Monday, July 18, 2011

லிப் டூ லிப் கிஸ்க்கும் தென்னந்தோப்புக்கும் என்ன சம்பந்தம்?


1. நல்ல மனைவி அமைந்தவனின் வாழ்க்கை சொர்க்கம்,நல்ல கணவன் அமையாத பெண்ணின் வாழ்க்கை நரகம்

--------------------

2. இசைஞாநி இளையராஜா இதுவரை சஹானா ராகத்தில் ஒரு முழுப்பாடலை இசை அமைக்கவே இல்லை,உன்னால் முடியும் தம்பி படத்தில் பின்னணி இசைக்கு மட்டும்யூஸ்டு

----------------------3. இள நீரில் ஸ்ட்ரா போட்டு குடிப்பது காதலியின் கன்னத்தில் கொடுக்கும் ஒத்தடம் போல.. ஸ்ட்ரா போடாமல் டைரக்ட்டாக குடிப்பது லிப்டூலிப் கிஸ் போல #கிஸ்ஸாலஜி@தென்னந்தோப்புக்காதல்

-------------------------

4. எங்கோ தொலைவில் இருக்கும் காதலியின் மேல் காட்டும் அன்பில் பாதியைக்கூட அருகில் இருக்கும் மனைவியிடம் காட்ட ஆண்களால் முடிவதில்லை#ஜெண்ட்ஸாலஜி

---------------------

5. ஆண்மையின் அடையாளமாக பெண்கள் நினைப்பது அவன் மீசையும்,கம்பீரமும்.பெண்மையின் அடையாளமாக ஆண்கள் நினைப்பது அவள் வெட்கமும்,நளினமும்#சைக்காலஜி

--------------------------
6. நித்யானந்தாவின் சீடராகஆசிரமபணிகளில் என்னை
100 %ஈடுபடுத்திக் கொள்வேன்-ரஞ்சிதா#ஈடுபடுத்திக் கொள்வீங்களா?ஈடு கொடுத்து படுத்துக்குவீங்களா?

----------------------


7. கடவுளுக்கு நேர்த்திக்கடன் என்று திருப்பதியில் மொட்டை அடித்தபெண் நேர்த்தியுடன் ஒரு சவுரி  அணிந்தார்.இவர் கடவுளை ஏமாத்தறாரா?தன்னையேவா?

-------------------
8. தாய்மை அடைந்த பெண்ணின் 3-ம் மாதம் டூ 6-ம் மாதம் வாமிட் அவஸ்தைகளை தாய்மை உணர்வுடைய கணவனால் மட்டுமே உணர முடியும்.

------------------

9. காதலியை மணம் முடிக்காமல் போன அவஸ்தையை விட அவள் மனதில் நீடிக்க முடியாமல் போகும் அவஸ்தை தான் ஆணின் மனதில் பொங்குகிறது

------------------

10. காதலி,தாய்,மனைவி,சகோதரி இப்படி எந்த லேபிளும் இல்லாத ஒரு பெண்ணின் அன்பு கூட ஆணின் மனதை சுலபமாக வீழ்த்தி விடும்

--------------------
11. ஆணின் மனதை1000 பெண்கள் எளிதாக சலனப்படுத்திவிடுவர்,ஆனால் பெண்ணின் மனதை 1000-ல் ஒரு ஆண் தான் வசீகரிக்கமுடியும்

--------------------


12. துரோகியை முதுகில் குத்து, வீரனை நெஞ்சில் குத்து,காதலனை அவன் இதயத்தில் குத்து

------------


13. குழந்தையை அன்புடன் கண்டிக்கும் அழகிய வித்தையை பெண்ணைப்போல் ஆணால் சுலபமாக கற்றுக்கொள்ள முடியாது

----------------


14. லட்சுமிகடாட்சம் பெண்ணுக்கு அவள் தோற்றத்தில்,ஆணுக்கு அவன் சம்பாத்தியத்தில்

-------------------


15. சிரிக்க சிரிக்கப்பேசும் பெண்களை ஆண்கள் விரும்புகிறார்கள்,சிரிக்க வைத்துப்பேசும் ஆண்களை பெண்கள் விரும்புகிறார்கள்

------------------
16. ஆண் - கலெக்‌ஷன் ஆஃப் விக்டரி , பெண் கலெக்‌ஷன் ஆஃப் சொக்குப்பொடி

---------

17. பெண்ணிடம் பேசும்போது ஆண் அவள் கண்களைப்பார்ப்பான்,பெண் அவன் கண்ணை மட்டும்தான் பார்க்கிறானா? என்று பார்ப்பாள்

---------------------

18. பிளானிங்க்கில் பெண் பிந்திக்கொள்வது இல்லை.. ஃபேமிலி பிளானிங்க்கில் ஆண் முந்திக்கொள்வது இல்லை

------------------

19.பிரிவு என்பது வெறும் 3 எழுத்து தான்,ஆனால் பல சமயம் அது நம் தலை எழுத்தையே மாற்றி விடுகிறது

--------------------

20. நம் உள்ளங்கைகள் ஒன்று சேரும்போது நம் உள்ளங்கள் ஒன்று சேர்ந்தமாதிரியே இருக்கிறது

---------------------

32 comments:

கோகுல் said...

ஈடு கொடுத்து படுத்துப்பீங்களா?
குட் கொஸ்டீன்
தலைப்பு அசத்தல்

கோகுல் said...

12-குத்துங்க எசமான் குத்துங்க

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
கவி அழகன் said...

இது சரிவராது எங்க அந்த கடிதம்
நிருபன் பிட்டு படம் பார்த்தமாதிரி ஆக்க்கிட்டிங்க
ஒண்ணையும் காணல

ரேவா said...

8,9,10,11,13.....சூப்பர்...
4 வது ஜென்ட்ஸாலாஜி இந்த பதிவுக்கு முந்தின பதிவின் சம்மந்தப் பட்டவரைச் சொல்வது போல இருக்கே... # டவுட்டாலாஜி

ரேவா said...

கடைசி சூப்பர்...சி பி யும் காதல் மெசேஜ் சொல்லுறாரோ...இதுக்கு என்ன அர்த்தமோ?... கலக்கல் சகோ..ஆன டைட்டில் தான்?.............

முத்தரசு said...

1 . இதற்கு முந்தைய பதிவின் எதிரோலிப்போ.

3 . இப்படியும் ஒரு விளக்கமா?

4 . சுருக்............வலிக்குது

8 . உண்மை தான் அப்பு

மொத்தத்தில் நல்ல கலவை

முத்தரசு said...

படங்கள் அனைத்தும் அருமை

Unknown said...

படம் எல்லாம் சுப்பர் அண்ணா

பாயிண்ட் 6 உங்கள் கமெண்ட் சர்ச்சைக்குரியது

பாயிண்ட் 16 உலக உண்மை

மத்தது எல்லாம் வழக்கம் போல ஸ்வீட் அண்ணா...

Unknown said...

இன்னிக்கி தான்யா அனுபவம் அத்தனையும் வச்சி கிண்டி இருக்க ரொம்ப யோசிக்க வைக்குது பதிவு ஹிஹி!

M.R said...

துணுக்கு நச் .

படங்கள் அருமை

'பரிவை' சே.குமார் said...

படங்களும்... ட்டுவிஸ்ட்டுக்களும் அருமை.

கடம்பவன குயில் said...

என்னாச்சுங்க. எப்பவுமே பெண்களை கலாய்க்கும் நீங்க இந்த பதிவு முழுதும் பெண்களின் பெருமைகளை இப்படி ஏத்துஏத்துன்னு ஏத்திவைச்சு எழுதியிருக்கீங்க. இது சிபி சாரின் பதிவுதானா?? #டவுட்டு#

கடம்பவன குயில் said...

இயற்கை காட்சிகள் மிகவும் ரம்மியமாய் இருக்கிறது. அடிக்கடி இப்படி இனிமையான இயற்கை காட்சியை தங்கள் பதிவகளில் எதிர்பார்க்கிறேன். கனமான மனதை கூட இந்த நேச்சுரல்ஸ் சீனரிஸ் இலேசாக்குகிறது. தொடருங்கள்.

ராஜி said...

பெண்ணிடம் பேசும்போது ஆண் அவள் கண்களைப்பார்ப்பான்,பெண் அவன் கண்ணை மட்டும்தான் பார்க்கிறானா? என்று பார்ப்பாள்
>>
நிஜம்தான்

ராஜி said...

. நம் உள்ளங்கைகள் ஒன்று சேரும்போது நம் உள்ளங்கள் ஒன்று சேர்ந்தமாதிரியே இருக்கிறது
>>
சம்திங்க், டச்சிங்க், டச்சிங்கா?

ராஜி said...

கடம்பவன குயில் said...

என்னாச்சுங்க. எப்பவுமே பெண்களை கலாய்க்கும் நீங்க இந்த பதிவு முழுதும் பெண்களின் பெருமைகளை இப்படி ஏத்துஏத்துன்னு ஏத்திவைச்சு எழுதியிருக்கீங்க. இது சிபி சாரின் பதிவுதானா?? #டவுட்டு#
>>>>
டவுட்டே வேணாம், சிபி சார் பதிவுதான் இது. மன்னிப்பு கேட்டு, கேட்டு முடியலையாம், அதான் இப்போ திருந்திட்டாராம்.

ராஜி said...

இசைஞாநி இளையராஜா இதுவரை சஹானா ராகத்தில் ஒரு முழுப்பாடலை இசை அமைக்கவே இல்லை,உன்னால் முடியும் தம்பி படத்தில் பின்னணி இசைக்கு மட்டும்யூஸ்டு
>>
புது தகவலுக்கு நன்றி

ராஜி said...

எங்கோ தொலைவில் இருக்கும் காதலியின் மேல் காட்டும் அன்பில் பாதியைக்கூட அருகில் இருக்கும் மனைவியிடம் காட்ட ஆண்களால் முடிவதில்லை#ஜெண்ட்ஸாலஜி
>>
ஓ ஓ அப்பிடியா சேதி.

சரியில்ல....... said...

அஜால் குஜால்...

Unknown said...

////துரோகியை முதுகில் குத்து,வீரனை நெஞ்சில் குத்து,காதலனை இதயத்தில் குத்து/// இன்னா ஒரு கெத்து?,நல்லதொரு கருத்து........

”தளிர் சுரேஷ்” said...

அனைத்தும் அருமையான கருத்துக்கள்.8,11,12, 13 கருத்துக்கள் அற்புதம்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அசத்தலான துணுக்குகள்....

படங்கள் மிகவும் பிரமாதம்...
அதை காபி செய்ய முடியவில்லை..
படங்களை காபி செய்யும்படிகொடுத்தல் நன்றாக இருக்கும்..

முத்தரசு said...

# கவிதை வீதி # சௌந்தர் said:


படங்களை save பண்ண முடியாது - copy பண்ணலாமே!!!...முயற்சித்து பாருங்கள்...ஹா...ஹா...ஹா

RAMA RAVI (RAMVI) said...

படங்கள் மிக மிக அருமையாக இருக்கிறது செந்தில்குமார்..

Mohamed Faaique said...

இந்த முறை குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. எல்லாமே நச்சுனு இருக்கு.

6வது மேட்டர் 100% சி.பி ரகம். ரொம்ப ரசித்தேன். (எவ்வளவு யூஸ் புல்’ஆ போட்டாலும் இதைத்தான் ரசிக்கிரானுங்க..)

Copy பண்ணும் வசதி இருந்தால் நல்லாயிருக்குமே!! இந்தப் பதிவு மட்டுமல்ல. நிறைய பதிவு கொபி பண்ண நினைக்கிறது முடியவில்லை. PDF ஆக மாற்றும் வசதி இருந்தாலும் நல்லதே!!!

கூடல் பாலா said...

\\\சிரிக்க சிரிக்கப்பெசும் பெண்களை ஆண்கள் விரும்புகிறார்கள் ,சிரிக்க வைத்தப் பேசும் ஆண்களை பெண்கள் விரும்புகிறார்கள் \\\ எவ்வளவு கில்மாவா பேசுனாலும் விரும்புவாங்களா ?

Menaga Sathia said...

கலக்கலான ட்வீட்ஸ்!! ஒருநாளைக்கு 3அல்லது 4 பதிவு போடுறீங்களே அது எப்படி??

மாசிலா said...

Nice post. Really with some logical truths. Thanx a lot and go on.

சத்யா said...

ட்விட்டர்ல போட்டதையே இங்கேயும் பதிவிட்டுருக்கீங்க, என்னமோ திட்டம் இருக்கு...

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஒன்னோன்னும் செம கலக்கல்...

தமிழ்வாசியில் இன்று:
அட்ராசக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி - பாகம்-1 (250 வது பதிவாக)

மயூரன் said...

எல்லாம் சட்டப்படி இருக்குது