Monday, October 05, 2015

தியேட்டர் வாசல்ல நிஜமான புலி 1 நிக்குதே எதுக்கு?

1டாக்டர்.டெய்லி வெறும் வயித்துல தேன் சாப்ட்டா நல்லதா?கெட்டதா?


உங்களுக்கு நல்லது.தேனிக்கு கெட்டது==============

2டாக்டர்.வெள்ளை நிற பூசணிக்காய் ஜூஸ் டெய்லி சாப்ட்டா உடம்புல் இருக்கும் தீயசக்தி வெளியேறிடும்னீங்களே?அது மறுபடி உள்ளே வர என்ன செய்யனும்?

==============

32ஜி வழக்கு விசாரணை நடக்கும்போது கோர்ட்க்குள்ளே ஏன் கருணை மலரை விட மாட்டேங்கறாங்க?


ஊழல் வழக்கில் கருணை காட்டக்கூடாது னு ஜட்ஜ் சொல்லிட்டாரே?===============

4சார்.நானும் அவரை மாதிரி 3 கெட்டப் ல வரனும்.


அவ்ளவ் தானே?இந்தாங்க 1 கிளிப்பச்சை 2 பிங்க் 3 ராமர் க்ரீன் சர்ட்ஸ்=============

5குருவே! கடவுள் எனக்கு கருணை காட்ட ஏதாவது குறுக்கு வழி இருக்கா?


: கோயிலுக்குப்போகும்போது அவங்க முன்னாடி போய் நின்னுக்க


============

6மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுமா?


அது தெரில.ஆனா வேதாளம் வெற்றிப்படிக்கட்டில் ஏறிடும்=============

7சார்.இந்தப்படத்துலயும் வில்லன் ரோலா?


AUNTY ஹீரோவா நடிச்சாதான் தப்பு.ANTI ஹீரோவா வந்தா செம கெத்து.=============

8சார்.உங்க பட ட்ரெய்லர்ல ஓப்பனிங் ல ஒரு கேரக்டர் ஏதோ வாத்யக்கருவியை வாசிக்கறாரே?எதுனா குறியீடா?


புரொடியூசருக்கு சங்கு ன்னு அர்த்தம்


=============

9சார்.டைட்டில் வேதாளம் அஜித் க்கு சம்பந்தமே இல்லாம இருக்கு?


இங்க்லீஷ் ல எழுதிப்பாரு.சம்பந்தம் இருக்கும் WAY"THALA"M=============

10வேதாளம் க்கு போட்டியா நம்ம காம்போ பட டைட்டிலா விக்கிரமாதித்தன் னு ்வைப்போமா?
அட்லி = ஆல்ரெடி விக்காத மா("ஆ)தி"த்தன் னு பேர் வாங்கிட்டோமே?


=============

11புலி FDFS டிக்கெட் எவ்ளவ்?

250 டூ 400,
ஏன் இவ்ளவ் ரேட்?
எதிர்பார்ப்பு இருக்கு.-
யோவ்.இப்போதான் எதிர்பார்ப்பே இல்லாம வா-ன்னீங்க?
================

12வேதாளம் = புலி ஹிட் ஆகுமா? ஜூட் ஆகுமா?

விக்ரமாதித்தன் = யூகிக்க முடியல.
சரியான பதில் சொல்லலைன்னா உன் தலை சுக்கு100 கோடியா வெடிச்சிடும்


==================
13டாக்டர்.என் பையனுக்கு இப்பவே புலி FEVER START ஆகிடுச்சு.படத்தைப்பார்த்தா குணம் ஆகிடுமா?

குணா ஆகிடுவான்


============

14சார்.படம் தெளிவாவே தெரியலையே?ஏதோ மறைக்குது?

யோவ்.இது சாதா படம் இல்லை.புலி.ஸ்க்ரீன்-க்கு வெளில கூண்டு கட்டி இருக்கோம்


================

15தியேட்டர் வாசல்ல நிஜமான புலி 1 நிக்குதே எதுக்கு?

படத்தை கலாய்க்கறதுக்காகவே FDFS பார்க்க வரும் அஜித் ரசிகர்களை மோப்பம் பிடிச்சு கடிக்கும்

===============

16இந்த சீன் ல ஸ்ரீ தேவியை வில்லன் கிட்டே இருந்து நீங்க காப்பாத்தனும்.

ஓ.காப்பாத்தி என்ன செய்யனும்.
எதும் செய்யக்கூடாது.ஜஸ்ட் காப்பாத்தனும்

==============

17நெட் தமிழன் = நம்மள வெறுக்கறவங்களுக்கும் நல்லது பண்ணீட்டு அமைதியா விலகீடனும்"

என்ன நல்லது?
ட்விட்டரை /ஃபேஸ்புக்கைவிட்டு விலகறதுதான்

==================


18புலி ல கொடூர தளபதி கிட்டே இருந்து என்னை இளைய தளபதி காப்பத்தறார்.

போனிகபூர்=ஓஹோ.அவர் கிட்டே இருந்து யார் உன்னை காப்பாத்துவாங்க?

================

19சார்.எனக்கு பேசுன சம்பளம் 27 கோடி ரூபா.ஆனா 7 கோடிதான் குடுத்திருக்கீங்க?

எப்டியும் நஷ்ட ஈடு 20 கோடி தர வேண்டி இருக்குமில்ல?கழிச்ட்டோம்
===================

20வரலாறு மிஸ் வனஜா = நம் நாட்டின் தேசிய விலங்கு எது?

மாண்புமிகுமாணவன் = தெரியாது மிஸ்
ஸ்ரீ தேவி கூட விஜய் நடிக்கும் படம் எது?
புலி

====================

0 comments: