Sunday, November 27, 2016

10 Kalpanakal - சினிமா விமர்சனம்

Image result for 10kalpanakalத்ரிஷ்யம், ட்ராபிக் , ஒப்பம் மாதிரி வித்தியாசமான க்ரைம் த்ரில்லர்கள் மலையாளப்பட உலகில் அவ்வப்போது வந்து வெற்றி மாலையை சூடிக்கொண்டே இருக்கு. அந்த மாதிரி ஒரு  சைக்கோ க்ரைம் த்ரில்லர் தான் இது

போலீஸ் அகாடமில ஒரு  ஆஃபீசர்  தன்னோட லைஃப்ல சந்திச்ச வித்தியாசமான  க்ரைம் கேஸ் பத்தி சொல்வது போல் கதை.

ஒரு 16 வயசுப்பொண்ணு கொலை செய்யப்படுது.கொலை செய்திருப்பார்கள் என சந்தேகப்படும் சூழலில்  4 பேர்

1  மல்லுவேட்டி மைனர்  பட சத்யராஜ் போல் ஊர்ல உலா வரும் ஒரு வில்லன்

2  கண்ணில் தென் படும் பெண்களை எல்லாம் கொலை செய்து வரும் ஒரு சைக்கோ கொலையாளி

3 போ லீஸ் ஆஃபீசரின் மகனாக இருந்தும்  செல் ஃபோனில் கில்மா க்ளிப்பிங் வைத்திருந்ததாக பள்ளி நிர்வாகத்தால் கண்டிக்கப்படும் ஒரு பள்ளி மாணவன்

4 அந்தப்பெண்ணை பாசமாக பார்த்துக்கொள்ளும் ஹீரோ


இவங்க 4 பேர்ல யார் கொலையாளி என்பதை  சஸ்பென்ஸ் குறையாமல் சொல்லி இருக்காங்க

Image result for 10kalpanakal


கதை சொல்லும் போலீஸ் ஆஃபீசரா மீரா ஜாஸ்மின். மருதாணி வைக்காமலயே இயற்கையாக சிவந்த அழகிய அதரங்கள். நடிக்க வாய்ப்பு கம்மி. ஒரு நமீதாவோ, விஜய சாந்தியோ காட்டிய போலீஸ் கம்பீரம் மிஸ்சிங். ஆஷா சரத் பெஸ்ட் சாய்சாக இருந்திருக்கும்.


ஹீரோவா அனூப் மேனன். .பீர் அடிச்சு அடிச்சு குப்னு உப்பிப்போன கன்னங்கள் மைனஸ் என்றாலும் குணச்சித்திர நடிப்பால் கவர்கிறார்


அந்த சைக்கோ கொலையாளியா  வருபவர் கெட்டப் டைரக்டர் செல்வ ராகவன் போல் மேக்கப் கண்ணாடி ஹேர் ஸ்டைல் . பாடி லேங்க்வேஜ் - டிக் டிக்டிக் பட வில்லன் எனக்கு எல்லா நியாயங்களும்  தெரியும் , எல்லா தர்மங்களும் தெரியும் புகழ் ஆள் அவரைப்போலவே... ஜெயிலில்  ஹீரோவுடன் அவர் சந்திப்பில்  குருதிப்புனல் கமல் - நாசர் சந்திப்பை நினைவுபடுத்துகிறார்


மல்லுவேட்டி மைனராக வரும் ஒற்றைக்கண் ஆள்  சுமார் நடிப்பு 


ஹீரோவின் மகனாக வரும்  பிரசாந்த் நாராயணன் ஓகே ரகம். அந்த 16 வயது பால் மணம் மாறா பால்கோவா செம செலக்‌ஷன். வாலி பட ஜோதிகாவின் தங்கை போலவே தோற்றம். பிரைட்  ஃபியூச்சர் உண்டு

 ஃபைவ் ஸ்டார் புகழ் கனிகா நச் 

Image result for kaniha hot


சபாஷ் டைரக்டர்


1  திரைக்கதை உத்தி விருமாண்டி டைப்பில்  இருந்தாலும் ரசிக்கும்படி அமைத்த விதம்


2  ஹீரோயின் செலக்சன் பக்கா. அவரை ஒரு தேவதை போல் கண்ணியமான கிளாமரில் காட்டிய  விதம்   இதம் 

3  பக்காவாக 2 மணி நேரத்தில் படத்தை முடித்த நறுக் சுருக்.

4 க்ரைம் ஸ்டோரியாக இருந்தும் , வாய்ப்பிருந்தும்  ரத்தம்  கொடூரம் குரூரம் தவிர்த்த விதம்

Image result for kaniha hotலாஜிக் மிஸ்டேக், திரைக்கதையில் சில மைனஸ்


1  ஒரு க்ரைம் த்ரில்லருக்கு எதுக்கு  ஹீரோயின் ஓப்பனிங் சாங் , க்ளப் டான்ஸ் , சோகப்பாட்டு, தத்துவப்பாட்டு?


2  எந்த வித ஆதாரமும் இல்லாமல் ஒரு சைக்கோ கொலையாளி  சொன்ன தகவலை மட்டும் நம்பி ஹீரோ  தன் மகனை கொல்ல முயல்வது எப்படி? அட்லீஸ்ட் ஒரு வார்த்தை தன் மகனிடம் தன்னிலை விளக்கம் கேட்க மாட்டாரா?


3  காரில் வரும் சைக்கோ கொலையாளி  எந்த அடிப்படையில்  போலீஸ் ஆஃபீசரான  மீரா ஜாஸ்மினிடம் அந்த ட்விஸ்ட் ரகசியம் சொல்றார்?  ஹீரோவுக்கு ஃபோன் பண்ணி மீரா வார்னிங் பண்ணுவார் என தெரியாதா?


4  டெய்லி பகலில் சந்திக்கும் சக மாணவன் + தோழன் நடு இரவில்  காட்டுக்கு அழைக்கும்போது  ஒரு டீன் ஏஜ் கேர்ள் பயமில்லாமல் எப்ப்டி போவாள்?


5  பெண்களை கொலை செய்யும் சைக்கோ  ரேப் செய்வதில்லை, அது ஏன்?

6 பெண்களை பாதுகாக்கனும்.100 பெண்களில் 10 பெண்கள் கல்பனா சாவ்லாக்களாக உருவாகலாம் என்ப்துதான் கதையின் நீதி. இதுவோ அல்லது டைட்டிலுக்கான விளக்கமோ எங்கும் இல்லை.

Image result for meera jasmine


நச் டயலாக்ஸ்


1  நிலா  உனக்குப்பிடிக்குமா?

ம்ம்ம்

 நிலா/நட்சத்திரம் எதுவும் இல்லாத இருட்டுதான் எனக்குப்பிடிக்கும் #10 Kalpanakal ( மலையாளம்)


2  ஒரு போலீஸ் ஆஃபீசரோட  பையன் கிரிமினலா இருக்கக்கூடாதுன்னு எதுனா லாஜிக் இருக்கா?சி.பி கமெண்ட் -10 kalpanakal (malaiyalam) - வேட்டையாடு விளையாடு டைப் சைக்கோ க்ரைம் த்ரில்லர்.ஒர்த் டூ வாட்ச் , ரேட்ட்டிங் = 2.75 / 5


Image result for meera jasmine hot

0 comments: