Monday, November 14, 2016

மரண அடி கிடைச்ச பின்பும் மாறலைன்னா எப்படி மறத்தமிழா

ரூபாய் நோட்டு தடை விவகாரம்- ட்விட்டரில் ஒரே நாளில் 3 லட்சம் பாலோயர்களை இழந்த மோடி
# அந்த அன் பாலோயர்களுக்கு எத்தனை லட்சம் ரூ இழப்போ?

=============

2 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள் முன்னாள் சுப்ரீம்கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ # மீதி.10%,ஜட்ஜ்ங்களா?

============

3 மோடியின் அறிவிப்பால் ஹவாலா தொழில் அடியோடு முடங்கியது ரூ.500 கோடி மதிப்புள்ள நோட்டுகளை எரித்த ஹவாலா வர்த்தகர் # மகிழ்ச்சி

==============
4 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு ரகசியம் வெளியாவதை தடுத்த மோடியின் வியூகம் # சிம்ப்பிள்.மனைவி கிட்டே சொல்லாம இருந்தாலே போதும்

==============

5 இனி கருப்புபணத்தை மோடி சேட்டிலைட்மூலம் பார்ப்பார்-SVசேகர் # கடைசி வரை நடுத்தர மக்கள் படும் கஷ்டத்தைப்பார்க்கவே மாட்டார் போல


==============

6 தி.மு.க=திருடி முன்னேறிய கட்சி; அ.தி.மு.க.=அதிகமாக திருடி முன்னேறிய கட்சி- தமிழிசை # பாஜக= பாதாளத்தில் ஜனங்களை தள்ளும் கட்சி?


============7 தமிழகத்திற்கு அவமானம் தேடி தந்தது, தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் தான்.-அன்புமணி # அவங்க மூலமா பா ம க வுக்கு கிடைச்ச வெகுமானம் , வருமானம்?===============
8 ஜெ.க்கு நோய் தொற்று முற்றிலும் குணமாகிவிட்டது.. மனம், உடல் ரீதியாக ஆல்-ரைட்: அப்பல்லோ தலைவர் # கண்ட்டெய்னர் ஒர்க் இருக்கில்ல?


==============

9 86 %பழைய கரென்சி மாற்றப்பட்டுள்ளது: அருண் ஜேட்லி# 100% ஆனதும் பிம்ப்பிளிக்கி பிளாப்பி செல்லாதுன்னு சொன்னதெல்லாம் கலாய்ப்பே -ம்பாரோ?


=================

10 ஏ.டி.எம்.கள் சீராக இன்னும் 3 வாரமாகும்.. அருண் ஜெட்லி # 86% ஒர்க் க்கு ஒரு வாரம் டைம் னா 14% ஒர்க் க்கு 3வாரமா?என்ன லாஜிக்?

===============

11 வரி கட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு "வரி"ங் மணி


=============

12 3 நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் மோடி # மக்களோட இயல்பு வாழ்க்கை எப்போ திரும்புமோ?

==============

13 பணம் கிடைக்காததால் ஆத்திரம்.. ஸ்டேட் பாங்கை அடித்து நொறுக்கிய பொதுமக்கள் நாள்லயே SBI காரன் ஒழுங்கா வேலை செய்யமாட்டான்.இப்போ.,


==============

14 மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? விஜயகாந்த் விளக்கம் #

மரண அடி கிடைச்ச பின்பும்
மாறலைன்னா எப்படி
மறத்தமிழா


==================

15 இத்தோடு நிற்காது கருப்பு பண ஒழிப்பு.. தேவைப்பட்டால் இன்னும் இருக்கு அதிரடி: மோடி சூளுரை # ரொம்ப வலிக்குது.கொஞ்சம் கேப் விட்டு அடிங்க எஜமான்

===================


16 மோடியால் பூஜைக்கு ஸ்வீட் வாங்க காசு இல்லாமல் கடன் வாங்கினேன்: மமதா பானர்ஜி # நல்ல காமெடி சென்ஸ்.ஆனா சிரிப்பு வர்லை

=================

17 மோடியின் மாஸ்டர்ஸ்ட்ரோக் ரகசியத்தை 2 வாரங்களுக்கு முன்பே லீக் செய்த பத்திரிகையாளர் .நாலாவது தூண் அஞ்சாம்படை வேலை பாத்திருக்கே


===================

18 வாடகைக்கு குடியிருப்போர் விவரங்களை அளிக்க வேண்டும்.. வீட்டு ஓனர்களுக்கு சென்னை போலீஸ் உத்தரவு# செகண்ட் ஷோ சினிமாக்கு போனாக்கூட சொல்லிடுங்க

===================

19 ஒரு புறம், ஏழைகளிடம் பணமே இல்லை என்ற பிரசாரம் நடக்கிறது. இன்னொரு புறம், ஏழைகள் பணத்தை மாற்ற முடியாமல் அவதிப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர். அப்படி என்றால், ஏழைகள் கட்டுக்கட்டாக பணத்தை வைத்துள்ளனர் என்கின்றனரா? -வெங்கையா நாயுடு:  # கட்டுக்கட்டா குற்றச்சாட்டு உங்க கட்சி மீது சாமான்ய  மக்கள் வைக்கறாங்க,அதை கவனிங்க

====================


20
  ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பு மூலம், கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது.-ப.சிதம்பரம்: # சரி , உங்க கை  கால் எல்லாம் ஏன் கிடு கிடுன்னு நடுங்குது?உடம்பெல்லாம் வியர்க்குது?


=========================

0 comments: