Monday, July 25, 2011

தெய்வத் திருமகள் ஸ்மார்ட் பேபி சாரா துறு துறு பேட்டி

http://blog.unchal.com/wp-content/uploads/2011/07/sara-11.jpg
ள்ளங்கை மடக்கி விரல்களில் முகம்வைத்து, 'நிலா வந்தாச்சு... நிலா வந்தாச்சு!’ என்றபடியே வந்து அமர்கிறாள் சாரா அர்ஜுன். தெய்வத் திருமகளாக மும்பையில் இருந்து முகம் காட்டியிருக்கும் 'நிலா’!


 கண்கள், உதடு, உடல்மொழி... அனைத்திலும் குறும்பு கொப்பளிக்கிறது. அவள் உயரத்தில் பாதிக்கு வளர்ந்திருக்கிறது கூந்தல். முழுதாக ஒரு நிமிடம் அவளை ஒரு இடத்தில் அமரவைப்பது அம்மா சானியாவுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. ''பையா பையா... ('இந்தியில் அண்ணா’) கேட் அண்ட் மவுஸ் விளையாடுவோமா? நான்தான் மவுஸ்... என்னை நீங்க கேட்ச் பண்றீங்களா?''- அம்மா பக்கம்பார்த்துக் கொண்டே ரகசியமாகக் கேட்கிறாள் சாரா! (முடியாது என்று சொல்லவே முடியவில்லை. சில நிமிட 'ஓடிப் பிடிச்சு’ விளையாட்டுக்குப் பிறகுதான் பேட்டி துவங்கியது!)    


''ஐ யம் சாரா அர்ஜுன். ஐ யம் சிக்ஸ் இயர்ஸ் ஓல்டு. மும்பை லே ஃபெஸ் ஸ்கூல்ல ஃப்ர்ஸ்ட் கிளாஸ் படிக்கிறேன். எங்க ஃபேமிலியில், நான், அப்பா அர்ஜுன், தம்பி சுஹான் மூணு பேரும் ஆக்டர்ஸ். 

அம்மா சானியா, ஒரு டான்ஸர். ஸோ... நாங்க ஒரு ஆர்ட்டிஸ்ட் ஃபேமிலி. 'தெய்வத் திருமகள்’ ஃபிலிம்ல குட்டிப் பாப்பா நிலாவா நடிச்சிருக்குமே ஒரு பாப்பா... அது என் தம்பி சுஹான். 

நான் ரெண்டு வயசுல இருந்தே, அமீர் கான், ராணி முகர்ஜிகூட எல்லாம் விளம்பரங்களில் நடிச்சிருக்கேன். அடுத்து, ஷாரூக் அங்கிளோட நடிக்கப்போறேன். ஏற்கெனவே, விஜய் அண்ணா டைரக்ட் பண்ண விளம்பரங்களில் நடிச்சிருக்கேன். 'தெய்வத் திருமகள்’ பிலிம் நல்லா இருந்துச்சா?''
 http://www.viduppu.com/photos/full/actresses/others/amala_paul20.jpg

1. ''சூப்பர்ப்! எப்படி இப்படிலாம் நடிச்ச... க்ளைமாக்ஸ்ல அழவெச்சுட்ட தெரியுமா?''


''ஹைய்யோ... நீங்களும் அழுதீங்களா? நானும் தான். அப்பா அழுதுட்டே நடிக்கிறதைப் பார்க்க வும் நானும் அழுதுட்டேன். படத்துல யாராவது அப்பாவை அடிக்கிறப்போலாம் நானும் அழுதுரு வேன். அந்த ஸீன்லாம் பார்க்கவே மாட்டேன். அப்பா ரொம்ப சூப்பரா நடிச்சிருந்தார்ல! ஐ லவ் அப்பா!''


2. ''அப்பாவா... யாரு? விக்ரம் அங்கிளைச் சொல்றியா?''


''ஏய் அடி.... விக்ரம் அங்கிள் இல்லை... அப்பா! அவரை நான் அப்பான்னுதான் சொல்வேன். இன்னொண்ணு தெரியுமா... என் டாடி அர்ஜுனும் நல்லா நடிப்பாரு. ராம்கோபால் வர்மா அங்கிளோட 'கம்பெனி’, 'டி’, 'கயாம்’ படங்களில் நடிச்சிருக்கார். அவரு டாடி... விக்ரம் அப்பா. விக்ரம் அப்பா என்னை எவ்ளோ நல்லாப் பார்த்துக்கிட்டாரு தெரியுமா? எனக்கு மேக்கப் போடுவார், ஸ்நாக்ஸ் ஊட்டுவார், ஷூ லேஸ் கட்டுவார், நிறையக் குட்டிக் குட்டிக் கதைகள் சொல்வார். வெரிகுட் அப்பா... ஐ லவ் ஹிம் ஸோ மச்!''3. ''ஓ... விஜய் அண்ணா, விக்ரம் அப்பா... யாரை ரொம்பப் பிடிக்கும் சாராவுக்கு?''

(மூக்கின் மீது குட்டி விரல் தட்டி யோசிக்கிறாள்) ''ரெண்டு பேருமே பிடிக்குமே... ஏன் இப்படிலாம் கேக்குறீங்க?''


4. ''சும்மா... யாருக்கு நம்பர்-1 ப்ளேஸ் கொடுப்ப?''


''ம்ம்ம்... விக்ரம் அப்பாவுக்கு நம்பர்-1. விஜய் அண்ணாவுக்கு... ம்ம்ம்ம்... விஜய் அண்ணாவுக்கும் நம்பர் 1. சூப்பர்ல!''


5. ''நீ ரொம்ப உஷார் சாரா... அப்போ நம்பர்-2 ப்ளேஸ் யாருக்குக் கொடுப்ப... அனுஷ்காவா, அமலா பாலா?''


''ரெண்டு பேருக்கும் கிடையாது... மார்ட்டினா தீதி!''


6. ''அவங்க யாரு?''


''விஜய் அண்ணா அசிஸ்டென்ட். ரொம்ப லவ்லி தீதி. எனக்கு ஸீன்லாம் சொல்லித் தந்து ரொம்பப் பத்திரமாப் பார்த்துக்கிட்டாங்க!''


7. ''சூப்பர்... படத்துல எந்த ஸீன் நடிக்க ரொம்பக் கஷ்டப்பட்ட நீ?''


''எந்த ஸீனுமே இல்லையே... நானும் என் தம்பி சுஹானும் 'ஒன் டேக் ஓ.கே.’ ஆர்ட்டிஸ்ட் தெரியுமா. க்ளைமாக்ஸ் ஸீன் லாம் ஒரே ஷாட்ல ஓ.கே. பண்ணிட்டேன். பட்... வெரைட்டிக்காக வேற வேற மாதிரி ஷூட் பண்ணாங்க!
எனக்கு நடிக்க ரொம்பப் பிடிக்கும். டூ டேஸ் மேல ஸ்கூல் லீவ் இருந்தா, போர் அடிக்கும். ஆனா, ஸ்கூல்லயும் நான் குட் கேர்ள். எப்பவும் 'டிஸ்டிங்ஷன்’தான் வாங்குவேன். பையா பையா... இப்போ ஹைட் அண்ட் சீக் விளையாடலாமா? ஒன்லி டூ மினிட்ஸ்... ஓ.கே!''


(டூ மினிட்ஸ் 'ஹைட் அண்ட் சீக்’ விளையாட்டுக்குப் பிறகு...)


8. ''தமிழ் கத்துக்கிட்டீங்களா... தமிழ்ல என்னலாம் தெரியும் சாராவுக்கு?''  


''வணக்கம்... உக்காருங்க... காக்கா ஏம்ப்பா கறுப்பா இருக்கு? யானை ஏன் குண்டா இருக்கு? அப்ப நாம நல்லவங்க இல்லையாப்பா? ஷூட்டிங் ஆரம்பிக்கிற ரெண்டு மாசம் முன்னாடியே தமிழ் கத்துக்கிட்டேன். படத்தோட எல்லா டயலாக்கும்பேசுவேன். ஆனா, மீனிங் தெரியாது. ஆங்... ஆங்... ஒண்ணு மறந்துட்டேனே... 'டீ... காபேய்... டீ காபேய்... டீ... டீ... டீ... காபேய்’ இதுவும் தெரியும் எனக்கு.சந்தானம் அங்கிள் நடிச்ச அந்த ஸீன் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆ... டீ... காபேய்... டீ... காபேய்!''


(எழுந்து காபிக் கோப்பை தட்டுகளை ஏந்தி இருப்பதுபோலக் கைகளை வைத்துக்கொண்டு  ரயில்வே ஜங்ஷன் நடை நடந்து காட்டுகிறாள்!)
 சாரா

9. ''கமான் சாரா... உக்காரு கொஞ்ச நேரம்... இன்னும் டூ மினிட்ஸ்தான். அனுஷ்கா ஆன்ட்டி என்ன சொன்னாங்க?''


''ஓ வாவ்... என்னா ஒரு பியூட்டி தெரியுமா அவங்க! நான் அடிக்கடி அவங்க கன்னத்தைத் தொட்டுத் தொட்டு விளையாடிட்டே இருப்பேன். செம சாஃப்ட்டா இருக்கும் அவங்க ஸ்கின்.அவங்களை மாதிரி எனக்கும் ஸ்கின்இருக் கணும்னா, ஆய்லி ஃபுட்ஸ் சாப்பிடக் கூடாதுன்னு டிப்ஸ் கொடுத்தாங்க. 

ஆனா, நான் இஷ்டத்துக்குச் சாப்பிட்டுட்டு இருப் பேன். திட்டித் திட்டி அப்புறம் அவங்களே எனக்கு டயட்டீஷியன் ஆகிட்டாங்க. நானும் அனுஷ்கா தீதி மாதிரி அழகா வரணும். அப்புறம் நான் அவங்களை மாதிரியே  உயரமா வரணும்!''
(சட்டென்று சோபாவில் இருந்து துள்ளிக் குதித்து குதிகால்களை உயர்த்தி அனுஷ்கா போல நடந்து, நடித்துக் காட்டுகிறாள்!)


10. ''இவ்வளவு சேட்டைக்காரியா இருக்கே... உன்னை யாரும் ஷூட்டிங் ஸ்பாட்ல அதட்ட மாட்டாங்களா?''


''ம்ஹும்... நான்தான் எல்லாரையும் நைஸ் பண்ணிருவேனே! மும்பை ஸ்கூல்ல எனக்கு சப்னா, புஷ்பா, சோனியான்னு மூணு மிஸ் இருக்காங்க. அவங்களை நான் விக்ரம் அப்பா, விஜய் அண்ணா, கேமரா மேன் நீரவ் ஷா அங்கிளுக்கு இன்ட்ரோ பண்ணிக் கொடுக்குறேன்னு சொல்லிட்டேன். 

அதனால, நான் என்ன சேட்டை பண்ணாலும் திட்ட மாட்டாங்க. ஆனா, அந்த தியாகராஜன்தான் என்னைப் பயமுறுத்திட்டே இருப்பார். அவர்தான் நிஜமாவே பெரிய டைனோசர். இல்லை இல்லை, பெரிய அனகோண்டா!''     

     
11. 'யார் தியாகராஜன்..?'

'
''படத்துல அப்பாவுக்கு ஃப்ரெண்டா ரொம்ப ஹைட்டா ஒரு அங்கிள் நடிச்சி இருப்பாரே... அவர்தான். ரொம்பப் பய முறுத்திட்டே இருப்பாரு. பேட் பாய்!''


12. ''சாராவுக்கு வேற என்ன பிடிக்கும்?''


''சாக்லேட் பிடிக்காது, ஐஸ்க்ரீம் பிடிக்கும். கேம்ஸ் பிடிக்கும், டி.வி. பிடிக்காது. அமீர் கான் பிடிக்கும். சல்மான் கான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அப்புறம், இப்போலாம் நிலா பிடிக்குது. மும்பையில இருந்து ஃப்ளைட்ல வந்தப்போ நிலாவும் என் கூடவே வந்தது. 


சாரா
நான் அதுகூட பேசிட்டே வந்தேன். வீட்ல எனக்குச் செல்லப் பேரு முன்னி. அப்டின்னா, ரொம்பக் குட்டின்னு அர்த்தம். நிலாவும் என்னை அப்படித்தான் கூப்பிட்டது. ஐ லவ் நிலா. ஓ.கே... போதும் பையா... போலீஸ் தீவ்ஸ் விளையாடலாமா... நான்தான் தீஃப். நீங்களும் சுஹானும் போலீஸ். என்னை கேட்ச் பண்ணுங்க பார்ப்போம்!''


கால் முளைத்து தத்தித் தாவி ஓடுகிறது நிலா!

நன்றி - விகடன்

24 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் விதை முளைத்ததே...

Unknown said...

சூப்பர் பாஸ்! :-)

'பரிவை' சே.குமார் said...

Super... Super.

கோவை நேரம் said...

விளையும் பயிர் முளை யிலேயே தெரியும் ...அருமை சாரா ....

ரேவா said...

simply super..........நிலாவ யாருக்குதான் பிடிக்காது...... தெய்வத் திருமகள் நிச்சயமா எல்லாரும் பாக்கவேண்டிய படம்...நமக்குள்ள இருக்கிற மனித நேயம், இன்னும் உயிரோட தான் இருக்குனு கதையின் கடைசியில் வரும் கண்ணீரே சாட்சி...கிருஷ்ணா, நிலா அருமையா கதையோட வாழ்ந்து இருக்காங்க, நிலா நெஜமா சோ கியூட்....படங்களும் அருமை சகோ

போளூர் தயாநிதி said...

நல்ல பகிர்வு!

Unknown said...

அண்ணே நல்ல பகிந்து இருக்கீங்கோ நன்றி!....template comment...so நேரடியா பதிவின் மூலம் பேச வைக்கும் சிபிக்கு நன்றி எப்பிடி!

நிரூபன் said...

வணக்கம் பாஸ், பேபி சராவின் பதில்கள் ஒவ்வொன்றும், வருங்காலத்தில் அவருக்கு வாழ்வில் உயர்ந்த இடம் உண்டு என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளன.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வணக்கம் தல...

நான் இன்னும் படம் பார்க்கல....


பேட்டி சூப்பர்..

RAMA RAVI (RAMVI) said...

மிகவும் அழகான மழலை பேட்டி.

ஆகுலன் said...

இந்த புள்ள என்ன மாதிரி நடிக்குது.....
வாசிக்கும் போதே ஒரு சந்தோஷம்..

மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)

Menaga Sathia said...

நல்ல பகிர்வு!!

சென்னை பித்தன் said...

பகிர்வுக்கு நன்றி!

அதிரைக்காரன் said...

அன்புள்ள சகோதர்/சகோதரி,

மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!

பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை [email protected] என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.

தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம் செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

நன்றி.

அன்புடன்,
அதிரைக்காரன்
[email protected]

ரஹீம் கஸ்ஸாலி said...

ok.ok

ஹேமா said...

நேற்றுத்தான் படம் பார்த்தேன்.அழகான குழந்தை.இயல்பான நடிப்பு.
மனதாரப் பாராட்டலாம்!

ஆமினா said...

போட்டோவும்
பேட்டியும் அழகு!!!

செங்கோவி said...

கும்மியை எங்கே?

ம.தி.சுதா said...

உண்மையில் ஒரு குட்டித் தேவதை கண் முன் வந்தது போல இருந்துது...

முன்பனிக்காலம் said...

ஆனந்த விகடன் இல் வருவதையே அடிக்கடி போடுகிறீர்களே, அது ஏன்?

Unknown said...

நானும் இன்னும் படம் பார்க்கவில்லை.......சுட்டிப் பாப்பாவின் பேட்டி சூப்பர்...பகிர்வுக்கு நன்றி

உணவு உலகம் said...

ஸ்மார்ட் பேபி!

சக்தி கல்வி மையம் said...

படத்தை நானும் பார்த்தேன் ..
குட்டி தேவதை ....

Shiva sky said...

என்னனா..? உங்க வழக்கமான கமென்ட் இல்லமா...பதிவா இருக்கு.