Tuesday, June 26, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 12


Photo: I love my Indian Tradition ♥

share it if u like it :)
1. அட்ரா சக்க என பேர் வைக்கறதுக்குப்பதிலா  கொங்கா மக்கா என ஏன் வைக்கலை? - குட்டி சாகசன் 
முதல்ல கொங்கா மக்கா-ன்னுதான் வெச்சிருந்தேன்,நிறைய பேரு ஏன் அட்ரா சக்க அப்டினு வைக்கலாமே?ன்னு கேட்டாங்க.. அதனால மாத்திட்டேன்.. கோக்கு மாக்கா கேள்வி கேட்டே குழப்புங்கய்யா.. 
2. தினமும் 3 பதிவுகள் போடறீங்களே, உங்களுக்கு சலிக்கவே இல்லையா? -குட்டி சாகசன் 
இந்த கேள்வில ஏதோ உள்குத்து இருக்கு.. படிக்கறவங்களுக்கு சலிப்புன்னு அர்த்தம் வருது.. நல்லா கவனிங்க.. நான் தினமும் காலைல 5 டூ 6  ஜோக்ஸ் & ட்வீட்ஸ் போஸ்ட் போடறேன். மாலையில் ஒரு சினிமா விமர்சனம் போஸ்ட். நடுவே ஏதாவது அரசியல் போஸ்ட்,.. அதனால 3 வெவ்வேற பிரிவில் போடுவதால் படிக்கறவங்களுக்கு போர் அடிக்காதுனு நினைக்கறேன். எனக்கு பதிவு போடுவதில் இதுவரை சலிப்பு வந்ததில்லை. வந்தால் ஏன் போடறேன்?
 3. நீங்ககேட்க வேண்டிய மன்னிப்பு, தெரிவிக்க வேண்டிய வருத்தங்கள் ஏதாவது இன்னும் மிச்சம் மீதி பாக்கி இருக்கா? - சே செந்தில்குமார்
வாரா வாரம் சண்டே அன்னைக்கு சர்ச் போய் பாவ மன்னிப்பு கேட்கறாங்க, கோயில்க்கு வெள்ளிக்கிழமை போய் செஞ்ச தப்பெல்லாம் மன்னிச்சுடு சாமின்னு சொல்றாங்க.. சாமி இருக்கா? இல்லையா?ன்னு முழுசா தெரியாமயே அவங்க கிட்டே மன்னிப்பு கேட்கறப்போ தினமும் நாம பார்த்து பழகின மனிதர்களிடம் மன்னிப்பு கேட்பதால் என்ன தவறு?


 ஜாலியா கலாய்க்கறப்போ சில சமயம் சிலர்  மனம் புண் படும்படி ஆகிடுது.. அவங்க மனசு ஆறுதலுக்கு நம்ம மன்னிப்பு பயன் பட்டால் எத்தனை முறை வேணாலும் கேட்கலாம்.
 4. உங்கள் திரைப்பட விமர்சனக்களில் உங்கள் மனதில் தோன்றுவதை எழுதி வாசிப்பவர்களை ஏன் நெளிய வைக்க வேண்டும்- J.P Josephine Baba,


நிறைய பேர் கேட்டாச்சு.. சாண்டில்யன் நாவல்களில் பக்கம் பக்கமா நாயகியின் வர்ணனை இருக்கும். அதை ரசிக்கறீங்க.. ஒவ்வொரு படத்திலும் ஹீரோயினை 4 லைன்ஸ் வர்ணிச்சா தப்பா?நெளிய வைக்காதே. பெண்களும் ரசிக்கும் வண்ணமே என் வர்ணிப்புகளும் ,கலாய்ப்புகளும் இருக்கும். லிமிட் தாண்ட மாட்டேனே? அப்படி இருந்தா சுட்டிக்காட்டுங்கள்.. வரிகள் அகற்றப்படும் 5. பதிவு எழுத்து பற்றி உங்கள் திட்டங்கள் என்ன? - J.P Josephine Baba,

 1. சினிமா விமர்சனங்களில் பல முறை ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் கணிப்பு தவறி விடுகிறது. இதுவரை 6 படங்களுக்கு மட்டுமே துல்லியமாக மார்க்கை முன் கூட்டியே கணிக்க முடிந்தது,... அதை மாற்ற வேண்டும்.. சமீபத்தைய என் சறுக்கல் சகுனி விமர்சனம்.. பல குறைகள் இருந்தாலும் படம் கம்ர்சியலாக சக்சஸ் தான் என எழுதி இருந்தேன், ஆனால் 90 % விமர்சகர்கள், பொதுமக்கள் பார்வையில் அது கடி ஆகி விட்டது.. இதை , இந்த ராங்க் ஜட்ஜ்மெண்ட்டை தவிர்க்க ஆசை


2.நகரங்களில் உள்ள டாப் டென் ஹோட்டல்கள் பற்றி ஒரு பதிவு போட்டேன். நல்ல வரவேற்பு பெற்றது, அது போல் மக்களுக்கு பயன் உள்ள வகையில் பதிவு போடனும்.. உதாரணமா ஒரு சினிமா விமர்சனம் அந்த கால கட்டத்தில் மட்டுமே படிக்கப்படும், ரசிக்கப்படும்.. ஆனா  எந்த காலத்தில் படிச்சாலும் யூஸ் ஆகற மாதிரி போஸ்ட்ஸ் போடனும்.. உங்கள் ஆலோசனைகள், கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன
6 . பதிவு எழுதுவதின் நோக்கம் என்ன என்று தெரியலாமா? பதிவு எழுதுவதால் தாங்ககள் அனுபவிக்கும் மன மகிழ்ச்சி என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?- J.P Josephine Baba,


பத்திரிக்கைகளில் ரிஜக்‌ஷன் பண்றது இப்போ அதிகம் ஆகிடுச்சு.. அதனால நம்ம படைப்பை வெளிக்கொணர பிளாக் அதிகம் பயன் படுது.  ஒரு மேகஜின்க்கு படைப்பை அனுப்பிட்டு வருமா? வராதா?  பிரசுரம் ஆகுமா? ஆகாதா? என காத்திட்டு இருக்கறதுக்கு ஆன் த ஸ்பாட் நாமளே எடிட்டரா இருந்து போஸ்ட் போடறது  ஒரு கிக்... மன மகிழ்ச்சி என்னன்னு பார்த்தா வெளிநாட்டில் இருந்தெல்லாம் பல வாசகர்கள் ஃபோன் பண்ணி பாராட்டுவதுதான்.. பத்திரிக்கைகளில் வரும் படைப்புகளுக்கு சன்மானம் கிடைக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்தை விட வாசகர்கள் பாராட்டு அதிக சந்தோஷம் தருது


7. பதிவு எழுதுவதால் தாங்கள் அனுபவிக்கும் பலன்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?- J.P Josephine Baba,1.பத்திரிக்கைகள் இல்லாத அல்லது போய்ச்சேராத இலங்கை போன்ற தேசங்களில் கூட வாசகர்கள்  நமக்கு கிடைக்கறாங்க


2. அலெக்சா ரேங்க் நல்ல நிலைல இருந்தா பிற்காலத்தில் விளம்பரம் மூலம் வருமானம் வர வாய்ப்பு உண்டு


3. சினிமா விமர்சனம் போட்டதும் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் ஃபோன் பண்ணி தங்கள் கருத்துகளை தெரிவிக்கறாங்க.. நாம நேரில் பார்க்க முடியாத வி ஐ பி கள் அவங்களே தேடி வந்து பேசறது சந்தோஷம்,., சமீபத்தில் இயக்குநர்  மு களஞ்சியம், வெங்காயம் சங்ககிரி ராஜ்குமார் பேசினார்கள், மகிழ்ச்சி!8. 80 வயது தாத்தா சி.பி செந்தில் எழுத போகும் ஒரு பதிவை இப்போது எழுதி பதிவிட இயலுமா?-
J.P Josephine Baba,அது எப்படி முடியும்?இனிமே கிடைக்கப்போகும் அனுபவங்கள் என்ன? என எப்படி இப்போவே தெரியும்? வேணா ஒண்ணு செய்யலாம்.. 80 வயதில் எப்படி இருப்பேன் என கற்பனையா ஒரு பதிவு வேணா எழுதலாம்.. 


9.பயண தொடர்கள் எழுத வாய்ப்பு உண்டா?-J.P Josephine Baba,


எழுத  எனக்கும் ஆசை தான்.. ஆனால் அதற்குத்தடையாக இருப்பது என் உடல் நிலை தான்.. எனக்கு பஸ் பயணம் எப்போதும் ஒத்துக்கொள்வதில்லை.. வாமிட் வந்துடும்.. எங்கே போனாலும் ரயில் பயணமே.. முன்னே மாதிரி இல்லை.. 40 நாட்கள் முன்னாலயே  ரிசர்வ் செஞ்சாதான் சீட் கிடைக்குது.. தட்கால் -ல கிடைப்பது ரொம்ப சிரமமா இருக்கு.. ஆனாலும் இதை எல்லாம் மீறி பயணம் செஞ்சு கட்டுரை எழுத ஆசை தான்.. 
10. அடுத்தவர்கள் உங்களை விமர்சிப்பதை பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? -J.P Josephine Baba,

 விமர்சனங்கள் என்னைப்பற்றி , என் எழுத்தைப்பற்றி இருந்தால் கவலையே படமாட்டேன்.. ஏன்னா நானே பலரை கலாய்ச்சு இருக்கேன்,.. நண்பர்கள் ஆனாலும் சரி எதிரிகள் ஆனாலும் சரி.. என்னை யார் கலாய்ச்சலும்  அதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டு அந்தப்பதிவில் கமெண்ட்டும் போடுவேன்..

 ஆனா என்னை விட்டுட்டு சம்பந்தம் இல்லாம என் குடும்பத்தை பற்றி யாராவது எழுதுனா அது என் மனதை புண் படுத்துவதாக இருக்கும்.. அந்த பதிவில் கமெண்ட் போடுவதில்லை./.. பதிலுக்கு பதில் லாவணி பாடுவதில் தேவையற்ற மனக்குழப்பங்கள், கோபம் வந்து நிம்மதியை குலைக்கும் என்பதால் எதிர் பதிவுகளை தவிர்த்து விடுவேன்  

டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 
டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.htmlடிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html
டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html
டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html


டிஸ்கி 13.  இதன் 11 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www.adrasaka.com/2012/06/11.html

5 comments:

குரங்குபெடல் said...

"எனக்கு பஸ் பயணம் எப்போதும் ஒத்துக்கொள்வதில்லை.. வாமிட் வந்துடும்.. எங்கே போனாலும் ரயில் பயணமே. "

என்ன தம்பி சின்ன புள்ளதனமா இருக்கு

இஞ்சிமரப்பா . ஹால்ஸ் எல்லாம் எதுக்கு . .

ArjunaSamy said...

நாளைய இயக்குனர் விமர்சனம் இந்த வாரம் எழுதவில்லையே சிபி???

மிகவும் எதிர்பார்த்தேன்....

”தளிர் சுரேஷ்” said...

உங்கள் அனுபவங்கள் சுவையா இருக்கு!பதிவு போடுவதில் மனமகிழ்ச்சி பற்றி கூறியது முற்றிலும் உண்மை!

”தளிர் சுரேஷ்” said...

புதிய பதிவர்களுக்கான உங்களுடைய ஆலோசனைகள் என்ன? எனக்குத்தான் கேக்குறேன்! இந்த பதிவுலகமே ஒரே குழப்பமா இருக்கு?

J.P Josephine Baba said...

சூப்பர் பதில்கள் நண்பா. பதிவு உலகில் தாங்கள் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள்!