Saturday, November 19, 2016

மோடி மேஜிக்

ஏழை மக்களின் சேமிப்பு பணத்திற்கு வேட்டு வைத்துள்ளது மத்திய அரசு: மு.க. ஸ்டாலின் # 1 3/4 லட்சம் கோடி சேமிச்சா வேட்டுதான்

==============

2 காலம் கடந்த பின்பு விஜயகாந்துக்கு ஞானம் பிறந்துள்ளது"..


- பொன். ராதா# இல்லையே.மேரேஜ் ஆன உடனே சம்முவப்பாண்டி பிறந்தாச்சே?=============

3 நேரில் மக்களை.சந்திக்க முடியவில்லை என்றாலும் என் எண்ணமும் ,இதயமும் மக்களிடம் -ஜெ#,அந்த 500ரூ ,1000 ரூ எல்லாம் எங்கே இருக்குங்கோ?

===============


 வட மாநிலங்களில் உப்புக்கு பற்றாக்குறை கிடையாது; உப்பு அதிக விலைக்கு விற்கப்படவில்லை-நிர்மலா சீதாராமன் # உப்பு பற்றி வதந்தி கிளப்புவது தப்பு


=============


5  1978ல்,  அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது.-ப.சிதம்பரம்: # இப்பவும் அப்டி ஆகாது, இது மோடி மேஜிக்

================


6 விவசாயிகளை பாதுகாப்பதில் தமிழகம், 20வது இடத்தில், தொழில் துவங்குவதில், 18வது இடத்தில் -தமிழிசை # ஆனா கொலை,கொள்ளை, பதுக்கல் இதிலெல்லாம் நல்ல முன்னேற்றம்,அதை எல்லாம் சொல்ல மாட்டீங்க?

================

 7 கறுப்புப் பணத்தை ஒழிக்க, ஏன் புதிதாக, 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கின்றனர்- ஜவாஹிருல்லா # ஒரு எல்கேஜி க்கு தெரிஞ்சதுகூட கட்சித்தலைவர்க்கு தெரியலை


===============

கவலை வேண்டாம்! வங்கிகளில் போதிய பணம் உள்ளது - ரிசர்வ் வங்கி  # உங்க கிட்டே இருக்கு, எங்க கிட்டே இருக்க க்யூல நிக்கனுமில்ல?அந்த ஐ”க்யூ: வை வளர்த்திக்குங்க

====================


முலாயம் - அகிலேஷ் மீண்டும் மோதல் # கலைஞர் -அழகிரி , அக்னி நட்சத்திரம் படம் போல் ஆகிடுச்சு


===================


10  கறுப்பை வெள்ளையாக்குவது எப்படி? கூகுள் தேடலில் முதலிடத்தில் குஜராத் # அடுத்த இடம் அறிவாலயமும், போயஸ் தோட்டமுமா?


=====================


11 மக்களை பற்றி சிந்திக்காமல் வாக்குகளை பற்றி சிந்திக்கிறார் ஜெ- ஸ்டாலின் குற்றச்சாட்டு # அப்போ திமுக வாக்கு சேகரிக்க பிரச்சாரம் பண்றதில்லையா?

================

12 புதிய ரூ500 நோட்டு இனி வங்கிகளில் கிடைக்கும்! டெல்லி,-இன்றே விநியோகம்!! # கைல இருப்பதே ஒரு 500 தான்.இதை மாத்த டெல்லி போகனுமா?


===================

13 கபாலி பட வருமானம் குறித்து ரஜினி கணக்கு காட்ட முடியுமா? இயக்குநர் அமீர் கேள்வி # அவர் டக்னு பருத்தி வீரன் கணக்கு கேட்டுடப்போறாரு


===================

14 கர்நாடக அமைச்சர் ஆபாச படம் பார்த்தாரா, இல்லையா? செல்போனை நோண்டப்போகிறது சிபிஐ # இதை சாக்கா வெச்சு அவகளும் பிட் படம் பார்க்கப்போறாக

====================

15 ரூ.6000 கோடி கருப்புப் பணம்.. சூரத் வைர வியாபாரி அபராதம் கட்டினார்.# மாட்டிய முதல் திமிங்கலம் மங்களம்.மோடி யின் வெற்றி

================

16 ரூ. 2000 கிடைக்கவில்லை.. ரிசர்வ் வங்கிக்கு எதிரான ஐகோர்ட்டில் வழக்கு.. நவ. 16ல் தீர்ப்பு # போர் எனில் சேதம் இருக்கும்.போர்க்கால நடவடிக்கை

=================

17 ஜெ.பதவிக்கு எந்த ஆபத்தும் வராமல் பாதுகாத்த மோடிக்கு நன்றி: சசிகலா புஷ்பா # கலைஞரை விட பெரிய சாணக்கியரா இருப்பார் போல

==============

18 500, 1000 ரூபாய் நோட்டுகளை கங்கை நதியில் போட்டுவிட்டால் மட்டும் பாவம் நீங்கி விடாது: மோடி.# அட்லீஸ்ட் பேங்க் வாசல்லயாவது போட்டுட்டுப்போகவும்

==================

19 ஆண்டுக்கு ஒரு டாலர் சம்பளம் போதும்- டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு # மாசம் 1,ரூ சம்பளம் வாங்குனவரே.66கோடி சம்பாதிச்சாருனு கணக்கு போட்டிருப்பாரோ


==================

20 ரூபாய் நோட்டுகளை ஒழித்ததை மறுபரிசீலனை செய்ய முடியாது- மோடி # கருப்புப்பணம் வெச்சிருக்கறவங்கதான் இனி தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்யனும்

===============

0 comments: