Wednesday, July 27, 2011

சொல்லித்தெரிவதில்லை அன்பு, சொல்லாமல் புரிவதில்லை காதல்


 


1.அன்பைத்தவிர உனக்குத்தர என்னிடம் வேறேதும் இல்லை.நிராகரிப்பைத்தவிர எனக்குத்தர உன்னிடம் வேறேதும் இல்லை

-------------

2. நான் தொடுகின்ற இடம் உன் மனதாக இருக்கட்டும்,நான் மடிகின்ற இடம் உன் மடியாக இருக்கட்டும்

-------------------

3. முதலும்,முடிவுமான சந்திப்பு என அறிவிக்கப்பட்ட பின்பு முதல் சந்திப்புக்கான சந்தோஷத்தை விழுங்கி நிற்கிறது இறுதி சந்திப்புக்கான துயரம்

-------------------

4. என்னுடன் போர் புரியும் குரோதத்துடன்  நீ தயாராக இருக்கிறாய்,உன்னிடம் சரண் அடையும் உத்தேசத்துடன் பணிவுடன் இருக்கிறேன்


-----------------------

5. ஓர் எழுத்தில் என் உயிர் உருகும் ,அது நீ! மூன்றெழுத்தில் என் உடல் மருகும், அது நீ செலுத்தும் அன்பு

------------------------

6. என்னிடம் அன்பைப்பொழியும் எண்ணம் உன் மனதிடம் இல்லை.அது தெரிந்தும் உன்னை விட்டு விலகி நிற்க எனக்கு மனோதிடம் இல்லை

-----------------

7. உன்னுடனான சந்திப்பில் கண்ணீர் தளும்பி கண்களில் நிரப்பிக்கொள்வதால் நீ எப்போதும் என் எதிரே நிற்கையில் எனக்கு மங்கலாகத் தெரிகிறாய்

--------------------

8. சொல்லித்தெரிவதில்லை அன்பு, சொல்லாமல் புரிவதில்லை காதல்


-------------------------

9.  மனம் விட்டுப்பேசாதபோதே தெரிந்து கொண்டேன், உன்னிடம் என் மனதை விட்டு விட்டேன் என்று

--------------------

10. நீ என்னை எப்போதும் சந்தேகத்துடன் பார்க்கிறாய்! என் காதல் உன் தேகத்துடன் என்றே நினைக்கிறாய்!சுடு சொல் வீசி என் கண்களை  நனைக்கிறாய்

-----------------11. சாலை விபத்தில் தமிழகம் முதலிடம், குறைக்க வேண்டும் -அன்புமணி # சேலைகளால் ஏற்படும் விபத்துகள், ஆபத்துகள் கூட தமிழகத்தில் தான் அதிகம்

-----------------------

12. கதர்துணியை அவமதித்த ராஜஸ்தான் மாநில முதல்வர்:ஷூவை கதர் துண்டால் துடைத்தார்#காந்தியையே கேவலப்படுத்தினவங்க,கதர்துணியை விட்டு வைப்பாங்களா?

-------------------------

13. இந்த ஆண்டில் சமச்சீர் கல்வி அமலாவதுசாத்தியம் இல்லை#ஸ்கூல் ஓப்பன் ஆகி ஒரு மாசம் ஆகுது, இன்னும் அமலாகலை, அமலா பால் ஆகலைனுட்டு,ராஸ்கல்ஸ்

----------------------------

14. ஆபாச காட்சி இருந்தா வரிவிலக்கு கட்! தமிழக அரசு அதிரடி!!#அப்போ இனி தமிழ்ப்படத்திலயும் மலையாளப்படம் மாதிரி பிட் சேர்க்கப்போறாங்களா? ஐ ஜாலி

------------------------

15. சிக்ஸ் பேக்கை காட்ட போகிறார் சிம்பு!#மீதி 4க்கு எங்கே போவாரோ?

--------------

16.  மாப்பிள்ளை தேடுகிறார் சிம்பு!#தங்கைக்காக அப்டின்னு டைட்டில்ல ஒரு வார்த்தை சேருங்கப்பா, அவனா நீ அப்டின்னு கிண்டல் பண்னப்போறாங்க . 


-------------------

17. நான் பதில் சொல்லும் அளவுக்கு சோனா ஒரு  பெரிய நடிகை அல்ல.-நமீதா #ஆமா,உங்க அளவுக்கு அவருக்கு மார்க்கெட்டும் இல்ல........

-----------------

18. அமீர்கானின் சொந்த படத்தில் ஆபாசமான, கெட்ட வார்த்தைகள் கொண்ட பாடல் வரிகள் ,கோர்ட்டில் வழக்கு#தாரே ஜமீன் பர் நாயகன் இப்போ ஜாமீன் பர்?

------------------------
19. தமிழகஅரசுக்கு கல்வி மற்றும் சட்டத்துறையில் சரியான ஆலோசனை வழங்குவதற்கு உரியவர் எவரும் இல்லை. -அரசு வக்கீல்#ஏன்? சசிகலாக்குஎன்னகுறைச்சல்?
----------------------

20. ஒருவாரமாக ஆட்டோக்களில் மாமூல் வசூல் இல்லை : டிரைவர்கள் கூற்றால் போலீசார் பெருமிதம்#மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டதால வருத்தம்தானே படனும்?

-----------------------------
21 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முதல் மழை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
முதலும்,முடிவுமான சந்திப்பு என அறிவிக்கப்பட்ட பின்பு முதல் சந்திப்புக்கான சந்தோஷத்தை விழுங்கி நிற்கிறது இறுதி சந்திப்புக்கான துயரம்/////////


பிரிவின் துயரங்கள்...
ஒரு துணுக்கில்...

அழகிய வரிகள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////
என்னுடன் போர் புரியும் குரோதத்துடன் நீ தயாராக இருக்கிறாய்,உன்னிடம் சரண் அடையும் உத்தேசத்துடன் பணிவுடன் இருக்கிறேன்///////காதலில் நீங்கள் ஜெயித்துவிடுவீர்கள்...

அனைத்தும் அசத்தல்...

Unknown said...

///சேலைகளால் ஏற்படும் விபத்துகளும் அதிகம்////ஹா.. ஹா.. ஹா!!!

உணவு உலகம் said...

14. சிபியின் உண்மை முகம்.

நிரூபன் said...

சொல்லித்தெரிவதில்லை அன்பு, சொல்லாமல் புரிவதில்லை காதல//

அவ்...அவ்...

நல்ல வேளை சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்று ஒரு டைட்டில் வைக்கலை;-)))

நிரூபன் said...

முதல் பத்து துணுக்குகளிலும், காதல் ததும்பி வழிகிறது.

நிரூபன் said...

அரசியல், திரையுலக பஞ்ச்...சூப்பர்.

ஆமினா said...

super :)

சக்தி கல்வி மையம் said...

காதல் துணுக்குகள்..
மாப்ள ணீ எங்கேயோ போய்ட்ட..

முத்தரசு said...

அனைத்தும் கலக்கல்

13 நச்சென்ற செம்பட்டி அடி - அதிரடியானது

KANA VARO said...

நீ மங்கலாய் தெரிகிறாய் //

நீங்க வடிவேல் சொல்லுற மாதிரி மீன் சாப்பிடுங்க. கண்ணுக்கு நல்லது, சாப்பிடலைன்னா - மீனுக்கு நல்லது

மாய உலகம் said...

படம் - கொக்கு அசைவ கொக்கு

அனைத்தும் அருமை

போளூர் தயாநிதி said...

அனைத்தும் கலக்கல்

'பரிவை' சே.குமார் said...

அனைத்தும் அசத்தல்...

ரேவா said...

நான் தொடுகின்ற இடம் உன் மனதாக இருக்கட்டும்,நான் மடிகின்ற இடம் உன் மடியாக இருக்கட்டும்

சூப்பர் சகோ :-)

ரேவா said...

ஓர் எழுத்தில் என் உயிர் உருகும் ,அது நீ! மூன்றெழுத்தில் என் உடல் மருகும், அது நீ செலுத்தும் அன்பு...

எப்படியெல்லாம் யோசிக்கிறேங்க..சூப்பர் சகோ

கடம்பவன குயில் said...

//முதலும், முடிவுமான சந்திப்பு என அறிவிக்கப்பட்டபின்பு முதல் சந்திப்புக்கான சந்தோஷத்தை விழுங்கி நிற்கிறது இறுதி சந்திப்புக்கான துயரம்//

கவித....கவித...சிபி சாரின் கவிதை சூப்பர்.

இன்றைய உங்கள் எல்லா காதல் துணுக்குகளும் சொன்ன ஒரே கருத்து ”முதலும் நீ...முடிவும் நீ..” சரிதானா?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

"நான் மடிகின்ற இடம் உன் மடியாக இருக்கட்டும் " அழகான வார்த்தை ஜாலம்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஆரம்பத்துல கவிதை வரியா இருந்து, கடைசி போக போக காமெடி ஆயிருச்சு.

Avargal Unmaigal said...

காதல் மணம் புரிந்த எனக்கு இதை படிக்கும் போது மீண்டும் காதல் செய்ய வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது. என்னய்யா இப்படி எல்லாம் எழுதி என் குடும்பத்தில் குழப்பம ஏற்படுத்துகிறிர்கள். இனிமே இந்தமாதிரி பதிவுகள் போட்டால் ""காதலிக்காதவர்களுக்கு மட்டும்"" என்று அறிவிக்க வேண்டுகிறேன்