Sunday, November 20, 2016

திவ்யா ஸ்பந்தனாவின் வீடியோ

1 பிரதமரின் அறிவிப்பு எதிர்விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது- கருணாநிதி # அய்யாவுக்கு நாம தப்பிப்பமா?ன்னு எப்பவும் ஒரு ஐயம்

==============

2 நாட்டில் ஏழை மக்கள் தற்போது நிம்மதியுடன் உறங்குகின்றனர் - பிரதமர்#பகல் பூரா பேங்க் வாசல்ல க்யூ வில் நின்னா நைட் டயர்ட் ஆகாதா?

===============

3 ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப பேசி வருகிறார்" - மோடி குறித்து குஷ்பூ விமர்சனம் # திமுக ,காங்கிரஸ் னு மாத்தி மாத்தி நீங்க பேசலையா?

=================


4 தளபதி ரீமேக்கில் தனுஷ் ,துல்கர் ,கவுதம் கார்த்திக் -செய்தி # அப்போ இனிமே இளைய தளபதி தனுஷ் னு சொல்லிடுவாங்களே?குழப்பம் வராதா?

===============

5 டிசம்பர் 30 வரை ATM ல் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் கிடையாது - ரிசர்வ் வங்கி
# ஆனா 75%ஏடிஎம் செயல்படாது 25% ஏடிஎம் நீண்ட க்யூ.


=================

6 தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யாது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு # அப்பாடா.ஏடிஎம் க்கு க்யூ ல நிக்க குடை தேவை இல்லை


================

7 மக்கள் இனியாவது நேர்மையாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் - அருண் ஜேட்லி # நேர்மையைப்பத்தி
அரசியல்வாதிக பாடம் நடத்தும் அளவு நாடு முன்னேறிடுச்

==================

8 ஒருவரே பணம் எடுப்பதை தவிர்க்க விரலில் மை வைக்கப்படும். மத்திய நிதித்துறை செயலர் அறிவிப்பு # ஊர் பூரா புள்ளி ராஜாக்களா அலைவாங்களே?

===================

9 புதிய ரூபாய் நோட்டில் சாயம் போனால்தான் ஒரிஜனல்... சக்திகாந்த தாஸ் # 2 டைம் அலசி சாயம் போய்ட்டா டூப்ளிகேட் ஆகிடாதா?


===================

10 ரூ.15 லட்சத்தை எப்போது டெபாசிட் செய்வீர்கள்? லாலு கேள்வி#கால்நடைத்தீவன ஊழல்ல சம்பாதிச்சதை நீங்க ஒப்படைச்சபின்


=================

11 மைசூரில் இருந்து மை வந்த பின்பே விரலில் மை வைப்போம்- வங்கி அதிகாரிகள் தகவல் மைசூர்ல இருந்துதான் வந்ததுனு எப்டி கண்டுபிடிப்பீங்க?


================

12 மக்களின் விரலில் மை வைத்து அவமானப்படுத்துவதா?- ஸ்டாலின் # தலைவரே! சிலர் மக்கள் நெத்தில நாமமே போடறாங்க.நமோ விரல்லதானே மை வெச்சார்

==============

13 நாட்டுக்காக வரிசையில் நிற்கலாம்’ :- சேவாக் # நோட்டுக்காக நின்னாலும் நாட்டுக்காக ன்னு சமூகம் நினைச்சிக்கும்


=================

14 வங்கியில் வரிசையில் நிற்பவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் மு.க.ஸ்டாலின்!
நைசா இடைத்தேர்தல் வாக்கும் சேகரிச்சிருப்பாரே?


================

15 சாயம் போகும் 2000 ரூபாய் - திவ்யா ஸ்பந்தனாவின் வீடியோ ஆதாரம் # கடைசி 4 வார்த்தையை மட்டும் படிச்ட்டு ஆர்வமா வீடியோ ஓப்பன் பண்ணி இருப்பாங்களே


==================

16 அவ்வளவு கஷ்டமாக இருந்தால் ஏழைகளுக்கு நீங்கள் உதவுங்கள்! - விஜய்க்கு BJPஅட்வைஸ் # கருத்து சொன்னா கம்முனு இருக்கனும்.அதுக்கு ஒரு கருத்தா?

===================

17 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குத் தடை விதிக்க முடியாது -கோர்ட்
# சபாஷ்.நெத்தியடி தீர்ப்பு

==============

18 இந்தியாவில் அறிவிக்கப்படாத பொருளாதார நெருக்கடி நிலை..!' ஸ்டாலின் காட்டம் # அறிவிச்ட்டு பண்ணினா அதுக்குப்பேரு அதிரடி இல்லீங்க்ணா

================

19 அமவுன்ட் வேணுமா... அக்கவுன்ட் ஓப்பன் பண்ணுங்க...! அஞ்சலகங்களின் அடாவடி # அஞ்சலியே அஞ்சலகம் வந்தாலும் அப்டித்தானாம்


=================

20 இறந்து போன காதலி நினைவாக பாம்பைத் திருமணம் செய்து கொண்ட இளைஞர் # காதலி பேரு சினேகாவா ?ஸ்னேக் மேரேஜ்


==================

0 comments: