Wednesday, November 30, 2016

ஏத்துன விளக்கை அணைக்க ஒரு பொண்ணு

1  நாம ஒரு பொண்ணுகிட்ட பேசலாம்னு போகும்போது நமக்கு முன்னாடி 4 பேரு கடைய விரிச்சி உட்காந்துருக்கானுங்கஅஞ்சாதே.5வது கடை உன்னுது. 6 வது கடை என்னுது

===========

2 இன்ஸ்பெக்டர்.கள்ள நோட்டுன்னு எப்டி கண்டுபிடிச்சீங்க?புதுசா வந்த.2000ரூ நோட்டுல காந்தி போட்டோ கிடையாதுனு தெரியாம வேலை பாத்திட்டாக

=============

3 தலைவரே! நாம சேத்து வெச்ச எல்லா கறுப்புப்பணமும் மர் கயா வா?'உடன்பிறப்பே! எப்பவும் போலீசைவிட திருடன்தான் நல்லா யோசிப்பான்

===============

4 சார். சன் டி விக்கு நன்றி னு சொன்னீங்களே எதுக்கு?
அதுல தான் பிச்சைக்காரன் காமெடி சீனும்.,சிவாஜி பட ரஜினி பஞ்ச் சீனும் காட்டி ஐடியா குடுத்தாக


=============


5 டாக்டர்.அப்போல்லோ ல 2 மாசமா ICU ல இருந்த பேஷண்ட்டை திடீற்னு எப்டி சரி செஞ்சீங்க?500ரூ ,1000 ரூ செல்லாதுனு காது கிட்டே போய் சொன்னோம்


=============

6 பேங்க் கவுன்ட்டர்ல ஏன் இத்தனை கூட்டம்?எல்லாம் மோடி யோட என் கவுண்ட்டரால தான்


============

7 வர இருக்கும் எங்க ஆள் படம் 500 கோடி வசூல் பண்ணும்யோவ்.500 ரூபா நோட்டும் இனி செல்லாது.100 கோடி வடையும் இனி ஆகாது

=============

8 சார்.உங்க புது படத்துக்கு 2,இசை அமைப்பாளர்களாமே?ஆமா.எப்பவும் எனக்கு 2 தான் பிடிக்கும்

=================

9 சார்,  உங்க  படம் பாகம் 2 -ல் என்ன ஸ்பெஷல்?

 முதல் பாகம் முடிஞ்ச பின் ஹீரோயினுக்கு டைவர்ஸ் ஆச்சு,  2  வது பாகம் ஆரம்பிக்கும்போதே புரொடியூசருக்கு டைவர்ஸ்


==================

10 தலைவரே!,நீங்க சேர்த்து வெச்ச கறுப்புப்பணத்தை என்ன செய்யப்போறீங்க?நான் சாணக்கியன்.நகையாவும் ,நிலமாவும்,டாலராவும் வெச்சிருக்கேன்.

===============

11 டாக்டர்.கோபத்தை படிப்படியா குறைக்கணும்.என்ன வழி?10 மாடிக்கட்டிடம் ஏறி இறங்குங்க கோபம் வரும்போதெல்லாம்


==============

12 குருவே!500, 1000 ரூ வை இப்போ திருப்பதி உண்டியல்ல போட்டா அது பாவத்துல சேருமா புண்ணியத்துல சேருமா..?முதல்ல உண்டியல்ல சேரும்.

==================


13 யானைகளுக்கு வெட்டின குழில எறும்புகள் விழத்தான் செய்யும்.னு சொல்றாங்களே?ஆனா யானைகள் எல்லாம் தப்பிச்சிடுதே?மாட்னது பூரா எறும்பு

================

14 சார்.ஓப்பனிங் ல ஹீரோயினை பைக்ல கூட்டிட்டு.500கிமீ போறீங்கசார்.கதை என்ன?
அவ்ளோவ் தான் கதை.


===============

15 சார்.படத்துக்கு பாசிட்டிவ் ரிவ்யூஸ் வர ஆரம்பிச்சிடுச்சு
ஆமா.பொது ஜனங்க நாளைக்குதானே பார்ப்பாங்க.நெகடிவ் ரிவ்யூ வரும்

===============


16 சார்.படத்துல வர்ற 5 வில்லன் கள் ல 4 பேரைஒரே டைம் ல ஷூட் பண்றீங்க.ஓஹோ5 வது ஆளை ?
படத்தை இழுக்கனும்ல? வெயிட் & ஷூட்================

17 படம் பிளாக் பஸ்டர் ஆகிடுச்சாம் ?படம் பார்த்த ஜனங்க சொன்னாங்களா ?
இல்ல.படம் எடுத்த டைரக்டரே சொல்லிட்டாரு

================


18 குருவே! கடலை எண்ணெயில் விளக்கேத்தினா கடன் வரும் என்று ஒரு நம்பிக்கை. இருக்கே உண்மையா?

விளக்கேத்துனா வெளிச்சம்தானே முதல்ல வரும்?

===================


19  என் வீட்டுக்கு விளக்கேத்த ஒரு பொண்ணு தேவைன்னீங்க, சரி, இப்போ எதுக்கு இன்னொரு மேரேஜ்?

 அந்த ஏத்துன விளக்கை அணைக்க ஒரு பொண்ணு, ஹிஹி


====================


20  மிஸ்! உங்களுக்கு பாய் ஃபிரண்ட்ஸ் யாரும் இல்லையா?

 யா

 அதுக்காக பேங்க் செக் லீஃப் ல  DATE    - காலம் ல   டில் நவ் நோ டேட்டிங் அப்டினு எழுதனுமா?

===================

0 comments: