Thursday, October 08, 2015

‘மூடுபனி’, ‘நூறாவது நாள்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ படங்களின் ஹீரோ-போல்-ஒரு-சைக்கோகொலையாளி-பட்டுக்கோட்டை பிரபாகர்

குற்றங்கள் பல வகைப்படும். பணத் துக்காக, புகழுக்காக, பதவிக்காக, கவுரவத்துக்காக, பகைக்காக ஏன் பொழுதுபோக்குக்காகக் கூட குற்றங்கள் உலகெங்கிலும் நிகழ்ந்து வருகின்றன. இதில் எதிலும் சேராத இன்னொரு வகை இருக்கிறது. அது மனநலம் பாதித்தவர்கள் செய்யும் குற்றங்கள்!
தம் வாழ்வில் ஏற்பட்ட ஏதோ ஒரு பாதிப் பின் காரணமாக சட்டம், சம்பிரதாயம் எதற்கும் கட்டுப்படாமல் பயங்கரமான குற்றச் செயல்களைச் செய்யும் இவர் கள் இந்தச் சமுதாயத்துக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்கள்.
இதிலும் இரண்டு வகைகள் உண்டு. சைக்கோ என்று வகைப்படுத்தப்படும் மனநலம் பாதிக்கப்பட்ட இவர்களில் வெளிப்படையாக தெரிபவர்கள் ஒரு வகை. வெளிப்படையாகத் தெரியாத வர்கள் மற்றொரு வகை.
குடும்பத்திலும் சரி, அவர்களோடு பழகுபவர்களுக்கும் சரி, அவர்கள் சைக்கோ குற்றவாளிகள் என்பது சிறிதள வும் தெரியாது. தமிழ் சினிமாவில் ‘மூடுபனி’, ‘நூறாவது நாள்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ படங்களின் கதாநாயகர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.
அப்படி ஒரு சைக்கோ குற்றவாளிதான் டட்ரோக்ஸ். பெல்ஜியம் நாட்டின் புரூ ஸல்ஸ் நகரைச் சேர்ந்தவன். வெளி உலகத்துக்குத் தெரியாமல் அவன் செய்துவந்த குற்ற லீலைகள் வெளிப் பட்டபோது நாடே அதிர்ந்தது.
சில நடைமுறை காரணங்களால் டட்ரோக்ஸ் மீதான வழக்கு 8 ஆண்டு களுக்கு நத்தை வேகத்தில் ஊர்ந்த போது, ஆத்திரம் அடைந்த பொது மக்கள் காவல்துறையின் மெத்தனத் தைக் கண்டித்து புரூஸல்ஸ் நகரத்தில் ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தி, தங்கள் எதிர்ப்பைக் காட்டினார் கள். எத்தனை பேர் தெரியுமா? 3 லட்சத்து 50 ஆயிரம் பேர். டட்ரோக்ஸ் அப்படி என்ன செய்தான்?
1996-ம்
வருடம். மார்ச் 28. அந்த அழகான பள்ளிக்கு வெளியில் ஒரு மரத்தடியில் தனது காரை நிறுத்திக் காத்திருந்தான் டட்ரோக்ஸ். அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாணவி சபீன், வகுப்பு முடிந்து நடந்து வந்தாள். சபீன் அழகான கண்களையும், சுருட்டை முடியையும் கொண்ட 12 வயதே நிரம் பிய சிறுமி. சபீனை நெருங்கிய டட் ரோக்ஸ் அவளைத் தடுத்து நிறுத்தினான்.
‘‘உன் பெயர்தானே சபீன்?’’
‘‘ஆமாம்’’ என்றாள் ஆச்சரியமாக.
‘‘உன் தந்தை ஒரு போலீஸ் அதிகாரிதானே?’’
‘‘ஆமாம். யார் நீங்கள்?’’ என்றாள் அப்பாவியாக.
‘‘நானும் ஒரு போலீஸ் அதிகாரிதான். ஆனால், ரகசிய போலீஸ். உன் தந்தைதான் என்னை அழைத்து ஒரு வேலை கொடுத்திருக்கிறார்.’’
‘‘என்ன வேலை?’’
‘‘உன்னைப் பாதுகாக்கும் வேலை. அதாவது ஒரு கடத்தல் கும்பல் உன்னைக் கடத்தி கொலை செய்யப் போவதாகவும், அப்படி செய்யாமலிருக்க ஒரு குறிப்பிட்ட தொகை பணம் தர வேண்டும் என்றும் உன் தந்தையிடம் கேட்டிருக்கிறார்கள்.’’
‘‘ஐயையோ!’’ மிரண்டாள் அந்த சின்னப் பெண்.
‘‘பயப்படாதே. அப்படி எதுவும் நடக்க விடாமல் தடுக்கத்தான் என்னை அனுப்பியிருக்கிறார். அந்தக் கடத்தல் கும்பலைப் பிடிக்கும்வரை உன்னைப் பத்திரமாக ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கச் சொல்லியிருக்கிறார். போகலாமா?’’
தயங்கித் தயங்கி அவனுடன் காரில் ஏறினாள் சபீன்.
கார் நகர எல்லையைக் கடந்து நடமாட் டமே இல்லாத இடத்தில் தனிமையாக இருந்த ஒரு பழைய வீட்டுக்கு முன்பாகப் போய் நின்றது. அந்த இடமே பயத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது.
அந்த வீட்டுக்குப் பின்புறத்தில் பூமிக்கு அடியில் கான்கிரீட்டால் கட்டப் பட்ட ஒரு பதுங்கு குழி இருந்தது. படிகள் வழியாக அங்கே அழைத்துச் சென்றான். அங்கே ஒரு ஓரத்தில் டாய்லெட் வசதி இருந்தது.
‘‘கொஞ்ச நாளைக்கு நீ இங்கேதான் தங்க வேண்டும்.’’
‘‘எங்கப்பா, அம்மாவிடம் முதலில் போன் பேச வேண்டும்!’’
‘‘நோ! அந்தக் கடத்தல்காரர்கள் உன் வீட்டு போனை ஒட்டுக் கேட்கிறார்கள். நீ போன் பேசினால் நீ இருக்குமிடம் தெரிந்துகொண்டு, இங்கே வந்து தூக்கிச் சென்றுவிடுவார்கள்.’’
‘‘சரி சரி… லெட்டர்?’’
‘‘லெட்டர் எழுதி என் னிடம் கொடுத்தால் சேர்த்து விடுகிறேன்!’’
அந்த சைகோ சொன்ன கதையை நம்பிய சபீன், அந்த சின்ன பதுங்கு குழி அறை யிலேயே வாழத் தொடங்கி னாள். அவள் தன் குடும்பத் துக்கும், தோழிகளுக்கும் எழுதிக் கொடுத்த கடிதங்களை அவன் ரகசியமாக கிழித்து எரித்தான்.
சபீனுக்கு உணவுடன் சேர்த்து மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து அவ ளுடன் பாலியல் வல்லுறவு கொண்டான் அந்தக் கொடூரன். தனக்கு நடக்கும் கொடுமைகளை சரியாக புரிந்துகொள்ள இயலாத அவளைத் தொடர்ந்து 70 நாட்களுக்கும் மேல் வதைத்தான்.
சில நாட்களில் ஏதோ தப்பு நடப்பது அவளுக்குப் புரிந்தது. பயம் அவளை ஆக் கிரமித்தது. தனக்கு போரடிப்பதாகவும், யாராவது ஒரு பள்ளித் தோழியையாவது பார்க்க வேண்டும் என்றாள்.
அடுத்த நாளே அவளுடைய பள்ளித் தோழி லட்டீட்டா அந்தப் பதுங்கு குழியில் இருந்தாள். அவளிடம் வேறு வகையான பொய்கள் சொல்லி கடத்தி வந்துவிட்டான். நீங்கள் இருவரும் என் பாதுகாப்பில்தான் இருந்தாக வேண்டும் என்று பகிரங்கமாக மிரட்டியதோடு, அந்தத் தோழியுடனும் பலவந்தமாக உறவுகொண்டான்.
லட்டீட்டாவைக் கடத்தியபோது அவன் பயன்படுத்திய காரின் எண்ணை ஒருவன் பார்த்திருந்தான். லட்டீட்டாவின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். போலீஸ் பள்ளியிலும் பல இடங்களிலும் விசாரித்தபோது, கார் எண்ணைப் பார்த்தவன் சொல்லிவிட்டான். அடுத்த சில மணி நேரத்தில் டட்ரோக்ஸின் வீட்டு வாசலுக்கு வந்து நின்றன போலீஸ் வாகனங்களும் மீடியா வாகனங்களும்.
அவனைக் கைது செய்து விசாரிக்க விசாரிக்க பல அதிர்ச்சியான தகவல்கள் வந்தன. ஏற்கெனவே இதே போல நான்கு இளம் பெண்களைக் கடத்தி வந் திருக்கிறான். அவர்களில் இருவர் பதுங் குக் குழியில் இருந்தபோது டட்ரோக்ஸ் ஒரு கார் திருட்டு வழக்கில் போலீஸிடம் சிக்கினான். அந்த வழக்கில் இருந்து விடு பட்டு அவன் திரும்பி வந்து பார்த்தபோது, அந்த இரண்டு பெண்களும் பட்டினியில் இறந்து உடல்களாகக் கிடந்தனர். அந்த உடல்களை தன் தோட்டத்திலேயே புதைத்திருக்கிறான். இன்னும் இரண்டு பெண்களைக் கடத்தி வந்து பாலியல் வன்முறைக்குப் பின் உயிரோடு புதைத்திருக்கிறான்.
கோர்ட்டில் அவன் கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல், நாடு முழு வதும் சிறுமிகளை அனுபவிக்கும் வக்கிரப் புத்தியுடன் ஓர் அமைப்பே இயங்கிக் கொண்டிருப்பதாகவும், அதில் தான் ஓர் உறுப்பினர் என்று சொன்னான். விசாரித்துப் பார்த்த காவல்துறை அவன் பொய் சொல்வதாக சொன்னார்கள். கோர்ட் அவனுக்கு மரண தண்டனை கொடுத்தது.
2006-ல்
சபீன் தன் தந்தையின் விருப் பப்படி அவரைப் போலவே ஒரு போலீஸ் அதிகாரியானாள். தன் பதுங்கு குழி அனு பவங்களை ஒரு புத்தகமாக எழுதினாள். அந்தப் புத்தகத்தின் தாய் மொழித் தலைப்பு: ‘I was twelve years old, I took my bike and I left for School’ ஆங்கிலத் தலைப்பு: I Choose to Live.
அந்தப் புத்தகம் இதுவரை 22 மொழி களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வெளிவந்த வருடத்தில் ஐரோப்பாவில் மிக அதிக எண்ணிக்கையில் விற்கும் பெஸ்ட் செல்லர் வரிசையில் இடம் பிடித்தது.
- வழக்குகள் தொடரும்
a

thax-thehindu

0 comments: