Tuesday, June 05, 2012

காலச்சுவடு ஆசிரியரின் நண்பர் மரணம் - சில புரிதல்கள்



எல்லா மனிதரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத  துக்க பக்கம் மரணம்.. அது நமக்கான விடுதலைப்பத்திரமும் கூட ..இயற்கையை பல வழிகளில் வஞ்சித்த, வென்ற மனிதன் மரணத்தை மட்டும் வெல்லவே முடியவில்லை.. ஒரு வேளை மரணத்தை மனிதன் வென்று விட்டால் அது இயற்கைக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கக்கூடும்.. வந்தவர்கள் எல்லாம் இங்கேயே தங்கி விட்டால், தேங்கி விட்டால் பூமியில் ஏது இடம்?

இருந்தாலும் நமக்கு நெருக்கமானவர்கள் மரணம் நம்மை அதிகம் பாதிக்கிறது.. தினசரி நாளிதழ்களில் யாரோ ஒருவரின் மரணச்செய்தியை நாம் படிக்க நேரிடும்போது, டி வியில் பார்க்க நேரும்போது நம்மை அது அதிகம் பாதிப்பதில்லை.. அடிக்கடி சந்தித்தோ, அல்லது நெருக்கமான பழக்கத்திலோ இருப்பவர்கள் இறக்கும்போதுதான் நம்மை மரணம் பாதிக்கிறது.. மரண பயமும் வருகிறது ..

சென்னிமலையில் தி முக  ஒன்றியச்செயலாளர் திரு மெய்யப்பன்.. அவரது தம்பிகள் அங்குராஜ், கே எஸ் சண்முக சுந்தரம் இருவரும் என் பால்ய கால நண்பர்கள்.. அவர்களது சித்தப்பா பையன் அய்யப்பன்.. இவரை பற்றி நான் எனது பத்திரிக்கை உலக அனுபவங்களில் சொல்லி இருக்கிறேன்.. ஆனந்த விகடனில் சொல்வனம் பகுதியில் இவரது 3 கவிதைகள் வந்துள்ளன.. அது போக பால்ய காலத்தில் தென்றல் எனும் கையெழுத்துப்பத்திரிக்கை நடத்தி வந்த போது எனக்கு உறுதுணையாக இருந்தார்..

இவரது அண்ணன் சென்னிமலை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள அங்காள பரமேஸ்வரி டெக்ஸ்டைல்ஸ் இல் மேனேஜர்..இவரது அடுத்த அண்ணன் பெயர் சம்பத்.. இவர் தான் நாம் இப்போ பார்க்கப்போற சம்பவ நாயகன்..

ஆள் ஒல்லியா, உயரமா இருப்பார்.. சின்ன வயசுல இருந்தே வாழ்க்கையில் எந்தப்பிடிப்பும் இல்லாதவராக சித்தன் போக்கு சிவன் போக்கு என  ஏனோ தானோ வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்.. குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆனார்..

தினமும் சரக்கு இல்லாமல் தூங்கவே மாட்டார்.. அய்யப்பன் குடும்பத்தில் அனைவரும் எனக்கு அறிமுகம், பழக்கம்.. ஆனால் இவர் மட்டும் அதிக டச் இல்லாமல் இருந்தார்..காரணம் இவர் அதிகம் வீட்டில் இருக்க மாட்டார்..

தினமும் மாலை  வேளைகளில், குறிப்பாக சனி, ஞாயிறுகளில் இவர் சென்னிமலை காமாட்சி அம்மன் கோவில் திண்ணையில் அல்லது ஈஸ்வரன் கோவில் அருகே அமர்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருப்பார்..  காலச்சுவடு ஆசிரியர் கதிர்வேலு அவர்களின்  நெருங்கிய நண்பர்..

சமீபத்தில் தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார்.. 2 மாசம் இருக்கும்..

சம்பவம் நடந்த அன்னைக்கு 4 நாட்கள் முன்.....

சம்பத் சாலையில் நடந்து போய்ட்டு இருந்திருக்கார்... திடீர்னு வலது கால் மரத்துப்போன மாதிரி ஒரு உணர்வு.. சாலை அருகே உள்ள விளக்கு கம்பத்தில் கை வைத்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திருக்கார்.. திடீர்னு அந்த மரத்துப்போன உணர்வு காலில் இருந்து இடுப்பு கை வரை பரவி வலது பாகம் முழுக்கவே மரத்து விட்டது..

அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அருகாமையில் உள்ள ஹாஸ்பிடல் சென்றிருக்கிறார்.செல் ஃபோன் கையில் இருந்தது ரொம்ப உபயோகமாக இருப்பது இது போன்ற ஆபத்துத்தருணங்களில் தான்.. வீட்டுக்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்லி விட்டார்..

டெஸ்ட் செய்த டாக்டர் மூளைக்கு செல்லும் சில நரம்புகள் ஜாம் ஆகி விட்டதாகவும்,இனி நாம் செய்ய ஏதும் இல்லையென்றும் கூறி விட்டார்.. எஸ்.. ஹி ஈஸ் ஹவுண்ட்டிங்க் ஹிஸ் டேஸ்..
இவருக்கு வயது 45.. ஆனால் ஆள் பார்க்க 32 வயசு போல் தான் இருப்பார்.. திருமணம் ஆகாதவர்.. பொறுப்பில்லாத மனிதராக இருந்தபோதும் தான் திருமணம் செய்தால் தன்னை நம்பி வந்த பெண்ணை கண் கலங்காமல் வைத்து காப்பாற்ற முடியாது என்ற உண்மை அவரது மனசில் இருந்திருக்க வேண்டும்.. எனவே தான் திருமணம் வேண்டாம் என்று சொல்லி விட்டார் போல.. காதல் தோல்வி ஏதும் இல்லை..

குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு என்ன ஒரு நிம்மதி என்றால் மேரேஜ் ஆகி ஒரு குழந்தை இருந்திருந்தா இன்னும் சிரமம்.. அந்த குடும்பமும் நிர்க்கதி ஆகி இருக்கும் என்ற எண்ணமே..

2 நாள் சுய நினைவில்..  அப்போதும் அவரால் பேச முடியவில்லை.. கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வந்திருக்கிறது.. அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, தம்பி அனைவரையும் கடைசி பார்வை பார்த்திருக்கிறார்.. அவருக்கு தன் இறுதி நாட்களில் இருக்கிறோம் என்பது தெரிந்து விட்டது..

இந்த இறப்பில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

1. குடிப்பழக்கம், புகைப்பழக்கம் அதிகம் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை ஹாஸ்பிடல் சென்று கம்ப்ளீட் பாடி செக்கப் செய்து கொள்வது அவசியம்..

2.  மன நிலை பாதிக்கப்பட்டவர்கள்,சராசரி வாழ்க்கை வாழாமல் வித்தியாசமாக நடவடிக்கை தென் பட்டால் அவரை தனிமையில் விடாமல் இருத்தல்..

3. பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் 18 வயசோடு முடிந்து விடக்கூடாது.. காலம் உள்ள காலம் வரை வாரிசுகளுடனான  அருகாமை, அக்கறை இருக்க வேண்டும்..

4. தன்  மகன் இப்படி ஆகிட்டான், இவன் இப்படிதான்.. என தண்ணி தெளிச்சு விட்டுட்டு மத்த வேலையைப்பார்ப்போம் என்ற மனப்பான்மை வரக்கூடாது..

5.ஒரு கலயாணம் காட்சி என்றால் யார் யாரை கூப்பிடனும் என்று ஆற அமர்ந்து லிஸ்ட் போடற மாதிரி 40 வயது கடந்தவர்கள் தங்கள் பால்ய கால நண்பர்கள், பள்ளி, கல்லூரி ,அலுவலக நண்பர்கள் இவர்கள் முகவரி அல்லது அட்லீஸ்ட் தொலை பேசி எண்ணையாவது ஒரு டைரியில் அல்லது ஒரு நோட்டில் எழுதி வைக்க வேண்டும்.. மேலோட்டமான பார்வையில் இது குரூரமாக தோன்றினாலும் என் அனுபவத்தில் நான் கண்ட பல மரணங்களில் கடைசி சமயங்களில் பலருக்கு தகவல்கள் சொல்லப்படாமலேயே இருந்திருக்கின்றன.. சொல்லாத காதல் எவ்வளவு துயரமோ அதை விட இரு மடங்கு துயரமனானது சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்லப்படாத மரண தகவல்.

6. இன்சூரன்ஸ் பாலிஸி.. பெரும்பாலோர் இது பற்றி அக்கறை கொள்வதே இல்லை.. நாமே போயிடறோம்.. இனி என்ன ஆகப்போகுது? நமக்குப்பின்னால வரப்போற தொகைக்காக நாம ஏன் கஷ்டப்பட்டு , மெனக்கெட்டு பிரீமியம் கட்டனும் என்ற எண்ணம் மறையனும்.. சம்பத் பாலிஸி ஏதும் கட்டவில்லை.. சப்போஸ் கட்டி இருந்தால் வயசான காலத்தில் அவர் பெற்றோருக்கு உதவியாக இருந்திருக்கும்..

7. திருமணங்களில் மொய் வைப்பது தமிழனின்  பாரம்பரிய பழக்கமாக இருந்து வந்தாலும் நான் வியப்பது மரணம் நடந்த வீடுகளில் ஏன் அந்தப்பழக்கம் வரவில்லை என்பதே.. வசதியான, நடுத்தரக்குடும்பங்களில் பிரச்சனை இல்லை, சம்பத் குடும்பத்திலும் பணப்பிரச்சனை இல்லை, ஆனால் பொதுவாக நான் யோசிப்பது ஒரு ஏழையின் வீட்டில் குடும்பத்தலைவர், அல்லது முக்கியமான நபர் இறந்து விட்டால் அந்தக்குடும்பத்துக்கு மாபெரும் இழப்புத்தானே.. நாம என்ன பண்றோம்.. துக்க வீட்டுக்குப்போறோம்.. கையை கொடுக்கிறோம், துக்கம் விசாரிக்கறோம்.. வந்துடறோம்.. அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யனும் என்று நினைப்பதே இல்லை.. ஏழை வீட்டில் மரணம் நிகழ்ந்தால் நம்மாலான பண உதவி செய்ய வேண்டும்..

8. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை டீன் ஏஜ் வரை கவனமாக கண்காணித்து வர வேண்டும்.. 18 வயசுக்குள் தான் பெரும்பாலான கெட்ட பழக்கங்களை மனிதன் கற்றுக்கொள்கிறான்.. 19 வயசில் அவனுக்கு ஒரு பக்குவம் வந்து விடும்..  பலரை விசாரித்ததில் தெரிய வரும் தகவல் அவர்கள் ஏதாவது ஒரு கெட்ட பழக்கத்தை கற்றுக்கொண்டது அவர்கள் 15 டூ 18 வயசில் தான்.. அது மாற்ற முடியாத பழக்கமாக மாறி அவனை சிதைக்கிறது..

9. இருக்கும் வரை ஜாலியாக இருப்போம், எல்லாத்தையும் அனுபவிப்போம் என்ற எண்ணம் தான் பெரும்பாலான தவறுகளுக்குக்காரணம்.. இருக்கும் வரை ஆரோக்யமாக இருப்போம் என எண்ணுவதில்லை... யோகா, மூச்சுப்பயிற்சி என தினமும் 30 நிமிடங்களாவது ஒதுக்க வேண்டும்..

10 , கடைசியாக நான் சொல்லப்போவது பைத்தியகாரத்தனமாகவோ , அல்லது தேவையற்றதாக தோணும்.. இருந்தாலும் சொல்லிடறேன்... நாம வாரம் ஒரு முறை ரிலாக்ஸ்ஸாக இருக்க, டைம் பாஸ் பண்ண  சினிமா, கோயில், பீச், பார்க் எங்காவது சென்று மனதை ரிலாக்ஸ் பண்ணிக்கறோம்.. பொழுது போக்கு - எண்ட்டர்டெயின்மென்ட்.. அந்த மாதிரி மாதம் ஒரு முறை அரசு மருத்தவமனைக்கு ஒரு விசிட் அடிக்கனும்.. எத்தனை பேர் .. எத்தனை நோய்கள், எத்தனை அஜாக்கரதைகள், எத்தனை விபத்துகள் என்பதை கண்கூடாக கண்டால் நமக்கு வாழ்வின் அர்த்தம், மதிப்பு புரியும்.. அதே போல் தெரிந்தவர், உறவினர் மரணங்களுக்கு  செல்கையில் சுடுகாடு வரை போய் வர வேண்டும்.. அந்த குடும்பத்துக்கும் ஒரு ஆறுதல், நமக்கும் வாழ்வின் நிலையாமை தத்துவத்தை நமக்கு நாமே உணர நல்ல வாய்ப்பு

சம்பத்தின் ஆத்மா சாந்தி அடையட்டும்.. நான் மரணத்தகவல் சொன்னதும் பொள்ளாச்சியில் தன் குடும்பத்துடன் சுற்றுலாவில் இருந்தபோதும் உடண்டியாக அதை  கேன்சல் செய்து சென்னிமலை வந்து துக்க நிகழ்வில் பங்கு கொண்ட  காலச்சுவடு ஆசிரியர்க்கு என் நன்றிகள்..

 சம்பத்தின் புகைப்படம்  போட வேண்டாம் என அவர் குடும்பத்தில் கூறி விட்டனர்.. அவர் இன்னும் அவர்களோடு வாழ்வதாக  நம்புவதால்...

7 comments:

முட்டாப்பையன் said...

http://www.etakkumatakku.com/2012/06/blog-post_05.html

இங்க வரது.

Anonymous said...

ஆழ்ந்த அனுதாபங்கள் சம்பத் அவர்கள் குடும்பத்திற்கு .

Anonymous said...

உங்கள் கருத்துக்கள் அனைத்தும் கடைபிடிக்க வேண்டியவை

MARI The Great said...

ஆழ்ந்த அனுதாபங்கள் .. !

முட்டாப்பையன் said...

@ கபி

இதோ தலைப்பை மாத்தியாச்சி.

திருப்தியா?

J.P Josephine Baba said...

ஆழ்ந்த அனுதாபங்கள்!

”தளிர் சுரேஷ்” said...

உண்மையான கருத்துக்கள்! மரணங்கள் நம்மை பாதிக்கிறது! எனவே நீங்கள் சொன்ன அறிவுரைகள் கடைபிடிக்க வேண்டிய ஒன்று!