Monday, November 14, 2016

ஜியோ சிம் வாங்குனவங்க தான் லிஸ்ட்ல முதல்ல

1  ஜப்பானில் மோடி வயலின் வாசித்தார் - செய்தி # ரோம் நகர் பற்றி எரியும்போது நீரோ மன்னர் ஃபிடில் வாசிச்ச கதை ஆகிடுச்சு


==================

2


அடிக்கடி, 'பல்டி' அடிப்பது தான், தி.மு.க.,வின் வேலை. -சரத்குமார் # ச ம க விலிருந்து அதிமுக வுக்கும், அதிமுக வில் இருந்து ச ம க வுக்கும் நாம அடிச்ச அந்தர் பல்டிகளை விடவா?


===================


3 வருமான வரித்துறையினரின் பிடியில், சாதாரண மக்களை சிக்க வைத்து அலைக்கழிக்கும் முயற்சியில், பா.ஜ., அரசு ஈடுபடக் கூடாது.-திருநாவுக்கரசர் # சாதா மக்களுக்கு ஏதுங்க அவ்ளோ வருமானம்?

====================


4 ' நாட்டுக்காக மணிக்கணக்கில் காத்திருப்போருக்கு மோடி...'சல்யூட் # எல்லாம் நோட்டுக்காகத்தான் காத்திருக்கோம்


=================

5 மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்ட ஸ்டாலின்; மத்திய அரசு தடை போட்டவுடன்,வரவேற்கிறேன்'என்கிறார்-சரத்குமார் # அது திமுக வின் தலை எழுத்து


===================

6


பொதுத்தேர்தலுக்கு முன், 500, 1,000 ரூபாய் செல்லாது என, அறிவித்திருந்தால், பா.ம.க., பல இடங்களில் வெற்றி பெற்று இருக்கும்-ராமதாஸ் #எல்லாருக்கும் ஒரு கவலைன்னா இவருக்கு ஒரு கவலை===================


'3 வாரங்களில் எல்லாம் சரியாகி விடும்!':அருண் ஜெட்லி நம்பிக்கை # 3 வாரத்தில் பிரச்னை சரி ஆகிடுமா? இல்லை, அதுவே பழகிடுமா? தெரில


================='அ.தி.மு.க.,- தி.மு.க., கட்சிகள் நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டன- விஜயகாந்த் #  (குட்டி)சுவர் இருந்தாதானே சித்திரம் வரைய முடியும்?னு விதண்டாவாதம் செய்வாங்களோ?


===================


ம நகூ உடன் தொகுதி உடன்பாடுதான் வைத்து கொண்டோம். மக்கள் ஏற்காததால் மீண்டும் கூட்டணி வைக்கவில்லை- - விஜயகாந்த் # மேடைலயே மக்கள் கிட்டே அப்போவே கருத்து கேட்டு தானே வெச்சீங்க?


===================


10 சுவிஸ் பணம் மீட்பதாக கூறிசுருக்குப்பை பணத்தை எடுக்கும் மோடி: திருநாவு் # நோ.இது கறுப்புப்பண முதலை களின் கழுத்து இறுக்கும் சுருக்கு


=======================

11 புதிய 2000 ரூபாய் தாள் வெளியான 3வது நாளிலேயே கர்நாடகாவில் கள்ளநோட்டு வெளியானதால் அதிர்ச்சி.# காவேரித்தண்ணியை வெளில விட மாட்டாங்க, கள்ள நோட்டுன்னா உடனே விட்டுடுவாங்க

================


12 தேவைப்பட்டால், தனி நபர் ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும், யாரும் தப்ப முடியாது- மோடி# ஜியோ சிம் வாங்குனவங்க தான் லிஸ்ட்ல முதல்ல

================
13ரயில் நிலையங்களில் ₹500 மற்றும் ₹1000 நோட்டுகள் 14/11/16 வரை பெறப்படும்: ரயில்வே அறிவிப்பு # ஆனா மீதி தர மாட்டீங்க, அதானே ட்விஸ்ட்?
====================


14 எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.# இது உளவு பார்க்க சாணக்கியர் அமைத்த வியூகமா இருக்கும்

=====================================
16

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மகளை துன்புறுத்தியதாக மருமகன் கைது # 500 ரூபாய்க்கு சில்லறை கேட்டாராம்==================
=================

17 நாடகத் தனமாக நடந்துகொள்ள விரும்பாததால்தான் முதல்வரை மருத்துவமனைக்குச் சென்று பார்க்கவில்லை -விஜயகாந்த் # அப்போ ஸ்டாலின் செஞ்சது டிராமாவா?அய்யோ ராமா


===============

18 புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளில் இந்தி திணிப்பு: ராமதாஸ் குற்றச்சாட்டு # ஆக்சுவலா இந்த பாயிண்ட்டை நம்ம தானைத்தலைவர்தானே முன் வைத்து அரசியல் பண்ணுவார்?

===================19  எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுவேன்-M.K.Stalin # கால அவகாசம் கொடுத்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க, இப்போ என்ன செஞ்சீங்க?அந்த கறுப்புப்பணம் எல்லாம்


======================


20

பல்வேறு வங்கிக் கிளைகளில் ஒருவரே மீண்டும் மீண்டும் ரூ.4,000 பெற முடியுமா? - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் # ஒரு பேங்க் போனாலே 10 மணி நேரம் க்யூ நிக்குது.


===================


0 comments: