி. மூர்த்தி said...
This comment has been removed by the author.
நெல்லி. மூர்த்தி said...

பொத்தாம் பொதுவாக இல்லாமல் பத்தும் இருபதும் பன்சாக இருந்தது. ஹி.. ஹி... பாசக்கார அப்பனாக்கும்.

குணசேகரன்... said...

சூப்பர் பாஸ்..கலக்கறீங்க...
படங்கள் வெரி நைஸ்.
என்னோட வலை பக்கமும் கொஞ்சம் வாங்க.

ஹேமா said...

படங்களெல்லாம் தேர்ந்தெடுத்த அழகு.மற்றதெல்லாம் பொறாமை சிபிக்கு !

செங்கோவி said...

ஓவியங்கள் அனைத்தும் அருமை.

Yoga.s.FR said...

எல்லோரும் சொன்னது தான்!படங்களாஅ..........ருமை!!!!!!இனி விடயத்துக்கு வருவோம்:ஐந்து முறைப் பெண்களைப் பெற்ற பாக்கியவான்?!எப்புடி சமாளிக்கப் போறீங்களோ?

ரிஷி said...

பிறர் படங்களை உபயோகப்படுத்தும்போது குறைந்தபட்சம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம். உங்களுக்காக நான் தெரிவிக்கிறேன்.

நன்றி : விகடன் ஆர்ட்டிஸ்ட் இளையராஜா
https://picasaweb.google.com/artistilayaraja/IndianGirlsWomens

Unknown said...

சூப்பர் சில,சூப்பரோ சூப்பார் பல.

ரேவதி மணி said...

சி.பி.செந்தில் உங்க கருத்துக்களை விட ஓவியங்கள் சூப்பர். கருத்துக்களில் சில பெண்களுக்கு ஆதரவாய் 5,8.சி ல பெண்களுக்கு எதிர்ப்பாய் 6,10,20. சில சரியானவையும் இருக்கு.15. ஓகே பெண்களைப்பற்றி இன்னும் கூட நிறைய தெரிந்து கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.

செழியன் said...

அண்ணே உங்க எழுத்துக்கு பாண்டிய நாடே அடிமை