Thursday, November 17, 2016

சமையலும் ,மையலும்

1  அய்யய்யோ.விக்கல் வந்துடுச்சு


எதுக்கு பதர்றே? விக் தான் விழுந்துடுச்சோன்னு பதறிட்டேன்


=========

2 ஏய் .என்னை யாருன்னே தெரியாது.ஆனா ஐ லவ்யூ சொல்றே?


கண்ணு.நமக்கு தெரிஞ்ச பிகரை விட தெரியாத பிகர்ட்ட தான் ஜொள்ளு அதிகம் விடனும்


=============

3 படம் எப்போ வரும்னு சொல்லனுமா?


ஆமா.ஆனா அதை நீங்க சொல்ல முடியாதுங்ண்ணா.ரிலீஸ் தேதி நமக்குதான் மாறிட்டே இருக்குமே?


=============


4 எக்ஸாம் ல முதல்ல தெரிஞ்ச கேள்விக்கெல்லாம் பதில் எழுது
சாரி டீச்சர்.தெரிஞ்ச கேள்வி யை விட தெரியாத கேள்வில தான் மார்க் அள்ளலாம்


============


5 படத்தோட டீசரைப்பத்தி ஒரு வீடியோ ரிவ்யூ போடலாம்னு இருக்கேன்.அதுல என்னோட எண்ணங்களை எல்லாம் கொட்டிடுவேன்.ஆமாவா?இல்லையா?
ஆமா(இ)ல்ல

===============6 ராம பிரானே! 14வருசம் காட்டுக்குப்போனப்போ பரதன் கிட்டே ஆட்சிப்பொறுப்பை கொடுத்தீங்க.2 வது தடவை ஏன் சான்ஸ் தர்லை?
புத்திசாலிங்க அப்டித்தான்

=============


7 டியர்.யார்ட்டயும் இல்லாத ஒரு கெட்ட பழக்கம் என் கிட்டே இருக்கு
ஏம்மா மெடல் குத்திக்கிட்ட மாதிரி பெருமையா சொல்றே?,கீப் சீக்ரெட்


=============


8 இன்ட்டர்வ்யூ வில்
உங்க எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்ட்டிவிட்டீஸ் என்ன?
யார் கிட்டேயும் இல்லாத கெட்ட பழக்கம் என் கிட்டே இருக்கு
அய்யய்யோ


===========


9 சார்.படத்துல ஆவி வருதாமே?
இது வரை கொட்டாவி தான் வந்திருக்கு


========


10 என் Dp இருக்கிற eyes ean orginal eyes நினைச்சி யாரும் சைட் அடிக்க வேண்டாம் .
நல்ல வேளை, IP அட்ரஸ் பத்தி எதுவும் சொல்லலை


============

11 சார்.நீங்க உங்க சுயசரிதை எழுதும்போது ஸ்கெட்ச் பேனாவால் ஒவ்வொரு வரியையும் அன்டர்லைன்பண்றீங்களே ஏன்?


அழகான எழுத்துனு பேர் வாங்க

================

12 சார்.பிரதமரைப்பார்க்கனும்.ஒரு முக்கியமான நாட்டுப்பிரச்னை

இருய்யா.அவர் கவுதமி கூட விஸ்வரூபம் 2 பத்தி பேசிட்டிருக்காரு.அப்டி ஓரமா உக்காரு

=============

13 மிஸ்.143
உன் முகத்தை கண்ணாடில பாத்திருக்கியா?
ஏம்மா.உன் முகத்தையே முன்னால பாத்திருக்கேன்.என் முகத்தை பாத்திருக்கமாட்டேனா?


==============

14 மிஸ்.சொந்த வீடு இருக்கு ,சொந்த லவ்வர் இருக்கு.ஆனா டிபி மட்டும் ஏன் நடிகைது?
சொந்த டிபி வைக்குற அளவுக்கு வசதி இல்லை


==================

15 சார்.விகடன் ,கல்கி தீபாவளி மலர் எதுனா படிச்சீங்களா?
எங்கேங்க டைம்? நமக்கு பனி மலர் ,கருணை மலர் டிஎல் பாக்கவே டைம் சரியா இருக்கு


===================


16 சார்.நீங்க நல்லவரா?கெட்டவரா?
நல்லது எது கேட்டது எதுனு ஒரு லிஸ்ட் குடுங்க சொல்றன்
ஓ.சரி.பிரபுதேவா ,ஆர்யா,விக்னேஷ் சிவன்


=================

17 டியர்.சம்சாரம் மாசமா இருக்கும்போது ஆசைபட்டு எது கேட்டாலும் வாங்கித்தரனும்
அது எப்டி?ஒரு ஹெலிகாப்டர் கேப்பா.தர முடியுமா


=================

18 அநேகமா அடுத்த தீபாவளி எனக்கு தல தீபாவளியா தான் இருக்கும்.
அஜித் படம் வரும் எல்லா தீபாவளியும் உங்களுக்கு தல தீபாவளிதானே மிஸ்?

=============

19 ஸார்.கிரவுண்டுக்கு வரும் முன் உங்க காதலியை 4டைம் சுத்தறீங்களே எதுக்கு?
ஆல் ரவுண்டர் ஆக முடியல.அட்லீஸ்ட் என் ஆள் ரவுண்டர் ஆகலாம்னு


==============

20 சாலமன் பாப்பையா -அடுத்தவன் வீட்டு சமையலை ருசி பார்க்கத்தான் எல்லாருக்கும் ஆர்வம்
சமையலும் ,மையலும்


=================

0 comments: