Thursday, November 03, 2016

கவுதமி வெளியிட்டதாவது உண்மையா?அதுவும் பொய்யா?

சிறு வாணி
ஆற்றின் குறுக்கே
அணைக் கட்ட
மத்திய அரசு
தடை வித்தது
# அப்பப்ப நல்லதும் பண்ணுது இந்த அரசு


=================


2 }2015 - தமிழகத்தில், 640 போலி டாக்டர்கள் இருப்பதை கண்டுபிடித்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.-விஜயபாஸ்கர்:# அடேங்கப்பா 640-420 களா?


================


3   உ.பி.,யில், அகிலேஷ்  மோசமான ஆட்சி நடத்துகிறார். என் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைத் தான், செயல்படுத்தி வருகிறார்- மாயாவதி: # அப்போ உங்க திட்டம் எல்லாம் மோசமானதா?.

===============


===================


5  தேர்தலில், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, பா.ஜ., மட்டுமே இருக்கும்.தமிழிசை # தேர்தலிலா? கலவரம் பண்றதுலயா?ஆள் பிடிப்பதிலா?-

=====================


6   தொழில் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும், ஒரு மாநிலத்தின் இரு கண்கள் போன்றவை-ஸ்டாலின்  # ஆமா, சன் டி வி யும் , கலைஞர் டி வியும் போல

=====================


7   மக்கள் நலக் கூட்டணி, தமிழகத்தில் ஒரு அணுகுமுறையிலும், புதுச்சேரியில் வேறு அணுகுமுறையிலும் செயல்படுகிறது-வைகோ # மொத்தத்தில் பச்சோந்தித்தனமா

=====================

8   9 ஆயிரம் பாம்புகளைப் பிடித்து பிரபலமானவர்...பாம்பு கடியால் மரணம் கூட சினேகமா இருக்கலாம்.ஸ்னேக் கூட சினேகமா இருக்க முடியுமா?


===================


9 காட்பாடி அருகே சிக்னலுக்காக ரயில் நின்றபோது கும்பல் கொள்ளையடித்ததாக புகார் # சிக்னல் கொள்ளையருக்கு போட்டுட்டாங்க போல

==============

10 முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை சர்ச்சை: ஆறுதல் கூறச் சென்ற ராகுல்காந்தி கைது வெச்சே அவர் செல்வாக்கை உயர்த்திக்குவார்.தேவை தானா

============

11 திருமண சாட்சியாக கரடியை அழைத்த தம்பதி.. ருசிகர சம்பவம் # சும்மா கரடி.விடாதீங்கன்னு ரெஜிஸ்டர் ஆபீசர் சொல்லலையா?

=============

12 3 விநாடிகளில் தகர்க்கப்பட்ட மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டடம். # (கல்யாணம் ) கட்றது எப்பவும் கஷ்டம் ,கழட்டி விடறது இடிக்கறது ஈஸி

===================

13 11 மாடிக் கட்டடம் சரியான முறையில் தகர்க்கப்பட்டது: ஆட்சியர் கஜலட்சுமி # சரியான முறையில் கட்டப்பட்டதா?னு அப்பவே செக் பண்ணி இருக்கலாமில்ல?


===============

14 தி.மு.க. MLA 92 ஆக உயரும்: மு.க.ஸ்டாலின் # இடைத்தேர்தல்ல 3,சீட்லயும் ஜெயிப்போம்னு பூடகமா சொல்லிட்டாராம்


================

15 குஷ்புவை வளைத்துப் போட பேச்சுவார்த்தையை தொடங்கிய பாஜக # அப்போ தமிழிசைக்கு ஆப்பு?


==================


16 மோடியை விமர்சிப்பதை சிவசேனா கட்சி நிறுத்திக் கொள்ள வேண்டும் - மஹாராஷ்டிர முதல்வர் # அவர் என்ன புதுசா ரிலீஸ் ஆன சினிமாப்படமா?


====================


17 படப்பிடிப்பில் கேரவன் வைப்பதுவசதிக்காகவா, அந்தஸ்துக்காகவா? - நாசர் # அப்பப்ப ஹீரோ-ஹீரோயின் இருவரும் இளைப்பாற


=================


18 மவுலிவாக்கம் கட்டிடம் இடிப்பு: திமுகவிற்கு கிடைத்த வெற்றி- முக ஸ்டாலின் # அப்போ திமுக எதிர்க்கட்சியா இருந்தாதான் மக்களுக்கு நல்லது நடக்கும்?


[[[[[[[[[[[[[[[[


19 சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பவேண்டாம்’’ -வேக் # சினிமா விமர்சனம் பண்ண வேணாம்னு நாசூக்கா சொல்றாரு


==============

20 கவுதமி விவகாரம்: ‘‘என் பெயரில் அறிக்கை விட்டு விளையாடுவது அநாகரிக செயல்’’ -கமல் # அப்போ கவுதமி வெளியிட்டதாவது உண்மையா?அதுவும் பொய்யா?


======================

0 comments: