Wednesday, October 14, 2015

புலியை ஓட்டுனா போலீஸ்ல புகார்!!!!

1வயிற்றெரிச்சலால் ஸ்டாலினை திட்டுகின்றனர் -கருணாநிதி#தலைவரே! வழி விட மாட்டீங்கறீங்கனு அவரே மனசுக்குள் உங்களை திட்டிட்டுதான் இருப்பாரு===============2விமர்சனம் செய்வதற்கு தகுதி வேண்டும்: நடிகர் சிவாி: # தியேட்டர்ல காசு கொடுத்துப்படம் பார்க்கும் எவருக்கும் விமர்சிக்கும் தகுதி ,உரிமை உண்டு==============3"எனக்கு அரச


பதவி வந்தாலும் நான் உங்கள்ள
ஒருத்தன் தான்!"-விஜய் # நாங்க வரி கட்டிட்டோம்.அப்போ நீங்க?


===============


4புலியைப் போன்று ஒரு படத்தை இதுவரை நான் பார்த்ததே இல்லை - டிஆர்

டிவிடி வேணும்னு சூசகமா சொல்றாரா?

====================
5வாழை உற்பத்தியில், ‘‘உலகின் முதல் இடத்தில் தமிழ்நாடு’’

# வாழையடி வாழையா விவசாயத்தில் நாமதானே நெ 1?

=========

6டெல்லி உணவுத்துறை மந்திரி அதிரடி நீக்கம் ரூ.6 லட்சம் லஞ்சம் வாங்கியதால் கெஜ்ரிவால் நடவடிக்கை # உணவுத்துறை இல்லையா?அதான் சாப்ட்டுட்டாரு


============7வெற்றி தோல்வி வந்து வந்து போகும்முயற்சி !
முயற்சி மட்டும் தான் நிரந்தரமானது - விஜய் மட்டும் கரெக்டா குடுத்துடுங்க

=============
8இந்தியா முழுவதும் ரெயிலில் ஓசி பயணம் செய்பவர்களை தடுக்க மெகா சோதனை மத்திய மந்திரி தகவல்.# நல்லவேளை.வார்னிங் பெல் அடிச்சீங்க

============

2 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது கூட்டு பாலியல் பலாத்காரம் கிடையாது, கர்நாடகா மந்திரி # கர்நாடகத்தனமா உளர்றா


==============

10கபாலி யில் ரஜினி க்கு வில்லி ஒரு பெண் கேரக்டர் - செய்தி # மன்னன் ,மாப்பிள்ளை ,படையப்பா வரிசைல வில்லி வந்தாலே படம் கில்லி தான்

============

11ஸ்டாலின் நடை பயணம் குறித்து வைகோ கிண்டல்!
கிண்டல் பண்ணினா வெற்றி நடை போடமுடியாம போய்டும்.அரசியலிலும் சினிமாவிலும்


============

12விஜய் மல்லையா வீடு-அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை. #,பேர் ராசி தான்

==========
13வேலை இல்லாப்பட்டதாரி -2 (தனுஷ்) பட டைட்டில் இனி "தங்க மகன்" -செய்தி # ரொமான்சில் கமல் மாதிரி.டைட்டில் வைப்பதில் ரஜினி படம் முன் மாதிரி

========

14சமூக வலைத்தளங்களில் புலியை ஓட்டும் வலைஞர்கள்.. போலீசுக்கு போக தயாரிப்பு தரப்பு திட்டம் # போங்க போங்க.போலீஸ் கமிஷனரே அஜித் ரசிகர்தானாம்===========15மோடி மாதிரி கலர் சட்டை போட்டால் ஸ்டாலின் ஆட்சியை பிடிக்க முடியுமா?:-வைகோ!# எம் ஜி ஆர் மாதிரி நடந்துக்கிட்டா ஆட்சிக்கு வர முடியுமா?
============16புலியை ஓட்டுனா போலீஸ்ல புகார் ஓடும் தியேட்டர் ல ஈ ஓட்டிட்டு இருக்காங்கன்னு உண்மையைச்சொன்னா லாக்கப்க்கு ஓட்டிட்டுப்போய்டுவாங்க்ளோ?=============17/உங்கள் குழந்தைகளுக்கு மோடி என்று பெயரிடுங்கள் - தமிழ்இசை

.வீட்ல பையன் தங்காம ஊர் சுத்தியா மாறிட்டா?

===========

18/முதலமைச்சர் என்பவர் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் - தமிழிசை # அப்டி இருந்தா ஆட்சி அதிகாரம் இல்லாத மக்கள் முதல்வர்னு கிண்டல் பண்ணுவாங்களே?

==============

டெல்லிக்குள் நுழையும் வாகனங்களுக்கு கட்டணம்: உச்ச நீதிமன்றம் அதிரடி..# வெளில போகும்போது அந்த பணத்தை ரிட்டர்ன் குடுத்துடுவாங்களா?

============

20/ஜெ.சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: கர்நாடக அரசு, அன்பழகன் பதில் அளிக்க மேலும் 6 வாரம் அவகாசம்#தேர்தல்வரை/ஜவ்விழுப்புஇழுப்பாக 

==================

0 comments: