Tuesday, October 13, 2015

குற்றாலம் புலியருவில ஏன் கூட்டமே இல்லை?

1.சார்.டைம் என்ன?7.30 AM
புலி எப்டி?
அதுவும் ஏழரை தான்


==========

2.சார்.5 வருசமா ஏன் வருமான வரி கட்டலை?வருமானம் இருந்தா கட்டி இருக்கமாட்டேனா?நஷ்ட ஈடு கட்டவே சம்பளம் சரி ஆகிடுது

===========

3.சார்.நீங்க சுமார்ன்ன படத்தை தினத்தந்தி ல நல்லாருக்குனு விமர்சனம் போட்டிருக்காங்க?கவர்ல 2500 ரூபா வெச்சுக்குடுத்தா நான் கூட சூப்பர்ம்பேன்

==========
4.சார்.புதுப்பட டிவிடி 100 ரூபாயா? ஜாஸ்தியா இருக்கே?ஒரு கிலோவே 100 ரூபா தான்


===============


5.சார்.படம் டப்பா னு எல்லாரும் சொல்றாங்க.நீங்க ஹிட்னு சொல்றீங்க,?ட்ரெய்லர் ஹிட்.யூ ட்யூப் ல 100 கோடி பேர் பார்த்தாச்


================

6.சார்.முத நாள் வசூல் 10 கோடியை தாண்டிடுச்சு.அணையப்போற விளக்கு எப்பவும் பிரகாசமாத்தான் எரியும்.வெயிட் &ஸி


=================

7.சார்.படத்துல நீங்க பேசுன பஞ்ச் டயலாக்குக்கும் ,கதைக்கும் என்ன சம்பந்தம்?படத்துல கதை தான் இல்ல.பஞ்ச் டயலாக்காவது இருக்கட்டும்னுதான்


==============


8.சார்.நம்ம படம் வெள்ளி விழா காணும்.வெள்ளி டூ வெள்ளி 8 நாள் ஓடிட்டா உங்க ஊர்ல வெள்ளி விழாவா?


=============

9.டாக்டர்.சூடான டீ டம்ளரை கன்னத்தில் ஒத்திக்கிட்டா பரு போய்டுமா?ஆமா.கொப்பளம் வந்துடும்


===============

10.சார்.வீக் என்ட் (WEEK END) ரிலீஸ்ங்கறதால கலெக்சன் ஸ்ட்ராங்கா இருக்குமாமே?திரைக்கதை படு வீக்கா (WEAK) இருக்கே?


============

11.டி ஆர் = உங்க படத்தைப்பாராட்டி ஒரு ஸ்பீச் கொடுக்கவா?அட்லீ = அய்யய்யோ வேணாம் சார்.உங்க ராசி எப்டினு ஊருக்கே தெரியும்


============

12.டியர்.புலி படம் பார்க்கப்போலாமா?டேய்.நான் உன் காதலி.கூட்டம் வராத தியேட்டருக்கு வர கள்ளக்காதலி இல்ல

==========

13.ஹீரோ சார்.இந்த சீன் ல விஷத்தைக்குடிச்ட்டு டான்ஸ் ஆடனும்.சார்.லூசா நீங்க? விஷத்தைக்குடிச்ட்டா நிக்கவே முடியாது.டான்ஸ் எப்டி ஆட?

===============

14.படத்தோட முன் பாதி திமுக ஆட்சி மாதிரி.பின் பாதி அதிமுக ஆட்சி மாதிரி .2ம் விளங்கலை.டோட்டலா எப்டி?
காங்கிரஸ் கட்சி மாதிரி கந்தரகோலம்


================

15.சார்.இது குழந்தைகளுக்கான படம்.குழந்தைத்தனமான படம் னு சொல்லுங்க.சமாளிக்காதீங்க


=============

16.படம் பார்த்த

குழந்தைக முகத்துல அவ்ளோ சந்தோஷம்.

கண்ணா.புரொடியூசர்,் ,டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் முகத்தை நீ பார்க்கலியே? "கிலி"யா


=============

17.சார்.அப்பா கேரக்டர் ல வரனும்னா கெட்டப்பை மாத்தனும்.உங்க அப்பாவை அந்த சீன் ல நடிக்க விட்ரலாமா?னு கேட்டா எப்டி?

=================

18.வண்டலூர் ஜூ வில் உங்களுக்கு எப்படி படுகாயம் ஆச்சு?புலி சக்சஸ் மீட் வித்யாசமா கொண்டாடலாம்னு உள்ளே போய்ட்டேன்.புலி புகுந்து விளையாடிடுச்சு

================

19.குமுதம் விமர்சனத்துல ரேட்டிங் 4/5 வந்திருக்கே?படத்தை சரியா கவனிக்கலையோ?விமர்சகரை சரியா "கவனிச்சிருப்பாங்க"


==============

20.குற்றாலம் புலியருவில ஏன் கூட்டமே இல்லை?மெயின் பால்ஸ் ,ஐந்தருவில தான் கூட்டம் இருக்கும்.புலி அருவி "அவுட்"டர் ஏரியா ஆச்சே?

===================

0 comments: