Saturday, November 26, 2016

Dear Zindagi (hindi) - சினிமா விமர்சனம்

Image result for dear zindagi review
100 கோடி வசூல் ஹீரோ ( என சொல்லப்படும்) இளைய தளபதியின் புலி படத்தில் நடிச்சதுக்கு இன்னும் சம்பளம் வர்லைன்னு புலம்பின ஸ்ரீதேவி நடிச்ச இங்க்லீஷ் விங்க்லீஷ் எனும்  சூப்பர் ஹிட் படம் கொடுத்த  கவுரி ஷிண்டே இயக்கத்தில் வந்த படம் எந்த அளவுக்கு ஆடியன்ஸ் எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருக்குன்னு பார்ப்போம்.


ஹீரோயின் ஒளிப்பதிவில் ஆர்வம்  மிக்கவர். சினி ஃபீல்டில் இருக்கார். ஒரு படம் இயக்கனும் என்பதே இவர் லட்சியம். அதுக்காக ஒரு இயக்குநரிடம் அசிஸ்டெண்ட்டாக சேர்றார். அவரு நம்ம பாலுமகேந்திரா மாதிரி கரெக்ட் பண்றவர்.  தெரியாம லூசு ஹீரோயின் லவ்வுது ( பொதுவா பொண்ணுங்க கரெக்டா கேப்பமாரியா பார்த்து செலக்ட் பண்ணி புத்திசாலித்தனமா லவ்வுவாங்க, நல்லவனோட லவ்வை கண்டுக்க மாட்டாங்க )


ஒரு கட்டத்தில் அவன் ஒரு 420 , ஆல்ரெடி வேற ஒரு பொண்ணு கூட நிச்சயம் ஆனவன் அப்டினு தெரிய வருது. செம அப்செட். மன ரீதியான பாதிப்புக்கு ஆளாகும் நாயகி ஒரு மன நல நிபுணரை  நாடுகிறார். ட்ரீட்மெண்ட் நடக்கும்போதே அவர் பால் ஈர்க்கப்பட்டு ஒரு லிப் கிஸ் எல்லாம் வாலண்ட்ரியா குடுக்கறார்.

பின் ஒரு பார்ட்டில ஒரு ஆளைசந்திக்கிறார். அவரையும்  பிடிச்சுடுது ( யாரும் ஜெர்க் ஆக வேணாம். மாடர்ன் பொண்ணு )


இந்த இடியாப்ப சிக்கல் காதலில் க்ளைமாக்சில்    யாரை கரம் பிடிக்கிறார் என்பதே கதை

படத்தோட முதுகெலும்பு , நல்லி எலும்பு ,குறும்பு அலும்பு ஆல் இன் ஆல் ஆலியா பட் தான் . செம ஆக்டிங், செம க்யூட் . பொதுவா அழகான பொண்ணுங்க சுமாரா நடிச்சாலே நாம சூப்பரா நடிச்சதா சொல்வோம். சூப்பரா நடிச்சா கேட்கனுமா? பாடி லேங்க்வேஜ் , வசன உச்சரிப்பு , நடிப்பு எல்லாமே கலக்கல் ரகம்Image result for dear zindagi review
 ஷூட்டிங் ஸ்பாட்டில்  எல்லாரையும்  தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது , காதலன் துரோகம் அறிந்ததும் பொங்குவது ,  2 வது காதல்வசப்படும் இடம் , 3 வது காதல் என ஏறுவரிசையில் அனாயசமாக அப்ளாஸ் வாங்குகிறார். கிட்டத்தட்ட நயன் தாரா வுக்கு கிட்டே வந்துட்டார் ( 5 லவ்வர்ஸ்  3 லவ்வர்ஸ்க்கு கிட்டே தானே?)


துரோகக்காதலராக வரும் ஆள் அதிக வாய்ப்பில்லை. 2 வது காதலராக ஷாருக் கானின் அண்டர் ப்ளே ஆக்டிங் அபாரம்.  வழக்கமாக ஃபாஸ்ட் டயலாக் டெலிவரி செய்பவர் இதில் நிறுத்தி நிதானமா செந்தூரப்பூவே விஜயகாந்த் போல்  டச் பண்றார்


3 வது லவ்வரும்  சுமார் ரகம் தான்

 பாடல்கள்  ஓக்கே ரகம் . ஒளிப்பதிவு பக்கா . படத்தில் வரும் அனைத்துப்பெண் கேரக்டர்களுக்கும் க்ளோசப் ஷாட் , சைடு ஆங்கிள் ஷாட் எல்லாம் உண்டு . அரக்கோணம் , கும்பகோணம்  எல்லாம் போகாமலேயே பல கோணங்களில் கேமரா பிடித்தவருக்கு ஒரு ஷொட்டு

 படத்தின் பிளஸ்  அபாரமான வசனங்கள் . மொத்தம் 37   அழகிய வசனங்கள். பட ஓட்டத்தின் வேகத்தில் 21 தான் நினைவு வெச்சு டைப்ப முடிஞ்சது


ஆண்களுக்கு இந்தப்படம் பெரிய அளவில் பிடிக்காது. மாடர்ன் பெண்களுக்கு பிடிக்கும். கமர்ஷியலா போகாது. ஆனா லாஸ் ஆகாது. போட்ட முதலீடு கிடைச்சிடும்.

Image result for alia bhatt


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


ஷாரூக்கான் + அலியாபட் = DEAR JINDHAGI (hindi) @ கேரளா செங்கனாச்சேரி தன்யா =149 நிமிடங்கள்2 டென்ஷனைக்குறைக்க ஹீரோயின் பச்சை மிளகாயை சாப்பிடுது.டைவர்ட் ஆகுமாம் மனசு.ஏம்மா.இதெல்லாம் 1989 லயே பாத்துட்டோம் JINDHAGI(HINDI)


3 திரைக்கதை ரொம்ப மொக்கையாப்போகுதேன்னு யோசிச்சேன்.திரைக்கதை ,வசனம் ,தயாரிப்பு ஒரு பொண்ணு JINDHAGI(HINDI)

4 ஷாரூக்கான் ரசிகர்களுக்கு.இது ஒரு ஹீரோயின் ஓரியன்ட்டட் பிலிம்.கெஸ்ட் ரோல் தான் அவரு.மனதை தயார்படுத்திக்கவும்

ஒத்தை ஆளு அலியா பட்.மொத்த திரைக்கதையையும் தாங்குது.வாட் எ ஒண்டர்புல் ஆக்டிங் JINDHAGI(HINDI)

6 முக்கியமான வசனங்கள் வரும்போது பின்னணி இசை இல்லாமல் அமைதியாக அப்படியே விடுவதும் இயல்பான இயக்கமே JINDHAGI (hindi)


7 ஒரு காட்சியை அழகா காட்டுவது ஒளிப்பதிவாளரின் திறமை.காட்சிக்கு மெருகேற்றுவது இசை அமைப்பாளரின் கடமை

Image result for alia bhatt


நச் டயலாக்ஸ்


1 டைவர்ஸ் ஆக 100% சான்சே இல்லாத ஒரு வாழ்வு வாழ ஒரு ஐடியா கண்டுபிடிச்ட்டேன்?
டோன்ட் மேரேஜ் JINDHAGI (hindi)


2 R U LESBIAN?


Y?
JUST ASK.
MM.UNFORTUNATELY NO JINDHAGI (HINDI)
3 தன்னைத்தானே தண்டித்துக்கொள்தல் என்பது ஒரு அறிவுப்பூர்வமான செயலா எனக்குத்தோணலை JINDHAGI(HINDI)


4 சுலப வழி

கடின வழி
2 ஆப்சன் தந்தா மேக்சிமம் எல்லாரும் சுலப வழியைத்தான் தேர்ந்தெடுப்பாங்க.இதுதான் அவங்க மைனஸ் JINDHAGI (HINDI)5 கடினவழியைத்தேர்ந்தெடுத்தாதான் வாழ்க்கைல ஜெயிக்க முடியும்னு விதி கிடையாது JINDHAGI (HINDI)

6 உயரமான இடத்தில் இருந்து கீழே விழுவது போல் அடிக்கடி கனவு வந்தா உனக்கு ஒரு வீழ்ச்சி காத்துட்டு இருக்குனு அர்த்தம். JINDHAGI(HINDI)


7 சாதா சேர் வாங்க பல சேர் கடைல பாத்து வாங்கறோம்.வாழ்க்கை பூரா வரும் துணையைத்தீர்மானிக்க மட்டும் ஏன் சாய்ஸ் இல்லை? JINDHAGI (HINDI)
8 மாடர்ன் பொண்ணுன்னா சீக்கிரம் மடங்கிடுவா ங்கற மட்டமான எண்ணம் இந்த சமூகத்துக்கு உண்டு JINDHAGI (hindi)


9 நட்பு இயல்பா இருக்கு.ஆனா ரொமான்டிக் ரிலேசன்ஷிப்ல மட்டும் இரிட்டேட்டிங் இருக்கே ஏன்?


அதான் லவ்வோட + & - JINDHAGI(HINDI)10 சைக்கிளை என்ன பண்ணிட்டு இருக்கே?


ரீ சைக்ளிங்க் பண்ணிட்டு இருக்கேன் JINDHAGI(HINDI) ( OLD JOKE)
Image result for alia bhatt hot in radha song

11 நான் ரெண்டாம் கிளாஸ்ல பெயில் ஆகிட்டே.அதுக்காக வாழ்க்கைலயும் பெயில் ஆகிடுவேன்னு உக்காந்திருக்க முடியுமா? ஐ ஹேவ் டூ மூவ் JINDHAGI


12 ஒரு தவறான நம்பிக்கையை யார் மனதிலும் விதைத்து விடாத வாழ்க்கை வரம்.சரியான நபர் துணையாக அமையாதது சாபம் JINDHAGI (edited வெர்சன் )

13 வாழ்க்கைல நாம எல்லோருமே ஆசிரியர்கள் தான்.முடிஞ்சவரை கத்துக்கறோம்.கத்துத்தர்றோம் JINDHAGI(HINDI)
14 பன் முகத்திறமை கொண்ட ஒரு கலைஞனுக்கு முக்கியமான பிரச்னைகளில் முடிவு எடுக்கும் திறமை குறைவாகத்தான் இருக்கும் JINDHAGI(HINDI)


15 இளம் வயசுல நடிக ,நடிகைகள் நடிக்க வந்து புகழ் பெறலாம்.ஆனா ஒரு டெக்னீஷியன் சின்ன வயசுல பீல்டில் இருக்கக்கூடாதா? ZINDHAGI(h)

16 ஒரு படைப்பாளியின் படைப்பில் எப்பவும் அவரோட அனுபவப்பதிவு 50% கலந்திருக்கும் ZINDHAGI(hindi)

17 ஒழுங்காக அடுக்கப்பட்ட பொருட்கள் தான் அழகுன்னு நாமளா நினைச்ட்டு இருக்கோம்.ஒரு குழந்தை கலைச்சாலும் அழகுதான் ZINDHAGI (h)

18 யோவ்.என்னய்யா டிரஸ்கோட் இது?நாட் அலோடு.


அந்தப்பொண்ணு மட்டும் ஷார்ட்ஸ் போட்டிருக்கு?
பெண்கள் விதிவிலக்கு ZINDHAGI (hindi)19 நீ உதவி செய்ய வந்தியா?காமெடி பண்ண வந்தியா?
பொதுவா பொண்ணுங்களுக்கு பசங்க சீரியசா எது செஞ்சாலும் காமெடியாத்தான் தெரியும் ZINDHAGI(H)


20 நான் உங்க மனசைக்காயப்படுத்திட்டனா?
ஒரு அழகான பொண்ணு /திறமைசாலி ஆண் இவங்க வாழ்க்கைல வழக்கமா செய்யும் தப்புதானே?நோ பிராப்ளம் Z


21 என்னை மிஸ் பண்றியா?ன்னு ஒரு மெசேஜ் டைப் பண்ணேன்.அதை அவனுக்கு அனுப்பாம மிஸ் பண்ணிட்டேன். ZINDHAGI (h

Image result for alia bhatt hot in radha song

சி.பி கமெண்ட் DEAR ZINDHAGI (hindi)-இங்க்லீஷ் விங்க்லீஷ் அளவு இல்ல.பால்கனி ஆடியன்சுக்கான படம்.அலியாபட் ஆக்டிங் குட் .ரேட்டிங் =2.75 / 5

0 comments: