Monday, November 28, 2016

குஷ்புவின் நிஜங்கள் நிகழ்ச்சி

1  சார், வாழும் புத்தர்னு யாரை சொல்லலாம்?
தன்னை நம்பி வந்த பொண்டாட்டியை அம்போன்னு விட்டுட்டு ஓடிப்போன எல்லா ஆம்பளைங்களும் புத்தர்க தான்

================

2 சார், வழக்கமா நுணுக்கி  நுணுக்கி  சின்னதா எழுதும் நீங்க இப்போ கொட்டை எழுத்துல பெருசா எழுதறீங்களே?

அப்பவாவது நம்ம எழுத்து பிரம்மாண்டமா இருக்குனு சொல்வாங்கனுதான்

=====================


மிஸ்.நீங்க பியூட்டி பார்லர் இன்ட்டர்வ்யூக்கா வந்திருக்கீங்க?
இல்லயே ஏன்? உங்க லட்சியம் என்ன?னு கேட்டா மேக்கப் போடுவது ங்கறீங்ளே

===================

4 சார் , ரஜினி படத்தை தயாரிக்கறீங்களாமே? ஏது அவ்ளோவ் பணம்?

என் ஒயிஃபோட உதவி


ஓஹோ, உங்க ஒயிஃப் யாரு?

 ரஜினியோட பொண்ணு,அவருக்கு ரஜினி உதவி,ஹிஹி

====================


சார், நீங்க உருப்படியா நடிச்ச படம் எது?
ச்சே , ச்சே அப்டி இதுவரை நடிக்கலைங்க.எடுபுடியா வேணா நடிச்சிருக்கேன்

==================

6 எங்களுக்கு 2 வாட்சப் க்ரூப், பொண்ணுங்க மட்டும் தனியா 1. மொத்த க்ளேஸ்மேட்ஸூம் 1

மேடம், அப்போ ஆஃபீஸ் க்ரூப், பக் வீடு குரூப் எல்லாம் இல்லயா?


=================

7  டியர், நம்ம காதல் தோற்கவேணும்னு  ஏன் பிரார்த்தனை  செய்யறீங்க?

அப்போதான் அடுத்த ஸ்கோர் எட்ட முடியும்


================

இன்ஸ்பெக்டர், இந்த மாச டார்கெட்ல ஒரு திருடனைக்கூட பிடிக்கலையே?

சார், நான் வேணா பென்சில் திருடன் ,இதயத்திருடன் ஐடி க்களை அரெஸ்ட் பண்ணிடவா? ஈசி


==================

தலைவரே! சின்னம் கிடைக்காததால் தான் போட்டி இடலையா?இல்ல அது ஒரு சாக்கா?
மா ங்கா மடையனாட்டம் பேசாதய்யா.

===================

10 மாப்ளை கமல் ரசிகராம்.அதான் யோசனையா இருக்கு.
விடுங்க.பொண்ணு நயன் தாரா ரசிகை.மேட்ச் ஆகிடும்


============


11 குருவே!பிரம்ம ஞானம் எனக்குக்கிடைக்கனும்
சிஷ்யா!அதை உனக்குக்கொடுத்துட்டா அப்புறம் பிரம்மா என்ன செய்வார்?


================

12 வியபார ரகசியம் வெளில போகாம பார்த்துக்குங்க.
வியாபாரமே இல்ல.செம டல் ஜோசியரே! அந்த ரகசியம்.தான்வெளில போகக்கூடாது


================


13  இன்ஸ்பெக்டர், திடீர்னு 100 பேரைக்காணோம்

 உங்க ஊர்க்காரங்களா மேடம்?

 இல்லை, என் ட்விட்டர் /FB ஃபாலோயர்ஸ்


=================


14 சேவல் தான் எல்லாரையும் முதல்ல எழுப்பி விடுது.இதுல இருந்து என்ன தெரியுது
பொண்டாட்டியைஎழுப்பி விட்டுட்டு தூங்கிடுவான்


==================

15 டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஒரு ஹாலிவுட் படம் ரிலீஸ் ஆச்சே?அது பத்தி நியூசே வர்லையே?
நர்ஸ் ஸ்ட்ரேஞ்ச் னு டைட்டில் வெச்சிருந்தா பாத்திருப்பம்

=============

16 இப்ப குஷ்புவின் நிஜங்கள் நிகழ்ச்சியில் வந்திருக்கிற பெண் என்னோட ஸ்கூல்ல படித்த பிள்ளை போலிருக்கு
அப்டியா? அப்போ புகாரே உங்க மேல தானா?


=================

17 சார்.உங்க பட டீசர் அனல் பறக்குது
அப்டியா?தாங்க்ஸ் இப்டி ஒரு கமெண்ட் வரனும்னுதான் ஹீரோவை பயர் சர்வீஸ் மேனா காட்னோம்

=============

18 மியூட் பண்ணிட்டு ப்ளாக் பண்ணினா ் பிடிக்காதவங்க ட்வீட் நம்ம டைம்லைன்ல வராது
நீங்க ஒரு டெக்னிக்கல் புலி.ஆனா கண்டுக்காம இருப்பதே நல்ல டெக்னிக்


=============

19 டாக்டர் காலையில் எழுந்து 60 செகண்ட்டுக்குள் 300மில்லி தண்ணீர் குடித்தால் உடம்பின் வியாதியே வராதாமே நிஜமா?
ஆமா ஆனா அது குடிக்கற தண்ணீர் H2O

================

20 வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில்தான் என் பாதை ஓஹோ.அப்போ உங்க வீடு சினிமா தியேட்டருக்கும் சுடுகாட்டுக்கும் நடுவால இருக்கா?

==============0 comments: