Tuesday, November 29, 2016

ஊரு உருப்பட்ட மாதிரிதான்

1 1962ல் என்னோடு, தி.மு.க.,வுக்கு புறப்பட்டவர்கள் ஏராளம், பலரும் விலகி விட்டனர்,நான் நல்ல நிலையில் இருக்கிறேன்-துரைமுருகன் # பழைய ஆட்கள் பலர் விலகிட்டாங்கன்னு சொன்னா கலைஞர் கோவிச்சுக்க மாட்டாரா?

============

2 ரூ.1000, ரூ.500 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் ‘‘விளைவுகள் சரியாக நீண்ட காலம் ஆகும்’’ ப.சிதம்பரம # கன்னித்தீவு கதை போல் இழுத்துட்டே போகும்னு தோணுது

================

3 பிரதமரின் அறிவிப்பால் வசூல் பாதிப்பு இல்லை திருப்பதி உண்டியலில் புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் # பாவக்கணக்கை புண்ணியக்கணக்கு ஆக்க முயற்சி போல

============

4 கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு -தமிழிசை # இதை நீங்க அடிக்கடி திருப்பித்திருப்பி சொல்றதாலதான் டவுட்டே வருது

--

============
5 தி.மு.க. சார்பில் 24-ந்தேதி மனித சங்கிலி போராட்டம் கருணாநிதி அறிவிப்பு # இதுவே அதிமுக நடத்தினா அடிமை சங்கிலி போராட்டம்
===============

6 நாட்டில் நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகள் எனது இதயத்தைப் பெரிதும் பாதித்துள்ளன- # வீட்டில் நடக்கும் அழகிரி-ஸ்டாலின் சண்டையைப்பற்றி சொல்றாரு போல

===============

7  தமிழகத்தில் முதல் எஜமானர்கள், விவசாயி -பிரேமலதா # இப்டி சொல்வீங்கன்னு தெரிஞ்சுதான் தானைத்தலைவர் நானும் விவசாயக்குடும்பம்தான்னு சொல்லிட்டாரு


============

ஜனநாயகத்தை காக்க காங்கிரப்ஸ் தலைமையில் ஒன்று சேர வேண்டும்! - திருமாவளவன் #ஊரு உருப்பட்ட மாதிரிதான்


=============9 டாக்டரான எனது கோட்டும் ஒயிட் சம்பாதித்த நோட்டும் ஒயிட்தான். -தமிழிசை # சாப்பிடறது கூட ஒயிட் ரைஸ் தான்,குடிப்பது ஒயிட்ரோஸ்=============10 ரூபாய் நோட்டு பிரச்சனையில் நேர்மையாளர்க்கு எவ்வித சிரமமும் இல்லை - மோடி # அவங்களுக்கு வீடு தேடி பணம்.வருமா ஜி?================11 புதிய ரூபாய் நோட்டுகளுடன், பழைய, 500 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்க  அரசு

அனுமதிக்க வேண்டும்.- மம்தா பானர்ஜி: # மேடம் கிட்டே பழைய 1000 ரூ நோட்டு ஸ்டாக் இல்ல போல


===================


12 

நாட்டில், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது, தீய நோக்கத்துடன் கூடிய நடவடிக்கை.-அகிலேஷ் யாதவ்: # தீய எண்ணங்கள் கொண்ட கறுப்புப்பண முதலைகளுக்கு எதிரான நடவடிக்கை


================

13 ஜன்தன்' கணக்குகளில் ரூ.10 ஆயிரம் டிபாசிட்? அடுத்த அதிரடிக்கு பிரதமர் தயார் #  இது அதிரடி மாதிரி தெரியல, அரசோட ஜேப்படி மாதிரி தெரியுது.==================

=======================


15 பத்திரப்பதிவு வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி:அரசு திட்டங்களுக்கு சிக்கல் # ரியல் எஸ்டேட்  பிஸ்னெஸ்   ஸ்டேட்டஸ் ரொம்ப மோசம் ஆகிடும்


-==========================

16 ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும் திருமாவளவன்
# விஜய்காந்த்தை முதல்வர் ஆக்கனும்னு சொன்ன ராசியான அதே வாய்

============

17 திமுக வின் தலைவர் கருணாநிதியா ஸ்டாலினா .......... விஜயகாந்த் # தேமுதிக வில் முடிவு எடுப்பது பிரேமலதாவா?விகாந்த்தா?ன்னு கலைஞர் கேட்டுட்டா?


=============

18 ராகுலை பிரதமராக்க வேண்டும் - திருமாவளவன்
# திருமா வுக்கு நெட் வாசிகள் குருமா வைக்கப்போறாங்க


====================

19 திருமண செலவுகளுக்கு பணம் எடுக்கும் விதிமுறைகள்-ரிசர்வ் வங்கி # நல்லவேளை.எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு.இவங்க ரூல்சை படிக்கத்தேவை இல்ல

===============

20 ரூ.650 கோடி செலவில் ஆடம்பரத் திருமணம்: ஜனார்தன் ரெட்டி அலுவலகங்களில் அதிரடி சோதனை # வளர்ப்பு மகன் திருமணம்னு சொல்லுங்க .விட்டுடுவாங்க

==================

0 comments: