Saturday, November 19, 2016

உலக அறிவழகி

1  என்னை தீண்டிய வெட்கத்தில்

சிவந்து போகிறது மருதாணி.
ஏம்மா.மருதாணி எப்பவும் பச்சை.வெச்ச விரல்/நகம் தான் சிவக்கும்


==============

2 சார்.அந்த காயின் சீன் பிரேதம் கற மலையாளப்படத்துல இருந்து சுட்டதாமே?


கேஷ் குடுத்தா மகேஷா சுரேஷா பார்க்கறதில்லீங்க்ணா==============

3 வட தமிழகம் எந்த மாவட்டம்'ல வருது... ???


விழுப்புரமாத்தான் இருக்கும்.அதிகமா வடை சுடும் ரசிகர்கள்.அந்த ஏரியாதானாம்


==============

4 சார்.நீங்க forward கம்யூனிட்டியா ?


வாட்சப்ல எந்த ஜோக் வந்தாலும் அதை பார்வர்ட் பண்ணும் கம்யூனிட்டி==============

5 சார்..கல்கி பகவானை பார்க்கனும்.யார்க்கு நோய்னாலும் தீர்த்து வைப்பராமே?


ஆமா.அப்போலோ வில் அட்மிட் ஆகி இருக்கார்.வெயிட்


=============

6 மிஸ்! எப்பவும் ஒரு கைல புக்கும் ,இன்னொரு கைல போனும் வெச்ட்டு இருக்கீங்க்ளே.அவ்ளோ பெரிய படிப்பாளியா?


யா.படைப்பாளி டூ.==============

7 நான் அந்தப்பொண்ணுக்கு ஷேக் ஹேண்ட் கொடுக்க கை நீட்னேன்.அது வணக்கம் வெச்சிடுச்


டோண்ட் ஒர்ரி.நீ மோடி ரேஞ்ச்=============

8 டியர்.வளையல் ,மோதிரம் ,நெக்லஸ்,ஒட்டியாணம் ,கொலுசு இவற்றை விட மூக்குத்திதான் பிடிக்குமா?ஏன்?


அதுதான் கம்மி காசு.


=============

9 DR,வேக வைத்த கருவேப்பிலையை விட வறுக்கப்பட்ட கருவேப்பிலை உண்பதற்கு சுவை?


வறுப்பது கெடுதல்.வேக வைப்பதே சிறந்தது.=============

10 மிஸ் அன்னக்கொடி! நீங்க குடி இருப்பது ஈரோட்ல.எதுக்கு சினிமா பார்க்க மதுரை போறீங்க?


கொடி யை கம்பம் ல பாத்தாதான் மேட்சுக்கு மேட்ச்


============

11 டியர்.எத்தனை sarees எடுத்தாலும் இந்த saree ஆசை போக மாட்டேங்குது. என்ன செய்ய?


பேசாம ஜவுளிக்கடைல வேலைக்கு சேர்ந்துடு============


12 இன்னைக்கு ஊருக்குள்ளே கார் ஓட்டினேன்.பாத்தீகளா?

இல்ல.FBல உங்களை ஓட்டிட்டு இருந்தாங்க,அதைப்பாத்துட்டு இதை மிஸ் பண்ணிட்டேன்

===============

13 பிடிக்காத கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்.


மிஸ் ! கேள்விக்கு பதில் தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லுங்க.கருணை மார்க்காவது போடுவோம்==============

14 டியர்.மருதாணி இலை கேட்டா கிளை தர்றீங்க.அவ்ளோ லவ்வா?


அய்யோ ஊர்மிளா.இலைன்னா.1,மணி நேரமாகும்.கிளைன்னா 1 நிமிசம்


==============

15 ஏம்மா ஜாதி முல்லை எவ்ளோவ்?


முழம் 60 ரூபாங்க
அடேங்கப்பா.ரொம்ப உயர்ந்த ஜாதி முல்லை போல.மீடியம் ஜாதி முல்லை இருக்கா?=============

16 டியர்.செம்பருத்திப்பூ வெச்சுக்கறியா?


ஏன்?நானும் சிவப்பு பூவும் சிவப்புன்னா?
இல்ல.அதுன்னா அங்கங்க வேலியோரம் கிடைக்கும்=================

17 டியர்.என் எல்லா அன்பையும் உங்க கிட்டேயே கொட்டிட்டேன்


ஆமா.தேள் போல் கொட்டிட்டு


=================


18 காஷ்மோரா ல வர்ற ரத்னமாதேவியை நேர்ல பார்த்திருக்கீங்களா?


இல்லை.FB ல பாலோ பண்ற வைஷ்ணவி தேவியையே இன்னும் பார்த்ததில்லை==============

19 இந்த உலகத்துலயே என்னைப்போல் அழகும் அறிவும் யாருக்கும் கிடையாது


ஓஹோ.அப்போ உலக அறிவழகி ன்னு பேர் வெச்சுக்கலாமே மிஸ்?===================

20 டியர்.நீங்க கிடார் வாசிச்சா இம்ப்ரெஸ் ஆகிடுவேன்


அப்டியா.அப்போ ஆர்க்கெஸ்ட்ரா க்கு உன்னை கூட்டிட்டே போகக்கூடாது================

0 comments: