Tuesday, November 22, 2016

அவரே பேங்க் வாசல்லதான் க்யூவில் நிக்கறாராம்.ஓவர் ஓவர்

பணமாற்றத்தின் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் உள்ளது - ராகுல்.# ஆமா.ஹெலிகாப்டர் ஊழல்,2ஜி ஊழல் இதெல்லாம் பெரிய ஊழல் தானே? அதை லாக் பண்ண


==============2 நான் 6000 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை ஒப்படைத்ததாக வெளிவரும்

செய்திகள் பொய் - குஜராத் வைர வியாபாரி லால்ஜிபாய் படே… # 'அப்போ இருப்பது மெய்?

=============

3 மோடியின் முடிவு வரவேற்கதக்கது.. ஆனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - விஜய் # தெறி 200 கோடி வசூல்.ஆனா தயாரிப்பாளர் பாதிப்பு

=================

4 2000ரூ் நோட்டுகளால் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது - கலைஞர் # திருடன் கைலயே சாவியைக்குடுப்பது போல் தலைவர்ட்டயே ஐடியா கேட்டுட வேண்டியதுதான்


===============

5 2000ரூபாய் நோட்டுகளால் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது - கலைஞர் # அதானே?புத்திசாலித்திருடன் நகையாவோ ,நிலமாவோ மாத்தி இருப்பான் கறார்

=============

6 ரூ2000

அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால்
ஊழல் இருமடங்காகப்
# அது இருக்கட்டும்.பழைய ஊழல்வாதிகளின் கழுத்தை இது நெருக்கட்டும்
பெருகும்-கலைஞர்


=============

7 மந்திரிகள் முதலாளிகள்

பணம் மாற்ற
வரிசையில் நிற்கிறார்களா
-ஸ்டாலின் # அவங்களுக்கு அடியாட்கள் இருக்காங்க இல்ல.தங்களுக்கு தெரியாத சட்டமா


============

8 புதிய 2000 ரூபாய் நோட்டில் சாயம் போனால் அது நல்லநோட்டு. சாயம்போகாவிட்டால் அதுகள்ள நோட்டு -மத்திய அரசு விளக்கம்
# அலசி ஆராயனும்?

=============

9 சாதியைசொல்லி திட்டியதாக 11பேருக்கு ஒராண்டு சிறை-ராமநாதபுரம் நீதிமன்றம்தீர்ப்பு
ஜாதிமல்லி ,ஜாதி முல்லை கூட வாங்க மாட்டாங்க லைப்ல


============

10 கருப்புபணத்தை ஒழிப்பதாக கூறிவிட்டு 2000ரூ நோட்டுகளை அறிமுகப்படுத்தியது ஏன்-லாலு # த்ரிஷா வை பீல்டுஅவுட் பண்ண ஸ்ரீ திவ்யா வை இன்ட்ரோ செய்யல

===============

11 ஊழலில் ஈடுபட்டவர்களெல்லாம் 4000ரூ காக இன்று க்யூவில் நிற்கிறார்கள்-மோடி # நேத்து உங்க அம்மா கூட நின்னாங்களே?

===============

12 மந்திரிகள்

யாராவது பணம் மாற்ற
வரிசையில்நிற்கிறார்களா?
-ஸ்டாலின்
# அரசியல்வாதிங்க எலக்சன் ல நிப்பாங்க.க்யூ வில் நிப்பாங்களா?


===================

13 கார்த்திகை மாதம் பிறந்தது... ஐயப்ப பக்தர்கள் சரணகோஷத்துடன் மாலை அணிந்தனர் #,டாஸ்மாக் வசூல் குறையுமே? அரசு என்ன நடவடிக்கை எடுக்குமோ?


==================================

14 மோடி போட்டது தடுப்பூசி -தமிழிசை
# ஆனா நாட்ல ரொம்பப்பேரு கடுப்பு ஊசி னு சொல்றாங்க

==============

15 ரூபாய் நோட்டு விவகாரம்: குடியரசு தலைவரை இன்று சந்திக்கிறார் மம்தா பானர்ஜி.#,அவரே பேங்க் வாசல்லதான் க்யூவில் நிக்கறாராம்.ஓவர் ஓவர்

=============

16 கருப்புப் பணம்தான் நெருக்கடியிலிருந்து இந்தியாவை காப்பாற்றியது: அகிலேஷ் # விட்டா சோனியாவும்கலைஞரும்தான் இந்தியாவை காப்பாத்திட்டாக சொல்வாரோ?

===================

17 குடி போதையில் மது என நினைத்து பெட்ரோலைக் குடித்தவர் பலி # அரசுக்கு வருமானம் போச்சே?

=============

18 விஜய் மல்லய்யா கடன்களில் ரூ.1201 கோடி தள்ளுபடி செய்தது எஸ்பிஐ வங்கி.# பாவம்.ரொம்ப ஏழை போல.கஷ்டப்படறார்னு இரக்கப்பட்டுட்டாங்க

==============

19 ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்றே சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியவில்லை.. டி.கே.எஸ். இளங்கோவன் # சத்யராஜ் சிவாஜி காம்போ பிலிம் தானே?

===============

20 ஒருவரே பணம் எடுப்பதை தவிர்க்க விரலில் மை வைக்கப்படும். மத்திய நிதித்துறை செயலர் அறிவிப்பு
# டாட்டு குத்தி விட்ருங்க.பேஷனுக்கு பேஷன்

==============

0 comments: