Friday, October 23, 2015

என் புருஷன் தமிழண்டா

1/ஜெ.சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: கர்நாடக அரசு, அன்பழகன் பதில் அளிக்க மேலும் 6 வாரம் அவகாசம்#தேர்தல்வரை/ஜவ்விழுப்புஇழுப்பாக


===============2/வேதாளத்தில் சைக்கோவாக நடிக்கிறார் அஜித்.-செய்தி # சைக்கோ நடிப்பில் முத்திரை பதித்த ரகுவரன் ,பிரகாஷ்ராஜ் ,தனுஷ் வரிசையில் இடம் பெறுகிறாரா?=============3/2016 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது: ஸ்டாலின் # அப்டியே வந்தாலும் கலைஞர் தான் முதல்வர்.நாம இல்லை
=============
4/ஐ.எஸ்.எல் தொடக்கவிழாவில் ரஜினிக்கு கிடைத்த அப்ளாஸ்... அப்செட் ஆன ஜெ # கபாலி கரெக்டா வந்துடுமா?தடை போட்ருவாங்களா?
=============5/த.மா.கா.கைகாட்டுகிறவர்களே ஆட்சியில் அமருவார்கள்: ஜி.கே.வாசன்- # அப்டியா?உங்களை நீங்களே கை காமிச்ட்டு சி எம் ஆகுங்க பார்ப்போம்==============6/50 வரைக்கும் உனக்கு அரசியல் வேணாம் தம்பி: விஜய்க்கு எஸ்.ஏ.சி. அறிவுரை # அரசியல் ஆசையைத்தூண்டி விட்டதே இவருதான்."============7/விஜயை கேலி செய்யும் 'அந்த 3 சமூக வலைத்தளங்கள்'! போலீஸ் கையில் லிஸ்ட் # கையில் இருப்பது புலி அளவு லிஸ்ட் ,நெட்டில் இருப்பதோ பாகுபலி அளவு
============8/மாணவர்கள் முகத்தை பார்க்கும் போதெல்லாம் புது சக்தி பிறக்குது- மு.க.ஸ்டாலின் # தி மு க வின் பவர் ஸ்டார் வாழ்க
===============/எஸ்ஏ சந்திரசேகரன் மீண்டும் நடித்து இயக்கும் புதிய படம்! அறிவிப்பு # இருக்காதே.இனி படம் இயக்கமாட்டேன்னு சத்தியம் செஞ்சாரே?மானஸ்தர் ஆச்சே?===============10/தொகுதி மாறினால் ரூ. 25 கொடுத்து புது அடையாள அட்டை பெறலாம் - தலைமை தேர்தல் அதிகாரி சக்சேனா # கட்சி மாறுனா?கூட்டணி மாறுனா?===============11/மூன்று முகம் கிடைக்கவில்லை... விஜய் - அட்லீ படத்தின் தலைப்பு 'காக்கி?' # கொக்கின்னு வைங்க.மேட்சிங்கா இருக்கும்.கரண் கண்டுக்கமாட்டாரு
============12/சரத்க்கும், எனக்குமான மோதலுக்கு வரலட்சுமி காரணமல்ல - விஷால் # தவளை தவளை.இதை சொல்லாம இருந்திருந்தா தேவலை.எல்லாருக்கும் தெரிஞ்சிடுமேன்னு கவலை===========13/திமுக தலைவர்கள் தொண்டர்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு- ! ஸ்டாலின் # பகுத்தறிவுப்பகலவர்கள் இப்டி பல்டி அடிக்கலாமா?============14/மகாரஷ்ட்ராவில் 30 ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது

# கவர்மென்ட் ஆபீசர்க்கு உண்டான மரியாதையே போச்சு.மினிமம் 5000 ரூ வாவது வாங்க வேணாமா?

===========

15/"என் புருஷன் தமிழண்டா"- நடிகை ராதிகா ஆவேசம். # டைட்டில்பிரமாதமா இருக்கே? பதிவு பண்ணிக்கலாமா?

===============


16/ விஷால் மீது தாக்குதல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.-விஜயகாந்த்# அடடா.டி வி பாருங்க.தெரியும்.பிளாஸ் நியூஸ் ல ஓடிட்டு இருக்கு==============17/புலி தோல்வி காரண்மாக பத்திரிக்கை ஆட்களை சந்்திக்க மறுத்த விஜய் # வீரம்னா என்ன?தோல்வி அடைந்தாலும் எதையும் எதிர் கொள்ளும் திடம் கொண்டிருத்தல்============18/தேர்தலால் விஷாலுக்கும் எனக்கும் உள்ள நட்பு பாதிக்காது: வரலட்சுமி சரத்குமார்#பிரச்சனயே/வரலட்சுமி/தான==============

தேர்தல் முடிஞ்சதும் ஒரே குடும்பமா மாறிடுவோம்-விஷால் # வீட்டோட மாப்ளையா போய்டுவீங்களா? அது "ஆம்பள"க்கு அழகு இல்லீங்ளே ?===================20/ரஜினி எங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் -ராதாரவி

# அவரு கலைஞருக்கும் ,ஜெ வுக்கும் கூடத்தான் ஒரே டைம் ல் வெற்றிக்கு வாழ்த்து சொல்வாரு

=====================

0 comments: