Friday, November 11, 2016

அச்சம் என்பது மடமையடா - சினிமா விமர்சனம்

Image result for acham enbathu madamaiyada poster

விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி ஒரு ரொமாண்டிக் ஃபிலிம் 12 வருசத்துக்கு ஒரு டைம் தான் வரும், இருந்தாலும் அதே பட டீம் ஓரளவு அதே தரத்தில் அதே போல் ஒரு ரொமாண்டிக் ஃபிலிம் தந்திருப்பாங்கன்னு போனா....


ஹீரோ வழக்கம் போல் ஒரு வெட்டாஃபீஸ். அவருக்கு தங்கை உண்டு, தங்கைக்கு ஒரு தோழி உண்டு. அவங்க வீட்லயே தங்குது. சொல்லவா வேணும்.ஹீரோக்கு கண்டதும் காதல்.

 ஜாலியா ஒரு ரோடு சைடு ட்ரிப் பைக்ல போகும்போது ஹீரோ கிட்டே  ஹீரோயின் நானும் வரவா?ன்னு கேட்கறார்.இப்டி ஒரு பொண்ணு கேட்டா எந்த மாங்கா மடையனாவது நோ சொல்வானா? எஸ் டபுள் எஸ்

 போகும்போது ஒரு திட்டமிட்ட விபத்து. அது யாரால் ஏன் நடத்தப்படுது? பின் பாதியில் ஆக்‌ஷன் பொறி பறக்க சொல்லி இருக்காங்க


ஹீரோவா இந்தப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான், முன் பாதியில்   4 பிரமாதமான பாடல்கள் , மற்றும் பின்னணி இசையில் மனம் கவருகிறார். ஒளிப்பதிவு பக்கா.


சிம்பு கொஞ்சம் குண்டடிச்சு  முகம் எல்லாம் உப்பிப்போய் இருக்கார். இந்தப்படம் 3 வருசமா எடுக்கப்பட்டதால் ஆங்காங்கே கண்ட்டினியூட்டி மிஸ் ஆவது பின்னடைவு. சிம்பு மிக ஜெண்ட்டிலாக நடித்த படங்கள் விண்ணைத்தாண்டி வருவாயா? ,போடா போடி , கோவில், வாலு, தொட்டி ஜெயா. இந்தப்படங்களில் தான் அவர் விரல் சேட்டைகள் இருக்காது , பெண்கள் மனம் கவரும்படி நடிச்சிருப்பார். அந்த லிஸ்ட்டில் அ எ ம வும் சேரும். முன் பாதி முழுக்க முழுக்க ரொமாண்டிக் காட்சிகள் மனசை அள்ளுது
பின் பாதியில் ஆக்சன் அதகளம்
Image result for acham enbathu madamaiyada poster

ஹீரோயினாக மஞ்சிமா. புருவம் ரொம்ப மெல்லிசாக இருப்பது ஒரு மைனஸ் ( டேய், உன்னை யார் புருவத்தை எல்லாம் பார்க்கச்சொன்னது?) அவரது டிரஸ்சிங் சென்ஸ் குட் . அவர் ஃபுல் கவர் க்ளோஸ் நெக் ஜாக்கெட் போட்டு வரும்போது 2000 ரூபா புது பிங்க் நோட்டைப்பார்ப்பது போல் ஃபிரெஷ் ஆக இருக்கு, அழகிய கூந்தலை கலரிங்க் செய்து இருப்பது தேவை அற்றது ( உனக்கு தேவை இல்லைன்னா அவங்களுக்கு தேவைப்பட்டிருக்கும் இல்ல?)


 ஆனால் இருவருக்கும் இடையே பாடி கெமிஸ்ட்ரி  பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை. அங்கங்கே கொஞ்சம் செயற்கை இழை தட்டுது.சிம்பு த்ரிஷா ஜோடியின் காதல் காட்சிகள் அப்படியே கண் முன் நிற்பதும்  இப்படத்துக்கு ஒரு மைனசே. ஒவ்வொரு சீனிலும்  ஒப்புமைப்படுத்தி பார்க்கச்சொல்லுது


வில்லனாக வரும் மொட்டைத்தலை போலீஸ் தெலுங்கு டப்பிங் வில்லன் போல் எடுபடலை. டேனியல் பாலாஜிக்கு உரிய போர்ஷன் கிடைக்கலை

முதலில் யார் சொல்வது  செம மெலோடி, அவளும் நானும்  பாட்டு கனகச்சிதம். இது நாள் அவரை  பாட்டும் குட்


இயக்கம் முன் பாதியில் அருமை . பின் பாதியில் திடீர் என ஃபுல் அண்ட் ஃபுல் ஆக்சன் பேக்கேஜிற்கு படம் போகும்போது ரொமாண்டிக் ஃபிலிமை எதிர்பார்த்து வந்த ஆடியன்ஸ் அதுக்குள் ஆக்சனுக்குள் தங்களைப்பொருத்திக்கொள்ள சிரமப்படுகிறார்கள்

 ஏ செண்ட்டரில் வழக்கம் போல் கவுதம் மேனன் தன் கொடியைப்பறக்க விட்டிருக்கார் 
Image result for acham enbathu madamaiyada poster

 சபாஷ்  டைரக்டர்


1   ஹீரோ பேரை கடைசி வரை யாரும் சொல்லாமல் இருப்பது பின் க்ளைமாக்சில் மட்டும்  சொல்வது


2   சாகும் முன் ஐ லவ் யூ சொல்லிடனும் என ஹீரோ ஹீரோயின் இருவரும் இரு வேறு தருணங்களில் சொல்லும் வசனம் கலக்கல்


3   பாடல் காட்சிகள்,படமாக்கப்பட்ட விதம் , பிஜிஎம் , ஒளிப்பதிவு

Image result for manjima mohan in acham enbathu madamaiyada
 லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1 ஒரு போலீஸ் ஆஃபீசர் வில்லன் எதிரே  ஹீரோ தன்  இரு கைகளிலும் துப்பாக்கி வைத்திருக்க எதுவும் தடலாடியாக செய்யாமல் “ டேய் கன்  -னை கீழே போடு என அதட்டுவதோடு  முடிச்சிடறது ஏனோ?


2  ஹீரோ கன் -னால் சுடும்போது அந்த ஷூட் ரிஃப்ளெக்சன் சரியா காட்சிப்படுத்தலை


3  ஹீரோ ஹீரோயின் லாட்ஜில் ஒரே ரூமில் தங்கும் காட்சி சன் டி வியில் பழைய தொடரான சத்யா வை நினைவுபடுத்துது


4  பைக்கில் லாங்க் ட்ரைவ் போகும் ஹீரோ பைக்கை மெக்கானிக் ஷாப்பில் விட்டு சர்வீஸ் பண்ணாமல் ,பிரேக் கூட செக் பண்ணாமல் எடுத்துப்போவாரா?


5  ஹீரோயின் அதிகாலையில் பஸ் ஸ்டாப் போகும்போது ஹீரோ வீட்டில் இருக்கும் தங்கையோ வேறு யாரோவோ துணைக்கு வர மாட்டாங்களா?

Image result for manjima mohan in acham enbathu madamaiyada

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

ATM போறவங்க எல்லாம் கறுப்புப்பணம் வெச்சிருக்கும் ஆளுங்கன்னு சொல்ல முடியாது.
AYM போறவங்க எல்லாம் சிம்பு ரசிகர்கள் னு சொல்ல முடியாது

2 கொஞ்சம் கொஞ்சமா மணிரத்னமா மாறிட்டு வரும் கவுதம் வாசுதெவ் மேனன்

சிம்புவின் பாடிலேங்க்வேஜில் அபாரமான நிதானம் இயக்குநர் கை வண்ணம்

பாடலில் இடையிடையே சிறப்புச்சத்தம் சேர்ப்பதில் ரஹ்மான் விற்பன்னர்

ரஹ்மானின் ஹம்மிங் பேட்டர்ன் நீரூற்று போல் மனதை ஆக்ரமிக்கும்

ஹீரோயின் இன்ட்ரோக்கு கை தட்டாதவன் கூட மஞ்சிமா ஆலப்புழா கேரளான்னதும் தட்றான்.ஊர் பாசம்

ஹீரோ .ஹீரோயின் 2 பேரும் பல்லைக்கடிச்சபடி ஒரு டைப்பா பேசறாங்க.பேஷன்?

சன் டிவி ல ராத்திரி 10 க்கு வந்த சத்யா தொடர் +கே பாலச்சந்தர் டூயட் நாயகி = அ எ ம

டூயட் சீன் ,விபத்து சீன் இரண்டையும் சிங்க் செய்த விதம் குட் டைரக்சன்


10 சோக சீன்ல மஞ்சிமா கண் ல 2 டப்பா ஐ டெக்ஸ் மை ,பேதமை மடமை

11 அ எ ம இடைவேளை வரை காதல் காட்சிகள் ஓக்கே.இனி ஆக்சன் தான். டவுட் தான்

12
மகாராஷ்ட்ரா வில் கதை நடப்பதால் அப்பப்ப திரையில் ஓடும் தமிழ் வசனங்கள் ஒரு இங்க்லீஷ் மீடிய பொண்ணு போல.ஏகப்பட்ட எழுத்துப்பிழை

13 காதல் காட்சிகளில் பிஜிஎம் மில் இளையராஜா லெவலுக்கு கலக்கும் ரஹ்மான் ஆக்சன் சேசிங் காட்சிகளில் பின் தங்குகிறார்

14 சிம்பு வின் கேரியரில் இது ஒரு வெற்றிப்படம்.ஆகவும் கவுதம் வாசுதேவ் மேனன் கேரியரில் இது மீடியமான படம் ஆகவும் அமையும் என கணிக்கிறேன்Image result for manjima mohan in acham enbathu madamaiyada
நச் டயலாக்ஸ்

1 LIFE ல எது நடந்தாலும் அதுக்கு நாம ரெடியா இருக்கனும்

காதல் இல்லைன்னா நம்ம வாழ்க்கையே வேற விதமா நல்ல விதமா மாறி இருக்கும் இல்ல ?

பொண்ணுங்கன்னாலே பிரச்னை தான்


முதல் காதல் தான் எல்லாருக்கும் புதுக்காதலில் ஒரு முதலீடு

வாழ்க்கைல எதுவேணா எப்போ வேணா நடக்கலாம்.நீ என் வாழ்க்கைல வந்ததும் அதில் சேர்த்தி

ஹாய்.எங்கே ?பார்க்கவே முடியல?

எப்பவுமேவா வெட்டியா இருப்பேன் ?

பைக் ட்ராவல் ஐ லைக்.வின்டோ ஆன் FACE.

ஹீரோயின் டூ ஹீரோ =நீ கொஞ்சம் நல்லவன்னு தோணுது ( இந்த வசனம் இப்டி வைங்கனு ஹீரோவே முன் மொழிந்திருப்பார்)

9 பசங்களோட பேசனும் பசங்களோட பழகனும்.பையனாவே ஆகிடனும்.அதுக்காகத்தான் உன் கூட வந்தேன்

10 நாம 2 பேரும் தப்பா எதும் செய்யாம அவங்க நம்மை தப்பா நினைச்சா தப்பாகிடுமில்ல .கவுதம் விசு தேவ் மேனன்

11 இதை உன் கிட்டே சொல்லாமயே செத்திடுவோனோன்னு பயமா இருந்தது.நல்ல வேளை.சொல்லிட்டேன்.ஐ லவ் யூ


12 
போலீஸ் டிபார்ட்மென்ட்ல ஒருத்தன் கூடவா நல்லவனா இருக்க மாட்டான் ?

13 அரங்கம்.அதிரும் கை தட்டல்

எனக்கு இந்தGUN வேணாம்டா
ஏன்?
ஏன்னா என் கிட்டேயே ஒரு GUN இருக்கு
பொறி பறக்கும் ஆக்சன்

14 என்ன.வேணா நடக்கலாம்.என்ன ஆனாலும் பாத்துக்கலாம்னு ஒரு எண்ணம் மனசுல ஓடுது


15 திடீர்னு ஒரு விஷயம் தோணுச்சு. பயம் நம்மைத்துரத்தக்கூடாது.நாம தான் பயத்தைத்துரத்தனும்


16 நீ எங்கே போகனும்னு சொல்லு.உன்னை ட்ராப் பண்ணிடறேன்

எங்கேயும் போகல.உன் கூடத்தான் வரனும்

17 வாழ்க்கைல நாம திட்டம் போடுவது போல் எதுவும் நடக்காது.அதை விட பயங்கரமா நடக்கும்

18 
ஸோ ஜெயிச்சுட்டோம் ( சென்ட்டிமென்ட் டயலாக்)

19 அவங்க எல்லாம் மூளைல இருந்து யோசிக்கறவங்க, நான் இதயத்தில் இருந்து யோசிப்பவன் #AYMImage result for manjima mohan in acham enbathu madamaiyada

சி.பி கமெண்ட் -அச்சம் என்பது மடமையடா = விண்ணைத்தாண்டி வருவாயா க்கு 2 படி கீழே.வாலு க்கு ஒரு படி மேலே.விகடன் =42 .ரேட்டிங் =2.75 / 5

0 comments: