Wednesday, November 23, 2016

செகண்ட் ஷோ சினிமா பார்த்து விட்டு வீடு திரும்பியபின்

நாம நம்ம வீட்ல நடந்தத சொன்னாக்கூட பலர் இங்கு கேலி கிண்டலில்.என் இப்டி?


ஏம்மா சோன்பப்டி.பக் வீட்ல நடந்ததா சொல்லுங்க


===============

2 500 ரூ நோட்டை விட 2000 நோட்டு சைசில் சின்னதா இருக்கு.அப்போ ரூபாய் மதிப்பு குறைஞ்சிடுச்சு.இதுக்கு மோடிதான் பொறுப்பு னு யாரும் கூவல?


================

3 என் கேள்விக்கு பதில் இங்கேயேசொல், குடைக்கீச்சிலே வேண்டாம்


மிஸ்.பதில் தானே டிஎம் ல கூடாது.எதுனா கேள்வியாவது கேட்கலாமா?


===============

4 கிசுகிசு-பிரபல ட்வீட்டரும் ,விஜய் ரசிகருமான நண்பர் பெண்களுக்காக ஆரம்பித்த வாட்சப் க்ரூப்ல 4 பேரு நம்ம சங்கத்து ஆட்களாம்.20%80%

============

5 போன் பண்ணா எடுத்து கட் பண்றதுக்கு பதிலா

பிசி, கால் யூ லேட்டர்னு சொல்லலாமே.
கட் பண்ணா அதான் அர்த்தம் மேடம்.அட்டென்ட் பண்ணா காசு ஊ ஊ


=================

6 5 பேங்க் அக்கவுண்ட் இருக்கு.ஆனா இது வரை ஒரு பேங்க்கில் கூட ஒரு நோட்டு கூட மாத்தலை.இதுக்கு எதுனா அவார்டு தருவாங்களா?

=============

7 இனி பேங்க்கில் பணம் எடுத்தால் விரல்களுக்கு மருதாணி வைத்து விடப்படும்.மோடி அறிவிப்பு.லேடீஸ் மகிழ்ச்சி.மீரா அதிர்ச்சி

==============

8 விதியுடன் மோது

விஜய்யுடன் மோதாதேனு பேனர் இருக்கே.மோதினா என்ன ஆகும்?
அப்புறம் அவர் யூ ட்யூப் ல வந்து மன்னிப்பு கேட்பார்.பாவம்


============

9 சார்.ஒரு பிரபல வார இதழ் ல உங்க மச்சினி யை உங்க மனைவி ன்னு தவறுதலா போட்டிருக்காங்க?


அப்டி போடச்சொன்னதே நான் தான்.

=============

10 அன்பே! காலை வந்து தேடுவாய் என்பதற்காக லைப்ரரியில் அமர்ந்து தேடித் தேடி எழுத வேண்டியதாக உள்ளது கவிதைகளை


=

==============

11 சமைக்கக்கூட பழகாத பெண்கள் women empowermentபத்தி பேசலாமா?
மேடம் .மையல்,சமையல் 2ம் இருபாலருக்கும் பொது.2ம் அறியாதோர் இரு தரப்பிலும் உண்டு

=============

12 கடவுள் இருக்கான் குமாரு மீடியா விமர்சனம்

ஹிட் ஆனா = படம் தறுமாறு
மீடியம்னா =,சுமாரு
பிளாப்னா = டோமரு


============

13 கடவுள் இருக்கான் குமாரு பிளாப் என தகவல்

=============

14 இயக்குநர் எம் ராஜேஷ் தன் ரெகுலர் பேட்டர்ன் ,அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் குழுவை மாற்றி அமைப்பது நல்லது

============

15 முக்கியமான சாவிகளின் கீ செயின் மரக்கட்டைத்துண்டு /பிளாஸ்டிக் போன்ற நீரில் மிதக்கும் பொருளாக இருந்தால் நீர்நிலையில் தவறினாலும் எடுத்துவிடலாம்

================
16 Lights out அப்படி ஒண்ணும் பயமாவே இல்லையே?

சார், லைட்சை ஆஃப் பண்ணிட்டுப்பாருங்க, லைட்ஸ் ஆன் பண்ணி பார்த்தா பயம் வராது


=================

17 நீயும் நானும்
சென்ற
சாலையில்
யார் யாரோ
செல்கிறார்கள்.
ரோடு டாக்ஸ்.நாம மட்டுமா கட்றோம்? எல்லாரும் தான்


===============

18 அன்பே! நீ என்ன சொன்னாலும் தலை ஆட்டுவேன்

அப்டியா?இப்டி தலையை ஆட்டாதேன்னு சொன்னா?


===============


19 செகண்ட் ஷோ சினிமா பார்த்து விட்டு வீடு திரும்பியபின் ஏற்படும் நடு ஜாமத்துப்பசியாய் தீராத உன் நினைவுகள்

===============

20 பேங்க் வாசலில் வரிசையில் நிற்கத்தயங்காதீர்.க்யூ வில் ஒரு க்யூன் அல்லது கேஷ் கவுண்ட்டரில் ஒரு க்யூன் உங்களுக்கு செட் ஆகலாம்.


=================

0 comments: