Friday, November 04, 2016

அஞ்சலி ஒரு கருத்துக்களஞ்சியம்?

வீட்டில் தனியாக வசிக்கும் நபர்கள் குறித்து தகவல் திரட்ட போலீசாருக்கு காவல் ஆணையர் உத்தரவு # திருட்டை தடுக்கவா?மாமூல் வாங்கவா?

==============

2 பூணூலே இந்துக்களின் அடையாளம்- அ.சம்பத்
# எந்த நூல்லயும் அப்டி ஒரு குறிப்பு இல்லியே.சும்மா கயிறுதிரிக்கப்படாது

=============

3 ஜெ கைரேகையிட்ட கடிதத்தை ஏற்க கூடாது:கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு..# சபாஷ்.கை ரேகை இட்ட வீடியோ இருந்தா தான் செல்லுபடி ஆகும்


===============

4 டிரம்ப் அதிபர் ஆனால் உலகத்துக்கே ஆபத்து: ஒபாமா # இவருக்கு ஆபத்துன்னா உலகத்துக்கே ஆபத்துன்னு நினைப்பார்போல


==================

5 முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்தது தவறு: வைகோ.# ஜெயிச்சா கொண்டாடுவதும் தோத்தா தூற்றுவதும் அரசியல் வியாபாரிகள் பழக்கம்


===========

6 எத்தனை கூட்டணி அமைத்தாலும் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது: நாராயணசாமி.# பலவீனமா இருப்பவன்தான் கூட்டணிக்கு அலைவான். ஜெ சோலோ வின்


===========


7 டாடா நிறுவன வரலாற்றில் அதிக ஊழல் கறைபடிந்தவர் ரத்தன் டாடா தான்: சுப்ரமணியன் சுவாமி # பெரிய ஊழல் ஜித்தன் போல இந்த ரத்தன்


=================

8 பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கேரளா போலீஸ் தகாத கேள்விகள்...#,சட்டப்படி பெண் போலீஸ் தனி அறையில் தான் விசாரிக்கனும்


==============

9
3 தொகுதி தேர்தலில் தேமுதிக-விற்கு ஆதரவு கிடையாது - வைகோ
# இவரு பெரிய நயன் தாரா.அப்டியே ஆதரவு தந்துட்டாலும்

==============
10  கோதுமை 2 ரூபாய், அரிசி 3 ரூபாய் : மோடி அரசின் புதிய திட்டம் # திடீர்னு எம்ஜிஆர் பார்முலா ,காமராஜர் ரூட் மாறிட்டாரே?


============

11 திமுக ஆட்சியில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது -ஸ்டாலின் # சன் டி வி டாப் 10 ல தானே?

=============

12 திருமணம் செய்ய இன்னும் வயது வரவில்லை - நடிகை அஞ்சலி
# நல்ல வேளை.இன்னும் வயசுக்கே வர்லைன்னு கருத்துக் "களஞ்சியம்" ஆக பேசலை

===========

13 தமிழக அரசியலில் ஸ்டாலினுக்கு வாய்ப்பு வருவது கடினம் -‍ தமிழிசை மட்டும் வாய்ப்பு இருக்கா? நாமே லாஸ்ட் பெஞ்ச்


================

14 தமிழ்நாடு, கேரளா உள்பட அனைத்து மாநிலங்களிலும் உணவு பாதுகாப்பு சட்டம் அமல் - ராம்விலாஸ் பஸ்வான்.# இத்தனை நாளா அமல்படுத்தலையா?சுத்தம்


==============

15 ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக பெண்-அரசு திட்டம்!: # ஏற்கனவே ஆணுக்கு மரியாதை இல்ல.இனி ஒரு பொண்டாட்டியும் மதிக்காது


===============

16 இன்னும், ஆறு மாதங்கள் மட்டும் காத்திருங்கள். தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி மலர உள்ளது.-துரைமுருகன்: # ஆறு வருசம் வேணாலும் காத்திருக்கோம், நடக்குதான்னு பார்ப்போம்

===================


17  ஆள்கிறவர்கள், ஆண்டவர்கள் நம்மை காக்கப் போவதில்லை; இனி, ஆண்டவன் தான் நம்மை காப்பாற்ற வேண்டும்-தமிழிசை  # மோடியைச்சொல்றீங்களா? லேடியை சொல்றீங்களா?

================


18   தொழில் வளர்ச்சி குறித்த தரவரிசை பட்டியலை, மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அதில் தமிழகத்திற்கு, 18வது இடம்.-ஸ்டாலின் # 1+8 =9 கூட்டுத்தொகை ராசி தானே?

=====================

19   'தமிழகத்தின் சம்மதத்துடன், சிறுவாணி ஆற்றில் அணை கட்டுவோம்,-, கேரள முதல்வர், # எதிர்ப்புக்குரல் குடுக்கனும், இல்லைன்னா மவுனம் சம்மதம் ஃபார்முலாவை ஃபாலோ பண்ணிடுவாக

====================

20   பா.ம.க.,வுக்கு 'மாம்பழம்' கிடைப்பதில் சிக்கல் # அடடா,அப்போ அந்த 4% ஓட்டும் போச்சா? 

======================

0 comments: