Thursday, November 17, 2016

சார்.நம்ம அடுத்த படத்துல நீங்க விக்கிரமாதித்தனா வர்றீங்க.

டாக்டர்.டெய்லிஅன்னாசிப்பழத்துண்டு 1 சாப்ட்டா எடை குறையுமா?


ஆமா அன்னாசிப்பழ எடையும் உங்க எடையும் படிப்படியா குறையும்


===============

2 Have a nice day சொன்னேன் எனக்கே இன்னிக்கு.இதுல இருந்து என்ன தெரியுது?
மிஸ்! நீங்க எப்போ பாரு கண்ணாடி முன்தான் இருப்பீங்க்னு தெரியுது


=============

3 ஜிம் பாடியா இருக்கானேன்னு டிபன் பாக்ஸ் திறந்து தர சொன்னா இந்த திணறு திணறுகிறான்

மிஸ், நகம் வளர்ந்த ஆள்கிட்டே கொடுங்க.கரெக்ட் சாய்ஸ்

================

4 சார், பெஸ்ட் ஓப்ப னிங் ஹீரோன்னு எப்டி பேர் வந்தது?

ஷூட்டிங் ஸ்பாட் ல யார்க்கு டிபன் பாக்ஸ் திறப்பதில் பிராப்ளம்னாலும் நான் தான் ஓப்பன் பண்ணித்தருவேன்


===============


5 அஜித் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான தீபாவளி.


எப்டி சொல்றே?அவர் படம் தான் ரிலீஸ் ஆகலையே?
ஆனா பைரவா டீசர் ரிலீசாகுதே?

=============

6 ஜாக்கிங் போவதெல்லாம் மிக நன்மைக்கே!


எப்டி?
எத்தனை நாளைக்குத்தான் "நடப்பதெல்லாம் நன்மைக்கே"ன்னு சொல்ல?=============

7 டாக்டர். நடு ராத்திரி ஆனாலும் தூக்கம் வர மாட்டேங்குதே.


மிஸ்! நைட் 9 டூ 10 க்குள்ள படுத்துடனும்.11 தாண்டிட்டா கொட்டாவி தான் வரும்


====================

8 டியர்.நாம 2 பேரும் சேர்ந்து ஜெயகாந்தன் கதை படிக்கலாமா?அதான் அழகியலாம்.

நல்ல வேளை.பாலகுமாரன் கதை படிக்கலாம்னு கூப்பிடலை

===========

9 நீங்க போட்டோ சுமாரா எடுக்கறீங்க.ஆனா ஜோக் மட்டும் மொக்கையா சொல்றீங்களே?

ஏன்னா நேச்சுரலா போட்டோ எடுக்கலாம்.ஜோக்?முடியாதில்ல?

=============

10 குருவே! அதிகபட்சமா ஒருத்தன் எவ்வளவு நாள் மாலை போடலாம்?

48,ஆனா.12 மணி நேரத்துல வாடிடும்.


============

11 ஞாயிறு எனக்கு வேலை இல்லைனா சைனீஸ் கார்டன் ல தான் இருப்பேன்

ஓஹோ.வேலை இருந்தா?
அதான் இல்லைனு சொல்லிட்டனே

=============

12 டெபுடி மேனெஜர் இல்லைன்னு போர்டு இருக்கே?அதைப்பார்த்தும் எதுக்கு ஒரு கேள்வி

சாரிமிஸ்.இப்பவெல்லாம் ஆளாளுக்கு நோ டி எம் னு போட்டுக்கறாங்க


============

13 குருவே!மாலை போட்ட பின் தண்ணி போடக்கூடாதா?

ம்ஹூம்.மூச்.எதுவும்

==============

14 சார்.உங்க ஜோக்செல்லாம் மொக்கை,ஏன் பொக்கிஷம்னு போட்டிருக்காங்க?

அதாவது அதை படிப்பவருக்கு மொக்கையிசம்.படைத்தவருக்கு பொக்கிஷம்


============

15 சார்.சொந்த ஊர் மண்ணை ரொம்ப நாளுக்குப்பின் இன்னைக்கு மிதிக்கப்போறீங்க.

ஒரு திருத்தம்.தொடப்போறேன்


================

16 ஹீரோ பிரைவேட் பேங்க் ல லோன் செக்சன் ல கலெக்சன் எக்சிக்யூடிவ்

எதுக்கு அப்டி?
அப்பதான் வசூல் மன்னன் னு பூடகமா டயலாக் வைக்க முடியும்?

============

17 தெரிஞ்ச எதிரிய விட தெரியாத எதிரிக்குத் தான்
அல்லு அதிகம்"
மொத்தத்துல உங்க எதிரி யார்னு உங்களுக்கே தெரில

=============

18 டியர்.நீ எனக்கு தெரிஞ்ச எதிரியா?தெரியாத உதிரியா?இல்லை எப்போதும் என்னுடன் இருக்கும் அதிரி புதிரியா? # விஜய் ரசிகைக்கு கவித


===============

19 சார்.நம்ம அடுத்த படத்துல நீங்க விக்கிரமாதித்தனா வர்றீங்க.
ஓ.எதை விக்கிர மாதித்தன்?
அய்யோ ஊர்மிளா.விக் கிர மாதித்தன் ங்க.பெயர்ச்சொல்.ஆகுபெயர்


==============

20 சார்.நம்ம படம் தெலுங்குல செமயா ஓடும் போல

அப்போ கேரளா ,தமிழ் நாடு என்ன தக்காளி தொக்கா?அடங்கொக்காமக்கா\\\==============

0 comments: