Tuesday, June 19, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 11

  1. பெண்களை பிகர் என்று அழைப்பது இழிவான வார்த்தைகள் என்று சில புலவர்களால்  குற்றம் சாட்டப்படுவது பற்றி...

வாங்க டாக்டர் ரியாஸ்..  அதுக்கு பதில் சொல்லி எனக்கு சலிச்சுடுச்சு. அதாவது பெண் என்றால் ஒரு மதிப்பும், மரியாதையும் மனசுல எழுவது  எல்லாருக்கும் பொதுவானது. அதனால ஒரு கிளுகிளுப்பை ஏத்திக்க , சும்மா ஜாலிக்கு ஃபிகர், ஜிகிடி, சில்ஃபான்சி  அப்டி கூப்பிடறது வழக்கம் தான். இது ஆல்ரெடி சின்னி ஜெயந்த், சந்தானம்  எல்லாரும் காமெடி டிராக்ல யூஸ் செஞ்ச வார்த்தைகள் தான்.. அப்புறம் டாக்டர். ரியாஸ். கடைசி வரை உங்க ஹாஸ்பிடல் ஃபிகர்ங்களை கண்ல காட்டவே இல்லையே? . 2. உங்கள் பதிவுகளில் கிரந்தம் தவிர்க்கலாமே? உதாரணமாக இடீசல் இரீமா சென் ரசினி அசித் ஆலிவுட் ஆசுகார் இது போன்ற தூய தமிழ் சொற்களை நீங்கள் எழுதாதது ஏன் ?


தூய தமிழ் எனக்கு செட் ஆகாது.. நான் பேச்சு வழக்குத்தமிழுக்கு ரசிகன். தமிழ்ப்பிரியன் என காட்டிக்கொள்ள தமிழை கொலை செய்ய எனக்கு விருப்பம் இல்லை. நான் பேசறது , எழுதறது எல்லாம் சாதாரண மக்களுக்கு போய்ச்சேர்ந்தா போதும்.  ட்விட்டர் என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை கீச்சு. இது என்னமோ மாதிரி இருக்கு. அதே போல் சிலர் துவிட்டர் என அழைக்கனும்கறாங்க. ரவுடி என்பதை சிலர் இரவுடி என்கிறார்கள். என்னது இரவு டி யா? என கிண்டல் பண்ணிடுவாங்க. .. அதனால் கிரந்தம். ம்ஹூம்.

அதெல்லாம் சரி.. இந்த கேள்வியை நீங்களா கேட்டீங்களா? இல்லை டி பி கேடி அண்ணனுக்கு ஆப்போசிட்டா ஒரு கேள்வி வேணும்னு வேணும்னே கேட்டீங்களா?‎"சிகரெட்டை பற்ற வைத்தவரை தேசியவாதியாக கொண்டாடும் இந்த நாட்டில்,சுதந்திர தீயை பற்றவைப்பவர் என்றும் தீவிரவாதி தான்"

 3. இரண்டு வார்த்தையில் இரு நச் நடு நிசி கீச்சு சொல்லுங்களேன் 1. மந்தரா -96 = 69...2.  ஆர்யா ( 6 யா) + 9 தாரா = 69

4. இடுப்பை கிள்ளுவதால் இன்பம் என்ற சித்தாந்தம் பண்டை இலக்கியங்களில் உள்ளதா? 


உங்களுக்கு லொள்ஸ் ஜாஸ்தி.. இலக்கியம்னாலே எனக்கு அதிகம் தெரியாது.. இதுல பண்டைய இலக்கியம் வேறயா? அவங்கவங்க நிகழ்கால லவ்வர் அல்லது மனைவியை கிள்ளுனா இன்பம் தான். 5. உண்மையா சொல்லுங்க இதுவரை எத்தனை லவ் லெட்டர்ஸ் எழுதி இருப்பீங்க..அதுல எத்தனை போஸ்ட் பண்ணீங்க எத்தனை அந்நியன் படத்தின் அம்பியை போல பொட்டிக்குள்ள பூட்டி வச்சு இருக்கீங்க ? ஒருவேளை அப்படி இருந்தால் அதை எப்போ உங்க ப்ளாகில் வெளியிடபோறீங்க  நான் பிளஸ்டூ படிச்சப்போ  நிறைய பேருக்கு அவங்க காதலிக்காக லவ் லெட்டர்ஸ் எழுதி ஹெல்ப் பண்ணி இருக்கேன்.. அது ஆல்ரெடி கண்மணிக்கு ஒரு கடிதம்கற டைட்டில்ல இதயம் பேசுகிறது இதழில் தொடராக 7 வாரங்கள் வந்தது. விரைவில் பிளாக்கில் போடறேன் 


 6. சினிமா பற்றிய ஒரு கேள்வி..மம்முட்டி உதயநிதி  ஸ்டாலின் இருவரும் போட்டி நடனம் ஆடினால் யாருக்கு அதிகம் மார்க்ஸ் தருவீங்க 


மம்முட்டியை விட  உதய நிதி ஓரளவு சமாளிக்கிறார் . அதனால என் ஓட்டு உதய நிதிக்கே. . இதுல 2 சுய நலம் இருக்கு.. அவர் படத்துல காமெடி டிராக் எழுத வாய்ப்பு கேட்டிருக்கேன். இன்னொன்னு கலைஞர் அய்யா குடும்பத்தை எதிர்த்துக்கிட்டு சினி ஃபீல்டுல குப்பை கொட்ட முடியாது ரொம்ப சிரமம்.. 

 7. சிராக்கோ படத்துக்கு விமர்சனம் எழுதுவீங்களா? ஆவலுடன் ரசிகர்கள் இப்படி யாராவது உசுப்பேத்தி விட்டுடுங்க. நானும் மெனக்கெட்டு விமர்சனம் போடறேன். ஜாலியா படிச்சுட்டு நாளைக்கு ஒரு பிரச்சனைன்னு வர்றப்போ  சி பி மோசமான ஆளு. கில்மா படத்துக்கு விமர்சனம் எல்லாம்  எழுதறான். அவன் கூட ஆரும் அன்னம் தண்ணி புழங்கக்கூடாது.. எந்த பெண்ணும் டி எம் ல கடலை போடக்கூடாதுன்னு மறைமுக மிரட்டல் உத்தரவு போடுங்க.. போங்கய்யா யோவ்.. நானும் உங்களை மாதிரி கமுக்கமா இருக்க முடிவு பண்ணிட்டேன்.. நோ கில்மா பட விமர்சனம் .


மேலே உள்ள 7 கேள்விகளையும் கேட்டு எனக்கு ஏழரையை கூட்டியவர் மதுரை பல் டாக்டர் ரியாஸ்.. 


8. உங்களது  வேலை நாளும், விடுமுறை நாளும் எப்படி கழியும்? விவரிக்கவும்.-

 திரு என்னும் மேங்கோ சிட்டி பாய் சேலம் 


திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 டூ 7.30 ஆஃபீஸ் டைம்.. சனிக்கிழமை ஆஃப் டே.  இதுல வாரா வாரம் வெள்ளி, சனி மட்டும் 4 படம் பார்த்து டைப் பண்ணி வெச்சுக்குவேன்.. சனி ஞாயிறு புது போஸ்ட் எதுவும் பெரும்பாலும் போட மாட்டேன். திங்கள் டூ வியாழன் 4 விமர்சனங்களையும் டெயிலி ஒண்ணா போடுவேன்.

ஞாயிறு ஃபுல் ரெஸ்ட்.. பாப்பாவைக்கூட்டிட்டு பார்க் , ஸ்விம்மிங்க் பூல், ஆறு அப்டி ரவுண்டிங்க்.. டி வி பார்ப்பேன்... அப்புறம் ஜனநாயகக்கடமை ஆற்றுவேன்.. ஐ மீன் சாப்பாடு, தூக்கம்.


9.உங்களுக்கு பிடிச்ச ஹீரோ மற்றும்ஹீரோயின் யார்? ஓப்பன் பதில் தேவை

- -திரு என்னும் மேங்கோ சிட்டி பாய் சேலம்


வழக்கமா எல்லா சட்டை பட்டனையும் போட்டிருப்பேன். இந்தக்கேள்விக்காக ஒரு பட்டனை கழட்டி விட்டுட்டேன். பிடிச்ச ஹீரோ - ரஜினி , கமல். பிடிச்ச ஹீரோயின்ஸ் அந்த டைம்க்கு யார்க்கு மார்க்கட்டு  நல்லாருக்கோ அதாவது  அந்தந்த காலகட்டத்துல யார் ஃபேமசோ அவங்க ரசிகன். லேட்டஸ்ட்டா அஞ்சலி..
10.விளையாட்டுக்காக இல்லை, நிஜமாவே நீங்க சி எம் ஆனா என்ன செய்வீங்க.. சீரியஸ் பதில் தேவை.. --திரு என்னும் மேங்கோ சிட்டி பாய் சேலம் 


அரசியலுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம்.. மக்கள் செல்வாக்கு உள்ள ரஜினி உட்பட பர் அதுல இறங்க யோசிக்கறாங்க.. அதனால அப்படி ஒரு கற்பனையே வேணாம்.. ஆனாலும் உங்க கேள்வியை நானே கொஞ்சம் மாத்தி போட்டு கேட்டு பதில் சொல்றேன்..அதாவது அதி முக , திமுக போன்ற தீய சக்திகள் எதிர்காலத்தில் செல்வாக்கு இழந்து ஒரு புது ஆள் சி எம் ஆனா அவர் ஆக்கபூர்வமா என்ன செய்யனும்?


1. குஜராத் சி எம்மை நேர்ல சந்திச்சு மது விலக்கு கொண்டு வந்தும் எப்படி நிர்வாகம் பண்ண முடியுது?ன்னு கேட்டு அதன்படி தமிழ் நாட்டிலும் மதுவிலக்கு கொண்டு வந்து ஆக்க பூர்வமான பணிகள் செய்யனும்..

2. இலவச திட்டங்களை முற்றிலும் ஒழிக்கனும்....ஓ சி அப்டின்னாலே ஒரு இளக்காரம் வந்துடும்..

3. விவசாயிகளுக்கான திட்டங்கள் நிறைய கொண்டு வரனும்.. நாட்டிலேயே அதிக சம்பாத்தியம் விவசாயிக்கு என்ற நிலை வந்தால் விளை நிலங்கள் விலை போவது தடுக்கப்படும்.. விவசாயத்துக்கு ஆள் இல்லாம தடுமாறும் அவல நிலை வராது..

4. தனியார்  பள்ளி ஆசிரியை ரூ 1800 சம்பளம் வாங்கி செய்யும் அதே வேலையை அரசு பள்ளி ஆசிரியர் ரூ 30000 சம்பளம் வாங்கி செய்யறார்,... அஎஅசு பணீ, தனியார் பணி இவற்றுக்கான சம்பள விகிதம் பல மடங்கு வித்தியாசம் இருப்பதை மாற்றனும்..


5. தமிழில் டைட்டில் இருந்தால் வரி விலக்கு என்ற கேனத்தனமான திட்டத்தை ரத்து செய்யனும்.. ஹீரோக்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கறதை கட்டுப்படுத்தி அதில கடும் வரி விதிக்கப்படனும்


6. தீவிரவாதம் தலை தூக்காம பார்த்துக்கனும்.. எம் எல் ஏ , க்களுக்கான பவரை குறைக்கனும்.. அவங்களை கண்காணிக்கனும்


7. சி எம்மாக வருபவர் குடும்பஸ்தராக இருக்கக்கூடாது... வாஜ்பாய் போல் பிரம்மச்சாரியாக ,காமராஜர் போல் எளிமையானவராக ,நடு நிலைமை வகிப்பவராக இருக்கனும்..

தயவு செய்து .... டாலர் மட்டும் பிச்சை போடவும்.....
மன்னிக்கவும் ......இந்திய பணம் வாங்க இயலாது......

நமசிவாயம் தில்லை அருள்...


11. சில பதிவுகளில் ஓடி போவது, கள்ளகாதல் பதிவுகள் எழுதி வருகின்றீர்கள். இதன் தாக்கம் என்ன ? உலகில் எவ்வளவோ நல்ல விடயங்கள் உள்ள போது தங்கள் ஆக்கபூர்வமான சிந்தனையை ஏன் இந்த மாதிரி செய்திகளில் செலுத்துகின்றீர்கள்?

அ) கள்ள காதலர்கள் சங்கத்தில் இருந்து கொலை மிரட்டல் வந்தால் என்ன செய்வீர்கள்? -
J.P Josephine baba(ஜோசபின் கதைக்கிறேன்)


உங்க கேள்வியிலேயே பதில் இருக்கு.. கேள்வியின் முதல் வார்த்தை என்ன? சில பதிவுகளில்..... அவ்ளவ் தான் மேட்டர் ஓவர்... பல பதிவுகளில் நல்ல விஷயங்கள் சொல்லி வர்றேனே?பொதுவா மக்கள் மத்தியில் 1000 நல்ல விஷயம் சொன்னா அது அவங்க கண்ணுக்குத்தெரியாது.. ஒரு கெட்ட விஷயம் சொன்னா உடனே பளிச்னு தெரியும்.. நான் எல்லா விஷயங்களையும் கலந்து கட்டித்தரும் காக்டெயில் பிளாக்கரா ஆக ஆசை ..அவ்ளவ் தான்

கள்ள காதலர்கள் சங்கத்தில் இருந்து கொலை மிரட்டல் வந்தால் ஃபோனை கட் பண்ணிடுவேன் ஹி ஹி 


12. கில்மா என்ற சொல் வரலாறு தெரிந்த கொள்ள இயலுமா? கில்மா சொல்லும் உங்களுக்கும் ஏன் இந்த நட்பு? -J.P Josephine baba(ஜோசபின் கதைக்கிறேன்)
செக்ஸ், பால் உறவு, உடல் உறவு போன்ற வார்த்தைகள் சில சமயம் யூஸ் பண்ண வேண்டி வருது.. அப்போ கூச்சமா இருக்கும்.. ஏன்னா  என் அக்கா பசங்க என் பிளாக்கை படிக்கறாங்க.. அதனால பூடகமா இருக்கட்டும்னு கில்மாவை யூஸ் பண்றேன். கூல் மா ..... டோண்ட் திங்க் தட் கில்மா .


13. உங்கள் பதிவுகளில் அச்சம் நாணம் மடம் அற்ற பெண்கள் படங்களாக போடுவதின் பின்னனி என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?-J.P Josephine baba(ஜோசபின் கதைக்கிறேன்)

 போச்சுடா.. ஒரு முடிவோட தான் இருக்கீங்கனு நினைக்கிறேன்.. நான் போடும் சினிமா விமர்சனங்களில் , சில சினிமா பேட்டிகளில் அபூர்வமான கிளாமர் ஃபோட்டோக்களை போடுவது ஒரு ரிலாக்ஸேஷனுக்கு... எழுத்தில் ஏதாவது குறை இருந்தாலோ, அல்லது போர் அடிக்கற மாதிரி இருந்தாலோ அந்த ஸ்டில்ஸ் சரி பண்ணிடும்னு ஒரு நப்பாசை.. இப்போ கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுட்டு வர்றேன்.. 


சென்னையில் 1006 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் ஜெயலலிதா.
நேத்து நைட் மட்டும் 2012 பேர் ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடி இருப்பாங்க @ 2012 வது வருசம்டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.htmlடிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html
டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html
டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html


http://www.bestactress.info/wp-content/uploads/2011/07/kajal-agarwal-hot-saree-singam-movie.jpg


4 comments:

J.P Josephine Baba said...

நன்றி நண்பா. தங்கள் வேலைச் சுமை மத்தியிலும் என் கேள்விகளுக்கு பதில் அளித்தமைக்கு!

உணவு உலகம் said...

சுவையா இருக்கு சிபி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பதில்கள் நச்!விகடனில் நிஜாம் பக்கம்!.

R. Jagannathan said...

1006 ஜோடி ஏன் (1008 என்றால் அம்மா ராசி 9 வரும்!) என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இப்போது தான் தெரிகிறது 2012ன் மர்மம்! நல்லாத்தான் யோசிகீறீய்ங்க! - ஜெ.