Saturday, June 16, 2012

இனிமையான தாம்பத்யத்தின் தாத்பர்யம் என்ன?

தமிழ் நாடுல பவரே இல்லை பல்ப்பு மட்டும் எதுக்கு .. நீ தொடசும் செஞ்சு மாடிக என் ராசாத்தி அப்படியே ஜெய அம்மாக்கும் ஒண்டு அனுப்பி விடு என் செல்லம்

1.உனக்காக எதுவுமே செய்யாதவருக்காக நீ என்ன செய்தாய் என்பதை வைத்துத்தான் உன் குணம் தீர்மானிக்கப்படுகிறது


---------------------

2. உலகில் உள்ள அனைத்துப்பெண்களுக்கும் உற்ற தோழன் தலையணை மட்டுமே,அவர்கள் கண்ணீரை ஏற்றுக்கொள்வதால்

------------------------

3. ஒரு பையனைப்பழி வாங்க சிறந்த வழி சூப்பர் ஃபிகர்ஸ் ஃபோன் நெம்பர் 10 குடுத்துட்டு அவனை நெட் ஒர்க் கவ்ரேஜ் இல்லாத ஏரியாவில் அடைத்து விடுவதே

-----------------------

4. ஒரு பெண்ணைப்பழி வாங்க சிறந்த வழி ஆடை ,அணிகலன்கள்,நகைகள் எல்லாம் வாங்கிக்கொடுத்து அவளை கண்ணாடி இல்லாத அறையில் அடைத்து வைப்பதே

--------------------------------

5. காயப்பட்ட இதயத்தை நேசிக்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள் அட்லீஸ்ட் நேசித்த இதயத்தையாவது காயப்படுத்தாமல் இருக்கலாம்

----------------------
6. நினைத்தவுடன் கவிதை எழுத வந்தால் நீ பிறவிக்கவிஞன், மனம் கனத்தவுடன் கவிதை எழுத வந்தால் நீ மக்களின் கலைஞன்

------------------------

7. ஹலோ!ஏன் சரியா பேச மாட்டேங்கறே?

பக்கத்துல ஃபாதர்!

அடிப்பாவி, நீ ஹிந்துன்னு தானே சொன்னே? ஏன் சர்ச்சுக்கு போனே? # கலாட்டா கடலை

----------------------

8. வெற்றி என்பது அழகிய காதலி போல, எந்த நேரத்திலும் அது நம்மை விட்டு விலகி விடலாம்.

------------------------

9. எடுப்பார், கொடுப்பார் இன்றி இருவருமே பெறுபவராக இருப்பதுதான் இனிமையான தாம்பத்யத்தின் தாத்பர்யம்

-------------------------

10. நம்பி காத்திருந்தால் ஆசைப்பட்டது மட்டும் கிடைக்கும், நம்பிக்கையுடன் கஷ்டப்பட்டால் ( உழைத்தால் ) நினைத்தது எல்லாமே கிடைக்கும்

-----------------------------

11. கீ போர்டின் ஷார்ட் கட்ஸ் அறிந்தவன் மவுஸ் யூஸ் பண்ணுபவனை விட 10 மடங்கு அதிக வேகத்துடன் கணிணியில் வேலை செய்வான்

----------------------

12. அணுகுண்டு வெடிக்கும்போது எந்த சத்தமும் வராது ( கேட்காது) கண்ணைக்கூசும் அளவு வெளிச்சம் மட்டுமே வரும்

------------------------

13. 12 தேனீக்கள் வாழ்நாள் முழுதும் உழைத்தால் தான் ஒரு டீ ஸ்பூன் அளவு தேன் கிடைக்கும்

-------------------------

14.  ஐ லவ் யூ சொன்னேன், அவள் கண்கள் முதலில் சிவந்தன, என் கன்னம் அதன்பின் சிவந்தது # GUESS 1. பளார்?  2  ஃபிகரு லிப்ஸ்டிக் போட்டிருக்காடோய்!

----------------------

15. காதல் என்பது மிக மதிப்பு மிக்கது, ரொம்ப சீப்பான ஆள் கிட்டே அதை பிச்சையா கேட்காதீங்க!!!

----------------------16.  மனைவி கூட செம ஃபைட், கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சுட்டு வந்துட்டேன்.

மனைவியையா?

  ம்ஹூம், சைக்கிளை

----------------------------

17. காதலி கிஸ் தரும்போது வரும் சந்தோஷத்தை விட நண்பன் அவனோட கேர்ள் ஃபிரண்ட் நெம்பர் தரும்போது வரும் சந்தோஷம் அதிகம் # மச்சி, ஃபிகர் நெம்பர் குடு

-----------------------------

18. மகிழ்ச்சி என்பது புரியாத புதிர்க்கணக்கு, நீ மற்றவர்களுடன் அதைப்பகிர்ந்து கொண்டால்  அது பன் மடங்காகப்பெருகிவிடும்

------------------

19. எந்த பிரச்சனையையும் சந்திக்காம ஒருத்தன் ஜெயிச்சா அது சாதா வெற்றி, பல பிரச்சனைகளையும் சந்திச்சு ஒருத்தன் ஜெயிச்சா அது  சரித்திர வெற்றி

------------------------

20. வாழ்க்கை என்பது மோசமான டீச்சர் போல, முதல்ல நமக்கு பரீட்சை வெச்சுடுது, அதுக்குப்பிறகுதான் பாடமே கத்து தருது

-----------------------


சுமோ என்கிற சுண்டுமோதிரம் பெயர் இணைக்கப்பட்டது.

0 comments: