Monday, December 07, 2015

கோ ஆப் டெக்ஸ் மேனேஜர் விஜய் ரசிகர் னு எப்டி கண்டுபிடிச்சே ?

1.மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எடுத்த என் ஃபோட்டோ  எப்பூடி?

 ஓஹோ, அது உங்க ஃபோட்டோவா? நான் கூட ஏதோ பேய்ப்பட ஸ்டில்னு நினைச்சேன்


================


2 உங்க அறிவுத்திறமையை இங்க நிருபிச்சு என்ன பண்ண போறிங்க ?


அதைத்தெரிஞ்சுக்கிட்டு நீங்கஎன்னபண்ணப்போறீங்க?வந்தமா, வேடிக்கை பார்த்தமானு இருக்கனும்


=================


3  டியர்! உங்களுக்கு சொந்த அறிவுங்கறதே கிடையாதா? 

ம்ஹூம்.இருந்திருந்தா ஏன் உன்னைக்கல்யாணம் பண்ணி இருக்கப்போறேன்?=================


தலைவரே! 24 மணி நேரமும் பாவமே பண்ணிட்டு இருந்த நீங்க அதை 8 மணி நேரமா குறைக்கப்போறீங்களாமே?


ஆமா.தேர்தல் கிட்டே வருது இல்ல? # டாஸ்மாக்==============

5/தலைவரே! குற்றவாளிகள் எண்ணிக்கையைக்குறைக்க என்ன வழி?ஜெயில் மெயின் கேட்டை திறந்து விட்டுடனும்.
==============6 /டியர், என்னை பிடிக்கலைன்னா பிடிக்கலன்னு மூஞ்சிக்கு நேரா சொல்றது பெட்டர்
சாரி,வழக்கமா நாங்க கழட்டி விடும்போது மெயில் தான் பண்ணுவோம்
==================


7 என் கிட்டே உண்மையா பழகுவீங்களா?நான் பழகற எல்லாப்பொண்ணுங்க கிட்டேயும் உண்மையாதான் பழகறேன், ஆனா எல்லாரும் ஏன் இதே கேள்வியைக்கேட்கறீங்க?

====================


8 டியர், உங்களை விட்டு ஒரு கணம் கூடப்பிரிய மாட்டேன்5 நிமிசம் வெயிட் பண்ணு , பாத்ரூம் போகக்கூட விடமாட்டே போல

==================


9 மேடம், இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் யார் இசை பெஸ்ட்?ஆண்ட்ரியா = அனிரூத் தாங்க பெஸ்ட், மவுத் ஆர்கன் வாசிச்சா அடடா!

===========

10 டியர், உங்க வாயை வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டீங்களா?
அட போம்மா, நேத்து கையை வெச்ட்டு சும்மா இருக்க மாட்டீங்களா?ன்னே.


===============

11 வெள்ளத்தால பாதிக்கப்பட்ட ஜனங்களை தலைவர் இப்போ பார்வை இடுவார்.ஓஹோ! அப்போ தலைவரால பாதிக்கப்பட்டவங்களை எப்போ சந்திப்பாரு?
===============

12 நர்ஸ் = ஊசி போடனும், கொஞ்சம் சரிஞ்சாப்டி படுங்க.யார் மேல சரியனும் மிஸ்?

===============

13 ஏய் மிஸ்டர்! யாரைப்பார்த்து பேபின்னு கூப்ட்டே? என் வயசு 32, மைண்ட் இட்வெரிகுட். உங்க வயசை உங்க வாயாலயே தெரிஞ்சுக்கத்தான் அப்டி கூப்ட்டேன்


==============


14 தலைவரே! மகளிர் அணித்தலைவியை எதுக்கு மேடைலயே கட்டிப்பிடிச்சீங்க?அனைவரையும் அரவணைத்துச்செல்லும் ஆட்சி ன்னு சூசகமா சொல்றோம்
==============

15 கோ ஆப் டெக்ஸ் மேனேஜர் விஜய் ரசிகர் னு எப்டி கண்டுபிடிச்சே ?


கைத்"தெறி" கண்காட்சி ன்னு போர்டு வெச்சிருக்காரே?


===============

16/டி எம் மில்


மிஸ்! என் கிட்டே பேசுவீங்களா? மாட்டீங்களா?

மாட்டேன்
மாட்னீங்க.அதான் பேசிட்டீங்களே?==================

17/டியர்.அப்போது உடைந்த வளையல்களை

பத்திரமா வைத்திருக்கிறேன்
வெரிகுட்.சிக்கனம்?என் நம்பிக்கைக்குப்பாத்திரமா இருக்கே===============

18/அக்கம்பக்கத்த்து வீடுகளில் காப்பித்தூள் oc வாங்கும் பழக்கம் படிப்படியாக குறைந்து வருவது எதை குறிக்கிறது ?"


டைரக்டா காபியையே ஓசில குடிப்பதை==============

19 தலைவரே! உங்க பொஞ்சாதி பேரு என்ன?னு கேட்டா ஏன் சொல்ல மாட்டேங்கறீங்க?

சொன்னா சாதிப்பேரை சொல்லி திட்டிட்டாருன்னு கேசை திசை திருப்பிடுவாங்க

===============

20/கல்யாணமானவங்களுக்கு சகிப்புத்தன்மை ஜாஸ்தியா இருக்கும்னு எப்டி சொல்றே?


சம்சாரத்தையே சமாளிச்சவன் மத்த கஷ்டத்தை சகிச்சுக்க மாட்டானா?==================

0 comments: