Sunday, November 20, 2016

பிச்சைக்காரன் பிஸ்னெஸ்

1  டாக்டர். எத்தன மணிக்கு படுத்தாலும் தூங்க 1 ஆயிருது.
மிஸ்.செல்லை ஆப் பண்ணிட்டு படுத்தா எட்டரைக்கே தூங்கிடலாம்.ஏழரை இருக்காது

============

2 சிங்கிள் ஆண்கள் பண்ற தப்பு பத்தி பேசப்போறேன்


மேடம்.சிங்கிள் ஆள் /ஆண் என்பதே சரி===============

3 குருவே! செத்தவங்க அடுத்த ஜென்மத்துல காக்கா வா பிறக்கறாங்கன்னா காக்கா செத்தா அடுத்த ஜென்மம் என்னவா ?


காக்கா வை திருப்பிப்போட்டா காக்கா தானே?அப்போ காக்காவோட மறு ஜென்மமும் காக்கா வாத்தானே இருக்கும்?

==============


4 எங்க குல வழக்கப்படி காக்கா க்கு படையல் போட்ட பின் தான் நாங்க சாப்பிடுவோம்


பிரமாதம் சார்.வீட்ல என்ன சமையல்?
கோழி அடிச்சு குருமா


================


5 ஜட்ஜ் = 260கோடி வசூல் னு சொன்னீங்க.ஆனா நட்டம் னு இப்போ சொல்றீங்களே?


கைதி = வாயால வடை சுடறது நமக்கு புதுசா என்ன?வாய்தா குடுங்க==============

6 கமலின் அடுத்த ஜோடி க்கு பேரு 5 எழுத்துல தான் வரும்னு எப்டி யூகிக்கறே?

வாணி -2
சரிகா-3
கவுதமி -4
புதிய இணை-5

ஏறு வரிசை ஃபார்முலா 


============


சார், உங்க அடுத்த ஜோடி ஆண்ட்ரியா, பூஜா குமார்,ஆஷா ஷரத் இந்த 3 ல 1 தான்னு சொல்றாங்களே?

குட் ஐடியா. வரிசைப்படி ஃபாலோ பண்ணிட்டா போச்சு


================


8 கமலோட அடுத்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா தான் பொருத்தமா இருப்பார்னு எப்டி சொல்றே?


2 பேருமே 3 ஜோடி மாத்திட்டாங்க இல்ல.கெமிஸ்ட்ரி

===============

9 டாக்டர்.டெய்லி முகத்தில் 2 பரு வருது


வெரிகுட்.விரைவில் சாய் பல்லவி ஆகிடுவீங்க மிஸ்.யூ ஆர் லக்கி கேர்ள்==================

10 ஏய் மிஸ்டர்.நீ எப்போதான் திருந்துவே?


மிஸ்! எந்தக்காலத்துல ஆம்பளைங்க திருந்தி இருக்காங்க?=================

11 சார்.உங்க 2 பொண்ணுங்களுக்கும் எப்போ மேரேஜ் பண்ணி வைப்பீங்க?


இருய்யா.இப்போதான் என்னோட.4வது ஜோடி யார்னு தேடிட்டிருக்கேன்=============

12 மிஸ்! கெட்டது  ஜாக்கிங்  போகுமா?

 புரியல

 இனி நல்லதே நடக்கும்னு சொன்னீங்களே?==================


13  டியர், காலைல  ஆன் லைன் வந்ததும் உங்களைத்தேடினேன், ஆளைக்காணோமே?

டைம்லைன்ல இல்லைன்னா டி எம் ல பிசியா இருந்திருப்பேன்


====================


14 ஏய் மிஸ்டர்.நானே தூக்கக்கலக்கத்தில் இருக்கேன்.என் கிட்டே ஐலவ்யூ சொல்றே?


என்னைப்பார்த்து சொக்கிட்டீங்கனு நினைச்சேன் மிஸ்

================

15 டியர்.மேரேஜ் ஆகி 1மாசம் ஆகுது.வேலைக்குப்போகாம கவிதை எழுதிட்டு இருக்கீங்க?


உங்க கவிதை தான் எனக்கு உயிர் ,சாப்பாடு ன்னு சொன்னியே?===================
16 சார்.பல்லவி சரியா வர மாட்டேங்குது.எப்டி பாட?


சரி.நான் வேணா சாய் பல்லவியை வர வைக்கவா?=================

17 முன்னாள் காதலியின் கல்யாணத்துக்குப் போவதெல்லாம்,

அடுத்த காதலியைத் தேடித்தானே
நோ.அந்த வழுக்கை மண்டையனை நக்கலா ஒரு லுக் விட


=============

18 ஒரு மிளகா வத்தலை உடைத்து பாலில் போட்டுவிட்டால், தயிர் ரெடி ஆகுமா?
காந்தல் அடிக்கும்.பரவால்லியா? பக் வீட்ல தயிர் ஓசி ல உறை போட கிடைக்காதா

================

19

டியர்.என்னை எப்போ கட்டுவீங்க?
உங்க அம்மா கிச்சன் ரூம் போனதும்


===================

20 லாபம்னா எப்டி இருக்கனும் தெரியுமா?பிச்சைக்காரன் பிஸ்னெஸ் மாதிரி


புரில
தெலுங்கு வெர்சன் பி கா படம் 45 லட்சத்துக்கு வாங்கி 30கோடி லாபமாம்
==============

0 comments: