Wednesday, June 06, 2012

THE RAID REDEMPTION -ஹாலிவுட் ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்

http://www.entertainmentwallpaper.com/images/desktops/movie/the-raid-redemption04.jpg

ஒரே ஒரு வீட்டுல, அல்லது ஒரே ஒரு அறைல  முழுப்படத்தையும் ஷுட் செஞ்சு அதை ஹிட் கொடுத்தவங்க கோலிவுட்ல பலர் இருக்காங்க..சம்சாரம் அது மின்சாரம் விசு,ஒண்ணா இருக்கக்கத்துக்கனும் வி சேகர் இவங்க எல்லாம் லோ பட்ஜெட்ல  செம ஹிட்ஸ் கொடுத்தவங்க.. இவங்களுக்கெல்லாம் முன்னோடியா ஸ்ரீதர் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் படம் பூரா ஒரே ஒரு ஹாஸ்பிடல் வார்டில் ஷூட் செய்து மெகா ஹிட் கொடுத்தார்.. அந்த வரிசையில் இந்தப்படமும் சேரும்.. அதிக செலவு ஏதும் இல்லை.. ஒரே ஒரு பில்டிங்க்குள் நடக்கும் ஆக்‌ஷன் ஃபைட் ஸ்டோரி.. 37 பேரு தான் மொத்த நடிகர்களே... ஆனாலும் பார்க்கும்படி இருக்கு..

ஒரு பில்டிங்க்.. அதுல கள்ளக்கடத்தல் மன்னன் இருக்கான்.. அவன் கூட சாணக்யன் மாதிரி புத்திசாலி.. அவன் தான் எல்லா ஐடியாவும் தர்ற ஐடியா டிப்போ .. அப்புறம் ஆக்‌ஷன்க்கு ஒருத்தன்.. இவங்க 2 பேரும் வில்லனுக்கு பக்க பலம்.. அது போக அடியாளுங்களும் இருக்காங்க.. இவங்க அந்த பில்டிங்கை போதைப்பொருள் ஆராய்ச்சிக்கூடமா யூஸ் பண்றாங்க..

இந்தத்தகவல்  போலீஸ்க்கு தெரிய வருது.. ஹீரோ உட்பட 20 பேர் கொண்ட குழு அந்த பில்டிங்கை ரவுண்ட் அப் பண்ணுது.. ஹீரோவோட தம்பி அந்த  வில்லன் குரூப்ல ஒரு அடியாள்.. 


என்ன நடக்குது? எப்படி வில்லன்க மாட்டறாங்க என்பதை ஒரே ஃபைட் மயமா, ஆக்‌ஷன் மயமா சொல்லி இருக்காங்க.. அதிரடி சண்டைப்பிரியர்கள் பார்க்கலாம்.. http://content7.flixster.com/rtmovie/88/51/88517_gal.jpg
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. பில்டிங்க்குள்ள போலீஸ் கேங்க் நுழைஞ்சதும் ஒரு பையன் எதிர்ல வர்றான்.. அவன் வில்லன் குரூப்ல ஒரு ஆள்.. போலீஸ் அவனை அசையாதே அசைஞ்சா ஷூட் பண்ணிடுவேன்னு சொல்லுது.. அவன் கண்டுக்கலை.. ஓடிப்போய் ஒரு ரூமை திறந்து கதவை சாத்தி வில்லன் ஆளுங்களை வார்ன் பண்றான், “ போலீஸ் வந்துடுச்சு.. தப்பிச்சிக்கோங்க”ன்னு , அப்போ போலீஸ் அந்தப்பையனை ஷூட் பண்ணுது.. .. ஸ்லோமோஷன்ல போற புல்லட் ரூம் கதவை துளைச்சுக்கிட்டு துல்லியமா அந்தப்பையன் கழுத்தை ஊடுருவுது.. பிரில்லியண்ட் ஷாட்.. 

2. ஹீரோவோட ஃபிரண்ட்  ஃபைட்ல துப்பாக்குக்குண்டு பட்டு காயத்தோட இருக்கான்.. அந்த பில்டிங்க்ல குடி இருக்கற பொது ஜனம் வீட்ல அவனைத்தங்க வைக்க ஹீரோ பிளான் பண்றான்.அப்போ வில்லனோட ஆட்கள் கதவைத்தட்டறாங்க.. உடனே அந்த வீட்டில் இருக்கும் ரகசிய அறைல 2 பேரையும் ஒளிச்சு வைச்சுட்டு ஹவுஸ் ஓனர் கதவைத்திறக்கறாரு.. வில்லன் ஆளுங்க அந்த வீட்டையே புரட்டிப்போட்டுடறாங்க.. 6 அடி நீளமான வாளை அங்கங்கே சொருகி செக் பண்றாங்க..அப்போஹீரோவோட கன்னத்துல வாள் பட்டு நிக்குது..


3. வில்லன் வாளை ரிட்டர்ன் உருவுனா அதுல ரத்தம் இருக்கறது தெரிஞ்சுடும்.. ஹீரோ அங்கே இருக்கும் ஒரு பழைய துணியை எடுத்து வாள் ஓரத்துல  பிடிச்சுக்கறாரு.. வில்லன் வாளை உருவும்போது ரத்தம் எல்லாம் துடைக்கப்பட்டு நீட்டா வருது.. சாத்தியம் இல்லாத காட்சி என்றாலும் படமாக்கப்பட்ட விதம் அருமை..

4. இணைந்த கைகள் படத்துல குள்ளமா இருந்தாலும் ஹீரோவை கதிகலங்க வைக்கும் அளவு ஃபைட் போடுவாரே அது மாதிரி இதுலயும் ஒரு ஆள் ஹீரோ, ஹீரோவோட தம்பி 2 பேரையும் சமாளிக்கும் ஃபைட் அசத்தல் சீன்.. தியேட்டரே கை தட்டுகிறது.. கிராஃபிக்ஸ் காட்சியே இல்லாத ஒரிஜினல் ஃபைட் ..

5. வில்லன் துப்பாக்கி முனையில் போலீசிடம் மாட்டியதும் அவன்  போலீசிடம் குருதிப்புனல் நாசர் போல் மூளைச்சலவை செய்யும் விதமாக பேசிக்குழப்புவதும் ஒரு கட்டத்தில் தாங்க முடியாத கோபத்தில் போலீஸ் வில்லனை ஷூட் செய்வதும் பிரமாதம்..

http://www.hollywoodreporter.com/sites/default/files/2012/03/october_baby_a_l.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்,திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1.க்ளைமாக்ஸில் வில்லன் ஹீரோவிடம் “நீங்க இங்கே வர்றது ஏற்கனவே எனக்குத்தெரியும், அதனால தான் பிளான் பண்ணி எல்லா போலீஸையும் சிக்க வெச்சு கொலை செஞ்சேன்”அப்டினு வசனம் பேசறான்.. ஆனா ஓப்பனிங்க் ஷாட்ல  அந்தப்பையன் ஏன் எல்லாரையும் உஷார் பண்றான்? பில்டிங்க் பூரா கேமரா இருக்கு.. வில்லன் அதை கண்ட்ரோல் ரூம்ல உக்காந்து பார்த்துட்டு இருக்கான்.. அப்புறம் எதுக்கு தேவை இல்லாம அந்த உயிர்ப்பலி?

2. வில்லனோட ரைட் ஹேண்ட் ஹீரோவோட தம்பியை கட்டி வெச்சிருக்கான்.. ஹீரோ அங்கே எண்ட்டர் ஆகறார்.. வில்லனோட ரைட் ஹேண்ட் ஆள் கைல துப்பாக்கி இருக்கு.. அவன் நினைச்சா ஈசியா ஹீரோவை முடிச்சிருக்கலாம், ஏன்னா ஹீரோ நிராயுதபாணியாத்தான் வர்றாரு,ஆனா அந்த லூஸ் என்ன பண்றான், கைல இருக்கற கன்னை தூக்கிப்போட்டுட்டு, ஹீரோவோட தம்பியை ஹீரோ ரிலீஸ் பண்ற வரை வேடிக்கை பார்த்துட்டு அப்புறமா 2 பேர்கிட்டேயும் ஃபைட் பண்ணி சாகறான்.. ஏன் அந்த தலை எழுத்து? எதுக்கு இந்த வறட்டு கர்வம்?

3. க்ளைமாக்ஸ்ல வில்லனை பணயக்கைதியா வெச்சு போலீஸ்ல ஒருத்தர் அந்த பில்டிங்கை விட்டு தப்பிக்க நினைக்கறாரு.. அவர் கைல கன் இருக்கு, வில்லன் நிராயுதபாணியா இருக்காரு.. அப்போ வில்லன் மிரட்டறாரு, உன்னால எஸ் ஆக முடியாது.. அப்டினு.. உடனே குழப்பம் ஆன போலீஸ் வில்லனை ஷூட் பண்ணி தானும் தற்கொலை செய்ய முயற்சிக்கறாரு.. எதுக்கு அவ்ளவ் ரிஸ்க்? வில்லனை கை, கால்ல மட்டும் ஷூட் பண்ணிட்டா அவன் ஆபத்தில்லாத ஆள் ஆகிடுவான், அவனை நாயை இழுக்கற மாதிரி இழுத்துட்டுப்போய் இருக்கலாமே?

4. ஹீரோ போலீஸ் யூனிஃபார்ம்ல அந்த பில்டிங்க்ல இருக்காரு, கடத்தல் கும்பல்ல ஒரு ஆளும், ஹீரோவின் தம்பியா வர்றவனும் “ அண்ணே, இந்த யூனிஃபார்மை முதல்ல மாத்துங்க.. சாதா டிரஸ் போட்டுக்குங்க.. அப்போதான் அவங்களுக்கு சந்தேகம் வராது.. “ அப்டினு நியாயமான  ஐடியா தர்றான்.. ஆனா ஹீரோ பெரிய  பட்டர் ஹேர் ஆண்டி போல “ நான் இந்த யூனிஃபார்மை எப்பவும் கழட்டவே மாட்டேன்”னு வசனம் பேசி மாட்டிக்கறான்.. பாத்ரூம்ல குளிக்கறப்பக்கூட யூனிஃபார்ம் போட்டுக்கிட்டே குளிப்பாரோ? தேச பக்தி, தொழில் பக்தி, பணி பக்தி இருக்க வேண்டியதுதான், அதுக்காக  இப்படியா முட்டாள் தனமா நடப்பான்? இடம் பொருள் ஏவல், சாணக்கியத்தனம் வேணாமா?

அடிதடி, சண்டைப்பிரியர்கள் பார்க்கலாம். வ்ழக்கமா ஆங்கிலப்படங்கள்ல வர்ற லொக்கேஷன்ஸ் பார்க்க ஆசைப்படறவங்க  ஏமாந்து போவாங்க. மற்றபடி  படம் ஓக்கே .. ஈரோடு அன்னபூரணியில் படம் பார்த்தேன்

 படத்தை டவுன்லோடு  பண்ணி பார்க்க - http://www.hnmovies.com/2012/05/raid-redemption-2012-720p-hdrip-800mb.html

இந்த லிங்க்கை உங்களுக்கு வழங்கியவர்  -ட்விட்டர் நண்பர்

4 comments:

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

எங்க ஊர்ல இன்னும் ரிலிஷ் ஆகலை சார்...........
வட போச்சே......

scenecreator said...

அஜித் என்னை ஏமாற்றிவிட்டார்--தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் விளாசல்.அஜித் மௌனம்.
இன்று குமுதத்தில்.இதை பற்றி பதிவு போடுவாரா சி.பீ .இதே விஜய் பற்றி மேட்டர் இருந்தால் இந்நேரம் பதிவு வந்திருக்கும்.
ஆனால் ஒன்று விகடன் போல் குமுதம் ,சி.பீ மேட்டர் திருடி தன் பதிவில் போடுவதை பார்த்துகொண்டு இருக்காது.--

மன்மதகுஞ்சு said...

விமர்சனம் பார்த்தவுடன் கட்டாயம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் வந்திட்டு,நேத்து நைட்டே டவுன்லோட்டி பார்த்தேன் ,ஜெப்பா என்ன ஒரு ஆக்சன் படம்... நீண்டகாலத்துக்கு பிறகு இப்படியான ஒரு அக்சன் படம்,ஆனால் பல லாஜிக் மீறல்.. சைலன்சர் துப்பாக்கி சண்டையின் போது கூட பின்னணியில் சுடும் சத்தம் கேட்கிறது..

mahe said...

anna ple rite a Telugu movies story .