Wednesday, November 02, 2016

காஷ் ஒன்ஸ்மோரா?

ஓசி லட்டு பக் வீட் ல தந்தா அதிகபட்சம் 5 தருவாங்க.10 எப்டி தருவாங்க?சுட்டதே 15 தானாம்.என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா

=============

2 அன்பும் ,வாழ்த்தும் தானா தேடி வந்து கிடைக்கனும்.வேண்டி விரும்பிக்கேட்டபின் கிடைப்பது சொர்க்கத்தில்.சேராது


===============

3 கையெழுத்து போடத்தெரிந்த ஒருவரது கை ரேகை அவர் உணர்வில்லாத போது விரலைஎடுத்து ஒத்தி எடுத்திருக்கலாம் என்பதால் அது சட்டப்படி செல்லாது

==============

4 நேற்று
இன்று
நாளை
என ஒருவர் அன்பு மாறிக்கொண்டே இருந்தால் அது நிலை இல்லாத அன்பு என கொள்க


==================

5 வசதி இருக்கறவங்கதான் சொந்த டிபி வைக்கனும்னா ஊர்ல ஒரு பய சொந்த டிபி வைக்க முடியாது.கட்ஸ் /கெத்து இருந்தா யார் வேணா வைக்கலாம்


==================

6 சொந்த கிராமத்திற்கு பண்டிகை நாளில் செல்வதும் ஊர் மக்களை அக்கம் பக்கத்தினரை நலம்.விசாரிப்பதும் தமிழர்களின் தொன்றுதொட்டு வரும் பழக்கம்


=============

7 ஜெ கை ரேகை வெச்சது சட்டப்படி செல்லாதுன்னு காலைல நான் சொன்னப்போ கிண்டல் பண்ணாங்க.இப்போ சன் டி வி நியூஸ் ல சொல்லிட்டாங்க

============

8 மருதாணி யில் சிவந்த உன் விரல்கள் தான் "கை வண்ணம்"


=============

9 1 அழகான மனைவி ,
2 அன்பான துணைவி என 2
அமைந்தாலே பேரின்பமே! ன்னு பாட்டை ,பாட்டோட அர்த்தத்தை மாத்தி இன்னும் யாரும் பாடலையா

================

10 1998 தீபாவளி மலர் விகடன் ஜோக்ஸ் ,2001 கல்கி மலர் ஜோக்சை எல்லாம் மதுரை முத்து சன் டிவி ல பிரமாதமா ஒப்பிச்ட்டு இருக்காரு.நல்ல மெம்மரி


=============

11 ராத்திரி 10 45 க்கு " நான் மசினகுடில இருக்கேன்"னு FB ல 1 பொண்ணு போட்ட ஸ்டேட்டஸ்க்கு ஒரு நெட் தமிழன் " போட்டோ அப்டேட்.அழகிய இடம்"கறான், அவ்ளோ இருட்ல எப்டி ஃபோட்டோ எடுக்க?

==================


12 ஒவ்வொரு வேளை உணவிலும் பூண்டு சேர்ப்போம் என உறுதி பூண்டு இருந்தால் ஆரோக்ய உணவு ஆகும்


================

13 மெல்லிசை என்ற கவி நயம் ததும்பும் தலைப்பை புரியாத புதிர் என பழைய தலைப்பாக மாற்றியது ஏன் என்பது புரியாத புதிர்

==============

14 லிங்கு சாமி டைரக்ட் பண்ணின ஆனந்தம் படம் எங்க ஊரு டென்ட் கொட்டாய்ல ரிலீஸ் ஆனப்ப பக் வீட் பிகர்ட்ட பாடினது
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி


================


15 என்னது?காஷ்மோரா படத்தை இன்னொரு தடவை பார்க்கப்போறீங்களா?என்பதன் சுருக் அதிர்ச்சி சொல் =காஷ் ஒன்ஸ்மோரா?

=============

16 காஷ்மோரா = ஓம் சாந்தி ஓம் + அருந்ததி
கொடி = புதுக்கதை
அப்போ எது பெஸ்ட்?

==============

17 கொடி படம் நல்லாருக்குன்னு சொன்னா ஏன் தனுஷ் க்கு கொடி பிடிக்கறீங்க?னு கேட்கும் சமூகம் இது

==============

18 நான் நிக்கறேன்.ஒரு ஆளு எதிர் சீட்ல கால் வெச்சு SIT
சார்.FB ல இதைப்போட்ட நேரம் அந்தாள் கால்லயே போட்டிருக்கலாமில்ல?

================

19 ஒத்தை வெடி ,
அத்தை மக இடை
ரெண்டையும் கிள்ளி வைக்கனும்


===============

20 ஸ்கூல்ல படிக்கும்போது லாஸ்ட் ரேங்க் வாங்கறவன் கூட FB ல பொண்ணுங்க போஸ்ட் க்கு பாய்ஞ்சு போய் "மீ பர்ஸ்ட் " னு கமெண்ட் போடறான்

================

0 comments: