Wednesday, November 23, 2016

இன்றைய வாராக்கடன் நாளைய தள்ளுபடிக்கடன்

மோடிஜி யின் 1000₹ 500₹ செல்லாது என்ற அறிவிப்பை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன் - விஜய் மல்லையா # இந்தியாவில் இருந்தா இப்டி சொல்லி இருப்பாரா


=============2 காவிரிபிரச்னையில்,தமிழகத்திற்கு மத்தியஅரசு துரோகம், செய்துள்ளது- ஸ்டாலின் # அவங்க மட்டுமா?ஆட்சியில்இருந்த இருக்கும் எல்லா மாநிலஅரசும் ==============3 3 தொகுதிகளில், அ.தி.மு.க., -- தி.மு.க.,வினர் பணம் கொடுத்து விட்டனர்-விஜயகாந்த்  # 500 ரூ , 1000 ரூ நோட்டை இப்படி செலுத்திட்டாங்க போல
================ஜெ., பணிக்கு திரும்ப ஏழு வாரம்' :அப்பல்லோ தலைவர் தகவல்  # அப்போ 7 வாரங்களில் அவருக்கு 7 1/2 நீங்குது?


================


===================


பிரதமர் மோடியின் துக்ளக் தர்பார்.. திருநாவுக்கரசு. கி பார் பேடு லக்


===============7 3தொகுதிகளிலும் வாக்காளர்கள் கூட்டம்.தமிழிசை மகிழ்ச்சி # மேடம்.பூரா பயலும் காசை வாங்கிட்டு திமுக/அதிமுக வுக்கு ஓட்டு
=================8 பாதுகாப்பு காரணங்களால் புதிய ரூ500 நோட்டு எப்போது வரும் என நேரடியாக தெரிவிக்க முடியாது - ரிசர்வ் வங்கி # பூடகமா.சொல்லுங்க.புரிஞ்சுக்கறோம்=============9 இளைஞர்கள் மத்தியில் இருப்பது எனது பலம்.. பிரதமர் மோடி பேச்சு நடப்பைப்பார்த்தா மத்தியில் நீங்கள் (ஆட்சியில்)இருப்பது எங்கள் பலவீனம்==============10 வீடு தேடி வரும் ஜியோ சிம்.. ரிலையன்ஸ் அடுத்த அதிரடி ! # வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க.எல்லாரும் வங்கி யில் தங்கி தேங்கிக்கிடக்காக===============


11 இடைத்தேர்தல்கள் மூலம், செயலற்ற, அ.தி.மு.க., ஆட்சிக்கு, மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும்.-கருணாநிதி # 50 வருசங்கள்ல எந்த இடைத்தேர்தல்ல ஆளுங்கட்சி தோத்திருக்கு?


=============

12 , 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்ததன் மூலம், பிரதமரின் செல்வாக்கு உயர்ந்துள்ளது-வெங்கையா நாயுடு # ஒருவர் செல்வாக்கு உயர மக்கள் செல்லாக்காசு ஆகனுமா?

==============

13 }  222 இடங்களில்,  4அதிமுக  வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஏன் பெறவில்லை?விஜயகாந்த் # 29 சீட் ஜெயிச்ச நீங்க ஏன் 1 சீட் கூட பெறலை?-

===================
14} மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் கடன்கள், தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுவது தவறு. 'வாராக்கடன்' என்ற பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளன-

அருண் ஜெட்லி: # இன்றைய வாராக்கடன் நாளைய தள்ளுபடிக்கடன்


==============

15 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, தொழிலதிபர்கள் அம்பானி, அதானிக்கு முன்பே தெரியும்-பவானி சிங்(BJP MLA) # அவங்களுக்கு  முன்பே தெரியும்னு உங்களுக்கு முன்பே தெரியுமா??இப்பத்தான்  தெரியுமா?

==============

16 } 200 கோடி ரூபாய் வரை, கறுப்புப் பணம் வைத்துள்ள பலர், நம் நாட்டில் உள்ளனர் - ராகுல் #  அந்த லிஸ்ட்டை மோடிக்கு கொடுத்து நாட்டுக்கு உதவலாமில்ல?

=================

17   கடந்த ஆண்டு ஜல்லிகட்டு நடக்காமல் போக மத்திய அரசு காரணமல்ல -  ராதா # இந்த ஆண்டு நோட்டுகள் செல்லாததுக்கு அரசு காரணம் இல்லைனு அடுத்த வருசம் சொல்வாரோ?

===================

18    
அமெரிக்க, ஆப்ரிக்க கண்டங்களில், நாடுகளுக்கு இடையே கூட, நதிநீரை பங்கிட்டுக் கொள்கின்றனர். -கே.எஸ்.ராதாகிருஷ்ணன் # ஆமா, இங்கே தான் இரு மாநிலமும் அழகிரி ,ஸ்டாலின் போல் எதிர் எதிரா இருக்காங்க

==================

19  கறுப்புப் பண ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்தும் முன், அதற்கான முன்னேற்பாடுகளை செய்து முடிக்க வேண்டும்-ராமதாஸ்  # அப்டி செஞ்சா சீக்ரெட் லீக் ஆகிடுமில்ல?

==================


 20   நாட்டில் இதுவரை, 400 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன-கிரண் ரிஜிஜு  #கறுப்புப்பணத்தை கணக்குப்போட முடியும், கள்ள நோட்டை எப்டி கணக்கிட முடியும்?

0 comments: