Saturday, October 10, 2015

டம்மி டப்பாசு (2015)-சினிமாவிமர்சனம்

ன் றி-மாலைமலர்

நடிகர் : பிரவின் பிரேம்
நடிகை :ரம்யா பாண்டியன்
இயக்குனர் :ரவி
இசை :தேவநேசன் சொக்கலிங்கம்
ஓளிப்பதிவு :கண்ணன்
நாயகன் பிரவீனும், நாயகி ரம்யா பாண்டியனும் குடிசை மாற்று வாரியத்தில் எதிரெதிர் வீட்டில் வசித்து வருகிறார்கள். எந்த வேலைக்கும் செல்லாமல் டம்மியாக இருந்துவரும் நாயகன், நாயகி மீது ஈர்ப்புடன் இருந்து வருகிறார். எந்நேரமும் அவளை சுற்றிக் கொண்டே காதல் வளர்த்து வருகிறார். முதலில் நாயகன் மீது ஈடுபாடு காட்டாத நாயகி, பின்பு காதல் கொள்கிறாள். 

இந்நிலையில், ஒருநாள் வீட்டுக்கு தெரியாமல் இருவரும் தவறு செய்துவிடுகிறார்கள். பின்னர், ஊரைவிட்டு ஓடிவிடலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அதன்படி, நாயகி வீட்டை விட்டு ஓடிவந்துவிட, ஆனால், நாயகனோ அவளை ஏமாற்றும்விதமாக அவரது வீட்டிலேயே இருக்கிறார். இதனால் ஏமாற்றமடைந்த நாயகி, நாயகனை தன் வழிக்கு கொண்டு வர நினைக்கிறாள்.

இதற்காக அந்த ஏரியா ரவுடியான சிங்கமுத்துவின் உதவியை நாடுகிறாள். அவரும் இவளுக்கு உதவுவதாக கூறுகிறார். இறுதியில், நாயகி, நாயகனை தனது வழிக்கு கொண்டு வந்தாரா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை. 

டம்மியான கதாபாத்திரத்திற்கு நாயகன் பிரவீன் கச்சிதமாக பொருந்திருயிருக்கிறார். பெருத்த உடல், பப்ளிமாஸ் முகம் என ரசிக்க வைக்கிறார். இவர் செய்யும் காமெடிகளும் ஓரளவுக்கு ரசிக்க வைக்கிறது. ஆனால், காதலியை ஏமாற்றுவதாக இவர் காட்டும் வில்லத்தனம் மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

நாயகி ரம்யா பாண்டியன் அழகு பதுமையாக காட்சியளிக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம். இவர் செய்யும் சிறு சிறு சேட்டைகளும், குறும்புத்தனமான நடிப்பும் ரசிக்க வைக்கிறது. படத்தில் போண்டாமணி, ஜான் விஜய், மைம் கோபி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். அவர்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். 

சிங்கமுத்து காமெடி தாதாவாக வந்து கலகலப்பூட்டியிருக்கிறார். இயக்குனர் ரவி, காதல் கலந்த காமெடி படத்தை இயக்க முயற்சி செய்திருக்கிறார். படத்தில் ரசிக்கும்படியான காட்சிகள் இல்லாதது படத்திற்கு தொய்வுதான். ஒரு சில காமெடிகள் ரசிக்க வைத்தாலும், பெரும்பாலான காட்சிகள் எரிச்சலையே கொடுக்கிறது. காட்சியமைப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

தேனிசை தென்றல் தேவா இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையும் ஓகேதான். கண்ணனின் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக படமாக்கியிருக்கிறது. 

மொத்தத்தில் ‘டம்மி டப்பாசு’ புஷ்வாணம்.


0 comments: