Showing posts with label பதிவு. Show all posts
Showing posts with label பதிவு. Show all posts

Wednesday, December 05, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 21

Photo

அட்ராசக்க சி.பி. செந்தில்குமார் - சிறப்பு பேட்டி


வணக்கம் தமிழே....

  தமிழ் ப்பதிவுலகில் தனிமுத்திரையுடன் விளங்கிவரும் பதிவுலகின் நட்சத்திர பதிவர் சி.பி. செந்தில்குமார் அவர்களின் பேட்டி....இவரை பற்றி நா என்ன சொல்ல....

1. நகைச்சுவை
ஜோக் 1 -அஜித், விஜய் வெச்சு ஆமை , முயல் கதை எடுத்தா அஜித் வாக்கிங்க் போயே விஜயை ஜெயிச்சுடுவாரு # கி கி 


ஜோக் 2- நீங்க எப்ப ரொம்ப ரிலாக்ஸ்டா இருப்பீங்க? 


 சம்சாரம் ஊர்ல இல்லாதப்போ 


2. உங்கள் நகைச்சுவைகளுக்கு மிக சிறப்பான விமர்சகர் யார் ? ஏன்?


கிருஷ்ணகிரியை சேர்ந்த வி விஷ்ணுகுமார் , அம்பை தேவா . இருவரும் நீண்ட கால நன்பர்கள் . ஜோக் நல்லாருந்தா நல்லாருக்குன்னும் , மொக்கையா இருந்தா செம மொக்கைன்னும் ஓப்பனா சொல்லிடுவாங்க.. 

3. நீங்கள் எழுதிய முதல் நகைச்சுவை பற்றி?

சூப்பர் நாவல் எஸ் பி ராமு  நடத்திய சூப்பர் நியூஸ் எனும் மாதம் இரு முறை இதழில் ஜோக் போட்டி வெச்சிருந்தாங்க . அதில் எழுதிய  ஜோக்
 இவ்ளவ் பெரிய மீசை வெச்சிருக்கறவங்க எல்லாம் ஆஃபீஸ் ஹால்ல வெயிட் பண்றாங்களே, எதுக்கு?
 அரசுத்தூதர்க்கான இண்ட்டர்வ்யூ  ( நக்கீரன் கோபால் வீரப்பன் பீரியட்) 


ஆனந்த விகடன்ல வந்த முதல் ஜோக்தான் என்னை பலர்க்கும் அறிமுகம் செஞ்சதுஜட்ஜ் - மணிபர்சை நீ பிக்பாக்கெட் அடிச்சியா? 

 கேடி - நோ யுவர் ஆனர், மணி பர்சை பாலு எடுத்தான், கந்த சாமி பர்சைத்தான் நான் அடிச்சேன் 


இனிய காலை வணக்கம் நண்பர்களே.....

4. நகைச்சுவையால் நோயால் உள்ளவரை சிரிக்க வைத்த அனுபவம்?

அந்த அளவுக்கு இன்னும் போகலைங்க.. என் ஜோக்ஸ் படிச்சுட்டு தலைவலி வந்தவங்க , வயித்தால போனவங்க , முகத்துல அடி பட்டவங்க வேணா இருக்காங்க ( விழுந்து விழுந்து சிரிச்சதால ) 

5.தமிழ் இணையத்தில் வளர்கிறதா?


 தமிழ் இணையத்தில் வளருது என்பதை விட தகவல்கள் வளருதுன்னு சொல்லலாம் .இன்னும் நிறைய பேருக்கு தமிழ் ஃபாண்ட் இருப்பதே தெரியாம இருக்கு 6. சில இடங்களில் இரட்டை அர்த்தம் ஏன்?

டபுள் மீனிங் சங்க காலத்துல இருந்தே இருக்கு . அதையும் ரசிக்கறாங்க. கே பாக்யராஜின் பிரபலத்துக்கு மிக முக்கிய காரணம் பெண்களும் ரசிக்கும்படி டபுள் மீனிங் காமெடி செஞ்சதால


.நான் மிகவும் ரசிச்சது ஆராரோ ஆரிராரோ படத்துல மன நலம் குன்றிய பானுப்ரியாவை உப்பு மூட்டை தூக்கி விளையாடும்போது அவர் முதுகுல கிளு கிளுப்பா மெத் தேகம் பட்டதும் தர்ம சங்கடம் ஆகி ( தர்ம சந்தோஷம் !!)  மூட்டையை திருப்பிப்போட்டுக்கறேன்பாரு. ஒரே கிளாப்ஸ். அந்த டைம்ல தான் கதை வசனம் - கே பாக்யராஜ்னு போடுவாரு. அந்த அளவுக்கு வர முடியலைன்னாலும் குரு சென்ற பாதையில்.. 


விரைவில் உங்கள் வடிவில் புதிய முந்தானை முடிச்சு எதிர்பார்க்கலாமா ....!
Photo


7. புதிய தலைமுறையில் கூறியிருந்திர்கள் ஜோக் பற்றி சிந்திப்பதால் வீட்டில் திட்டு வாங்குகிறேன் என.. அந்த வகையில் வாங்கிய மிக பெரிய பல்பு


சமையல் பண்றப்போ சம்சாரம் காய்கறி நறுக்க சொல்ல கூப்பிட்டா ஜோக் எழுதனும்னு உக்காருவேன். ஜோக் எழுதி அறுக்கறதுக்கு காய்கறி அறுத்தாலாவது யூஸ்ம்பாங்க 


 என் பாப்பா  8 வயசுலயே போஸ்ட் கார்டு எடுத்து வெச்சுக்கிட்டு நானும் அப்பா மாதிரி ஜோக் எழுதறேன் அப்டிங்கும், அப்போ மச்சினி  அதாவது பாப்பாவோட சித்தி “ நீயாவது சிரிப்பு வர்ற மாதிரி ஜோக் எழுது , அப்பா மாதிரி மொக்கை போடாதேம்பாங்க.. 

8. முதல் பதிவு பதிவிட்ட அனுபவம்


முதல் பதிவு  நல்ல நேரம் பிளாக்ல நண்பர் சதீஷ் வழி காட்டுதலில்  ராவணன் பட விமர்சனம் எழுதுனேன். டைட்டில்லயே அட்டர் ஃபிளாப் என் தைரியமாக  கேப்சர் பண்ற மாதிரிஅவர் பிரமோட் பண்ணாரு. நல்ல ஹிட் ஆச்சு. அப்போதான் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சுது ,  படம் ஃபிளாப் ஆனாலும் நாம எழுதும் பட விமர்சனம் ஹிட் ஆகனும்


9. பதிவுலகில் தாங்கள் பெற்ற முதல் நட்பு

 நல்ல நேரம் கே சதீஷ் குமார் சித்தோடு , சிரிப்புப்போலீஸ் ரமேஷ் சென்னை dei:: Jimpalakkadi Bambaaaa.... Apricaaa UNCLE :-)

10. இனையத்தால் நீங்கள் பெற்ற நன்மைகள் தீமைகள் என்ன?


 நன்மை  - உலகம் பூரா பலரது அறிமுகம் , பாராட்டுக்கள் வாழ்த்துகள். ஒரு கல்யாணத்துக்கோ ஆஃபீஸ் வேலையா எந்த ஊருக்குப்போனாலும் அங்கே ட்விட்டர் நண்பர்களை சந்திப்பது 


 தீமைகள் - உறவினர்களுக்கு அதிக நேரம் செலுத்துவதில்லை என குடும்பத்தார் குறை 11. ஆரம்ப காலங்களில் உங்கள் பதிவை பிரபலபடுத்த உழைத்த அனுபவம்

அப்படி ஏதும் பெருசா உழைக்கலை.  சாதாரணமாத்தான் போஸ்ட் போடுவேன். இப்போதான் அதுக்காக மெனக்கெடறேன் 

12. உங்கள் ஜோக்கால் சிரிக்க வைக்க முடியாத நபர்

 தாலி கட்டிய என் சொந்த சம்சாரம் . படு சீரியஸ் பார்ட்டி 


படிக்கமாட்டங்களா தைரியமா சொல்லிட்டீங்க
13. கணக்கில் நீங்கள் புலியா? புளியா?

 பாடத்துல புலி  10, + 2 ல செண்ட்டம்


, வீட்டில் சமையல் அறையில்  புளி

14. புதிய பதிவர்களுக்கு

 பழைய பதிவர்களை பார்த்து நல்லதை கத்துக்குங்க. உங்க தனித்தன்மையை விட்டுடாதீங்க . எல்லார் பிளஸ்ஸையும் ஃபாலோ பண்ணூங்க. யாருடைய மைனசையும் ஃபாலோ பண்ணிடாதீங்க 

நன்றி - தினப்பதிவுthir Rath shared Anjaana Anjaani's photo.இதன் 17 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/17.html


 இதன் 18 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/18.html

இதன் 19 ஆம் பாகம் படிக்காதவர்கள்   http://www.adrasaka.com/2012/10/19.html


 இதன் 20 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www.adrasaka.com/2012/11/20.html
Wednesday, November 21, 2012

2000 வது பதிவு - திருப்பூர் - ஆஸ்திரேலியா மினி ட்வீட்டப்

நால்வர் அணி

கோவை சதீஷ் , கானா ப்ரபா, சி.பி , ராஜ நாயகம் சார் 

கானா ப்ரபாவை பிளாகரா, ட்விட்டரா கொஞ்ச நாளா தான் பழக்கம். ஆனாலும்  நீண்ட நாள் நண்பர் போல் அவர் மேல் ஈர்ப்பு வர 3 காரணங்கள் . முதல் காரணம் அவர் ஒரு ஈழத்தமிழர். அவரை நேரில் சந்திச்சா அங்கே உண்மை நிலவரம் என்ன போன்ற நாம் அறியாத வரலாற்று உண்மைகள் அறியலாம்.  2 வது காரணம் யாருடனும் அவர் சண்டை போட்டு பார்த்ததே இல்லை, எல்லோருடனும் இணக்கமாக இருக்கும் கலகலப்பு பிரியர் . மூணாவது காரணம் முக்கியம் , இதுல கொஞ்சம் சுய  நலம். அதாவது என் சினிமா விமர்சனத்தில் பலர் கிண்டல் பண்ணுவது - இயக்குநருக்கு சில கேள்விகள்.அது பொதுவா அவங்க படிக்க எழுதுவது அல்ல, மக்கள் ரசிக்க எழுதுவது. ஆனால் பலரும் அது தேவையற்றது என சொல்லி வந்த வேலையில் இவர் தான் முதன் முதலாக அதை ரசித்து முன்னிலைப்படுத்தினார்.


ஆஸ்திரேலியாவில் சிட்னியில் இவர் ஒரு ரேடியோ ஜாக்கியா பணி ஆற்றி வருகிறார், நம்ம கோமாளி கோபி செல்வா கூட ரேடியோ ஜாக்கி ஆக வேண்டும் என்ற லட்சியம் உடையவர் தான்.இவரது கடுமையான உழைப்பு பற்றி நான் எப்போ அறிந்தேன் எனில் மவுன ராகம் படத்தின் பி ஜி எம் பற்றி அக்கு வேறு ஆணி வேறாய் இவர் அலசியது.அதுவரை இளையராஜாவின் இசை ரசிகனாக இருந்தவன் அப்பதிவு படித்த பின் நுணுக்கமாய் பலவற்றை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.பின்னணி இசை பற்றிய பல அரிய தகவல்கள் , கலெக்‌ஷன்கள் கிடைக்கப்பெற்றேன்.


அப்பேற்பட்டவர் சிட்னியில் இருந்து தனது தாயகமான யாழ்ப்பாணம் வர்றதா சொன்னதும் சந்திக்க உறுதி பூண்டேன்.அவர் தமிழகம் வந்து கோவை , கொச்சின் வர்றதாகவும் வழியில் ஈரோடும் வருவதாக அவரது 12 அத்தை பெண்கள் மேலும் சத்தியம் செய்திருந்தார்.ஆனா பாருங்க இடையில் என்ன ந்டந்ததோ  திடீர் என டாக்டர் ராம்தாஸ் போல் பல்டி அடிச்சுட்டார். ஈரோடு புரோகிராம் கேன்சல். கோவை , அல்லது திருப்பூரில் உனக்கு இஷ்டம்னா வந்து என்னை பார் அப்டின்னுட்டார்.


 ஒரு பிரபல பதிவர்னா ஒரு இது இருக்கனும் இல்லையா? அதனால அதை எல்லாம் நான் சகிச்சுக்கிட்டேன் .ஈரோடு டூ கோவை 100 கிமீ ஈரோடு டூ திருப்பூர்  42 கிமீ என்பதால் திருப்பூரில் சந்திக்க முடிவாச்சு . சென்னிமலையில் இருந்து காலை 6 மணிக்கு பஸ் ஏறி ஈங்கூர் போனேன். கோவை பாசஞ்சர் ஈரோட்டில் 7 மணிக்கு அது ஈங்கூர் வர 7.30 ஆகும். டிக்கெட் எடுத்து வெயிட்டிங்க்.. ஈங்கூர் டூ திருப்பூர்  32 கிமீ அதுக்கு ரயில் டிக்கெட் ஜஸ்ட் அஞ்சு ரூபாதான் , அதே எக்ஸ்பிரஸ்னா 28 ரூபா , ரிசர்வ்ல வந்தா 46 ரூபா .


ஹோம் மினிஸ்டர் கால் .பம்மும் பிரபா

ஹோம் மினிஸ்டரிடம் பம்மும் கானா 


காலை 8.40 க்கு திருப்பூர் போய் சேர்ந்தேன். ஆகாய மனிதன் என பிளாக்கிலும், ஒன்லி 1 என ட்விட்டரிலும் அக்கவுண்ட் வெச்சிருக்கும் அண்ணன் யுவராஜ் ரெடியாக ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தார். எனக்கு ரொம்ப சந்தோஷம். பொதுவா நமக்காக ஒருவர் காத்திருக்கிறார் என்பதே மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் தானே?


சரவண பவன் ஹோட்டல்ல டிஃபன் சாப்பிட்டோம் .அண்ணன் 2 இட்லிதான் சாப்பிட்டார் ( ஹன்சிகா இட்லி ) நான் வழக்கமா 3 ரோஸ்ட் ,  ஒரு பொங்கல் சாப்பிடும் ஆளாக இருந்தாலும் கண்ணு பட்டுடக்கூடாது என்பதால் ஒரே ஒரு ரவா ரோஸ்ட்டும் , ஒரு பொங்கலும் மட்டும் சாப்ப்பிட்டுட்டு  டைம் பார்த்தா காலை 9 மணி . அண்ணன் கானாப்ரபா 10 மணிக்கு வருவதாக சொல்லி இருந்தார் . ஒரு மணி நேரம் வெட்டி அரட்டை அடித்தோம் .என் மொபைல் சார்ஜ் அங்கே ஹோட்டல்லயே போட்டுக்கிட்டோம் . சார்ஜ் போட்டுக்குடுத்த ரிசப்ஷனிஸ்ட் கோமதிக்கு கோடானு கோடி நன்றி ;-))

எம் ஜி ஆர் மாதிரி அட்டகாசமாய் காரில் வந்து இறங்கினார்  அண்ணன் கானாப்ரபா . ஹிந்திப்பட ஹீரோ மாதிரி முகம். ஐ டெக்ஸ் மையின் கலரில் கன்னங்கரேல் என்ற முடி . 38 வயசாகியும்  ஒரு நரை முடி கூட இல்லை என்பது பொறாமை தருவதாகவும், ஏமாற்ற மாகவும் இருந்தது,. ஏன்னா எனக்கு 5 வருஷம் முன்னாடியே அதாவது 25 வயசுலயே நரை முடி வந்துடுச்சு  ( டேய் நாயே அது இள நரை இல்லை, கிழ நரை )ராஜநாயகம் சார் தன் திரைத்துறை அனுபவங்களை நவரசத்துடன் விளக்குகிறார்

ராஜ நாயகம் சார்   கோவை சதீஷ் , கானா ப்ரபா,  ஆகாய மனிதன் யுவராஜ்

காரை விட்டு இரங்கும்போதே அவருக்கு ரசிகையிடம் இருந்து ஃபோன் . ( ஏன்னா அண்ணன் வெட்கச்சிரிப்போட பம்மிக்கிட்டே பேசினாரு )கூட அவருடன் வந்தது கோவை சதீஷ் ட்விட்டர்ல சே சதீஷ் . ட்விட்டர்ல பல சீரியஸ் கருத்துக்கள் எல்லாம் போடுவாரு . ஆனா ஆள் நேரில் செம ஜாலி டைப்பாக இருந்தார்.


 அருகாமையில் உள்ள பார்க்குக்கு போனோம் .மூவரும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம் . இலங்கைப்பிரச்சனை  , எம் ஜிஆர் ஆதரவு  , ஜெயின் கமிஷன் என விவாதம் வளர்ந்தது .


 கானாப்ரபாவை பேசவே விடாமல் கோவை சதீஷ் அடிக்கடி இடை மறித்து தன் விவாதத்தை சூடாக முன் வைத்தார் .


 அடுத்து வந்தவர்  சினிமாத்துறையில் உதவி  இயக்குநராகப்பணி ஆற்றிய ராஜநாயகம் சார். வாட் எ மேன்? மிமிக்ரி , மோனோ ஏக்டிங்க்  என ஆள் நவரச நடிப்பையும் , நாகேஷின் பாடி லேங்குவேஜையும் சந்திர பாபுவின் வேகத்தையும் ஒருங்கே பெற்றிருந்தார். கொங்கு மண்டலத்தில் இருந்ப்பவர்கள் அவசியம் அவரை சந்திச்சுடுங்க.. அரிதான மனிதர் , சுவராஸ்யமான பொக்கிஷ தகவல்கள் அவரிடம் கொட்டிக்கிடக்கு.கே பாக்யராஜ் அவர்களிடம் அவர் ராசுக்குட்டி படத்தில் பணி ஆற்றிய சம்பவங்களை அவர் நினைவு கூர்ந்தார் . திரை உலகின் கறுப்புப்பக்கங்கள் , நீலப்பக்கங்கள் , பச்சைப்பக்கங்கள் அனைத்தும் பகிர்ந்தார் . 


 நீங்க ஏன் சினி ஃபீல்டுல சைன் பண்ணாம இங்கே வந்துட்டீங்க?


 ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் கதை தான். என்னை மாதிரி ஆட்களுக்கு சி நி ஃபீல்டு ஒத்து வர்லை


 பாக்யராஜ் சார்  உங்களுக்கு சம்பள விஷயத்துல நல்லா கவனிச்சுக்கிட்டரா?


 அதுல எல்லாம் குறை வைக்கலை..

 இல்லை, எதுக்கு கேட்கறேன்னா பாக்யா வார இதழ்ல் படைப்பாளிகளூக்கு சன்மானம் தர்றதில்லை, விசாரிச்சதுல வேட்டியை மடிச்சுக்கட்டு பட தோல்வியின் காரணமா ஏராளமாம்ன நட்டத்தை அவர் சந்திச்சார்னும் அதனால தான் சன்மானம் தர முடியலைன்னு சொன்னாங்க. அவர் வெற்றிகொடி நாட்டிய தருணங்களில் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொண்டாரா?


 அதுல ஒண்ணும் பிரச்சனை இல்லை. கூட இருந்தவங்க பலருக்கும் என்னை பிடிக்கலை,. பல காலம் ஆபீஸ் பாயாக இருந்து படிப்படியாக உதவி இயக்குநர் ரேஞ்சுக்கு வந்தவங்களால டக்னு மேலே  வந்த என்னை பிடிக்காம போயிடுச்சு


கானாப்ரபாவிடம் தனது 365 காதல் கடிதங்கள் நகல் அளிக்கும் ராஜநாயகம் சார்
சத்திய மூர்த்தி சார் ,பரிசல் , ராஜ நாயகம் சார்   , ஆகாய மனிதன் யுவராஜ்,கானாப்ரபா,   கோவை சதீஷ்

அவர் கூட ஒரு மணி நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்.


 அடுத்து பரிசலுக்கு ஃபோனை போட்டு வர்லியா?னு கேட்டோம். 12 மணிக்கு கிளம்பி வர்றதா சொன்னார் . யூ ட்யூப்பில் சினிமா விமர்சனம் செய்யும் அவினாசி இட்ஸ் பிரசாந்த்க்கும் தகவல் சொல்லியாச்சு .தனியா அனுப்பினா எங்கே போவாரோ என்றோ அல்லது தற்செயலாகவோ பரிசல் தன் இரு மகள்களின் கண்காணிப்பில் வந்தார் .  பைக்கில் வந்திருந்தார்.


 அவர் வந்ததும் விவாதம் சூடு பிடித்தது . ராஜன் பிரச்சனை குறித்து விரிவாக விளக்கினார். கானாப்ரபா ராஜனுடன் ஃபோனில் நலம் விசாரித்தார்.


பின்  பரிசல் ( இவர் பல வருடங்களுக்கு முன்  உல்லாச ஊஞ்சல் , உங்கள் ஜுனியர் மாத இதழ்களில் கே பி கிருஷ்ணகுமார் , உத்தம பாளையம் , திருப்பூர் என்ற பெயரில் கவிதை எழுதி வரும்போதே  பழக்கம் ) ஆஃபீஸ் வேலையாக தன் கம்பெனிக்கு தொழிலாளர்களை கமிஷன் பேஸில் அழைத்து வர ஒரிசா சென்ற அனுபவத்தை பகிர்ந்தார்.

அது 'கே.பி.கிருஷ்ணகுமார், கிருஷ்ணாபுரம் இல்லீன்னா உடுமலைப்பேட்டை இல்லீன்னா திருப்பூர் -ன்னு வரும்.   - பரிசல் பதில் ;-))


  ரத்த தானம் ,  உடல் தானம் , சில கேர்ள் ஃபிரண்ட்ஸ்களுக்கு முத்த தானம் என எல்லா தானமும் செய்த அவர் இணைய உலகில் முதன்  முதலாக லேப்டாப் தானம் செய்த சுவராஸ்யமான சம்பவத்தை திரைக்கதையுடன் விளக்கினார். அவர் கதை சொன்ன முறை சம்பவத்தை நேரில் பார்ப்பது போன்றே உணர்வைத்தந்தது .சத்திய மூர்த்தி என்னும் ட்விட்டர் நண்பர் வந்தார். அவர் அறிமுகம் அப்போதுதான் . என்ன ஆச்சரியம் என்றால் அவர் ஆகாய மனிதன் யுவராஹின் அப்பாவின் நண்பர். அங்கே தான் அறிமுகத்தில் தெரிந்தது. முகவரி படத்தில் பால குமாரன் எழுதிய வசனத்தை ரகுவரன் சொன்னது நினைவு வந்தது  - இந்த உலகம் ரொம்ப சின்னது ,இங்கே நல்லவங்க சந்திச்சே ஆகனும் “


 அப்புறம் 1 மணி வரை பேசிக்கிட்டு இருந்தோம் . ஹோம் மினிஸ்டரிடம் இருந்து ஃபோன் வரும்போது மட்டும்  கானாப்ரபா பம்மிக்கொண்டே தனியே போய் பேசி வந்தார் .

 ஆனானப்பட்ட பரிசலே தன் மனைவியிடம் இருந்து ஃபோன் வந்த போது பம்மியது செம காமெடியாக இருந்தது, வீட்டுக்கு வீடு  வாசப்படி .


 பின் பரிசல் விடை பெற்றார்.  ராஜ நாயகம் சார் கிளம்பினார். அனைவருக்கும் கானாப்ரபா 18 வகை இனிப்புகள் கொண்ட கோவையில் வாங்கிய ஸ்வீட் பாக்சை  பரிசாக அளித்தார். எல்லா ஸ்வீட்டும் இருந்துது, ஆனா அல்வா மட்டும் இல்லை , கேட்டதுக்கு “ என்னய்யா விபரம் தெரியாத ஆளா இருக்கே..  அல்வான்னாலே அது பொண்ணுங்களுக்கு தர்றதுக்குத்தானே? என்றார்.


எங்கப்பா சின்ன வயசுல சினிமாப்ரியராக இருந்தார், நாலணாவுக்கு விற்கும் சினிமாப்பாட்டுப்புத்தகங்களை வாங்கி சேகரித்து வைத்திருந்தார். அபூர்வமான கலெக்சன். 100 புக்ஸ் கொண்ட பைண்டிங்க் புக்ஸாக 10 புக்ஸ் மொத்தம் 1000 பாட்டுப்புத்தகங்கள் இருந்தன. அவை 1960 - 1970 இல் வந்த படங்கள்.


 பேசிக்கலாக கானாப்ரபா பாடல் , இசை ரசிகர் என்பதால் அவருக்கு பாட்டுப்புத்தகங்கள் பரிசாக அளிக்க நினைத்தேன். ஆனால் மனசில் ஒரு தயக்கம். பழைய பாட்டுபுக் என அவர் ஏதாவது நினைப்பாரா? என . அப்படி ஏதும் நினைக்கவில்லை. மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். எனக்கு மிக்க மகிழ்ச்சி , எங்கப்பாவின் அபூர்வ கலெக்‌ஷன்  சிட்னியில் பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை .


பின் லஞ்ச் சாப்பிட   அவினாசி ரோட்டில் உள்ள  சரவண பவன் போனோம். சாப்பாடு காலி,. வெரைட்டி மீல்ஸ் , டிஃபன் அயிட்டம்தான் . வெஜிடபிள் ஃபிரைடு ரைஸ் , தக்காளி சாதம் , தயிர் சாதம்  ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம் .

 ட்வீட் லாங்கர் சாப்பாடு என கமெண்ட் போட்டு அதை ஃபோட்டோ எடுத்து ட்விட்டரில் கானாப்ரபா போட்டார்.


 அப்போ பிரசாந்த் வந்தார். ஆள்  ட்விட்டர் டி பி யில் அப்பாவி மாதிரி முகத்தை வெச்சிருந்தாலும் நேரில் தாதா போல் ஆஜானுபாவத்துடன் இருந்தார். அவர் உள்ளங்கை முறம் போல் இருந்தது , ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் . அவருடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம் .


 பிரியும் நேரம் வந்தது . எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு நானும் யுவராஜும்  திருப்பூர் ரயில் நிலையம் வந்தோம் . அப்போ  மாலை 3. 4 மணிக்கு ரயில் . உள்ளே வந்து ஒரு மணி நேரம் கம்பெனி குடுத்தார். பின் ரயில் வந்ததும் கிளம் பியாச்சு


 அனைவருக்கும் நன்றி !!!
 
 

Monday, November 19, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 20இனிய காலை வணக்கம் நண்பர்களே..


2012/10/22 சசி மோகன் குமார்

1.திரைப்படம் இயக்கும் எண்ணம் உண்டா ?  அட்லீஸ்ட் ஒரு குறும்படமாவது 


கண்டிப்பா. ஆனா அதுக்கான முன் அனுபவம் இல்லை. எந்த இயக்குநரிடமாவது உதவி இயக்குநரா பணி ஆற்றி தொழில் கத்துக்க குடும்ப சூழல் இடம் தர்லை. குறும்படம் இயக்குவது உறுதி. ஆனாலும் எப்பவும் என் கண் , மூளை எல்லாம் சினிமாப்படம் பற்றிய தாகத்தில் இருக்கும். வாய்ப்பு வரட்டும் ஐ ஆம் வெயிட்டிங்க் ;-)) 2.உங்கள் வாசிப்பு பழக்கம் எப்போது இருந்து ஆரம்பித்தது ? யாருடைய எழுத்துகளுக்கு நீங்கள் ரசிகன் 


நான் அஞ்சாங்கிளாஸ் படிச்சப்பவே காமிக்ஸ் புக்ஸ் படிக்க ஆரம்பிச்சுட்டேன். லயன் காமிக்ஸ் , முத்து காமிக்ஸ் , ராணி காமிக்ஸ் அப்டினு. அம்புலிமாமா , பாலமித்ரா, பூந்தளிர் முதல் கொண்டு சரோஜா தேவி , சினிமித்ரன், இந்து நேசன் வரை எல்லா வகை புக்ஸும் படிச்சேன்.

 சுஜாதா ,கு அழகிரிசாமி , புதுமைப்பித்தன், பி கேபி , சுபா , ராஜேஷ் குமார்ல இருந்து எல்லா எழுத்தும் ரசிச்சு படிச்சாலும் ஆல் டைம் ஃபேவரைட் அமரர் சுஜாதா 3.கேபிள் சங்கரை போல்  புத்தகம் போடும் எண்ணம் இருக்கிறதா ?
கண்டிப்பா , என் முதல் திரைப்பட முயற்சி “ கோவை ப்ரீதி கொலை வழக்கு” , சின்மயி சைபர் க்ரைம் கேஸ்  ஆகிய 2 புத்தகங்கள் போடும்  ஐடியா உண்டு. டாப் டென் சினிமா விமர்சனங்கள் , பெஸ்ட் திரைக்கதை , ஆகிய தலைப்பில் மேட்டர் ரெடி . ஆனா அதுக்காக பணம் செலவளிக்கும் எண்ணம் இல்லை. ஏதாவது பதிப்பகம் என் எழுத்தின் மேல் நம்பிக்கை வைத்து  வாய்ப்பு கொடுத்தால் புக் வெளியிடத்தயார்4.உங்கள் மனதை மிகவும் மனதை பாதித்த விஷயம் ஒன்று
என் அப்பாவின் மரணம் தான். அப்போது எங்க வீட்டில் தொலை பேசி , அலைபேசி வசதி இல்லை. அம்மா, அப்பா சென்னிமலையில். நான் ஈரோட்டில். என்னிடம் அலை பேசி வசதி இருந்தது. அப்பாவுக்கு திடீர் என ஹார்ட் அட்டாக் ஏற்பட்டபோது அம்மா தகவல் தொடர்புக்கு மிகவும் சிரமப்பட்டார்கள்..


 என் நண்பர்கள் 2 பேர் சென்னிமலையில் டாக்டர்களாக, மெடிக்கல் ஷாப் ஓனர்களாக இருக்காங்க.. அம்மாவுக்கு ஒரு செல் ஃபோன் வாங்கிக்கொடுத்திருந்தா , அவசரத்துக்கு இவங்க ஃபோன் நெம்பர்  வெச்சுக்கோன்னு குடுத்திருந்தா ஒரு வேளை அப்பாவின் மரணத்தை தள்ளிப்போட்டிருக்கலாம். இது என் மனதில் ரொம்ப நாளாக குற்ற உணர்ச்சியாக தங்கி இருக்கு.


என் வாழ்வின் படிப்பினை - அனைவரும் அவரவர் பெற்றோருக்கு செல் ஃபோன் வாங்கிக்குடுத்து அதை உபயோகிக்கும் முறை கற்றுக்கொடுப்பது அவசியம் ;(((
..?சந்தோஷமான விஷயம் ஒன்று ? கூறவும்


2000 ஆம் ஆண்டின் டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் செலக்‌ஷனில் குமுதம் வார இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டது, மீண்டும் 2012 ஆம் ஆண்டின் தீபாவளி டைமில் அதே ரேங்க்கில் செலக்ட் ஆனது 


5.சந்திக்க விரும்பும் பிரபலம் யார் ?
யாரும் இல்லை. என் வாழ்வில் நடந்த பல கசப்பான அனுபவங்கள் அறிவுறுத்தும் விஷயம் 1 தான் . பிரபலங்களை தூர நின்று ரசி . அருகில் போய் பார்க்க ஆசைப்பட்டால் நம் மனதில் அவர்கள் பற்றிய பிம்பம் கலைந்து விடும்

 
6.அரசியல் பிடிக்குமா ? ஏன் அரசியல்  பதிவுகளை போடுவதில்லை அரசியல்வாதிகளை விமர்சிப்பது இல்லை   பயமா? அரசியல்வாதிகள் எல்லோரும் அயோக்கியர்களாக இருக்காங்க. கக்கன் , காமராஜர் காலம் எல்லாம் மலை ஏறிப்போச்சு. எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். அரசியல்வாதிகளை தாக்கி பல பதிவுகள் , ட்வீட்கள் போட்ட்டுட்டுதான் இருக்கேன் 
7.நெகிழவைத்த திரைப்படம் எது, பிடித்த நடிகர், நடிகை  இயக்குனர் யார் ? உதிரிப்பூக்கள். நான் பார்த்த செயற்கைத்தனமே இல்லாத படம் .


ரஜினி, கமல் , அஜித், விஜய்  உட்பட எல்லா நடிகர்களையும் பிடிக்கும். ராமராஜன் , பவர் ஸ்டார் பிடிக்காம இருந்தது. விஜய் டி வி சர்ச்சையில் அவர் அணுகுமுறை என்னை மாற்றி விட்டது

 நடிகைகள் 18 டூ 25 எல்லாரையும் பிடிக்கும். யாரையும் ரிஜக்ட் பண்ற பழக்கம் எனக்கு இல்லை

 இயக்குநர் மணி ரத்னம்8.ஒரு நாள் முழுக்க உங்களால் மொபைல் , கம்ப்யூட்டர் , புத்தகம் , இல்லாமல் இருக்க முடியுமா ?


 பல நாள் இருந்திருக்கேனே? பதிவுகள் போடுவது பெரும்பாலும் என் நண்பர்கள்தான். சனி, ஞாயிறு மட்டும் ஒரு வாரத்துக்கான பதிவுகள் தயாராக வைத்துக்கொள்வேன். பணி நாட்களில் அவங்க தான் போஸ்ட் போடுவாங்க. என் பிளாக் பாஸ்வோர்டு 32 பேர்ட்ட இருக்கு 
9.ஜோக்ஸ் , எழுதுவது போல் ஏன் உங்களால் பத்திரிக்கைகளுக்கு  கட்டுரைகள் எழுத முடிவதில்லை ?


 சோம்பேறித்தனம் தான். ஜோக் ஜஸ்ட் எ செகண்ட்ல எழுதிடலாம். கட்டுரை, கதை எழுத 1 மணி நேரம் ஆகுது. இனி முயற்சிக்கனும். 2013ல ட்ரை பண்றேன்
10.சினிமாத்துறையில் இருந்து அழைப்புகள் ஏதும் வந்ததா ? வசனம் எழுத சொல்லி .....பல வருடங்களுக்கு  முன் உன்னை நினைத்து எடுத்த பட க்ரூப் சகியே சகியே படம் பண்ண காமெடி டிராக்  எழுத அழைத்தார்கள். விவேக்கிற்கான காமெடி ஸ்கிரிப்ட் எல்லாம் எழுதி குடுத்தேன் அட்வான்ஸ் ரூ 5000 குடுத்தாங்க. சம்பளம் ரூ 25,000 பேச்சு அப்புறம் என்னாச்சுன்னு  தெரியலை. அட்ரஸ் காணோம்/./11.எப்போ கல்யாணம் நடந்தது ? கல்யாண கலாட்டா ஏதும் இருந்த கூறவும் (பர்சனல் என்று தவிர்க்க வேண்டாம் )
2002 ஆம் வருடம் டிசம்பர் 9 ஆம்  தேதி ஈரோட்டில் செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடந்தது.மேரேஜ்க்கு காலேஜ் ஃபிரண்ட்ஸ் நிறைய பேர் வந்திருந்தாங்க. எனக்கான கேர்ள் ஃபிரண்ட்ஸ் கூட்டத்தைப்பார்த்து பெண் வீட்டில் அரண்டுட்டாங்க.. மாப்ளை ஏகப்ப்ட்ட லேடீஸ் சகவாசம் உள்ளவன் போல என./..


 மேரேஜ் ஆனதும் ஹோம் மினிஸ்டரிடம் வந்த முதல் உத்தரவு கட் ஆல் கேர்ள் ஃபிரண்ட்ஸ் 

12. ஒருவரை விமர்சித்து விட்டு வருந்தியதுண்டா ?


 பொதுவா அப்படி யாரையும் விமர்சித்ததில்லை. ஆனா ட்விட்டர்களை கலாட்டா பண்ணி போட்ட 2 பதிவுகளில்  ஒரு பதிவு சம்பந்தப்பட பெண் ட்வீட்டரை மனம் வருந்தச்செய்ததை அறிந்தேன். பதிவு போட்டு ஒரு வாரம் கழித்து பர்சனல் மெயிலில் அவர் தொடர்பு கொண்டு அந்தப்பதிவை நீக்கசொன்னார். உடனே வருத்தம் தெரிவித்து நீக்கி விட்டேன் .

 பின் சென்னை ட்வீட்டப் பற்றிய பதிவில் பெண் ட்வீடர்களை கிண்டல் பண்ணி எழுதப்பட்ட சில வரிகள் பின் நீக்கி விட்டேன்.


 பொதுவா நான் எதுக்கும் வருந்துவதில்லை. ஆனா அதே சமயம் யாராவது மனம் வருத்தப்பட்டா, அதுக்குக்காரணமா என் பதிவு இருந்தா அதை நீக்க என்றும் தயங்கியதில்லை.


 மத்தவங்களை சந்தோஷப்படுத்தவே எழுதறோம். எதுக்கு மன வருத்தம் ?

13.வேலையில் எப்படி புலியா ? பூனையா ?


 வேலையில் ரொம்பவே ஷார்ப் . கட் அடிச்சுட்டு படம் பார்த்துட்டு இருந்தாக்கூட லேப்டாப்பில் ஆஃபீஸ் ஒர்க் பண்ணிட்டு தான் இருப்பேன். பொதுவா எல்லாப்படமும் (பெரும்பாலும்) இடைவேளை வரைதான் பார்ப்பேன். போர் அடிச்சா ஆஃபீஸ் வேலை பார்ப்பேன்

14.ஒரு நாள் மட்டும் இன்னாராக நீங்கள் மாறலாம் என்று வாய்ப்பு கிடைத்தால் யாராக மாறுவீர்கள் ?
ஹாலிவுட் பட  இன்வி”சிபி”ள் மேன் - காரணம் - ஹி ஹி ஹி


 
15. நமீதாவுக்கு ஜோடியாக நடிக்க கூப்பிட்டால் ?.ரஜினிக்கு அப்பாவாக நடிக்க கூப்பிட்டால் ? இரண்டில் எதை  தேர்வு செய்வீர்கள் ?
இதுல என்ன சந்தேகம் ? ஆறடி உயர ஆல்ஹஹால் நமீதாவுக்குத்தான் ஜோடி. இதுதான் சாக்குன்னு டச் பண்ணி பார்த்துக்கலாம். ஐ மீன் ஜஸ்ட் டச்சிங்க் ஒன்லி..16.டிவி காம்பியரிங் செய்ய வாய்ப்பு வந்தால் ?


 முயற்சித்துக்கொண்டு இருக்கேன், வாய்ப்பு கிடைத்தால் பயன் படுத்திக்கொள்வேன் . என் குரல் கொஞ்சம் கர கரப்ரியா. அதனாலதான் யோசிக்கறேன். ஆனா  சினிமா விமர்சனம் செய்யும் வாய்ப்புக்கு சிலரை அணுகி இருக்கேன். விரைவில் வெற்றிச்செய்தி வரும் // 

 அப்படி வாய்ப்பு வந்தால் சினிமா விமர்சனத்தில் ஒரு புதுமையான பாணியை புகுத்திய ஆள் என பெயர் பெறுவேன் என்ற நம்பிக்கை உண்டுஇதன் 17 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/17.html


 இதன் 18 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/18.html

இதன் 19 ஆம் பாகம் படிக்காதவர்கள்   http://www.adrasaka.com/2012/10/19.html