Wednesday, November 02, 2016

அப்போ குஷ்பு கட்சிக்கட்டுப்பாட்டை மீறிட்டார்னு சொல்றீங்களா?

1  ஐ.நா. சபையில் முதல்முறையாக தீபாவளி கொண்டாட்டம்...எவனாவது குண்டு போட்டுட்டு ஹேப்பி தீபாவளினு சொல்லிடப்போறான்


============2 தீபாவளி குடி கொண்டாட்டம்… ரூ 243 கோடிக்கு அசத்தல் மது விற்பனை! # தீபாவளி யை கொடி ,வெடி ,குடி னு அமர்க்களமா கொண்டாடி இருக்கான்============3 3 தொகுதி இடைத்தேர்தல்.. புதிய தமிழகம் புறக்கணிப்பு - கிருஷ்ணசாமி அறிவிப்பு# அப்டியே ஆட்டத்துக்கு வந்தாலும் அசந்து போய்டுவோம் பாரு
=================4 குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தர வேண்டியது அவசியம்: மோடி வலியுறுத்தல் # தமிழக வாக்காளர்க்கு மோடியின் வசியம் அவசியம் இல்லை.
===============
5 பொது சிவில் சட்டத்தை குஷ்பு ஆதரித்தது வரவேற்கத்தக்கது - பொன்.ராதா # ராதா வுக்கு EVKS ஆக ஆசை வராதா என்ன?
============6 பொண்ணுங்க தான் நம்மகிட்டவந்து பேசனும் அதான் கெத்து ன்னு வீராப்பா இருக்கறவங்க கடைசி வரை சோலோ செல்வராஜ்தான்.மழையின் காதலன் போல் ஆகவே முடியாது
==================7 விஷால் க்கும் ஆர்யா வுக்கும் பைட் வரப்போகுதுஎப்டி சொல்றே?
கடம்பன் ஸ்டில் பாராட்டி வரலட்சுமி ஆர்யாவை டார்லிங் சொல்லிடுச்


=============

8 பாலின சமத்துவம்னா என்ன?


ஆவின் பாலோ ஆரோக்யா பாலோ பண்ணை பாலோ எது கிடைச்சாலும் நுனை நாட்டியம் சொல்லாம குடிப்பதே================

9 சிக்கன தினம் னா சிக்கன் தினம்னு வேணும்னே தப்பா நினைச்ட்டு நான் வெஜ் சாப்பிட ஒரு கூட்டம் இருக்கு


===============


10 ஜெ குறித்து அமெரிக்க டாக்டரிடம் பேசினேன் - சரோஜாதேவி # நான் கூட டோக்கியோ டாக்டர்ட்ட பேசுனேன்.ஆனா அவருக்கு புரிஞ்சிருக்காது


===========
11 பொதுசிவில் சட்டம் தொடர்பாக திருநாவுக்கரசருக்கு குஷ்பு பாடம் எடுக்கனும்-பொன்.ராதா # எனக்கும் சட்டம் தெரியாது.அப்டியே மடையைதிருப்பவும்


==============


12 மக்கள் நலக்கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை -வைகோ # ம ந கூட்டணி இன்னமும் இருக்கா?குழப்பமா இருக்கே?===============13 கருணாநிதி குணம் அடைந்து ஒரு வாரத்தில் பணிகளை கவனிப்பார் -TKSஇளங்கோவன் # அதுவரை அண்ணன் தம்பி அடிச்சுக்காம இருக்கனுமா?
==================
14 ரூ.2 லட்சம் கடன் விவகாரம்: கலைப்புலி தாணுவை கைது செய்யவேண்டும் சிவில் கோர்ட்டு உத்தரவு # "புலி"க்கு நேரம் சரி இல்லாத சீசன்
===========15 திறமை மிக்க இளைஞர்கள் தங்களையும், பிறரையும் வறுமையிலிருந்து வெளி கொண்டுவர முடியும்: மோடி # ஆனா டேலண்ட் ஆனவங்க பாரீன் டேரா போட்றாக================16 நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம்: நடிகை கவுதமி # நல்ல வேளை ,தனு சு ராசி தான் காரணம்னு யாரும்சொல்லல==============17 காங்கிரசை பொறுத்தவரையில், பொது சிவில் சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறோம்.-திருநாவுக்கரசர் # அப்போ குஷ்பு கட்சிக்கட்டுப்பாட்டை மீறிட்டார்னு சொல்றீங்களா?===================

18   அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட, தி.மு.க.,வுக்கு அருகதை இல்லை என, தமிழக, பா.ஜ.,வினர், எந்த அருகதையுடன் கூறுகின்றனர்?-ஸ்டாலின் # கூல் தலைவா, அரசியலுக்கு எதுக்கு அருகதை?==================


19   உச்ச நீதிமன்றம், 2,000 கன அடி தண்ணீரை திறக்க உத்தரவிட்டது. கர்நாடக அரசிடம், அதை வலியுறுத்த, தி.மு.க.,வும்  காங்கிரசும் முன்வரவில்லை.-தமிழிசை # மோடியாவது முன் வரலாமில்ல?

=================

20 தி.மு.க., சார்பில் நடந்த, அனைத்து கட்சி கூட்டத்தில்  முறையான அழைப்பு இல்லாததால், நாங்கள் பங்கேற்கவில்லை-டாக்டர் கிருஷ்ணசாமி #  வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கனும் போல


====================

0 comments: