Monday, November 07, 2016

கெட்ட வார்த்தை எழுதுனா தப்பு ,பேசுனா தப்பில்லையா?

சார்.பேலியோ டயட் நல்லதா?கெட்டதா?


இயற்கைக்கு மாறாக மனிதன் எது செஞ்சாலும் அது அவனுக்கு கெடுதலே!



================

2 கமல்

யுவன் ஷங்கர்ராஜா
ராதிகா
3பேருக்கும் ஒரு ஒற்றுமை.3,பேருமே நல்ல திறமைசாலிகள்


===============

3 சார்.கள்ளக்காதல் ஜோடியில் எந்த வகை மேரேஜ் அதிகம்?


ஒரு இணை தன் மனதுக்குப்பிடிக்காத அரேஞ்ச்டு மேரேஜ் ,இன்னொரு இணை காதலில் கில்லாடியா


==============

4 அன்பே! என் எல்லா கேள்விகளுக்கும் நீ மவுனத்தையே பதிலாகத் தருகிறாயே , அது ஏன்?

ஏன்னா எனக்கு பதில் தெரியாது, தெரிஞ்சா சொல்லி இருப்பேன்ல


====================
5 டாக்டர் , தூக்க மாத்திர போட்டா உடனே தூக்கம் வந்திடுமா?
இல்ல வேற எதுனா வழி இருக்கா?


உடனே வராது, 10 நிமிசம் ஆகும். 8 மணி நேர கடும் உழைப்பு பகலில் இருந்தால் இரவில் உடனே தூக்கம் வரும்


==================

6 சவுந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “ நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்”ல காஜல் ,மஞ்சிமா தான் ஜோடி

ஓஹோ, அப்போ டோட்டலா, 3?


=================


7 உலகத்தில் உள்ள எல்லா சினிமா ஹீரோயின் களையும் கரெக்ட் பண்ணனும்.இது தான் என் லட்சியம்.


அடேங்கப்பா.உலக நாயகன் ஆக ஆசைப்படறே

=================

8
வள்ளுவருக்கு எப்படி பொண்ணுங்களோட பொறாமை குணம் தெரியும்?1311 வது குறள் ல ,
ஏம்மா?வாசுகி யை பக்கத்துலயே வெச்சிருக்காரே தெரியாதா?



=============



9 கூடவே இருந்து யாராவது உங்களுக்கு குழி பறித்தால் அந்தக்குழியில் அவர்களைத்தள்ளிவிட்டுடவும்



===============




10 நீராகவும் நெருப்பாவும் இருப்பேன்னு பொண்டாட்டி சொன்னா அதுக்கு அர்த்தம் சுடுதண்ணீராகவும் ,தீயாகவும் எப்பவும் சொல்லால் சுடுவேன் னு அர்த்தம்



==============



11 பொண்ணுங்க காதல் மன உறுதி மலிவுவாக்கம் கட்டிடம் போல.ஒரு நொடில இடிஞ்சிடும்.ஆண்களின் காதல் மன உறுதி கல்லணை போல் காலத்துக்கும்



==============



12 எதிரி சுதாரிக்கும் முன் நீ அவனை ஜெயித்து விடு.எதிரி சுதா வாக இருந்தால் ஷேக் ஹேண்ட் கொடுத்து விடு.




===========



13 அமெரிக்க அதிபர் தேர்தல் ஹிலாரி கிளிண்டன் 6 புள்ளிகள் முன்னிலை # ஹிலாரியஸ் க்ளிக்




==================



14 14 /11/16 வானில் அரிய நிகழ்வு நிலா மிகப்பெரிதாக தோன்றும் .நிலா வை வெச்சு கவிதை எழுதறவங்க அடிஷனல் ஷீட் உடன் காத்திருக்கவும்



===========


15 பொண்ணுங்க வை கோ மாதிரி.ஆம்பளைங்க கேப்டன் மாதிரி.அவங்க மட்டும் நம்மை யூஸ் பண்ணிக்குவாங்க.நமக்கு எந்த யூசும் இருக்காது

===============

16 கல்யாணம் ஆகாத ஒரு கன்னிப்பெண் ட்வீட்டர் கிட்டே " வா.டைவர்ஸ் பண்ணி விளையாடலாம்"னு ஒரு மேரீடுமேன் கூப்டறாரு.ஷப்பா

==============

17 ஏப்ரல் மாசம் வந்தா அப்ரைசல்
தீபாவளி மாசம் வந்தா ஆப்பு ரைசல்

================

18  நம்ம ட்வீட்டுக்கு எதிர் ட்வீட்டா போட்டுட்டு இருக்கானேன்னு யாரும் கோவிச்சுக்காதீங்க, உங்க அளவுக்கு என்னால சொந்தமா யோசிக்க முடியல.அதான் எதிர்க்கீச்சு , உல்டா ரீமிக்ஸ் ட்வீட்னு


===================

19 பிரகடனபடுத்தாத அன்பு என்பது வானிலை முன் அறிவுப்பு இல்லாமல் வரும் திடீர் மழை போல

===============

20 கெட்ட வார்த்தை எழுதுனா தப்பு ,பேசுனா தப்பில்லையா?

கெட்டதை எழுதுவது ,பேசுவது ,நினைப்பது எல்லாம் தப்பு.தப்பில்லைனு நினைப்பதும் தப்பு

=================

0 comments: