Monday, November 21, 2016

குடைக்கீச்சிலே

கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு தீர்க்கதரிசி.அன்றே சொன்னார்
வா"ரணம்" 1000 (ரூபாய் நோட்டு)

=============

2 FB ல ஒரு பொண்ணு "எனக்கு தலை வலிக்குது.காய்ச்சல் அடிக்குது"ன்னு போட்ட ஸ்டேட்டஸ்க்கு 16,000 பாலோயர்சும் திடீர் டாக்டரா மாறி ட்ரீட்மென்ட்

==============

3 நான் உன் மீது அக்கறை கொண்டுள்ளேன் என்பதை வெளிப்படையாக உணர்த்த மெனக்கெடாத இயல்பான அன்பே உண்மையான அன்பு

==============

4 கேரளா - பன்னீர் திராட்சை(கருப்பு)
@ கோட்டயம் -கிலோ 80ரூ @ எட்டுமானூர்-கிலோ70ரூ @வைக்கம் -கிலோ 60 ரூ @ தொடுபுழா-கி 50ரூ @ முட்டம் -கி 40ரூ


=============

5 துப்பாக்கி ,கத்தி வரிசையில் விஜய் + ஏஆர் முருகதாஸ் = புதுப்படம் சபாஷ்

=============

6 சினிமா பாட்டு வரிகளை வெச்சே டெய்லி 25 FB ஸ்டேட்டஸ் போடும் பெண்கள் 52% அதிகம் ஆகிடுச்சு.நமக்கு இந்த ஐடியா வராம போச்சே?


===============

7 காமராசரா கலைஞரான்னா காமராசர் > கலைஞர் .
அதெப்டி?காமராசர் கிட்டே சொத்தே இல்லை.கலைஞர் கிட்டே இருக்கும் சொத்து போல் யார்ட்டயும் இல்ல

===============

8 நாட்ல எவ்ளோ பிரச்னை நடந்திட்டு இருக்கு?ஒரு நெட்தமிழன் மிஸ்!உங்க டிபி நைசுங்க,நீங்களும் நைசுங்க.வீட்ல சமைக்க பொன்னி ரைசுங்க ங்கறான்

============

9 பைரவா பஞ்ச்-நமீதா வேணா எப்பவும் கும்முனு இருக்கலாம்.ஆனா மக்களுக்கு ஒரு பிரச்னைன்னா நான் கம்முனு இருக்க மாட்டேன்.எதுனா சொல்லி மாட்டிக்குவேன்

===============

10 விஜய் ஏன் திடீர்னு பொங்குனார்னு கண்டுபிடிச்ட்டேன்.நாம ஹீரோவா தோன்றிய அழகிய மகன் (ATM)ரிலீஸ் அப்போ கூட ஹிட் ஆகலை.இப்போ ATMஹிட்

=============

11இணையத்தமிழன்-நான் பொண்ணுங்ககிட்ட அக்கா,தங்கச்சியா தான் பழகுவேன்.ஆனா காதலிக்கறேன்.இது எது மாதிரி?
இதுக்குப்பேரு இன்செஸ்ட் லவ்

==============

12 பயனுள்ள விடயங்களை பகிர்ந்து கொள்ள வாட்சப் குழு இன்ட்ரோ. அரட்டைக்கு அல்ல.. (பெண்கள் மாத்திரம்....)
குழப்பாதீங்க.அரட்டை கேர்ள் பெண் தானே?

============

13 பதஞ்சலி பிராடக்ட்ஸ் எல்லாம் கேரளா ல செம கல்லா கட்டுது.எப்டி மார்க்கெட் பிடிச்சாரோ?

==============

14 ஒதுங்கி ஒதுங்கி சென்றாலும்,தொடர்ந்து வருகிறது என் கொலுசின் ஓசை
அதைக்கழட்டி வெச்ட்டு நடக்காம கவிதை எழுதிட்டு ஏம்மா இப்டி பண்றீங்களேம்மா


=================

15 2 வெவ்வேறு செய்திகள்
1 தமனா கர்ப்பம் 2 பிரபு தேவா தமனா நடித்த தேவி ஹிட்.

===============

16 குடும்ப ஒற்றுமை தரும் கார்த்திகை சொல்றாங்களே நிஜமா?
புருசன் திண்ணைல படுத்துக்குவான்.சம்சாரம் உள்ளே தனியா.எப்டி சண்டை வரும்?

=============

17 சார்.உங்க பட டிக்கெட் ரேட் எத்தனை?
100 ரூபா டிக்கெட்.250 ரூபா ஓஹோ அதாவது 150% அதிகம்.நீங்க 20%,80% பத்தி பேசறீங்க

==============

18 நாம நம்ம வீட்ல நடந்தத சொன்னாக்கூட பலர் இங்கு கேலி கிண்டலில்.என் இப்டி?
ஏம்மா சோன்பப்டி.பக் வீட்ல நடந்ததா சொல்லுங்க

===============

19 500 ரூ நோட்டை விட 2000 நோட்டு சைசில் சின்னதா இருக்கு.அப்போ ரூபாய் மதிப்பு குறைஞ்சிடுச்சு.இதுக்கு மோடிதான் பொறுப்பு னு யாரும் கூவல?


===================

20 என் கேள்விக்கு பதில் இங்கேயேசொல், குடைக்கீச்சிலே வேண்டாம்
மிஸ்.பதில் தானே டிஎம் ல கூடாது.எதுனா கேள்வியாவது கேட்கலாமா?


==================

0 comments: