Monday, November 07, 2016

வீட்டில் ஐஸ்வர்யம் இருக்கு.ஐஸ்வர்யாராய் இல்ல

1  இன்னும், 6 மாதங்கள் காத்திருங்கள். தமிழகத்தில்,ஆட்சி மலரும்.-துரைமுருகன்: # ஆறு வருசம் வேணாலும் காத்திருக்கோம், நடக்குதான்னு பார்ப்போம்

=============

2 ஆள்கிறவர்கள், ஆண்டவர்கள் நம்மை காக்கப் போவதில்லை; ஆண்டவன் தான் நம்மை காப்பாற்ற வேண்டும்-தமிழிசை # மோடியைச்சொல்றீங்களா? லேடியை சொல்றீங்களா?


==============

3 தொழில் வளர்ச்சி குறித்த தரவரிசை பட்டியலை, அரசு வெளியிட்டு உள்ளது.அதில் தமிழகத்திற்கு, 18வது இடம்.-ஸ்டாலின் # 1+8 =9 கூட்டுத்தொகை ராசி தானே?

==============


4 தமிழகத்தின் சம்மதத்துடன், சிறுவாணி அணை கட்டுவோம்- கேரளCM# எதிர்ப்புக்குரல் தரனும், இல்லைன்னா மவுனம் சம்மதம் ஃபார்முலாவை ஃபாலோ பண்ணிடுவாக

==========

5 பா.ம.க.,வுக்கு 'மாம்பழம்' கிடைப்பதில் சிக்கல் # அடடா,அப்போ அந்த 4% ஓட்டும் போச்சா?


=============

6 ஃபேஸ்புக் காதலியை ஏமாற்றி பேருந்து நிலையத்தில் தவிக்க விட்ட ஃபேஸ்புக் காதலன்! # நகை யையும் கழட்டி விட்டுட்டானாம்.நங்கையையும்

==============

7 ஜீனியர் விகடன் மீதான அவதூறு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் ஆ.ராசா நேரில் ஆஜர்.# பண்றது திருட்டு.இதுல ரோஷம் வேற

===============


8 அதிமுகவுக்கு எந்த கட்சி ஆதரவு அளித்தாலும், வெற்றி காங்கிரஸுக்கு தான்: நாராயணசாமி # டெபாசிட் கிடைக்குதானு பாரும்

===============


9 ஸ்டாலின் எங்களை அவமதித்தால்தான் கேப்டனை CM ஆக அறிவித்தோம் - வைகோ
கலைஞர் அவமானப்படுத்தி இருந்தா அழகிரியைசிஎம் வேட்பாளராக்கி இருப்பீக?


=================

10 3தொகுதிகளிலும் திமுகவின் வெற்றியை தடுப்பேன் - பிரேமலதா # நம்ம நோக்கமே எதிர் வீட்டுக்காரன் விளங்காம போகனும்.நாம எப்டிப்போனா என்ன?

============


11 பெண்களை பன்றிகள் என்பவர் நமக்கு அதிபராக வேண்டாம்: டிரம்ப் மீதுஒபாமாபாய்ச்சல் # "PIG"MENTS னு சொன்னாராம்.திரித்து PIG னு சொல்லிட்டாங்களாம்

=======================

12 ராகுல் கைதுக்கு கண்டனம்- சென்னையில் 1 திருநாவுக்கரசர்,2 EVKS, 1 நக்மா, 2 குஷ்பு ஆர்ப்பாட்டம் # நாம் இருவர் நமக்கு இருவர்===================13 கல்வித்தகுதி பற்றி தவறானதகவல் அளிக்கும் MLA,MP பதவிபறிப்பு: உச்சநீதிமன்றம்- # கல்வித்தகுதி இருந்தா நல்ல கவுரமான வேலைக்குப் போய்ட மாட்டோமா?===============

14 விவசாயத்துக்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 25 ஆவது இடம்: நிதி ஆயோக் அறிவிப்பு - ஆன் லைன் ல நாம இவ்ளோ கடலை போட்டும் இவ்ளோ தானா?====================15 ஆபாச இணையத் தளங்களை பார்ப்பதில் இந்திய பெண்கள் முதலிடம் - ஆய்வில் தகவல் # பூரா பேரும் நம்ம பயலுக தான் . பேக் ஐடில போய் பார்த்திருப்பாக===============16 குஷ்பு வுக்கு பிறகு கீர்த்தி சுரேஷுக்கு கோவில் கட்டும் ரசிகர்கள்! # கோவிலுக்குப்போனா பிரசாதமா என்ன கொடுப்பாங்க?ஸ்டில்சா?
====================17 ஜெ., வேகமாக குணமடைந்து வருகிறார்... வீடு திரும்புவது குறித்து அவரே முடிவு செய்வார் : அப்பலோ தலைவர் # இனி கலைஞரும் குணம் ஆகிடுவார்
===============18 14 வருடங்களுக்குப் பிறகு இணையும் ஷாருக்கான் - ஐஸ்வர்யா ராய்! # அபிஷேக்்பச்சன் மைன்ட் வாய்ஸ் -வீட்டில் ஐஸ்வர்யம் இருக்கு.ஐஸ்வர்யாராய் இல்ல==============19  பா.ஜ.,வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே, சமாஜ்வாதி யின் இலக்கு.-அகிலேஷ் யாதவ்:# aஆஹா, இதுவல்லவோ லட்சியம்? உங்க இலக்கு அடைய உங்களுக்கு லக்கு இருக்கா தெரில================


:20   ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்துக்காக, பிரிட்டன் பிரதமர், இப்போது, மன்னிப்பு கேட்க வேண்டும்-சசி தரூர் #  விட்டா மவுண்ட்பேட்டன் பிரபு கிட்டே நேரு சாரி சொல்லனும்பாரோ?
--  

====================

0 comments: