Wednesday, July 20, 2011

இது ராசி இல்லாத ஆட்சின்னு எப்படி சொல்றே?


 
1.கடந்த ஆட்சி கால நில அபகரிப்புகளுக்கும் விசாரணை:-கலைஞர் #கெட்டுது குடி.இனி 1996-2001 ஆட்சில நடந்ததையும் தோண்டறாங்களாம் தலைவரே?

----------------------

2. திமுகவினர் மீதான வழக்குகளை கட்சி எதிர்கொள்ளும்: ஸ்டாலின்#அண்ணே,அப்போ கட்சி மீதான வழக்குகளை திமுகவினர் எதிர்கொள்வார்களா? குட் டீலிங்க்

----------------------


3. சோனியா அகர்வால்-ன் ஒரு நடிகையின் வாக்குமூலம் படம் ரீலிஸ் ஆனால் திரையுலகையே ஒரு உலுக்கு உலுக்கும் என்கிறார்கள்.#உலுக்குமா? குலுக்குமா? டவுட்டு

-----------------------
 
4. ஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவ காப்பீடு ,அமலாகிறது தமிழக அரசின் புதிய திட்டம்#ஆனா கலைஞர் குடும்பத்துக்கு மட்டும் காப்பு ரெடியாகுதா?

------------------------

5. தமிழ் சினிமாவில் 16 டைரக்டர்கள் இணைந்து நடிக்கும் முதல் படம்-ஞாநி பழி வாங்கும் கதை#ரசிகர்களை பழி வாங்கும் கதையோ?

----------------------
6. டைரக்டர் ஹரி படம் , ஹாரிபாட்டர் படம் என்ன வித்தியாசம்?

ஹரி படம் சின்னப்புள்ளத்தனமா இருக்கும்,ஹாரி படம் சின்னப்பசங்க பார்க்கற மாதிரி இருக்கும்

---------------------


 7. 2011 டாப் 3 கள்ளக்காதல் ஜோடீஸ்

1. பிரபுதேவா - நயன் தாரா

2,நித்தியானந்தா - ரஞ்சிதா

3....................................................... (உங்கள் யூகத்துக்கு)


------------------
8. இது ராசி இல்லாத ஆட்சின்னு எப்படி சொல்றே? 

ஹாரி பாட்டர் -ன் கடைசி பாகம் இந்த ஆட்சில தானே வருது?

-----------------------

9. நிலத்தை கையகப்படுத்துன வழக்குல கைதான தலைவர் என்ன சொன்னார்?

பொறம்போக்கு நிலம் என்றுதான் பெரும்போக்கா நினைச்சு வாங்குனேன்னு ரீல் விட்டார்

-------------------

10.தலைவரோட அலும்புக்கு அளவே இல்லை.

 ஏன்?பத்மநாபன் என்ற பெயர் உள்ள அனைவருக்கும் கேரளா பத்மநாபா கோயில் நகைகள் சரி சமமாகபகிர்ந்து அளிக்க வேண்டும்கறாரே?

------------------------11. இன்று எனக்கு திருமண நாள் -சுஷ்மா ஸ்வராஜ்#மேடம்,டான்ஸ் பண்றதுன்னா வீட்டுக்குள்ளயே பண்ணிக்குங்க ,மறுபடி பிரச்சனை வேணாம்.

---------------

12.பிரதமராகும் தகுதி படைத்தவர் ஜெயலலிதா: சரத்குமார்#சித்தப்பாவோட சித்தாந்தம் என்னான்னா சித்தியை நைஸா சி எம் ஆக்கிடலாம்னு ..@பேராசை

----------------


13. கரூர்-ல்  பாலியல் தொழில் செய்த 7 அழகிகள் கைது#இந்த மீடியாக்கள் தான் முகத்தையே பார்க்காம அழகின்னு பட்டம் சூட்டறது..

-----------------


14. ”ஆள்,காதலி,லவ்வர் என்றால் உதடுகள் ஒட்டுவதில்லை...”

“டேய்,லூஸூ. இப்படி பேசிட்டே இருந்தா எப்படி உதடு ஒட்டும்?#ஆக்‌ஷன் லைக்கிங்க் காதலி

------------

15. முயற்சி என்பது விதை போல ,அதை விதைத்துக்கொண்டே இரு,முளைத்தால் மரம், இல்லையேல் மண்ணிற்கு உரம்

-------

i Love Failure


16..அறிவைப்பெருக்கனும்.

ஓக்கே டீச்சர்.எத்தனையால பெருக்கனும்?

-------------------

17. செருப்பால அடிச்சப்பக்கூட தலைவர் கோபப்படாம சந்தோஷப்பட்டாரா?ஏன்?

லேடீஸ் செப்பலால அடிச்சாங்காட்டி கிளுகிளுப்பா இருந்துச்சாம்.

----------------------

18.  இனி வித்தியாசமான பாதையில் பாமக: -அன்புமணி ராமதாஸ்# கூட்டணில சேர்த்துக்கலைன்னா, மந்திரி போஸ்ட் கிடைக்கலன்னா யாரையும் திட்ட மாட்டீங்களா?

-------------------

19.  சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த உயர் நீதிமன்றம் தீர்ப்பு:#ஆண்டவன் இருக்கான்யா -கலைஞர்

-----------------------------

20. . சமச்சீர் கல்வி தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு - தமிழக அரசு முடிவு#அம்மாவுக்கு இது கவுரவப்பிரச்சனை,விடாதீங்கம்மா

---------------------
21கலைஞர்ஆட்சியில் ரஞ்சிதா அறைக்குள் அடக்கமாக பணிவிடை செய்தார்,ஜெ ஆட்சியில் ஆர்ப்பாட்டமாய் ஓப்பன் ப்ளேசில் ஆட்டம் போட்டார். எந்த ஆட்சி பெஸ்ட்?

------------------------

22 கடித இலக்கியங்கள் உயிர் பெறுவது கூட அம்மா ஆட்சியில் தான்.லேட்டஸ்ட் உதா- மிசஸ் சாரு கடிதம் டூ நித்தியானந்தா

-------------------
23.. உன் லவ்வர் லவ்வர்ஸ்டே அன்னைக்கு என்னடி பரிசு கொடுத்தான்?

அதை ஏண்டி கேட்கறே? ஒரே ஒரு ஊறுகாய் பாக்கெட்தான் குடுத்தான்.

-------------------------

24. பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு  முழு உதவி-ஹிலாரி  #இங்கேயும் கோபாலபுரத்துல ஒரு பயங்கரவாதகுடும்பம்இருக்கும்மாஹெல்ப் ப்ளீஸ்

----------------------

25. சென்னை : மந்தைவெளியில் வங்கி பெண் அதிகாரி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்#அடப்பாவிகளா!அநியாயமா ஒரு அக்கவுண்ட்டை க்ளோஸ் பண்ணீட்டீங்களே!

------------------------

26. ஹிலாரி க்ளிண்டனுடனான சந்திப்பு எங்கள் வீட்டில் இனிதே நடை பெற்றது - சுஷ்மா ஸ்வராஜ்#அவ்வளவுதானா? நோ டான்ஸ்?

--------------------

27 சினிமாவை விட்டு விலகுவதா...முடியாத காரியம் : நயன்தாரா!#அடிச்சீங்களே ஒரு அந்தர்பல்டி,டாக்டர் ராம்தாஸ் எல்லாம் பிச்சை வாங்கற மாதிரி

--------------------28 மீண்டும் சிந்துசமவெளி.ரீ ரிலீஸ். என் இமேஜை இப்படி டேமேஜ் செய்றாங்களே - அமலாபால் #டோண்ட் ஒர்ரி மேடம்,நோ நியூலி அட்டாச்டு பிட்ஸ்

-------------------------

29 வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல நாயகியை தேடும் கமல்ஹாசன்!#பிரச்சனை ”விஸ்வரூபம் ”எடுப்பதற்குள் கவுதமி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

-----------------------

30. டியர்.. நான் முன்னால போறேன், நீ என்னை ஃபாலோ பண்ணு.

இதென்ன புது பழக்கம்?

அப்பத்தான் உனக்கு நான் டைரக்ட் மெசேஜ் அனுப்ப முடியும் #DM LOVE @ட்விட்டர் டிப்பார்ட்மெண்ட் (மாத்தி யோசி ஜீவன் காணாம போன மர்மம் ஹி ஹி )

-------------------------

20 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

ஆகா..

இது ராசி இல்லாத ஆட்சிங்கறதுக்கான
காரணம் இருக்கே ?

சூப்பர் பாஸ்...

என்னமா திங்க் பண்றிக ?

எல்லா கடியும் கடிச்சதுலே..
ஒரே நமச்சல்..

இதோ கிளம்பிட்டேன் ..
ப்ரெஷ்ஆ ஒரு குளியலுக்கு..

நன்றி..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

செல்ல நாய்க்குட்டி மனசு said...

முதல் மழை, வடை, மீ தி first எதுனா போட்டுக்கோங்கோ !
15 உம் அதனை சார்ந்த படமும் எனக்கு பிடித்து இருந்தது
25 ரசிக்க வைத்தது
அடடா வடை போச்சே !

ஆமினா said...

///ஆனா கலைஞர் குடும்பத்துக்கு மட்டும் காப்பு ரெடியாகுதா?////
பயங்கரமா சிரிக்க வச்ச பஞ்ச் ;))

கள்ள காதல்- பிரகாஷ் ராஜ்?? :))

எல்லாமே கலக்கல்ஸ்!!!!!!!

Unknown said...

சூப்பர் பதிவு தம்பி!
பழசை எல்லாம் கிளறப் போறாங்களாமா? கேப்பு விடாம ஆப்பு?

சக்தி கல்வி மையம் said...

vazhakkam pola kalakkal pathivu..
Thanks 4 sharing..

vidya pathi said...

Number 7//
காதலா? இல்ல கள்ளகாதலா...? சிபி!

ஆகுலன் said...

கலக்கல் தான் பாஸ்.....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சுவாரஸ்யமான விஷயங்கள்...

தனிமரம் said...

நக்கலும் நையாண்டி கலந்து சுவையான பதிவுகள் ஒட்டைவடை ஒய்வு எடுக்கப் போட்டாரா பாஸ்!

Unknown said...

அண்ணே உங்களுக்கு எப்பவும் குசும்புன்னே...ஏற்கனவே தலீவரு திகார்னு கேட்டாலே பகீருங்குதுன்னு சொல்லிட்டு திரியிறாரு!...இதுல உங்க பிட்ஸ் ச்சே டுவிட்ஸ் பாத்து புட்டு என்ன ஆகப்போறாரோ ஹிஹி!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ராஜி said...

என்ன சத்தமில்லாம ட்வீட்டை 20லிருந்து 30க்கு ஏத்திட்டீங்க

ராஜி said...

இது ராசியில்லாத ஆட்சின்னு நாங்களும் ஒத்துக்குறோம். ஏன்னா 20 ட்வீட், 30 ட்வீட்டா மாறிடுத்தே அதுக்குதான்

செங்கோவி said...

தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்..

ஹி..ஹி..வாழ்த்த மறந்துட்டேன்.

எங்களுக்கு பதிவை இணைக்க முன்ன நாக்குத் தள்ளிப்போகுது..ஆனா நீங்க ஜம்முன்னு நட்சத்திரமா இருக்கீங்க.ம்..ம்.

சரியில்ல....... said...

சபாஷ் சிபி. அப்போ அடுத்த வாரமும் "வலைபாயுதே"ல ஒரு இடம் இருக்கும்....

'பரிவை' சே.குமார் said...

எல்லாமே நல்லாயிருக்கு...
இப்பல்லாம் டுவிட்டுக்குத்தான் அதிக முக்கியத்துவம் போல...
படங்கள் தேர்வு சூப்பர்.

Anonymous said...

கலைஞர் குடும்பத்துக்கு காப்பு இல்ல, ஆப்பு தான் ரெடி ஆகிக்கொண்டு இருக்குது ))

மாய உலகம் said...

சினிமாவை விட்டு விலகுவதா... அடிச்சாங்களே பல்டி ... அருமை

மாதேவி said...

கலக்கல் :)

Anonymous said...

இதுபோல அடிக்'கடி' கடிங்க!