Sunday, July 03, 2011

பங்குச்சந்தையில் நுழைய விரும்பும் புதியவர்கள் கவனிக்க....


முதற்படி முதலில் படி!
குவாண்டிடேட்டிவ் அனாலி சிஸ் என்பது ஒரு நிறுவனத் தின் எண்களை அலசி ஆராய்வது. எந்தவிதமான நிறுவனத்திற்கும் மூன்று அடிப்படை ஸ்டேட் மென்ட் உள்ளது. அவை, இன்கம் ஸ்டேட்மென்ட், பேலன்ஸ் ஷீட், மற்றும் கேஷ் ஃபுளோ ஸ்டேட்மென்ட். ஒரு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும்போது, அதுவும் சிறிய முதலீட்டாளராக இருந்து செய்யும்போது, இந்த மூன்று ஸ்டேட்மென்டையும் அலசுவதற்கு, நீங்கள் ஒரு ஃபைனான்ஷியல் அனலிஸ்ட் டாகவோ அல்லது சார்ட்டட் அக்கவுன்டன்ட் ஆகவோ இருக்க வேண்டும் என்கிற அவசிய மில்லை.

 கூட்டல், கழித்தல் தெரிந்த யாரும் இந்த ஸ்டேட்மென்டைப் படித்து தங்களுக்கு வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம்.


இன்கம் ஸ்டேட்மென்டில் நிறுவனத்தின் வரவு-செலவுகள் சொல்லப்படும். பேலன்ஸ் ஷீட்டில் நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் சொல்லப்படும். கேஷ் ஃபுளோ ஸ்டேட்மென்டில் நிறுவனத்திற்கு பணம் எவ்வாறு வந்து செல்கிறது என்பது சொல்லப்படும்.

இந்த குவாண்டிடேட்டிவ் அனாலிசிஸை நாம் இரு பிரிவுக ளாகப் பிரித்துக் கொள்வோம்... ஒன்று, முதலீட்டிற்கு நேரடியாக உதவும் அளவுகோல்கள். மற்றொன்று, ஆழமாக அனாலிசிஸ் செய்ய விரும்புபவர்களுக்கான பல ரேஷியோக்கள், குரோத், மதிப்பீடு (வேல்யூவேஷன்) போன்ற அளவுகோல்கள். முதல் சில அத்தியாயங்களில் முதலீட்டிற்கு நேரடியாக உதவும் அளவுகோல்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

..முதலில் உங்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான இ.பி.எஸ். என்று சொல்லக்கூடிய ஒரு பங்கின் வருமானம் மற்றும் அதன் ரேஷியோவான பி/இ பற்றி இந்த வாரம் பார்ப்போம்...இ.பி.எஸ். அதாவது, ஒரு பங்கிற்கான வருமானம்... இதைப் பற்றி எளிமையான உதாரணம் ஒன்றின் மூலம் புரிந்துகொள்வோம்

. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மார்ச் 2010 முடியும் நிதி ஆண்டின் இன்கம் ஸ்டேட்மென்டின் ஒரு பகுதியை இங்கே கொடுத்துள்ளோம். அந்த வருடம் அந்த வங்கியின் நிகர லாபம் 4,024.98 கோடி ரூபாய். அதாவது 4,025 கோடி ரூபாய். அந்த வங்கியின் பங்கு மூலதனம் 1,114.89 கோடி ரூபாய். ஒவ்வொரு பங்கும் 10 ரூபாய் முகமதிப்பு கொண்டது.

 ஆகவே அந்நிறுவனத்தின் அன்றைய தினத்தில் மொத்த பங்குகளின் எண்ணிக்கை 111.489 கோடியாகும். நிகர லாபத்தை மொத்த பங்குகளின் எண்ணிக்கையால் வகுக்கும்போது (4024.98/111.489) கிடைப்பதுதான் இ.பி.எஸ். இதைத்தான் 'பேஸிக் இ.பி.எஸ்’ என்று கூறுகிறோம். அதற்குக் கீழ் 'டைல்யூட்டட் இ.பி.எஸ்’ என்று ஒன்று இருப்பதைக் கவனியுங்கள். அது என்ன?
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி போன்ற பல தனியார் நிறுவனங்கள், தங்களுடைய ஊழியர்களுக்கு (பெரும்பாலும் டாப் லெவல் ஊழியர்களுக்கு) நன்றாக லாபத்தை ஈட்டித் தந்தால் அந்த நிறுவனத்தின் பங்குகளை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ எதிர்காலத்தில் தருவதாக வாக்குறுதி கொடுத்திருப்பார்கள்.

 அந்த வாக்குறுதிப் பங்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை சிறிது அதிகமாகும். அப்போது அந்நிறுவனத்தின் இ.பி.எஸ். சற்று குறையும். அதைத்தான் 'டைல்யூட்டட் இ.பி.எஸ்’ என்று கூறுகிறோம். ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மார்ச் 2010-ல் முடிந்த நிதி ஆண்டில் டைல்யூட்டட் இ.பி.எஸ். 35.99 ஆகும். கன்சர்வேட்டிவ் கணக்கிற்கு டைல்யூட்டட் இ.பி.எஸ்ஸை எடுத்துக் கொள்வதே சிறந்தது.

பங்கின் சந்தை விலையை இந்த இ.பி.எஸ்-ஸால் வகுத்தால் கிடைப்பதுதான் பி/இ ஆகும். சரி, எந்த இ.பி.எஸ்-ஸை எடுத்துக்கொள்ள வேண்டும்? பொதுவாக சென்ற நிதி ஆண்டின் முடிவின் இ.பி.எஸ்-ஸை எடுத்துக் கொள்ளலாம். இப்போதெல்லாம் காலாண்டு முடிவுகள் வர ஆரம்பித்துவிட்டதால், கடந்த 4 காலாண்டுகளின் இ.பி.எஸ்-ஸை எடுத்துக் கொள்ளலாம். இதை டி.டி.எம். (TTM – Trailing Twelve Monthsலீs) என்று கூறுவார்கள். அந்த டி.டி.எம். இ.பி.எஸ்-ஸை எடுத்துக் கொண்டு பி/இ-யை கணக்குப் பார்த்தால் இன்னும் துல்லியமாக இருக்கும்.

சில சமயங்களில் சில நிறுவனங்கள் தற்போது முடிந்த காலாண்டில் பெரிய நஷ்டத்துடன் செயல் பட்டிருக்கும். அதனால் அதன் இ.பி.எஸ் நெகட்டிவ்வாக இருக்கும். அப்போது கடந்த நிதி ஆண்டு அல்லது டி.டி.எம். இ.பி.எஸ்-ஸை வைத்துப் பார்த்தால், இன்னும் பாஸிட்டிவ் ஆகவே இருக்கும். அதுபோன்ற சமயங்களில் பங்குகளை வாங்கச் செல்லும்போது எச்சரிக்கை தேவை. பொதுவாக கடந்த 5-10 ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஈட்டி பாஸிட்டிவ் இ.பி.எஸ்-ல் இருந்துவரும் நிறுவனங்களாகப் பார்த்து வாங்குவது நல்லது.
பி/இ என்பது பொதுவாக எதைக் குறிக்கிறது?

நீங்கள் ஒரு பங்கை 100 ரூபாய் விலை கொடுத்து வாங்குகிறீர்கள். அதன் சென்ற ஆண்டு இ.பி.எஸ். 25 என வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் அந்நிறுவனப் பங்கின் பி/இ நான்கு. அடுத்த நான்கு வருடங்களுக்கு இதேபோல் குறைந்தது 25-ஐ இ.பி.எஸ்-ஸாக ஈட்டினால்தான், நீங்கள் கொடுத்த விலை ஈடாகிறது என்றுஅர்த்தம்.

இன்னுமொரு நடைமுறை உதாரணத்தை எடுத்துக் கொள் வோம்... உங்கள் ஊரில் ஒரு சூப்பர் மார்க்கெட் விலைக்கு வருகிறது. அந்த சூப்பர் மார்க்கெட்டின் விலை 10 லட்ச ரூபாய் என்று கூறுகிறார். அதன் வருட நிகர லாபம் 2.5 லட்சம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

 அப்படி என்றால் நீங்கள் போட்ட பணத்தை திருப்பி எடுப்பதற்கு நான்கு வருடங்கள் ஆகும். இந்த நான்குதான் நீங்கள் வாங்கிய சூப்பர் மார்க்கெட்டின் பி/இ. ஆக பி/இ என்பது நீங்கள் போட்ட பணத்தை எவ்வளவு காலத்தில் லாபத்தின் மூலம் எடுக்கமுடியும் என்பதற்கான அளவு கோல் எனக் கொள்ளலாம். அந்த லாபம் முழுவதும் உங்கள் கையில் வருகிறதா அல்லது ஒரு பகுதி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக செல் கிறதா என்பது வேறு விஷயம்.

பி/இ அதிகமாக இருப்பது நல்லதா அல்லது குறைய இருப்பது நல்லதா?
பொதுவாக குறைய இருப்பது நல்லது. ஆனால், இது அவ்வளவு சுலபமாக முடிவெடுத்து விடக்கூடிய விஷயமல்ல! மிகச் சிறிய நிறுவனங் களுக்கு பொதுவாக பி/இ குறைவாக இருக்கும். ஏனென்றால் அந்நிறுவனங்களில் ரிஸ்க் அதிகம் என்பதே-பொருளாதார இறக்கத்தில் அந்நிறுவனங்கள் அதிகமாக பாதிக்கப்படலாம் அல்லது ஒரு பெரிய கஸ்டமர் விலகிப் போனால், அந்நிறுவனம் நஷ்டத்தில் சென்றுவிடலாம் அல்லது அந்நிறுவனத்தில் உள்ள முக்கிய நபருக்கு ஏதேனும் ஆகி விட்டால் அந்நிறுவனமே ஆடிப் போகலாம் - இதுபோல பல ரிஸ்க் உள்ளது. ஆகவே, சிறிய நிறுவனங் களின் பி/இ குறைவாக இருக்கும். அதே சமயத்தில் பெரிய நிறுவனங் களின் பி/இ அதிகமாக இருக்கும்.


அதேபோல் ஒரே சைஸில் உள்ள பெரிய நிறுவனங்கள் அல்லது சிறிய நிறுவனங்களை கூர்ந்து கவனியுங்கள். அவற்றிற்குள்ளும்   பி/இ வித்தியாசம் இருக்கும் - காரணம் ஒரு நிறுவனத்தின் மேனேஜ்மென்ட் மிகவும் நியாய மானதாக இருக்கும்; மற்றொன்று சில குறுக்கு வழிகளைக் கையாளலாம். நியாயமான மேனேஜ்மென்ட் உள்ள நிறுவனத்தின் பி/இ எப்போதும் அதிகமாக இருக்கும்

. இல்லையெனில் ஒரு நிறுவனம் வளர்ச்சியுடன் கூடிய லாபத்தை தந்து கொண்டே இருக்கும். மற்றொன்றில் வளர்ச்சி இருக்கும்; ஆனால் லாபம் வளராது. இதுபோல் பலப்பல காரணங்கள் பி/இ-ன் அளவை நிர்ணயிக்கின்றன.
சரி, பங்கு வாங்க புறப்பட்டு விட்டீர்கள். நீங்கள் வாங்க நினைக்கும் நிறுவனப் பங்கின் பி/இ-ஐ அந்நிறுவனத்தைச் சார்ந்த துறையின் சராசரி பி/இ விகிதத் தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்;

 மேலும் அந்நிறுவனத்தின் நேருக்கு நேரான போட்டி நிறுவனத்தின் பி/இ-யோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இதிலிருந்து உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். மேலும் பி/இ மட்டுமே ஒரு நிறுவனத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோல் அல்ல. இன்னும் எவ்வளவோ உள்ளன. அவற்றோடும் சேர்த்துப் பார்க்கும் போது நீங்கள் பங்கை வாங்கலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம்.

கன்சர்வேட்டிவ் முதலீட்டாளர் கள் குறைந்த பி/இ உள்ள, நீண்ட காலம் தொழில் செய்து வரக்கூடிய தரமான நிறுவனங்களை நாடிச் செல்வது சிறந்தது.

தொடரும்

நன்றி - நாணயம் விகடன்


டிஸ்கி -

13 comments:

குணசேகரன்... said...

பயனுள்ள தகவல்

அம்பாளடியாள் said...

பயனுள்ள நல்ல தகவல்
பகிர்வுக்கு நன்றி...............

கவி அழகன் said...

என்ன பாஸ் ஒரே எ பி சி ஆ கிடக்குது எண்டு வீடிட்டு போக முடியாது பயனுள்ளதா இருக்கு

தமிழ்வாசி பிரகாஷ் said...

பங்குச்சந்தையில் சி.பி

சசிகுமார் said...

இவனா கூட சேர்ந்து குடிக்கரதுக்கே காசு பதமாட்டேங்குது இதுல இன்வெஸ்ட்மென்ட் வேறையா போய்யா போய் வேற வேலை இருந்தா பாரு ஹி ஹி

Mathuran said...

பயனுள்ள தகவல்... பகிர்வுக்கு நன்றி

சுதா SJ said...

பாஸ் ஒண்ணுமே புரியல்ல பாஸ்
பட் ஒன்னு நல்ல பயன் உள்ள பதிவு போட்டு உள்ளீர்கள் என்று மட்டும் புரியுது.

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள பதிவு
மிகத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் நன்றி
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

Trading Options said...

hello friends

My first day in this blog, thanks to tamilmanam.

CP sir congrats for #1 rank.

In stock market, anything can happen at any time. It involves risk and invest only the money that you can lose (risk capital). Fundamental and technical analysis will give you some guidance, but nothing works all the time. Satyam shares went to as low as Rs. 8.

Anyways, be careful before you invest/trade in the market.

Siva

பிரபாஷ்கரன் said...

முதலில் DP அக்கௌன்ட் ஓபன் பண்றது trading அக்கௌன்ட் ஓபன் பண்றது பத்தி சொல்லிடு EPS வந்தா இன்னும் நல்லாருக்கும் பட் EPS பற்றி அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல பகிர்வு!

rajamani said...

In india gold&real estate are the major investment destinations.as an asset class more knowledge has to be spread on equity markets

Unknown said...

நண்பா பங்குச்சந்தை என்பது முதலாளித்துவத்தின் அடிவருடித்தனம்..இன்றைய பெரிய பணக்காரர்கள் பலபேர் மக்களை சுரண்டி சம்பாத்தித்த பணத்தில் தான் வாழ்கிறார்கள்...அதற்க்கு இது தான் ஒரு மிகப்பெரிய வழி உண்டாக்கி கொடுக்கிறது..
மன்னிக்கவும் இதில் எனக்கு உடன்பாடில்லை!