Thursday, July 28, 2011

ஃபாரீன் பதிவரை ஏமாற்றிய கோவையைச்சேர்ந்த டுபாக்கூர் பெண்ணின் கதை

ஏமாற்றப்பிறந்தவர்கள் ஆண்கள், ஏமாறப்பிறந்தவள் பெண் என்ற தவறான  கருத்து காலம் காலமாக நம்மிடையே வழக்கில் இருந்து வருகிறது. பெண் இனத்திலும் பேய்கள் இருக்கிறார்கள்,அவர்கள் ஆண்கள் வாழ்க்கையை அலங்கோலப்படுத்தி இருக்கிறார்கள்,அலைய வைத்திருக்கிறார்கள்  என்று சொல்லாமல் சொன்னது மஸ்கட் பதிவரின் கண்ணீர்க்கதை..

சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் சாட்டுக்கு வந்தார். என்ன சிபி உங்க பதிவுல கணவனின் ந‌ண்பர் என்ற போர்வையில் வந்த கயவனைப் பற்றி  பேஸ்புக்கில் ஃபோர்ஜரி பண்ணுனவனை பற்றியும் எழுதி பொண்ணுங்களெல்லாம் ரொம்ப நல்லவங்கப் போலவும், ஆண்களெல்லாம் மோசமானவங்க போலவும் இமேஜ் கிரியேட் பண்ணிட்டே. ஒரு ஆண்மகனா இருந்துக்கிட்டு இப்படி சேம் சைடு கோல் போட்டுட்டியேனு கேட்டார் .


அப்படிலாம் இல்லீங்க, எனக்கு தெரிய வந்த ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி பதிவிட்டேன். அப்படியென்ன பெண்கள் ஆண்களை ஏமாற்ற முடியும்? மிஞ்சிப் போனால் காதலித்துவிட்டு வேறொருவனை கல்யாணம் கட்டிக்கிட்டு போவாங்க அவ்வளவ்தானேனு அசால்ட்டா கேட்டேன்.

அடப்பாவி சிபி, இப்படிதான் உலகம் தெரியாம இருக்கியானு கேட்டு தன்னோட நண்பர் கதையை சொன்னார்.

ஆண்களில் எப்படி விதிவிலக்கான ஆண்களால் மொத்த ஆண்வர்க்கமே கெட்டப் பேரை சுமக்குதோ, அதேப்போல போற்றத்தக்க பெண்களிலும் விதிவிலக்கை கண்டு அதிர்ந்துப் போனேன்.  

அவர் பெயர் ச‌ண்முகம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). சென்னை அண்ணா பல்கலைகழகத்தில், மெக்கானிகல் இஞ்சினியரிங் முடித்து, இப்போது மஸ்கட்டில் வசிக்கிறார் .இல்லையில்லை மனைவியின் ஏகப் போக வாழ்க்கைக்கு பொருளீட்டிக் கொண்டிருக்கிறார் அந்த அப்பாவி கணவர்.


சிறு வயது முதற்கொண்டே தன் அக்கா பெண் மீது  அவருக்கு காதல். கட்டினால் அவளைத்தான் கட்டனுமின்னும் , வேறெந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பாராமலும்  படித்து முதல் வகுப்பில் தேறி, மஸ்கட்டில் வேலை கிடைத்து பறந்து போனார்.
 

4 வருடங்கள் மஸ்கட்டில் வேலை பார்த்தார், அவனுக்கு திருமணம் முடித்துவைக்க பெண்பார்க்க பெற்றோர் முனையும்போது, அக்கா மகளின்மீதான தனது விருப்பத்தை சொல்ல‌. சரியென்று அவர்களும் பெண் கேட்க போக, எனக்கு மாமாவை கட்டிக்க இஷ்டமில்லை என்று ஒருவரியில் சம்பந்தத்தை தட்டி கழித்துள்ளாள் அக்கா மகளான கோமதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது)

சில மாதங்கள்  கழித்து, சண்முகமும் ஒருவாறாக மனதைத் தேற்றிக்கொண்டு, வேறொரு பெண்ணை மணமுடிக்க சம்மதத்துள்ளார். விடிந்தால் நிச்சயதார்த்தம், புதுப்பெண்ணுக்கு புடவை, நகையெல்லாம் வாங்கியாகிவிட்டது.

அன்றிரவு கோமதியிடமிருந்து சண்முகத்திற்கு ஃபோன். 

“மாமா, தாத்தாவும், பாட்டியும் பெண்கேட்டு வரும்போது எனக்கு உங்க மேல விருப்பமில்லை. ஆனால், இப்போ உங்களுக்கு வேறொரு பெண்ணுடன்  நிச்சயதார்த்தம் எனும்போதுதான், உங்க மேல காதல் வந்திருக்கு. (!!!!!!!!??????????????)கட்டினால் உங்களைத்தான் கட்டுவேன். இல்லாட்டி செத்துப் போயிடுவேன்”னு அழுதிருக்கிறாள். 

அக்கா மகளின் கண்ணிரைக் கண்டவுடன் மனம் பதறிப்போய், தன் சகோததரின் எதிர்ப்பையும் மீறி நிச்சயதார்த்தை நிறுத்தி , தனக்கும், கோமதிக்கும் நிச்சயதார்த்தம் நடத்தி, மஸ்கட் சென்றுவிட்டார்.

 இந்த இடத்தில் ஒரு சின்ன ஃபிளாஸ்பேக்..கோமதி ஆரம்பத்தில் தன் மாமாவை கட்ட மாட்டேன் என்று அடம் பிடித்ததற்கு காரணம் அவர் ஏற்கனவே ஒருத்தனை லவ் பண்ணியதுதான். ஆனால் சொத்து வெளியே போய் விடக்கூடாது என்பதற்காக கோமதியின் அம்மா கோமதியை பிரெயின் வாஷ் பண்ணி இருக்கார். 

“நீ யாரையோ காதலிச்சுக்கோ, எப்படியோ இருந்துக்கோ ,ஆனா என் தம்பியை கல்யாணம் பண்ணிக்கோ, கோடிக்கணக்குல சொத்து கை விட்டுப்போயிடக்கூடாது” ( நல்ல அம்மா ,நல்ல பொண்ணு குடும்பம் விளங்கிடும்)

அம்மாவின் வற்புறுத்தலால் வேறு வழி இல்லாமல் கோமதி கல்யாணத்திற்கு ஓக்கே சொலி இருக்கிறாள்.நிச்சயதார்த்தம் மாமாவுடன் நடந்து முடிந்ததும் மாமா மஸ்கட் போய்ட்டார்..


நிச்சயம் ஆன நிலையில் நிச்சயம் செய்த தன் தாய்மாமா மஸ்கட்டில் இருக்கும் நிலையில் கோமதி ஒரு துணிச்சலான காரியம் செய்தார் தன் முன்னாள் காதலுடன் ஓடிப்போய் திருமணம் முடித்து பத்து நாட்கள் குடித்தனமும் நடத்தியுள்ளார். அவர்பெற்றோர் அவரை கண்டுபிடித்து, வீட்டிற்கு கூட்டி வந்துள்ளனர்.

மஸ்கட்டில் இருக்கும்  தாய்மாமாவுக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அதிர்ந்து போனார்.

“ஏம்மா கோமதி. காதலிக்கிறேன்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே? ஏன் இப்படி பண்ணி குடும்ப கவுரத்தை கெடுக்கறே?
இப்பவும் ஒண்ணும் கெட்டு போகலை வெறும் நிச்சயம் மட்டுமே நமக்குள் நடந்துள்ளது, நான் விலக்கிக்கிறேன். நீ உன் விருப்பம்போல் மணமுடித்துக் கொள்”

என்றிருக்கிறார்.உடனே கோமதி ஒரு குண்டை தூக்கிப்போட்டாள்.
”மாமா.. நான் யாரையும் காதலிக்கவும் இல்லை,விருப்பப்பட்டு மேரேஜ்ஜும் பண்ணிக்கலை.அவன் மேல் எனக்கு எந்த விருப்பமில்லை, அவன் தான் என்னை கடத்திக் கொண்டுப் போய் அடைச்சு வச்சி சீரழிச்சுட்டான். எனக்கு அவன் மேல் துளிக்கூட காதல் இல்லை”


கோமதியின் வார்த்தையை நம்பிய சண்முகம் தன் அக்கா பொண்ணாச்சே என்பதால் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லி விட்டார்.. 
ஜூலை 2002 ல் கோவையில் திருமணம் முடித்து சில நாட்கள் தங்கியிருந்தார்.முதல் இரவு முடிந்தது. சுமூகமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் 3  மாதம் புது மணத்தம்பதிகள் வாழ்க்கையை நடத்தினார்கள்.


லீவ் முடிந்து மஸ்கட் போக வேண்டிய சூழலில் சண்முகத்துக்கு புது சிக்கல். கோமதிக்கு விசா கிடைக்கவில்லை. தாமதம் ஆகும் சூழல். வேறு வழி இல்லாமல் 6 மாசம் கழித்து வந்து கூட்டி செல்கிறேன் என அக்காவிடம் சொல்லி விட்டு  மனைவி கோமதியை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்த்துவிட்டு தான் மட்டும் மஸ்கட் பறந்துள்ளார்.

அங்கு, கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் பனியிலும், மனைவியை நினைத்தும், போனில் அவள் குரல் கேட்டும் பிரம்மச்சர்யத்துடன் பொருளீட்ட, கோமதியோ தன்னுடன் பயின்ற சங்கர் என்ற  மாணவனுடன் படுக்கையை பகிர்ந்துள்ளாள்.  (இது வேற,முதல்ல ஓடிப்போய் கட்ன ஆள் வேற...)

இந்த மேட்டர் தினமலர் இதழிலேயே வந்து கோமதியின் பேரும் கெட்டுப்போனது. மஸ்கட்டில் இருக்கும் சண்முகத்திற்கு தகவல் போனது.

ச‌ண்முகம் இதை கேள்விப்பட்டு, ஆத்திரம் கொள்ளாமல், 


“உனக்கு அவன்மேல் விருப்பமிருந்தால் நான் விலகிக்குறேன். நீ அவனையே கட்டிக்கோ”

னு பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கார். 

அதற்கு கோமதி , “இல்லீங்க எதோ தெரியாம (!!!!!!!!!!!!!!!!)பண்ணிட்டேன் இனி இப்படி செய்ய மாட்டேன்” என  சொல்லி அழ அவளை தன்னுடன் மஸ்கட்டிற்கு குடும்பம் நடத்த அழைத்து சென்றுள்ளார். 

சில மாதம் எந்த பிரச்சனையும் இல்லாமல் போக கோமதி கருத்தரித்துள்ளார். அதைக் காரணம் காட்டி இந்தியா வந்தவர், பிள்ளைப்பேறு முடிந்தும் மஸ்கட் போக ஆர்வம் காட்டாமல் சாக்கு போக்கு சொல்லி தட்டி கழித்துள்ளாள். ச‌ண்முகமும் சரி, தன் மனைவிக்கு மஸ்கட் வாசம் பிடிக்கலைப் போலனு நினைச்சுக்கிட்டு, தன் சம்பாத்தியம் அனைத்தும் கொட்டி கோவையில் வீடு வாங்கி அதில் மனைவியை குடியமர்த்தி மஸ்கட் பறந்து போனார்.

ச‌ண்முகம் மஸ்கட்டில் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் இப்போது டிஸ்கோதே கிளப்பிலயும், கேளிக்கைவிளையாட்டிலும் கரையுது. .கோமதிக்கு பல ஆண்களுடனான சகவாசம் வேறு.


வயதான மாமியார், மாமனாரை கவனிப்பதில்லை. அக்கம் பக்கத்தினருடன் சண்டை. வருடம் ஓரிருமுறை இந்தியா வரும் ச‌ண்முகத்திற்கு  கணவன் என்ற மரியாதை கிஞ்சித்தும் இல்லை . வருபவருக்கு சரியான மரியாதை கிடையாது. தன் மேல் தவறை வைத்துக்கொண்ண்டு, அவரையே வேலைக்காரன் போல் நடத்துவார்

இவ்வளவு சம்பாதித்தும், வயதான் பெற்றோரை கவனிக்க முடியாத துக்கத்தினாலேயும் ,தன் குடும்ப மானம் இப்படி கப்பல் ஏறி விட்டதே  என்ற கவலையிலும்  அவர் இந்தியாவிற்கு அதிகம் வருவதில்லை. ஆனால், பணம் மட்டும் கரெக்டா மாசாமாசம்  வந்துவிடும். அது போதுமே அந்த மகராசிக்கு. 

இன்றும் சண்முகம் மஸ்கட்டில் பணி புரிந்து கொண்டுதான் இருக்கிறார். கோமதி தன் லீலைகளை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

1. அக்கா பெண், அத்தை பெண் என்பதற்காக இரக்கப்பட்டோ., சொந்த பந்தம் விட்டுப்போய் விடக்கூடாது என்பதற்கோ யாரும் திருமணம் செய்ய வேண்டாம்.. மாப்பிள்ளையாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ஒரு தடவைக்கு பல தடவை அக்கம் பக்கம் கேரக்டர் பற்றி விசாரித்து கொள்ளவும். 

2. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ,ஆசை எல்லாருகும் இருந்தாலும் யாருக்கு அது போய்ச்சேர்கிறது என்பதை பார்க்க வேண்டும். மனைவி ஓரிடம், கணவன் ஓரிடம் என பிரிந்து இருப்பதை தவிர்க்க வேண்டும்.. 

3.  குடும்பத்துக்கு ஆகாத பெண் என்று தெரிய வந்தால் தயவு தாட்சண்யம் இல்லாமல் அவள் வழியில் விட்டு விட வேண்டும்.. சும்மா தாங்கிட்டு இருக்கக்கூடாது.. 

4. என்னதான் மனைவி பேரில் பாசம் இருந்தாலும் சம்பாதனை, சொத்து எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் தான் வைத்திருக்க வேண்டும்.. மனைவி பேரில் எழுதி வைத்து விட்டால் பின் எதிர்காலம்?

44 comments:

Unknown said...

vadai

Unknown said...

பாடங்கள் பின்பற்றவேண்டியவை

Unknown said...

விகடனில் உங்கள் ட்வீட் மீண்டும் வாழ்த்துக்கள்

சத்யா said...

பயனுள்ள அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. நன்றி சகா.

J.P Josephine Baba said...

ஐயா சி.பி ஒரு ஓடு காலிப் பெண்ணை மேற்கோள் காட்டி உலகம் போற்றும் அறுவுரை கொடுத்துள்ளீர்கள் . கணவனே கண் கண்ட தெயவம் புல்லானாலும் புருஷன் என்று வாழும் பெண்கள் கணவருக்கும் அறிவுரை வழங்கினால் நன்னா இருக்கும். போக போக ராணி புத்தகம் மாதிரி போவுது....................வாழ்க வளமுடன்!

Yaathoramani.blogspot.com said...

இந்தக் காலத்தில் நல்லவனாக இருக்க
ரொம்ப கஷ்டப்படவேண்டியிருக்கிறது
நல்லவனாக இருந்தால் அதைவிட ரொம்ப
கஷ்டப் படவேண்டியிருக்கிறது
அறிவூட்டும் நல்ல பதிவு

baba said...

தலைவரே வணக்கம்

பதிவினில் தமிழ் எழுத்துக்கள் சரியாய் தெரிவதில்லை. எனக்குமட்டும் இப்படியா ?

நானும் comments இல் பார்த்தேன் .யாரும் இது பற்றி குறிப்பிடவில்லை.

அநன்றி.
ஆனந்த்
பமாகோ, மாலி

Menaga Sathia said...

படிக்கவே கஷ்டமா இருக்கு....பகிர்வுக்கு நன்றி!!

உணவு உலகம் said...

இன்னைக்கு பூரா ஒரே பெண்கள் பற்றிய பதிவா இருக்கே!

கவி அழகன் said...

10th

செங்கோவி said...

//பதிவினில் தமிழ் எழுத்துக்கள் சரியாய் தெரிவதில்லை. எனக்குமட்டும் இப்படியா ? //

ஆமாம் சிபி...எனக்கும் அப்படியே...’காப்பி’ பண்ணிப் படித்தால் மட்டுமே சரியாகத் தெரிகிறது. என்னன்னு பாருங்க.

Napoo Sounthar said...

ம்..

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு,,

Mohamed Faaique said...

என்ன உலகமப்பா இது.

M.R said...

நல்லவர்களும் ,கெட்டவர்களும் இரண்டு சைடிலும் உண்டு

பகிர்வுக்கு நன்றி நண்பரே

Thenammai Lakshmanan said...

ரொம்ப கஷ்டமா இருக்கு. பாவம் அந்தக் குழந்தை.

Unknown said...

இந்த பதிவுதானா அது???ம்ம்ம் இப்பெல்லாம் ரொம்பவே நாம தான் பாதிக்கப்படுரம் தல!

தமிழ்வாசி பிரகாஷ் said...

கணவனே கண் கெட்ட பெண், அவள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

தமிழ்மணம் ஏழாவது மீ.

உலக சினிமா ரசிகன் said...

சிபி...இந்த மஸ்கட் ஆள் மேல் பரிதாபமே வரவில்லை.ஏமாறுவதை வாழ்க்கை லட்சியமாகக்கொண்டவர் போல...

சென்னை பித்தன் said...

இதுதான் உலகம்!

settaikkaran said...

இப்படி பெருந்தன்மையையும், பொறுமையையும் காட்டி ’ஏமாந்த சோணகிரி’ என்ற பட்டத்தை வாங்கிய பலர் ஞாபகத்துக்கு வருகிறார்கள் தல. பாவம் அந்தக் குழந்தை; பரிதாபத்துக்குரியவர் அந்தக் கணவர். :-(

ஆகுலன் said...

இவ்வளவு நல்ல ஆணா..நான் அவருக்காக மனம் வருந்துகிறேன்...

எனது கனா.................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இத்தனைக்குப் பிறகும் அந்த கணவருக்கு இன்னும் புத்தி வரவில்லையா? இதை என்ன சொல்வது? இவ்வளவுக்கும் அவர் பொறுமையாக இருந்திருக்கிறார் என்பதே அனைத்து தவறுகளுக்கும் முதல் காரணம்!
அந்தக் குழந்தைதான் நிலைதான் பரிதாபம்... !

ராஜி said...

மீன் தண்ணீருக்குள் சிந்தும் கண்ணீரைப் போல, ஆண் படும் பாடு வெளி உலகத்துக்கு தெரியாமலே போகுது.அப்படி தெரிய வரும்போதும் அவன் மீது இரக்கத்திற்கு பதில் கையாலாகதவன் என்ற பட்டமே மிஞ்சுது.
அதனால்தானோ என்னவோ, ஆண்கள் தன் துயர்களை வெளியில் சொல்லாமல் மனசுக்குள்ளேயே போட்டு புழுங்குகின்றார்கள். இதுப்போன்ற சிலசமயங்களில் மட்டுமே ஆண் துயரம் வெளிப்படுகிறது. இதைப்படித்தப்பின்னாவது கோமதி போன்ற பெண்கள் திருந்தினால் சரி.

குணசேகரன்... said...

நிச்சயம் யோசிக்க வைத்த பதிவு இது..

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Malik said...

நலச பதிவு

Avargal Unmaigal said...

இதே மாதிரியான சம்பவம் என நண்பருக்கும் ஏற்பட்டது. தனது நண்பரின் சகோதரியை மணந்த என் நண்பர் அரபு நாட்டுக்கு வேலைக்கு சென்ற போது அவரது மனைவிக்கும் இன்னொருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது அது அவரின் காதுக்கு எட்டியது ஊருக்கு பவந்து மனைவியை மன்னித்து அவருடன் வாழ்க்கை நடத்தி குழந்தையும் பெற்றார் மீண்டும் அவர் வெளினாடு சென்ற போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது எனவே அவர் விகாரத்துக்கு அப்பளை பண்ணினார். அதனால் மனைவியின் சகோதரரும் அவரது நண்பர்ரும் ஆனாவாரல் கொலை மிரட்டலுக்கு உட்பட்டார். அந்த நணபர் யூனியன் லீடர் ஆவார். எனவே உயிருக்கு பயந்த அவர் புத்திசாலியா சமாதனமாகி போவது போல நடித்து அமெரிக்க வந்து செட்டில் ஆகி அமெரிக்க முறைப்படி விவாகரத்து பண்ணிவிட்டார் குழந்தைகளுக்காக மட்டும் இப்போது பணம் அனுப்பி கொண்டிருக்கிறார்.

ஆண்கள் & பெணகள் இருவரிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறாரகல் என்பதை உணர்ந்து நாம்தான் ஸ்மார்டாக வாழ வேண்டும்

Avargal Unmaigal said...

பணத்திற்க்காக வாழ்க்கைய தொலைத்தவர் அந்த நபர். என்னைப் பொருத்தவரை அந்த பெண்ணை மட்டும் குறை கூறி பயன் இல்லை. கூழை குடித்தாலும் குடிசையில் வாழ்ந்தாலும் கணவன் மனைவி என்பர்கள் ஒன்றாக வசிக்க வேண்டும். இல்லையென்றால் இந்த நவின உலகில் சபலத்திற்கு உள்ளாவது இயல்பானதே என்பேன்.

மாய உலகம் said...

சிபி நண்பரிடம் எனக்கு கூட அந்த ஆதங்கம் இருந்தது... சமூகத்தில் ஆண்களை சாடியே சில எச்சரிக்கை பதிவுகள் தங்கள் பதிவுகளில் வந்தது... சாக்கடையில் உள்ள புழுக்களை காட்டிலும் அருவருக்க தக்க கேடுகெட்ட குணமுள்ள பெண்களும் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள்... அதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன், சந்தித்திருக்கிறேன்... அதையெல்லாம் பதிவில் இடும் தைரியம் தற்பொழுது இல்லை... தங்கள் போல் ஒரு நிலைக்கு வந்ததும் வெளியிட நினைத்துள்ளேன்... அதற்காக பெண்கள் எல்லாம் மோசமானவர்களும் இல்லை... கையெடுத்தும் கும்பிடத்தோன்றும் பெண்களும் இதே சமூகத்தில் இருக்கிறார்கள்.... மரியாதைக்குரிய பெணகளும் இருக்கிறார்கள் அது போன்ற பெண்களுக்கு என் இரு கரம் கூப்பி மானசீகமாக வணங்குகிறேன்... மற்றபடி இந்த பதிவு உங்களது ஒரு பக்கம் சாராத உண்மையான பதிவு வெளியிட்டமைக்கு நண்பர் சிபியை மனமார வணங்குகிறேன்.... நன்றி வாழ்த்துக்கள்

ஹேமா said...

சிபி...எங்காவது விதிவிலக்குகள் சில.அவ்ளோதான் !

Unknown said...

தானிக்கி தீனி இருக்கத்தான் செய்யும்!....என்ன இருந்தாலும் பெண்களுக்கு தைரியம் இந்த விஷயத்துல கம்மிதான்....சில பெண்கள் இப்படி இருப்பது மனதுக்கு வருத்தத்தை கொடுக்கிறது...பகிர்வுக்கு நன்றி!

ஹசன் said...

இந்த உண்மையை 1 வருடத்துக்கு முன்னால் எழுதி இருந்தால், எனக்கு தெரிந்தே இன்னும் ஒருவர் ஏமாந்து இருக்க மாட்டார். :(

நிரூபன் said...

வணக்கம் சகோதரம்,
பெண்களுக்குள்ளும் குள்ள நரிகள் இருக்கின்றன எனும் உண்மையினை வெளிப்படுத்தும் அருமையான பதிவினைத் தந்திருக்கிறீங்க.
சமூகத்தில், ஆண்கள் அனைவரும், ஒரு லிமிட்டோடு அதிகாரங்களைப் பெண்களிடம் கொடுக்க வேண்டும் எனும் தத்துவத்தை இப் பதிவு சொல்லி நிற்கிறது.

Mohammed Arafath @ AAA said...

nice

Mohammed Arafath @ AAA said...

சிறந்த பதிவு.எல்லா ஆண்களும் கெட்டவங்களும் இல்ல.எல்லா பொண்ணுகளும் நால்லவங்க இல்ல.வாழ்த்துக்கள்.

Ashok said...

இந்த ஆள் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரு போல! விரட்டி விட்டு விவாகரத்து பண்ணாம வச்சு கொஞ்சிட்டிருக்காரு பாருங்க!

Indy said...

இது கற்பனை கதை இல்லன்னா அந்த பாரின் பதிவர் யாருன்னு சொல்லுங்க.
அட்லீஸ்ட் கோமதி அக்கா போன் நம்பர்ஆவது கொடுங்க.
நம்ம பாக்கி அண்ணன் ப்ளாக் மாதிரியே இருக்கு.

முரளிகண்ணன் said...

\\பாரின் பதிவர்\\ இதில் பதிவர் எங்கே வந்தார்?

முரளிகண்ணன் said...

பாலோ அப்புக்கு

Anonymous said...

இவ்வளவு அப்பாவியான ஆளா இருக்காரே!

நாச்சியாதீவு பர்வீன். said...

அன்பின் சி.பி நல்ல தேடல் பெண்கள் பணத்திற்காக விலைபோகின்ற உலகப் பொது நியதி எல்லா நாட்டிக்கும் சொந்ததமான
சங்கதிதான் எனது நண்பனை சுமார் ஆறுவருடம் காதலித்த ஒரு பெண் லண்டன் மாப்பிள்ளைக்காக காதலை விட்டு விட்டு லண்டன் மாப்பிள்ளையை செட் பண்ணி அவசர அவசரமாக கல்யாணமும் செய்துகொண்டார்
கல்யாணத்தின் பின்னர்தான் தெரிந்தது மெய்யிலே மாப்பிள்ளை லண்டன் இல்லை லோகளில் கடையொன்றில் சேல்ஸ்
மேன் வேலை செய்கிறவர் என்று..ஆனால் என்னன்பனுக்கோ அவளைவிட அழகிலும் அறிவிலும் உயர்ந்த நல்ல குடும்ப
பெண் கிடைத்துள்ளால் அவர்கள் சந்தோசமான வாழ்க்கையை வாழ்கிறார்கள் ஏமாற்றிய அந்தப்பெண்ணின் வாழ்க்கை
கண்ணீருடன் கழிவதை இப்போதுகளில் காண முடிகிறது...வெறும் பணத்திற்காக உண்மையான
அன்புதனை உரசிப்பார்க்கும் பெண்களுக்கு இதுபாடமாகும்...நல்ல பதிவு நண்பரே முடிந்தால் எனது தளத்திற்கும்
வந்து போங்கள்..................www.farveena.blogspot.com.