Sunday, July 24, 2011

,லோயர் பர்த்தில் ஹை க்ளாஸ் ஃபிகர்,அப்பர் பர்த்தில் லோ க்ளாஸ் பையன்


1. அண்ணே, பசிக்குது, 4 இட்லியாவது வாங்கிக் குடுங்க எனும் அவலக்குரலை கடந்து சென்று சாப்பிட  அமர்ந்தபோது வழக்கத்தைவிட 2 இட்லி கம்மியாகத்தான் சாப்பிட்டேன்.

----------------------------------

2. சந்தர்ப்பம் தெரியாமல் செய்யப்படும் பகடிகள் சில சமயம் எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்,டைமிங்க் ஜோக் சில சமயங்களில் டையிங்க் எஃபக்ட் (DIEING EFFECT)

-----------------------------

3. வலி என்பது நம் அன்புக்குரியவர் நம்மை புரியாத போது ஏற்படுவது,

   மரண வலி என்பது அவர்கள் நம்மை தவறாக நினைக்கும்போது நமக்கு

   நிகழ்வது

-----------------------


4. காலப்போக்கில் வலிகள் மறந்து விட்டாலும்,தழும்புகள் மறைந்து விடுவதில்லை,கண்களில் அடிக்கடி தட்டுப்பட்டு ஆறிய காயத்தை மீண்டும் ரணம்ஆக்குகின்றன

------------------------------

5. முகம் அறியா நட்புக்களை நாம் நேரில் சந்திக்கும் போது நம் கற்பனையாக நினைத்திருந்த இமேஜ்போய் நிஜத்தின் தாக்கம்  முகத்தில் அறையும்போது தாங்கிடமுடிவதில்லை

----------------------------------

6. அருவிகள் எழுப்பும் பேரிரைச்சலை விட அதில் நனைபவர்களின் ”ஹா”ரிரைச்சல் குதூகலத்தின் பிறப்பிடம்#குற்றால குளியல் அனுபவங்கள்-------------------------------

7. அப்பர் பர்த்தில் லோ க்ளாஸ் பையன்,லோயர் பர்த்தில் ஹை க்ளாஸ் ஃபிகர்,நிறைவேறி இருக்குமா மிடில் க்ளாஸ் கனவுகள்?#ரயில் பயணங்கள்@மயில் சயனங்கள்

--------------------------------

8. தியேட்டரில் டூயட்சீன் வந்தால் தம் அடிக்கப்போகும் பார்ட்டிகள் பஸ்ஸில்,பார்க்கில் லவ்ஜோடிகளின் டூயட்களை கண் இமைக்காமல் ரசிப்பது விசித்திரம்

--------------------------

9. குற்றால அருவியில் குளிக்கப்போகையில் மழை வந்தால் குளியலை ஒத்திப்போடுபவன் இயற்கை ரசிகனாக இருக்க மாட்டான்#குற்றால குளியல் அனுபவங்கள்

-------------------------

10. முதல் காதலில் விழுந்த தருணத்தில் காதலனுக்கு ,எதிர்ப்படும் பெண்கள் எல்லாம் உயிர் உள்ள அழகு பொம்மைகளாக மட்டுமே தெரிவார்கள்#லவ்வாலஜி

------------------------------

A 11. நீ அழகாக இருக்கிறாய் என்ற ஒரு பொய்யைத்தவிர வேறு எந்தப்பொய்யைச்சொன்னாலும் கண்டு பிடித்து விடுகிறாள் காதலி#லவ்வாலஜி

-------------------------------------

12. அம்மாவிடம் பல ரகசியங்களை மகள்கள் பகிர்ந்து கொள்வது போல் அப்பாவிடம் எந்த ஒரு ரகசியத்தையும் மகன்கள் கைர்ந்து கொள்வதில்லை#அப்பாலஜி(APOLOGY)

-------------------------------

13. என் காதலி ஒரு கடன்காரி,வாங்கியதை திருப்பித்தரமாட்டாள்.கந்துவட்டிக்காரனைப்போல் மிரட்டி,துரத்தித்தான் வாங்க வேண்டி இருக்கிறது கொடுத்த கிஸ்களை

-----------------------------

14. நான் இல்லாத தருணங்களில் யாரையும் நீ சைட் அடிக்கக்கூடாது என்றாள் காதலி.எல்லா இடங்களிலும் நீயே நீக்கமற நிறைந்து தொலைத்து விடுகிறாயே#சலிப்பு

--------------------------


15.  அப்பனுக்குப்பிள்ளை தப்பாம பிறந்திருக்கு என்ற சொலவடையை கேட்கும்போது எந்த அப்பா புள்ளய அப்பாம இருந்திருக்கு? என கேட்க தோன்றுகிறது#கண்டிப்பு

----------------------------
16. காதலி எனக்கு அணிவித்த மோதிரத்தில் இருந்த கற்கள் அவள் கன்னப்பருக்களை நினைவுபடுத்துகிறது#லவ்வாலஜி
-----------------------------


17. அம்மாவின் அருகாமையை விட அப்பாவுடன் இருக்கும் தருணங்கள் குறைவாக இருந்தாலும்அப்பாவின் அன்பு எல்லாக்குழந்தைகளுக்கும் நிறைவாக கிடைத்து விடுகிறது

-----------------------

18. நீ நல்லவனா? கெட்டவனா? என்பதை எப்படி கண்டுபிடிப்பது? என்றாள் காதலி.கெட்டவனின் கண்களுக்கு தேவதைகள் காட்சி அளிப்பதில்லை,நீ எனக்கு தெரிகிறாயே என்று மடக்கினேன்

----------------------------

19. என் அப்பா இருந்தவரையில் அப்பாவுக்காக நான் எதையும் செய்ததே இல்லை,திதி மட்டும் தான் செய்தேன்#குற்ற உணர்ச்சி

------------------

20. என்னை இம்ப்ரஸ் செய்யத்தான் அடிக்கடி கவிதை சொல்கிறாய் என குற்றம் சுமத்தினாள் காதலி,இனி பெயர் சொல்லி அவளை அழைப்பதை தவிர்த்துவிட முடிவு செய்தேன்

----------------------------
21.அவள் முகத்தின் அருகே போய் மியாவ் என்றேன்,கோபத்தில் வவ் வவ் என்று குலைத்தாள்#ப்ளூ கிராஸ் காதல்

----------------------------

22. முகத்தைப்பார்த்தே காதல் கொண்டது எப்படி? என்றாள்  காதலி. ஹோட்டலின் தரம் அறிய ரிசப்ஷனிஸ்ட்டை பார்த்தால் போதாதா? என்றேன்#லவ்வாலஜி

--------------------

23. என்னை விட ஒரு அழகியைப்பார்த்தால் மனசு மாறுவாயா? என்று கேட்டாள் காதலி,அந்த அளவுக்கு பிரம்மனுக்கு சமர்த்து இல்லை என்றேன்#லவ்வாலஜி

27 comments:

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்.

நிரூபன் said...

முதலாவது படம், வாயில் மிளகாயை வைத்துக் கடிக்கும் படம் சண்டே என்றாலும் ஒரு ஹிக்கை ஏற்படுத்து.

நிரூபன் said...

,லோயர் பர்த்தில் ஹை க்ளாஸ் ஃபிகர்,அப்பர் பர்த்தில் லோ க்ளாஸ் பையன்//

பாஸ், அப்படீன்னாமேலே கீழே என்று தானே சொல்ல வாறீங்க;-)))#$#$#

நிரூபன் said...

வலி என்பது நம் அன்புக்குரியவர் நம்மை புரியாத போது ஏற்படுவது,

மரண வலி என்பது அவர்கள் நம்மை தவறாக நினைக்கும்போது நமக்கு

நிகழ்வது//

மனதை டச் பண்ணிட்டீங்க பாஸ்.

நிரூபன் said...

முகம் அறியா நட்புக்களை நாம் நேரில் சந்திக்கும் போது நம் கற்பனையாக நினைத்திருந்த இமேஜ்போய் நிஜத்தின் தாக்கம் முகத்தில் அறையும்போது தாங்கிடமுடிவதில்லை//

ஆகா...சண்டே அன்னைக்கு, அண்ணன் யாருக்கோ உள் குத்து அடி அடிக்கிறார்(((::::

நிரூபன் said...

தியேட்டரில் டூயட்சீன் வந்தால் தம் அடிக்கப்போகும் பார்ட்டிகள் பஸ்ஸில்,பார்க்கில் லவ்ஜோடிகளின் டூயட்களை கண் இமைக்காமல் ரசிப்பது விசித்திரம்//

மத்தவங்களைப் பார்ப்பதில் ஒரு அலாதிப் பிரியம் இருக்கும் என யோசித்திருப்பாங்களோ- ஏன்னா லைவ் சோ இல்லையா;-)))

ஆமினா said...

இன்னைக்கு என்ன தத்துவாலஜில இறங்கிட்டீங்க :)

Unknown said...

பல விஷயங்கள் அறிந்து கொண்டேன் ஹிஹி!

Anonymous said...

கலக்குறீங்க..தொடர்ந்து கலக்குங்கள் ...

செங்கோவி said...

ட்வீட் மழை நம்மை நனைத்ததே..

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
கூடல் பாலா said...

\\\முதல் காதலில் விழுந்த தருணத்தில் ......லவ்வாலஜி \\\ அட போங்கண்ணே .......என்னோட ஃபிரண்ட் ஒருத்தன் 20 ஆவது பொண்ண லவ் பண்றான் இப்பவும் அப்படித்தான் சொல்றான் ...

மாலதி said...

உங்களுக்கு மட்டும் எப்படி இதனை அழகான படங்கள் கிடைகிறது

Napoo Sounthar said...

சூப்பர்...

rajamelaiyur said...

Super . . . Super . . . Super . . .

கவி அழகன் said...

அருமை தொடருங்கள்

என்னங்கையா ஊட்டுபக்கம் காணல

'பரிவை' சே.குமார் said...

தொடர்ந்து கலக்குங்கள்.

Mohamed Faaique said...

பஸ்`ல டூயட் சீன் வந்தா சிகரட் பிடிக்க போக முடியாதே........ உ+ம் : சுறா படத்துல வடிவேலு....

Mohamed Faaique said...

இன்று எல்லாவற்றிலும் Weight ஜாஸ்தியா இருக்கு. அப்பா- மகன் பாசம் பற்றியும் நிறைய இருக்கு... எல்லவறையும் ரசித்தேன்.

M.R said...

படங்கள் அருமை நண்பரே

M.R said...

பத்தாவது பாயிண்டுக்கு ஆப்போசிட்

கல்யாணத்திற்கு பிறகு எல்லா பெண்களும் அழகாக தெரிவார்கள் மனைவியை தவிர .-
மேரேஜாலஜி

ஹி ஹி தமாசு

ஹேமா said...

படம்தான் பாராட்டுக்கள் !

உணவு உலகம் said...

//நிரூபன் said...
முதலாவது படம், வாயில் மிளகாயை வைத்துக் கடிக்கும் படம் சண்டே என்றாலும் ஒரு ஹிக்கை ஏற்படுத்து.//
அப்ப நிரூபனுக்கு சண்டே கிக்கு ஏற்படாதா?

உணவு உலகம் said...

இரண்டாவது படம்- இன்னும் சிபி திருந்தவில்லையென்பதற்கு எடுத்துக்காட்டு.

குணசேகரன்... said...

சி.பி டேஸ்ட் நாளுக்கு நாள் ஏறுது போல..படம் அருமை

ஜோதிஜி said...

அட நீங்களா? என்ன இந்த வாரம் முடிவதற்குள் 30 இடுகைகள் வந்து விடும்போலிருக்கே.

மாய உலகம் said...

வலி என்பது வலித்துவிட்டது