Wednesday, November 09, 2016

விழுப்புரத்தில்பூ வாசம்

1 ராகுலை, மக்கள் ஒரு நகைச்சுவை நடிகராக தான் கருது கின்றனர்-கைலாஷ் விஜய் வர்கீயா # எனக்கென்னமோ அவரு ஒரு குணச்சித்திர நடிகர்னு தோணுது 


===================


2    காதலால் மட்டுமே புரட்சியை ஏற்படுத்த முடியும்- பா.ரஞ்சித் # ஆனா நாட்டில் பெரும்பாலான காதல் கள்ளக்காதலாத்தான் இருக்கு

==================


3  மத்திய அரசின் திட்டங்களைப் பார்த்தாலே, ஸ்டாலின் பதற்றம் அடைகிறார்.-தமிழிசை # இல்லீங்களே, அவருக்கு அண்ணன் அழகிரியைப்பார்த்தா தான்  பதற்றம்

====================


4  சினிமாவில் தொடர்ந்து நடிக்கத்தான் திருமணத்தை ரத்து செய்தேன் - த்ரிஷா # பிரமாதமா நடிக்கறீங்க நிஜ வாழ்விலும், அரசியலிலும் உங்க கொடி பறக்க வாழ்த்து

=======================
கணவரை அடிப்பதில் இந்திய பெண்களுக்கு மூன்றாவது இடம் -செய்தி # மத்த நாட்டுப்பெண்கள் கொலையே பண்றாங்க, நம்ம பெண்கள் அடியோட சரி


 ===================

6 டில்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் - கெஜ்ரிவால் # அப்போ ஆஃபீசுக்கே யாரும் போகத்தேவை இல்லையா?


===============

7 DMDKவைMNKக்கு அழைத்தவர்வைகோ தான். அவர் தினம் ஒரு கருத்து கூறுவார்,''- பிரேமலதா # கருப்பு நிலா கிட்டேயே கருத்தா 8பேசி ஏமாத்திட்டார்னா பெரிய ஆள் தான்
-------------
==============
சசிகலா புஷ்பா திமுக வந்தால் அரவணைப்போம் - கனிமொழி
# எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் சாணக்கியர் பார்முலா.நாம எப்போ யாரை வேணாம்னோம்?

===============


9 தமிழ் சமூகம் பிற்போக்கு சமூகம் -குஷ்பூ # கூத்தாடிக்கு கோயில் கட்னதை வெச்சு அப்டி முடிவெடுத்துட்டாங்க போல

==============


10 பதவிக்கு ஆசைப்படுபவன் நான் இல்லை - வைகோ
# பணம் வந்தால் பதவி யை வாங்கிடலாம் கறாரா?

==============
11 முறையாக தேர்தல் நடந்தால் தே.மு.தி.க.,வுக்கே வெற்றி- பிரேமலதா # தேர்தல்ல தோற்கற எல்லாரும் சொல்ற டயலாக் தானே இது? நம்ம டாக்டர் அய்யா கூட ஒவ்வொரு தேர்தல்லயும் சொல்வாரே?

==================

12  தேவகவுடா பிரதமராக, தி.மு.க., ஆதரவு தெரிவித்தது. இப்போது, அதே தேவகவுடா தான், தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்கிறார்.-வைகோ # என் ஒரே தலைவர் கலைஞர்தான்னீங்க, பின் பல்டி அடிச்சு கேப்டன்னீங்களே?

================

13   தஞ்சை, அரவக்குறிச்சி -மாம்பழம் சின்னம் ஒதுக்கி விட்டு, திருப்பரங்குன்றம் க்கு மட்டும் மறுப்பது, எந்த வகையான நியாயம்- ராமதாஸ்# தள்ளி வைக்கப்பட்ட பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் வித்யாசம் 


===================


14  சிறையில் மின்வேலி; ம.பி., அரசு முடிவு #  கைதிகள் தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு கேசை மூட நல்ல வாய்ப்பு


================


15 முரசொலி  அறக்கட்டளையில் மகனுக்கு பதவி அழகிரி கோரிக்கை; ஸ்டாலின் எதிர்ப்பு #  கூடாரத்தில் ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த கதை ஆகிடும்னு பயமா?


======================

16  தமிழகத்தில் ஆட்சி மாற்றமா :குழப்பம் ஏற்படுத்தும் தி.மு.க.,:தமிழிசை கோபம் # கூல் மேடம், ஓபிஎஸ் கைல இருந்து ஜெ கைக்கு பொறுப்பு போகப்போகுதில்ல?


================

17 அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததே தேமுதிக செய்த பெரிய தவறு: பிரேமலதா..# டாக்டர் ராம்தாசும் இதே தான் சொன்னார்.சம்பாதிச்ச பின்

============

18 நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 63-வது பிறந்தநாள் # ஆறு மனமே ஆறு.மூன்று போதும் என ஆறு.குறியீடு 63

=============

19 விஜயகாந்த் பற்றி விமர்சிக்கவில்லை: பிரேமலதாவுக்கு வைகோ பதில்.. பாருங்களேன் மொமெண்ட்

==============

20 விழுப்புரத்தில் மணக்கோலத்தில் அரசு தேர்வு எழுதிய பெண் என்ஜினீயர்.. எக்ஸாம் ஹால்ல ஒரு பய உருப்படியா எழுதி இருக்கமாட்டான்.பூ வாசம்

============

0 comments: